PDA

View Full Version : வெளிநாட்டு ஜோக்குகள்...Raaga
18-05-2006, 08:28 PM
இங்கே நான் வெளி நாட்டு ஜோக்குகள் சிலவற்றை நம்மூர் ஸ்டைலிலே மாற்றி உங்களுக்கு கூறுகிறேன் படித்து ரசியுங்கள்....

ராஜாக்கள் காலத்திலே, ஒரு மந்திரியின் பிள்ளைகள் இருவர் சேஷ்டைகள் செய்ததின் பேரில் அவர்களை சிறை செய்தார்கள்... இதை அறிந்த மந்திரி, ராஜாவிடம் சென்று அவர்களை மன்னித்து விடுவிக்குமாறு கேட்டு கொண்டார்...

மன்னனும் மனமிரங்கி நேரம் கிடைத்தவுடன் சிறைச்சாலைக்கு சென்று இருவரையும் வெளியே அழைத்தார் ... தண்டணையின்றி விடுதலை செய்ய விரும்பாத மன்னர், இருவரையும் காட்டிலே சென்று ஒவ்வொருவரும் தனியாக சொந்த திறனில் ஒரு மரத்து கனிகள் நான்கு பறித்து வர சொல்லி அனுப்பினார்...

காட்டுக்கு சென்றவர்களில் ஒருவன் முதலில் நான்கு சிறிய எலுமிச்சம் பழங்களுடன் திரும்பி வந்தான்.

மன்னர் அவனை பார்த்து, எதிர்பார்க்காத வண்ணம், அவனிடம் :

- "ம்.... அந்த பழங்களிலெ ஒன்றை தோலோடு விழுங்கு என்றார்"

அவனோ முதல் பழத்தை சிரமபட்டாலும் சிரித்துக்கொண்டே விழுங்கினான்

ஏன் சிரிக்கிறான் என்று விளங்காத மன்னர் மீண்டும் அவனிடம் :

- "ம்.... இன்னுமொரு பழத்தினை தோலோடு விழுங்கு என்றார்"

ரெண்டாவது பழத்தை விழுங்கியவனால் சிரிப்பு தாங்க முடியவில்லை

மன்னர் கோபத்துடன் "மூன்றாவதை விழுங்கு" என்றார்

அவனும் வாய் விட்டு சிரித்த வண்ணம் மூன்றாம் பழத்தை விழுங்கினான்...

"என்ன திமிர் உனக்கு வயிறு புண்ணாகட்டும், நான்காவதையும் விழுங்கு" என்றார்

நாலாவதை விழுங்கியவன் தாங்க முடியாமல் குலுங்கி குலுங்கி சிரித்தான், அடக்க முடியாத அவன் சிரிப்பு மன்னருக்கு அளவில்லாத சினத்தை உண்டு பண்ண கோபத்தில் அவர் கத்தினார் :

"அடி மடையா, உனக்கு விழுங்கிய பழங்களினால் வலி இல்லையா, ஏன் இப்படி மூடன் போல் சிரிக்கிறாய், என்னை நக்கல் செய்கிறாயா என்ன ?"

அவனோ பொங்கி வரும் சிரிப்புக்கிடையே கூறினான் "இல்லை மகராஜா, இன்னொருவன் நாலு பலாப்பழத்துடன் வந்து கொண்டிருக்கிறான்..."

என்ன பிடித்ததா இந்த கதை... வெளிநாட்டிலே கதையில் வரும் பழங்கள் வேறு, அதை மாற்றி சொன்னேன்...

மதி
18-05-2006, 08:57 PM
அடடா..இது வெளிநாட்டுக்கதையா..
இதே கதையை..நான் நம்மூரிலேயே..நிறைய பேர் சொல்லி கேட்டிருக்கேனே..!

அறிஞர்
18-05-2006, 09:06 PM
ஆமாம் நம்மூரில் இது மாதிரி கதைகள் உள்ளது...

