PDA

View Full Version : மென்பொருள் மேம்படுத்துதல்



இராசகுமாரன்
16-05-2006, 07:08 AM
நண்பர்களே...

இன்னும் ஓரிரு நாட்களில் (17 மே அல்லது 18 மே) நமது மன்றத்து மென்பொருளை மேம்படுத்த இருக்கிறோம். இது நமது மன்றத்தின் பாதுகாப்புக்கு இன்றியமையாதது, அதனால் தவிர்க்க முடியாதது.

அதனால், அடுத்த இரண்டு நாட்களில் இங்கு வரும்போது, ஒரு சில சமயங்களில் சில தடங்கல்கள் வரலாம். அவை உடனே சரி செய்யப் படும். தொடர்ந்து பிரச்சனைகள் ஏதும் வந்தால், இங்கே தெரிவிக்கவும். அவை விரைவில் சரி செய்யப் படும்.

மேலும், இந்த மேம்படுத்தலின் போதும் சில புதிய வசதிகளையும் சேர்க்க விரும்புகிறோம். இது பற்றி உங்கள் ஆலோசனைகள் வரவேற்கப் படுகின்றன.

நன்றி..

இராசகுமாரன்

அறிஞர்
16-05-2006, 11:29 PM
முன்னறிவிப்புகு நன்றி... காலத்திற்கேற்ற புது மாறுதல்கள்.. எப்பவும் நல்லதுதான்..

gesh
17-05-2006, 01:12 PM
மன்றத்தின் பாதுகாப்பு மிக அவசியம். மேலும் மாறுதலும் அவசியமான ஒன்று. சிறு சிறு தடங்கல்களை பொருட்படுத்த மாட்டோம். என்ன வசதிகள் சேர்க்கப்போகிறீர்கள் என்று சொன்னால் அதற்கேற்ற கருத்துகள் கூற ஏதுவாக இருக்கும்.

அறிஞர்
18-05-2006, 02:41 PM
புதுபடங்கள்.. அழகாக மன்றத்தை அலங்கரிக்கிறது...

படங்கள் பதிய விரைவில் புதிய விதிமுறைகள் வரும்.

Mano.G.
19-05-2006, 02:05 AM
மாற்றங்கள் நன்றாக உள்ளது
அதோடு தளத்தின் புதிய பாதுகாப்பு முறையும்
கடுமையாக்க பட்டிருப்பது, நிர்வாகஸ்தர்களுக்கு
தளத்தை நிர்வாகிக்க வசதியாக இருக்கும்.

மனோ.ஜி

மயூ
19-05-2006, 12:12 PM
Thumbs அழகாக உள்ளது......

சுபன்
22-05-2006, 01:51 AM
மன்றம் பார்க்க அருமையாக உள்ளது

இனியவன்
22-05-2006, 04:33 AM
புதுப்பொலிவுடன் மன்றம்
மயங்க வைக்கிறது.
மாற்றம் தந்தவர்களுக்கு
மனமார்ந்த நன்றி,

சுபன்
22-05-2006, 06:25 PM
மன்ற முதல் பக்கம் (home page) (http://tamilmantram.com) அழகாக உள்ளது.
மன்ற தகவல்களை இட்டிருப்பது சிறப்பு