PDA

View Full Version : பலூன்



ப்ரியன்
17-05-2006, 03:29 PM
பலூன் கேட்டு
அழுத சிறுமி
அப்படியே உறங்கிப் போனாள்!
சிறிது நேரத்தில்
அழுதபடி தூங்கியவளின்
முகமெல்லாம் புன்னகை
எத்தனை பலூன்கள்
வந்ததோ அவள் கனவில்!

- ப்ரியன்.

Mano.G.
18-05-2006, 12:42 AM
பலரின் எதிர்பார்ப்புகள்
கனவில் தானே நிறைவேறுகின்றன
எனது கனவுகளும் கற்பனைகளும்
சேர்ந்தே


மனோ.ஜி

ப்ரியன்
27-05-2006, 07:34 AM
கருத்துக்களுக்கு நன்றி மனோ.ஜி

ஏக்கமும் எதிர்ப்பார்ப்பும் தானே கனவாகின்றன

இனியவன்
27-05-2006, 01:38 PM
பலூன் எல்லோர் கனவிலும் வெவ்வெறு வடிவங்களில் வெவ்வேறு தருணங்களில் பறந்து கொண்டே இருக்கிறது, குழந்தைகள் அதை ரசித்துச் சிரிக்கிறார்கள், மீசை வைத்த குழந்தைகள் அதை புதிய பிரச்சினையின் அறிகுறி என்று நினைத்து இருக்கும் சந்தோஷத்துக்குத் தற்காலிக விடையளிக்கிறார்கள், உண்மை உணரும் வேளையில், கையில் உள்ள பலூனும் கனவில் வந்த பலூனும் ஒருங்கே வெடித்துப் போகிறது. ப்ரியன் உங்கள் பார்வை மிக நுண்ணிய உணர்வுகளை உலுப்பி விடுகிறது. தொடருங்கள்,