மீண்டும் அன்பர் ராகா மூலம் கேட்டதில் சந்தோசம்

சேரன்கயல்
19-05-2006, 04:41 AM
அதையும் நம்ம மக்கள் மூன்று அல்லது நான்கு கட்டமாக்கி, இந்தியன், அமெரிக்கன், ரஷ்யன், பாகிஸ்தானி என்று கேரக்டர்ஸ் உருவாக்கி, பாகிஸ்தானிக்கு பலாப்பழம் கொடுத்து சந்தோஷப்படுவார்கள்...

pradeepkt
19-05-2006, 11:24 AM
சரி, என்னமோ இதை ஒரு சைவ ஜோக்காக்கி விட்டீர்கள்.
நல்லது...

vanavasiravi
19-05-2006, 02:21 PM
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே கடி களம் ஆக்கிட்டாங்கப்பா

ஓவியா
19-05-2006, 10:08 PM
[QUOTE=Raaga]இங்கே நான் வெளி நாட்டு ஜோக்குகள் சிலவற்றை நம்மூர் ஸ்டைலிலே மாற்றி உங்களுக்கு கூறுகிறேன் படித்து ரசியுங்கள்....

இருக்கும் மற்ற கதைகலையும் ஒன்னு ஒன்னா சொன்னா நல்லா இருக்கும்..

பழைய கதை புதுமையில் நன்று :D :D :D

Raaga
20-05-2006, 09:52 PM
ஏன் இன்றிரவு எல்லோரும் டிவி முன்னால் உட்கார்ந்து பார்ப்பார்கள் சொல்லுங்க்ள் பார்ப்போம் ?

ஏனென்றால் டிவி பின்னால் உட்கார்ந்து பார்த்தால் ஒன்றும் தெரியாது...


ஓவர் கடியா மன்னிக்கனும்...

றெனிநிமல்
22-05-2006, 10:13 PM
ஹி ஹி ஹி.............

அறிஞர்
22-05-2006, 10:15 PM
ஹி ஹி ஹி............. இரண்டு வரி பாரட்டி எழுதினால்தான் என்ன அன்பரே...

அறிஞர்
22-05-2006, 10:15 PM
ஏன் இன்றிரவு எல்லோரும் டிவி முன்னால் உட்கார்ந்து பார்ப்பார்கள் சொல்லுங்க்ள் பார்ப்போம் ?

ஏனென்றால் டிவி பின்னால் உட்கார்ந்து பார்த்தால் ஒன்றும் தெரியாது...


ஓவர் கடியா மன்னிக்கனும்... முன்னாலே உட்கார்ந்தா அடுத்தவுங்களுக்கு மறைக்குமே.. அதற்கு என்ன பண்ணுறது...

ஓவியா
23-05-2006, 12:50 AM
முன்னாலே உட்கார்ந்தா அடுத்தவுங்களுக்கு மறைக்குமே.. அதற்கு என்ன பண்ணுறது...

சசசசசார் நீங்களுமா அது சரி

றெனிநிமல்
23-05-2006, 08:29 PM
இரண்டு வரி பாரட்டி எழுதினால்தான் என்ன அன்பரே...
மன்னிக்கவும்! சிரிப்பு வந்ததனால் எழுதமுடியவில்லை.
ஹி ஹி ஹி..........

Raaga
23-05-2006, 09:12 PM
அவன் சொன்னான் : மக்கள் எப்பொதும் கற்றோட்டமாக ஜன்னல்களை திறந்து வைத்து தூங்கினால் நல்லது"

மற்றவன் கேட்டான் : ஓ அப்படியா, நீங்கள் என்ன டாக்டரா...."

அவன் சொன்னான் ; "இல்லை நான் வீடு புகுந்து திருடும் திருடன்..."

ஓவியா
23-05-2006, 09:16 PM
அவன் சொன்னான் : மக்கள் எப்பொதும் கற்றோட்டமாக ஜன்னல்களை திறந்து வைத்து தூங்கினால் நல்லது"
மற்றவன் கேட்டான் : ஓ அப்படியா, நீங்கள் என்ன டாக்டரா...."
அவன் சொன்னான் ; "இல்லை நான் வீடு புகுந்து திருடும் திருடன்..."

நல்லது,
இன்றில் இருந்து நாமும் இதனை கடைப்பிடிப்போம்

Raaga
23-05-2006, 09:28 PM
அந்த பணக்காரி தோழியிடம் கூறினாள் : என் விலை உயர்ந்த நாய் காணாமல் போய் விட்டது..."

தோழி ஆலோசனை கூறினாள் : "செய்தி தாளில் விளம்பரம் கொடு..."

பணக்காரி புறக்கணித்தாள் : "பிரயோசனம் இல்லை, அந்த நாய்க்கு படிக்க தெரியாது..."

