PDA

View Full Version : உலக இந்திய வர்த்தக சந்தை



Mano.G.
21-05-2006, 07:35 AM
மலேசியாவில் அண்மைய காலங்களில்
உலகத்தில் வாழ் இந்திய வம்சாவழி சமூகத்தினரை
ஒன்றிணைக்க பல வித நிகழ்வுகளை
நடத்தி வருகின்றன அதில் ஒன்று தான்
இந்த "உலக இந்திய வர்த்தக சந்தை"
இந்திய வாழ் வர்த்தகர்கள் தங்கள்
பொருட்களை இங்கு அறிமுக படுத்த
ஏற்ற சந்தை இது.

நமது இ.த.செ அவர்களுக்கு இது மிக மிக
உபயோகமாக இருக்க கூடும்.

அதற்கான தள சுட்டி இதோ

http://www.gisf.com.my/



மனோ.ஜி

aren
21-05-2006, 11:07 AM
இது மாதிரி GOPIO (Global Organization for People of Indian Origin) என்ற அமைப்பு உள்ளது. நீங்கள் சொன்ன அமைப்பிற்கும் GOPIOவிற்கும் சம்பந்தம் உள்ளதா என்று தெரியவில்லை. நான் GOPIO அமைப்பின் சிங்கப்பூர் கிளையில் உறுப்பினராக உள்ளேன். ஆனால் இதுவரை இவர்கள் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. அவர்களும் ஏதாவது இங்கே செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

நம் மக்கள் இதுமாதிரி அமைப்புகள் அமைத்து ஏதாவது நம் மக்களுக்கு நன்மை செய்தால் நல்லதுதான். யூதர்கள் இந்த மாதிரி அமைப்பு அமைத்து அவர்கள் இனத்தவர்களுக்கு உதவிகள் செய்கிறார்கள்.

நம் ஊரில் மார்வாரிகளும் செட்டியார்களும் இதுமாதிரி அவர்கள் குடும்பங்களுக்கு வியாபாரத்தில் உதவிகள் செய்து அவர்களை மேலே தூக்கிவிடுகிறார்கள்.

நல்ல செய்தி மனோஜி.

Mano.G.
22-05-2006, 02:48 AM
GOPIO இங்கு மலேசியாவில் மிகவும் ஆக்டீவாக செயல்பட்டு வருகிறது
ஆரேன் அவர்களே, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஏதாவது ஒரு நிகழ்வுகளை
அவர்கள் நடத்தி வருகிறார்கள்.
நான் அந்த இயக்கத்தில் இன்னும் அங்கத்தினராகவில்லை.

வருகிற தீபாவளியை முன்னிட்டு GOPIO தீபாவளி சந்தை ஒன்றும் நடத்த திட்டமிடபட்டுள்ளது.


மனோ.ஜி

arul5318
22-06-2006, 07:21 AM
தகவலுக்கு நன்றி நண்பரே

pradeepkt
22-06-2006, 08:55 AM
பரவாயில்லையே...
நம்முள் இந்த ஒற்றுமை மிக அவசியம்.
உலகச் சந்தைகளில் நம் கை ஓங்கும் நாளை எதிர்பார்க்கிறேன்

Mano.G.
20-03-2007, 03:41 AM
மறுபடியும் உலக இந்திய வம்சாவளி
வியாபார சந்தை வருகிர ஜூன் முதல் தேதியிலிருந்து
10ம் தேதிவரை நடைபெறவுள்ளது.

ஆர்வமுள்ள நமது சகோதரர்கள்
பங்கு கொள்ள இந்த சுட்டியை
தட்டி விபரங்கள் பெறுக.

அதற்கான தள சுட்டி இதோ

http://www.gisf.com.my/

இளசு
21-03-2007, 12:19 AM
நன்றி நண்பர் மனோஜி அவர்களே


எங்கே இப்பவெல்லாம் நண்பர் இ.த.செ. அவர்களை
இந்தப்பக்கம் காணோம்?