PDA

View Full Version : தீவக பிஞ்சுக் குழந்தைகள் செய்த தீது என்ன?தீபன்
16-05-2006, 04:20 PM
ஈழத்தின் தீவகப் பிரதேசத்தில் அரச படைகளால் அண்மையில் நடாத்தப்பட்ட படுகொலைகளைப் பற்றி மன்ற நண்பர்கள் அறிந்திருப்பீர்கள். அந்தக் கோரக் காட்சியின் வெளிப்பாடாய் தமிழீழ தேசியக் கவிஞரின் உணர்வின் உருக்கமான வெளிப்பாடுகளே இக் கவிதை.
(முழுமையான செய்தியை அறியாதவர்கள் செய்தி சோலை பகுதிக்கு சென்று நண்பர் இளையவன் பதித்த தீவகப் படுகொலைகள் பற்றிய செய்தியையும் படங்களையும் பார்க்க.)குருதியில் குளிப்பது எங்களின் விதியா...?
உலகமே! இதற்கும் மௌனம்தான் பதிலா...???

http://i21.photobucket.com/albums/b287/athiradiblogspot/PADU_B5.png

இது
புத்தர் பெருமான் ஞானம் பெற்ற
சித்திரை நாளின் சிறப்புப் பரிசு..!
பாவப்பட்ட ஈழ்த்தமிழருக்கு
பௌத்ததேசம் வளங்கிய விருது..!!
அன்று
விகாரைகள் தோறும் விளக்குகள் ஒளிர்ந்தன...
எங்கள் ஊரில் உயிர்கள் அணைந்தன...
பாருங்கள்
எல்லோரும் உற்றுப்பாருங்கள்,
ஈரம் நொதிக்கும் இதயங்களே!
தீர்ப்பு வளங்க வரும் தேசங்களே!
எங்கள் வாள்வின் அவலத்தை வரைந்து கொள்ளுங்கள்...
ஏதும் அறியாமல்,
ஏன் சாகிறோமென்றும் தெரியாமல்
குருதியில் குளித்துக் கிடக்கிறது ஒரு
குடும்ப விருட்சம்...
பிஞ்சை அணைத்தபடி ஒரு பூவும்
பூவை பிணைந்தபடி காயும்
தமிழருக்கு காவலென்பதால் நாயும்
எரியுண்டு போவதுதான் எமக்கெளுதிய விதியா...?
உலகமே
இதற்கும் உன் மௌனம்தான் பதிலா..?
மரங்களை தறியாதீர்கள் என்பவர்களே!
இங்கு மனிதர்களை சரிக்கிறார்களே..?
ஏன் கேள்வி எளுப்பவில்லை?
எமக்கான ஆறுதலை ஏன் தரவில்லை..?
ஈழ்த் தமிழர் சாகப் பிறந்தவர்களா?
நாயைப்போல் வாழப் பிறந்தவர்களா?

அல்லைப்பிட்டி அழுகைக்கானதல்ல...
அடக்குமுறை அதிகாரத்திற்கான முடிவுக்கானது.
இரத்தமும் இரத்தமும் பேசும் மொழியில்
புத்த பெருமான் போதிக்கவில்லை...
ஆயினும் பேரினவாதம் அதைத்தானே போஷிக்கிறது..!
பொறுமையின் அளவு மட்டம் பெரியதானதல்ல...
சின்ன உணர்வுத்தீயில் மூழக்கூடியது..!
எம்மை மூட்டாதீர்
முளாசியெரிய வைக்காதீர்!
இது ஆற்றாது அழுபவரின் கண்ணீர்
அடக்குமுறைக்குள்ளே கிடப்பவரின் மௌனக் குரல்!
உலகமே!
எமக்குப் பதில் வேண்டும்...
இப்போது வாருங்கள்.
இல்லையெனில் எப்போதும் வர வேண்டாம்..!
எதற்காகவும் வர வேண்டாம்..!!
முடியுமெனில்
உங்கள் வளியில் எங்களை எடுங்கள்!
இல்லையெனில்
எங்கள் வளியில் எங்களை விடுங்கள்..!
பாருங்கள்
உற்றுப் பாருங்கள்...
அந்தச் சின்னப் பிள்ளையின் சிரசிலிருந்து
பென்னம் பெரிய நெருப்பு மூள்கிறது...
தெரிகிறதா...?
இது தணியாது...
இனிப் பணியாது...!!!

-புதுவை இரத்தினதுரை.

தீபன்
22-05-2006, 06:06 PM
குருதியில் குளிப்பது எங்களின் விதியா...?
உலகமே! இதற்கும் மௌனம்தான் பதிலா...???

இந்த தலைப்பில் கவிதையை இட்டதும் உங்கள் பதிலும் மௌனமானதாகிவிட்டதா...? ஏன் எவருமே கருத்துகூற முற்படவில்லை...? பொடாவில் உள்ள போட்டுடுவார்களென்ற பயமா...?

