PDA

View Full Version : வின்மீன்கள்



Tamilvasan
15-05-2006, 05:35 AM
வின்மீன்கள் -1
தெருவோரம் தூங்கும்
என்னைப்போல்
பூமித் தாயும்
தினமும் இரவில்
ஓட்டை விழுந்த
போர்வைப்போத்தி
தூங்குகின்றாள்
பாவம் குளிராதோ?

வின்மீன்கள்-2
பூமியின் கூரையில் விழுந்த
இந்த ஓட்டைகளை
எங்கள் வீட்டின் கூரையின்
வழியே பார்க்கும் போது
வேற்றுமையில் ஓற்றுமை
ஓற்றுமையில் ஏழ்மை!

வின்மீன்கள் -3
கடவுள் பூமிப்பெண்ணை
பார்த்து பார்த்து செதுக்கினான்
சிதறியப் பொறிகள்
சில வானில் போய்
ஒட்டிக் கொண்டன
வின்மீன்களாய்!

--தமிழ்வாசன்