PDA

View Full Version : சில காதல் கவிதைகள் - 7



ப்ரியன்
24-05-2006, 01:11 PM
தொடாமல்
முத்தமிடாமல்
காதலிக்க வேண்டுமென்கிறாய்!
பார்வைகள் புணர்தலை
என்ன செய்வாய்!

***************

ஊர் என்ன பெயரோ
வைத்து அழைத்துவிட்டு போகட்டும்!
'டேய்' என நீ விளித்தலே
பிடிக்கிறது எனக்கு!
இன்று முதல்
'டேய்' என்பதே
என் பெயராகட்டும்!

***************

உன் கண்
பூக்களில்
வந்தமர்ந்து தேன் பருகும்
வண்டுகளாய்
என் கண்கள்!

***************

நீ இடும் புள்ளிகளில்
நீ ஒரு ஓரமாய்
நான் ஒரு ஓரமாய்
தள்ளி நிற்கிறோம்
இணைத்தேவிடுகிறாய் கோடுகளால்
கோலமாய் முடிக்கையில்!

***************

வானவில் வந்தால்
மழை நின்று போகும்
என்கிறது ஒரு கிழம்!
உன் கண்வில்லை
கண்டால் கவிதைமழை
பொழியும் என்கிறது - இந்த
காதல் பழம்!

***************

கருப்பான என்
வாழ்க்கைத் தாளில்
வெள்ளை வெள்ளை
எழுத்துக் கவிதைகளாய்
நீ!

***************

jpush
25-05-2006, 08:28 PM
தொடாமல்
முத்தமிடாமல்
காதலிக்க வேண்டுமென்கிறாய்!
பார்வைகள் புணர்தலை
என்ன செய்வாய்!
Nice thoughts......

ஓவியா
26-05-2006, 01:27 AM
தொடாமல்
முத்தமிடாமல்
காதலிக்க வேண்டுமென்கிறாய்!
பார்வைகள் புணர்தலை
என்ன செய்வாய்!

***************

புரிந்தும் புரியாமலும், அறிந்தும் அறியாமல் நம்முள் எழும் ஒரு ஆழமான கருத்து......