PDA

View Full Version : சில காதல் கவிதைகள் - 6

ப்ரியன்
23-05-2006, 12:47 PM
பிறைச்சந்திர
மல்லிகை மொட்டுக்கள்
உன் கூந்தல் ஆகாயமேற
பூரணச் சந்திரன்கள்!

- ப்ரியன்.

உன் பாதங்கள்
விட்டுச் சென்ற
சுவடுகளில் எல்லாம்
பட்டாம் பூச்சிகள்
மொய்த்து கிடக்கின்றன!

- ப்ரியன்.

உன்
கால் சுவட்டில்
கால் வைத்து
நடந்து வந்தேன்!
திரும்பி பார்த்தால்
கால் சுவடு
இருந்த இடமெல்லாம்
காதல் சுவடு!

- ப்ரியன்.

குளத்து நீருக்கு
குனிந்து முத்தமிட்டபடி
இருந்தவனை பார்த்தவர்கள்
கவிஞனல்லவா ரசிக்கிறான்
என்றவாறு நகர்ந்தார்கள்!
அவர்களுக்கு எப்படித்தெரியும்
குளித்துப் போன
உன் பிம்பம்
அதில் தங்கியிருப்பது!

- ப்ரியன்.

எல்லா ஊர் மீன்களும்
பாசித் தின்று உயிர்வாழும்
நம்மூர் மீன்கள் மட்டும்தான்
உன் அழகை தின்று
உயிர் வளர்க்கின்றதுகள்!

- ப்ரியன்.

நம்மூர் குளத்து
தாமரை மட்டுமென்ன
இவ்வளவு அழகென்பவளே!
உஷ்!ரகசியம்!
நீ குளிக்கையில்
கரைந்த ஒருதுளி
அழகுதான் காரணி!

- ப்ரியன்.

ஓவியா
23-05-2006, 02:12 PM
[QUOTE=ivanpriyan]பிறைச்சந்திர
மல்லிகை மொட்டுக்கள்
உன் கூந்தல் ஆகாயமேற
பூரணச் சந்திரன்கள்!

உன் பாதங்கள்
விட்டுச் சென்ற
சுவடுகளில் எல்லாம்
பட்டாம் பூச்சிகள்
மொய்த்து கிடக்கின்றன!

உன்
கால் சுவட்டில்
கால் வைத்து
நடந்து வந்தேன்!
திரும்பி பார்த்தால்
கால் சுவடு
இருந்த இடமெல்லாம்
காதல் சுவடு!

குளத்து நீருக்கு
குனிந்து முத்தமிட்டபடி
இருந்தவனை பார்த்தவர்கள்
கவிஞனல்லவா ரசிக்கிறான்
என்றவாறு நகர்ந்தார்கள்!
அவர்களுக்கு எப்படித்தெரியும்
குளித்துப் போன
உன் பிம்பம்
அதில் தங்கியிருப்பது!

எல்லா ஊர் மீன்களும்
பாசித் தின்று உயிர்வாழும்
நம்மூர் மீன்கள் மட்டும்தான்
உன் அழகை தின்று
உயிர் வளர்க்கின்றதுகள்!

நம்மூர் குளத்து
தாமரை மட்டுமென்ன
இவ்வளவு அழகென்பவளே!
உஷ்!ரகசியம்!
நீ குளிக்கையில்
கரைந்த ஒருதுளி
அழகுதான் காரணி!

உங்கள் கவிதையில் கரைந்து போனேன்..
ப்ரியன் சார், உங்கள் கவிதைகள் அருமையாக உள்ளது,,,,,,வாழ்துக்கள்

ஒரு கேள்வி
ஏன் முக்க்கால்வாசி கவிஞர்கள் பெண்ணின் புற அழகை மட்டும் பாடுகிறார்கள். அக அழகை மறைக்கிறார்கள்...
குட்டி நகங்களை பாடுபவர்கள்.....GOOD குணங்களை பாடுவதில்லை

அவளின் கருணைபார்வையாள் இன்றிரவே தோட்டது மல்லிகை மலர்ந்தன....
பன்னையார் வீட்டு பூனைக்குட்டிகூட இவளின் அன்பு கரங்களின் வருடலுக்காக தவமிருந்தது
பால்காரனும் இவளின் பனிவான நன்றியை ரசிப்பது எதிர்வீடுக்கு தெந்த விசயமே
அவளின் அடக்கத்தை கண்டு தேருவில் உருமும் நாய்குட்டியும் தலைகக்வுரும்

இப்படியேல்லம் ஒரு கவிதையை எடுத்து உடுங்களேன்,

உங்களுடய திறமைக்கு இது எல்லாம் ஒரு கேள்வியானு தொனும் அடியேனை மன்னித்து....மங்கையரின் பெண்மை மெண்மையை பற்றி கொஞ்ஜம் பாடுங்களேன்....