ஓவியா
23-05-2006, 09:40 PM
அந்த பணக்காரி தோழியிடம் கூறினாள் : என் விலை உயர்ந்த நாய் காணாமல் போய் விட்டது..."

தோழி ஆலோசனை கூறினாள் : "செய்தி தாளில் விளம்பரம் கொடு..."

பணக்காரி புறக்கணித்தாள் : "பிரயோசனம் இல்லை, அந்த நாய்க்கு படிக்க தெரியாது..."

:D :D :D :D

அறிஞர்
23-05-2006, 11:50 PM
பணக்காரி புறக்கணித்தாள் : "பிரயோசனம் இல்லை, அந்த நாய்க்கு படிக்க தெரியாது..." ஹி ஹி.. இனி நாயை முதலில் பள்ளிகூடத்துக்கு அனுப்புங்க.. அப்புறம் காணமற் போனால் பிரச்சனை இல்லை

Tamilvasan
24-05-2006, 12:01 AM
அந்த பணக்காரி தோழியிடம் கூறினாள் : என் விலை உயர்ந்த நாய் காணாமல் போய் விட்டது..."

தோழி ஆலோசனை கூறினாள் : "செய்தி தாளில் விளம்பரம் கொடு..."

பணக்காரி புறக்கணித்தாள் : "பிரயோசனம் இல்லை, அந்த நாய்க்கு படிக்க தெரியாது..."

அப்ப டி.வி ல விளம்பரம் கொடுத்துபாக்கலாமோ?
(நாய்க்கு பாக்க தெரியுமில்ல,அதுனால ஹி ஹி ஹி ):D :D :D
~வாசன்

Raaga
24-05-2006, 06:07 PM
இப்படி எல்லோரும் ஓவரா கடிக்கிறீங்களே....

சிறுவன் வாத்தியரம்மாவிடம் கேட்டான் : டீச்சர், நாம செய்யாத ஒன்னுக்காக யாராவது நம்ம தண்டிப்பாங்களா சொல்லுங்க..." என்றான்

அவர்கள் சொன்னார்கள் " அது எப்படி, செய்யாத ஒன்னுக்கு யாரும் தண்டிக்க மாட்டாங்க, போதுமா, ஆமா ஏன்பா இத கேட்ட..."

"தேங்க்ஸ் டீச்சர், வேற ஒன்னும் இல்ல, நேத்து நீங்க கொடுத்த வீட்டு பாடத்தை செஞ்சின்னு வரலே..."

Raaga
24-05-2006, 06:14 PM
சிறுவன் அம்மாவிடம் சந்தோஷமாக சொன்னான் "அம்மா நான் எங்க வாத்தியார விட புத்திசாலி தெரியுமா..."

"அப்படியா கண்ணா,ஏன் அப்படி சொல்ற..."

"பின்ன என்னம்மா, நான் ஒன்னாங்கிளாசு விட்டு வந்து மூனு வருஷமாவுது, ஆனா அவரு இன்னும் அந்த ஒன்னாங்கிளாசுலேயேதான் இருக்காரு..."

Tamilvasan
25-05-2006, 05:12 AM
வாத்தியார் மாணவனிடம்: "உலக உருண்டையில் அமெரிக்கா எங்கு இருக்கு தெரியுமா? "
மாணவன்: தெரியாது அய்யா
வாத்தியார்: அப்ப பெஞ்சுமேல ஏறி நில்லு
மாணவன்: பெஞ்சுமேல ஏறி நின்னா தெரியுமா சார்?
வாத்தியார்: :angry: :angry: :angry:

~வாசன்

Raaga
26-05-2006, 03:06 PM
வாத்தியார் சிறுவனிடம் கேட்டார் : டேய், நான் நன்றியுள்ள நாயை பற்றி கட்டுரை எழுத சொன்னதற்கு உன் கட்டுரையும், உன் சகோதரன் கட்டுரையும் அப்பட்டமாக வார்த்தைக்கு வார்த்தை தவறாமல் ஒரே மாதிரி இருக்கின்றதே அது எப்படி" என்றார்

அவன் சொன்னான் "சார் எங்க வீட்டில் ஒரே நாய் தான் இருக்கின்றது, இருவரும் அதை பற்றி எழுதினால் ஒரே மாதிரி இருக்காமல் எப்படி இருக்கும்"

அறிஞர்
27-05-2006, 01:15 AM
"பின்ன என்னம்மா, நான் ஒன்னாங்கிளாசு விட்டு வந்து மூனு வருஷமாவுது, ஆனா அவரு இன்னும் அந்த ஒன்னாங்கிளாசுலேயேதான் இருக்காரு..." வாத்தியாருக்கு பாடம் சொல்லிக்கொடுக்க பையனை அனுப்புங்க....

