PDA

View Full Version : திரு பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மரணம்



mukilan
20-05-2006, 06:14 AM
தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர், முன்னாள் சபாநாயகர் மாண்புமிகு பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் இன்று வைகை எக்ஸ்பிரசில் மதுரை நோக்கி செல்லும் வழியில் மாரடைப்பினால் மரணமடைந்தார். அவர் ஆத்மா சாந்தியடைவதாக.

aren
20-05-2006, 10:18 AM
பாவம் பதவியேற்றவுடனேயே இப்படி ஆகிவிட்டது. அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சேரன்கயல்
20-05-2006, 10:25 AM
அன்னாரின் குடும்பத்துக்கு எம் இரங்கல்களும், அனுதாபங்களும்...
அவர் பெயர் கேட்டதும் சட்டென நினைவுக்கு வருவது அவரது மீசை)

gragavan
22-05-2006, 12:02 PM
அன்னாரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா அமைதி பெறட்டும்.

அறிஞர்
23-05-2006, 03:18 PM
எங்கப்பா பிரதீப்பை காணோம்.. இரங்கல் கூற......

முதன்முறையாக அமைச்சராக (விரும்பிய துறை கிடைத்து) பதவியேற்று.... நீடிக்கமுடியாமல் சென்றது வருத்தமே....

தாமரை
23-05-2006, 03:29 PM
ஆண்டவனின் திருப்பணிகளை கவனிக்க எண்ணியவர் ஆண்டவன் அழைத்துக் கொண்டார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

pradeepkt
24-05-2006, 11:56 AM
வந்துட்டேன்.
1991-1996ல எங்க தொகுதி (மதுரை மேற்கு) எம் எல் ஏவா ஜெயிச்சு சபாநாயகராக இருந்தவர் பிடிஆர். இவர் தந்தை பிடிஆர் ஒரு பெரிய வழக்கறிஞர் - ஆளவந்தான் கொலை வழக்கு, தேவர் வழக்கு (?) எல்லாம் வாதாடியவர். அவர் வீட்டுக்குப் போஸ்ட்மேன் வந்தால் கூட பின்னால் சமையல்கட்டுக்குச் சென்று சாப்பிட்டு அப்படியே உள்ளே வந்து கடிதங்களைத் தந்து விட்டு முன்வாசல் வழியாகச் செல்வாராம்.

சபாநாயகராக அப்பழுக்கில்லாமல் நடந்து கொண்டதோடு அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது பல நல்ல திட்டங்களை - மாட்டுத்தாவணி பஸ் நிலையம், ரிங் ரோடு உட்பட - கொண்டு வந்தவர்.

இன்னும் நிறையச் சொல்லலாம். இப்போதைய சர்ச்சையைத் தவிர வேறு எந்த சர்ச்சையிலும் இவர் மாட்டியதில்லை.

அவர்தம் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்