PDA

View Full Version : பாரிஸ் நகரத்திலிருந்து வணக்கம்



Raaga
18-05-2006, 10:48 AM
என் அன்பார்ந்த தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம்

முதன் முதலில் தமிழ் மொழியில் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தததில் மன மகிழ்ச்சி

Mano.G.
18-05-2006, 11:02 AM
தமிழர்கள் ஒன்றுகூடும் இத்தளத்தில்
உங்கலை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி

உங்கள் ஆக்க பூர்வ தமிழ் படைப்புக்களை
இங்கு எங்களோடு பகிர்ந்து கொள்ள
வாழ்த்துக்கள்



மனோ.ஜீ

sarcharan
18-05-2006, 11:35 AM
வணக்கம்
:)
தமிழர்களது இம்மன்றத்தில்
உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி:)

உங்கள் ஆக்க பூர்வ தமிழ் படைப்புக்களை
இங்கு எங்களோடு பகிர்ந்து கொள்ள
வாழ்த்துக்கள்:D :D :D

மதி
18-05-2006, 12:30 PM
வணக்கம் ராகா..
தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி..

அறிஞர்
18-05-2006, 01:44 PM
வாருங்கள் ராகா.. தமிழால் இணையும் உள்ளங்கள் இங்கு சங்கமிக்கிறது.... எல்லா பகுதிகளும் சென்று படியுங்கள்.. கருத்துக்களை தாருங்கள்

Raaga
18-05-2006, 02:05 PM
நன்றி உங்கள் வரவேற்புக்கு,

நான் ஃப்ரான்ஸ் நாட்டிலே வசிக்கும், பாண்டிச்சேரி மாநிலத்திலே பிறந்த ஒரு தமிழன், தமிழ் மொழியிலும், திரை இசை பாடலிலும் பற்று கொண்ட நான், பாரிஸ் மாநகரிலே "ராகா" எனும் இசை குழுவினை உருவாக்கி உள்ளேன்.


எங்கள் இசை குழு இங்கே தமிழ் மக்கள் மத்தியிலே மிகவும் சிறந்து விளங்குகின்றது.

நாங்கள் கடந்த வருடம் நம் தமிழ் திரை இசை பாடகர்கள் : தேவன், பறவை முனியம்மா இருவருக்கும் ஃப்ரான்ஸ் நாட்டிலே இசை வாசித்து மேன்மை பெற்றோம்.

கடந்த ஏப்ரல் மாதம் 2006, பாரிஸ் மாநகரிலே நடைபெற்ற இந்தியா ஃப்லிம் ஃபெஸ்டிவல் வாரம் முழுவதும் எங்கள் "ராகா" வின் இசை ஒலி இந்தி மொழியிலே ஒலித்தது, முக்கியமாக நடிகர்கள் ஷாருக்கான், ராணி முகெர்ஜி, ப்ரீதி ஸிந்தா... அவர்களை ஆரம்ப விழவினிலே வரவேற்கும் பெறு வாய்ப்பு கிடைத்தது

திறந்த மனப்பான்மை படைத்தவர்கள் தமிழ் மக்கள் என்பதினை என் இசை குழுவின் மூலமாக இந்த விழாவிலே நாங்கள் காண்பித்ததை அனைவரும் பாராட்டினர்.

சமீபமாக என்னை போல் ஃப்ரன்ஸ் நாட்டில் வசித்த தமிழ் இசை கலைஞரான "நிரு" என்ற நண்பர் ஒருவர் "கலப காதலன்" என்ற தமிழ் திரை படத்திற்கு இசை அமைத்து உள்ளார்... சென்னையிலேயே குடி புகுந்துள்ளார்...

என்ன வினோதம் இது!!! அன்னிய நாட்டிலே வாழும் தமிழர்கள் நம் நாடு திரும்ப ஆசைபடும் போது, தமிழ் தாய் மண்ணிலெ பிறந்தவர்கள் வெளிநாடு செல்ல துடிக்கின்றார்கள்...

இக்கரைக்கு அக்கரை என்றும் பச்சைதான் போலிருக்கு...

நன்றி மீன்டும் சந்திப்போம் இனிய நண்பர்களே

இங்ஙணம்
ராகா (புனைப்பெயர்)

குறிப்பு : நான் தமிழ் மொழியிலே பள்ளி பயிலாதவன், பிழையிருப்பின் மன்னிக்கவும், நன்றி

pradeepkt
18-05-2006, 04:16 PM
வணக்கம் ராகா
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
தமிழ் மொழியில் பயிலாமலே இத்தனை அருமையாகத் தமிழ் எழுதுகிறீர்கள், வாழ்த்துகள்.
மன்றத்தின் பல தளங்களிலும் உலாவி உங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் தந்து மகிழ்ந்து மகிழ்வியுங்கள்.

அன்புடன்,
பிரதீப்

அறிஞர்
18-05-2006, 08:01 PM
அழகான தமிழ்... கலக்குங்கள் ராகா..

தங்களை பற்றிய தகவல்களுக்கு நன்றி... இன்னும் பல வெற்றிகளை அடைய வாழ்த்துக்கிறோம்

தங்கள் இசைப்பயணம் பற்றிக்கூட நீங்கள் பதியலாமே....

ஓவியா
22-05-2006, 08:16 PM
வணக்கம் ராகா,:)

காலம் தாமத்திது வரவேர்ப்பதர்க்கு மன்னிக்கவும்..
பரிட்சை நேரம்..கொஞ்ஞம் பிசி,,;)

உங்கள் வரவு நல்வரவாகட்டும்.:D :D :D

Raaga
22-05-2006, 08:36 PM
உங்களனைவருடைய ஊக்கதிற்க்கும், வரவேற்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

ஓவியா... செய்யாமலே இருப்பதை விட தாமதமாக செய்வது மேல் என்று ஃப்ரான்ஸ் நாட்டிலே ஒரு பழமொழி உண்டு...

என்வே உங்கள் வரவேற்பிற்கு என் எண்ணில்லா நன்றிகள்...

றெனிநிமல்
22-05-2006, 08:45 PM
வணக்கம் ராகா.
உங்களை நாங்கள் வரவேற்றுக் கொள்கின்றோம்.
வருக,வருக...! உங்கள் ஆக்கங்களைத் தருக தருக!.