அறிஞர்
27-05-2006, 01:16 AM
மாணவன்: பெஞ்சுமேல ஏறி நின்னா தெரியுமா சார்?
வாத்தியார்: :angry: :angry: :angry:

~வாசன் இந்த குசும்பு எல்லாம் சின்ன வயதில் பண்ணினது... :D :D :D

அறிஞர்
27-05-2006, 01:17 AM
அவன் சொன்னான் "சார் எங்க வீட்டில் ஒரே நாய் தான் இருக்கின்றது, இருவரும் அதை பற்றி எழுதினால் ஒரே மாதிரி இருக்காமல் எப்படி இருக்கும்" நல்லவேளை வீட்டுல இருக்கிற ஆட்களை நாயாக நினைத்து எழுதவில்லையே..

pradeepkt
29-05-2006, 07:09 AM
எங்கய்யா செல்வனைக் காணோம்...
இந்த மாதிரி ஜோக்குகளை லாரியில அள்ளிட்டு வந்து கொட்டுவாரே...
அவர் வந்தா ஓடிரலாமின்னு பாத்தேன்...

Raaga
29-05-2006, 11:09 PM
சிறுவன் பூஜை அறையில் முட்டியிட்டு வேண்டினான் : "கடவுளே எப்படியாவது சென்னை இந்தியாவுக்கு தலைநகரம் ஆவதற்க்கு நீங்க தான் அருள் புரியனும்..."

அங்கே தற்செயலாக வந்த தாய் கேட்டால் : " ஏன் ராஜா திடீர்னு இப்படி ஒரு வேண்டுதல்..."

சிறுவன் கூறினான் : "வேற ஒன்னும் இல்லம்மா, அப்படித்தான் நான் பரிட்சை பேப்பரிலே எழுதியிருக்கேன்..."

Raaga
29-05-2006, 11:59 PM
ஒரு மகன் தன் திறந்த மனப்பான்மை படைத்த தாயிடம் தன் காதலியை காட்ட விரும்பி கூறுகிறான் :
"அம்ம நாளைக்கு நான் உன் வருங்கால மருமகளை உனக்கு காட்டபோகிறேன், ஆனா ஒரு கண்டிஷன்,
அவளுடய ரெண்டு தோழிகளோட கோவிலுக்கு வருவாள் நீதான் அந்த மூனு பேர்ல யாரு அவள்னு கண்டுபிடிக்கனும்..."

மறுநாள் மூன்று பெண்களையும் தன் தாயிடம் காட்டி விட்டு அவன் சில மணி நேரங்கள் கழித்து வந்து தாயாரை சந்தித்து கேட்டான் :
"என்னம்மா யார் உன் வருங்கால மருமகள் என்று கண்டுபிடுத்து விட்டாயா ? "

அம்மா சொன்னாள் டக்கென்று "பச்சை புடவை போட்டிருந்தவள்தான்" என்று...

ஆச்சரியத்துடன் அவன் கேட்டான் " எப்படிம்மா கண்டுபிடிச்சே"

அம்மா கூறினால் "ரொம்ப சுலபம், வந்ததிலிருந்து போகும் வரை அவள்தான் என்னை ஓவர் டென்ஷன் பண்ணினா..."

அறிஞர்
01-06-2006, 08:12 PM
சிறுவன் கூறினான் : "வேற ஒன்னும் இல்லம்மா, அப்படித்தான் நான் பரிட்சை பேப்பரிலே எழுதியிருக்கேன்..." அரசியல்வாதியின் பையனாக இருந்திருந்தால்.. இதுவும் சாத்தியம்...

அறிஞர்
01-06-2006, 08:14 PM
அம்மா கூறினால் "ரொம்ப சுலபம், வந்ததிலிருந்து போகும் வரை அவள்தான் என்னை ஓவர் டென்ஷன் பண்ணினா..." திருமணத்திற்கு முன்பே டென்ஷனா... வீட்டுல வாழ் நாள் முழுவதும் ஜாலி கலாட்டாக்கள் தான்....