PDA

View Full Version : சில காதல் கவிதைகள்- 9



ப்ரியன்
26-05-2006, 11:56 AM
உனக்குத் தெரியுமா என
எனக்குத் தெரியாது
உன்னைவிட அழகானவள்
நீ!

***************

நீ முகத்தில்
எழுதும் அதையே
காகிகத்தில் வரைகிறேன்
கவிதை என்கிறது
உலகம்!

***************

எழில் என்பதற்கு
சரியான எடுத்துக்காட்டு
கேட்டேன் உன்னைக் காட்டியது
தமிழ்!

***************

வானப் போர்வையெங்கும்
நட்சத்திர ஓட்டைகள்!
உன் கூந்தல்
உதிர் கறுநூல்களை தா!
தைத்துக் கொள்ளட்டும்
இரவு!

***************

உன் உயிரோடு உயிராகும்
வரம் கூட வேண்டாம்!
உன் உயிருக்கு நிழலாகும்
வாய்ப்பாவது தா!

***************

உறங்கட்டும் விடு!
உன்னை தேடோ
தேடோ என்று தேடி
என்னிடம் கொடுத்த
களைப்பில் உறங்கிக்கிடக்கின்றன
என் கவிதைகள்!

***************

அறிஞர்
27-05-2006, 12:26 AM
முத்தான கவிதைகள்..அன்பரே.. வலைப்பூவும் கலக்கலாக இருக்கிறது...


உனக்குத் தெரியுமா என
எனக்குத் தெரியாது
உன்னைவிட அழகானவள்
நீ!
***************
அழகை ரசித்த
உனக்கு தானே தெரியும்
என் அழகின் அருமை

அறிஞர்
27-05-2006, 12:32 AM
நீ முகத்தில்
எழுதும் அதையே
காகிகத்தில் வரைகிறேன்
கவிதை என்கிறது
உலகம்!
***************
முகத்தின் அசைவுகள்...
கவிதையில் தானே
உயிர்பெறுகிறது....

jemilton
04-06-2006, 10:51 AM
Naan Ularum Pothu KAVITHAI entrai
Naan unmai pesumpodu KIRUKKAN enkirai!!!!!

பென்ஸ்
04-06-2006, 07:17 PM
மில்டன்...

உளரலை கிறுக்கி பாரும் ...
காதல் கிறுக்கன் என்பாள்...

சரி அதை அப்படியே தமிழில் எழுத முயலும்...

மயூ
05-06-2006, 05:42 AM
அருமையான கவிதைகள். ரெம்ப பீல் பண்ணி எழுதியிருக்கிறீங்க போல...
காதலித்தால் புதுக் கவிதை வரும் சரியா? :confused: :D :)

இளசு
27-06-2006, 09:46 PM
ப்ரியன்,

இதய இலக்கை நிச்சயம்
துளைத்துவிடும் அம்புகள்..

தொடுத்த விரலுக்கு பாராட்டுகள்..