குற்றம் இருந்தால் மன்னிக்கவும்
:) :)

தாமரை
23-05-2006, 02:35 PM
ஒரு கேள்வி [/B]
ஏன் முக்க்கால்வாசி கவிஞர்கள் பெண்ணின் புற அழகை மட்டும் பாடுகிறார்கள். அக அழகை மறைக்கிறார்கள்...
குட்டி நகங்களை பாடுபவர்கள்.....GOOD குணங்களை பாடுவதில்லை

[I]அவளின் கருணைபார்வையாள் இன்றிரவே தோட்டது மல்லிகை மலர்ந்தன....
பன்னையார் வீட்டு பூனைக்குட்டிகூட இவளின் அன்பு கரங்களின் வருடலுக்காக தவமிருந்தது
பால்காரனும் இவளின் பனிவான நன்றியை ரசிப்பது எதிர்வீடுக்கு தெந்த விசயமே
அவளின் அடக்கத்தை கண்டு தேருவில் உருமும் நாய்குட்டியும் தலைகக்வுரும்

இப்படியேல்லம் ஒரு கவிதையை எடுத்து உடுங்களேன்,

உங்களுடய திறமைக்கு இது எல்லாம் ஒரு கேள்வியானு தொனும் அடியேனை மன்னித்து....மங்கையரின் பெண்மை மெண்மையை பற்றி கொஞ்ஜம் பாடுங்களேன்....

குற்றம் இருந்தால் மன்னிக்கவும்
:) :)
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள். அவர்கள் மெய்யழகை பாடுவதில்லை. பொய்யழகையே பாடுகிறார்கள்.

கவிதை = பொய்
கவிதை = பெண்
அதனால்
பெண் = பொய்.
:D :D :D :D :D

ஓவியா
23-05-2006, 02:49 PM
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள். அவர்கள் மெய்யழகை பாடுவதில்லை. பொய்யழகையே பாடுகிறார்கள்.

கவிதை = பொய்
கவிதை = பெண்
அதனால்
பெண் = பொய்.
:D :D :D :D :D

ஆவியாரே,,,நலமா?? நீங்கள் என்ன கனிதமேதையா?

ஆஆ..என்ன பெண்கள் = பொய்யா...:eek:

இப்பதான் தேரியுது இங்கே (தமிழ்மன்றம்.காம்) ஏன் நெயுறுண்டைக்கூட ஆண்கள் பிடிக்கின்றனர் என்று :D :D:D :D

தாமரை
23-05-2006, 02:57 PM
ஆவியாரே,,,நலமா?? நீங்கள் என்ன கனிதமேதையா?

ஆஆ..என்ன பெண்கள் = பொய்யா...:eek:

இப்பதான் தேரியுது இங்கே (தமிழ்மன்றம்.காம்) ஏன் நெயுறுண்டைக்கூட ஆண்கள் பிடிக்கின்றனர் என்று :D :D:D :D

உலகத்தில் பாசத்திற்காக சமைக்கும் பெண்கள் அதிகம்
காசுக்காக சமைக்கும் ஆண்கள் அதிகம்.. (ஹோட்டல்களின் ஆண் சமையல்காரர்கள்,, கல்யாண வீட்டில் ஆண் சமையற்காரர்கள்)
பாசத்திற்காக சமைக்கும் அம்மா சிக்கனம் பார்ப்பாள்
காசுக்காக சமைக்கும் குக்கோ ருசியினைப் பார்ப்பான்
பர்ஸ் நிறைந்திருந்தால் ஆண்கள் சமைத்த உணவு..
மனம் நிறைய அம்மாவின் சமையல்.

குளிருதா???

ஓவியா
23-05-2006, 03:02 PM

குளிர்ல ஜோரமே வருது:p

தாமரை
23-05-2006, 03:32 PM
குளிர்ல ஜோரமே வருது:p
உங்கள் பார்வைக்கு

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6064

இன்னும் பல கவிதைகள் குவிந்திருக்கின்றன இப்பக்கங்களில்..

Tamilvasan
23-05-2006, 06:24 PM
ஓவியா உங்களோட ஆதங்கம் புரியுது.
ஆனா 'கவிதைக்கு பொய் அழகுன்னு' வைரமுத்துவே சொல்லி இருக்காரே :)
அதுனாலதான் எல்லாரும் பொய் சொல்கிறார்கள் போல விடுங்க
அப்புறம் பெண்களேட அக அழகைப் பற்றியும் பல கவிதைகள் இருக்கே...

என்ன தாமரை செல்வன் ,மதி கூட எப்ப அடுத்த சந்திப்பு? பேங்களூர் வந்து இருப்பார்னு நெனைக்கிறேன் அல்லது ஊருக்கு போய்ட்டாரா?.

~வாசன்