உங்கள் மனட்சாட்சியின் உணர்வுகளை மனிதாபிமானத்துடன் சொல்லுங்களேன் நண்பர்களே..

இளையவன்
23-05-2006, 12:06 AM
இப்பொழுது ஒருவரின் காதுகளுக்கும் ஈழத் தமிழனின் அவலக்குரல் கேட்காது. புத்தரின் பக்தர்களுக்கு அவர்களின் மொழியில்(வன்முறை) பதில் சொன்னாலே அவர்கள் தங்களை மாற்ற முயற்சிப்பார்கள். இல்லையெனில் அவர்கள் இதைத் தொடரவே செய்வார் . ஆமாம் கவிஞர் சொன்னதுபோல் அந்தச் சின்னக் குழந்தையின் சிரசிலிருந்து மறத் தமிழர்கள் நெஞ்செங்கும் நெருப்பு மூள்கிறது.

இனியவன்
23-05-2006, 05:56 AM
தினம் தினம் தீபாவளி
வந்தால் மகிழ்ச்சிதான்
குழந்தைகளுக்கு,
வீதியில் கொளுத்த வேண்டிய வாணம்
வீட்டிற்குள் விழுந்தால்
எங்கே போய்ப் பிழைப்பது?
இலங்கையை விட்டு வெளியில்
இருப்பவர்கள் பரிதாபப் படலாம்,
உதவிக்காக சக தமிழனின்
கரம் நீளும் போது கரம் பற்றலாம்.
கண்ணீர் துடைக்கலாம்.
நிச்சயம் ஒரு நாள் விடிவு வரும்.
இன்றிருக்கும் சூரியன்
நாளை இராது,
அப்போது வரும் புதிய சூரியன்,
நம்பிக்கையுடன் நாட்களைக்
கடத்துங்கள் தோழர்களே,

சிவா.ஜி
27-06-2008, 03:10 PM
குருதியில் குளிப்பது எங்களின் விதியா...?
உலகமே! இதற்கும் மௌனம்தான் பதிலா...???

இந்த தலைப்பில் கவிதையை இட்டதும் உங்கள் பதிலும் மௌனமானதாகிவிட்டதா...? ஏன் எவருமே கருத்துகூற முற்படவில்லை...? பொடாவில் உள்ள போட்டுடுவார்களென்ற பயமா...?

உங்கள் மனட்சாட்சியின் உணர்வுகளை மனிதாபிமானத்துடன் சொல்லுங்களேன் நண்பர்களே..
பொடாவிற்கும் தடாவிற்கும் பயப்படும் தமிழரல்ல நாங்கள். எத்தடையிட்டாலும் என் ஈழத்தமிழ் சகோதரனை ஆதரிக்கும் இரத்தம் உடைய சுத்த தமிழன் நான். உணர்வுகளோடு விளையாடாதீர்கள். அது உங்களுக்கு நல்லதல்ல. பிறை காணுபவர்களால் குறிவைக்கப்பட்டிருக்கும் எங்கள் தேசத்தை யார் காப்பார்கள்? அதற்கு குரல் கொடுக்க எந்த இரத்த சொந்தம் வந்தது? எங்கு வெடிக்கும், எங்கு உயிர் துடிக்கும் என்ற கவலையில் காலம் தள்ளும் நாங்களும் உங்களைப்போலத்தான். நீங்களாவது கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை சமாளிக்கவேண்டும் ஆனால் நாங்கள்.....எங்களுடனே இருந்து எங்களையே அழிக்கும் கூட்டத்தாரை சமாளிக்க வேண்டியிருக்கிறது.

தீபன்
28-06-2008, 01:16 AM

நன்றி சிவாண்ணா... உங்கள் இனப்பற்றிற்கு. இங்குகண்ணுக்கு தெரிந்த எதிரி மட்டுமல்ல,கண்ணுக்கு தெரியாத எதிரிகளையும் சேர்த்தே சமாளிக்க வேண்டியுள்ளது.
இந்தப் பதிவு, என் ஆரம்ப காலங்களில் நீங்கள் மன்றம் இணையுமுன்பே பதியப்பட்டது... (அதனால்தன் இது பதியப்பட்ட இடமே தப்பாக இருக்கிறது. - படித்ததில் பிடித்தது, அல்லது இலக்கியங்கள் போன்ற தலைப்பின்கீழ் இது பதியப்பட்டிருக்க வேண்டு. அந்த நேரம் எனக்கும் மன்றத்தின் கட்டமைப்பில் அவ்வளவாக பரிச்சயமில்லை.) இவ்வளவு நாட்கள் சென்றாவது ஒரு வீரத் தமிழன் ஆதரவுக்கரம் தந்தானென்பதில் மிகிழ்ச்சி...!