PDA

View Full Version : கிரிக்கெட்-கரீபிய மண்ணில் இந்தியா



அறிஞர்
12-05-2006, 07:28 PM
கிரிக்கெட் - இந்தியா vs மேற்கு இந்தியா
9வது முறையாக இந்திய அணி.. வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது. ஒரு நாள் போட்டியில் இந்திய அணி சாதித்து வருகிறது. இன்னும் டெஸ்டில் சாதிக்கவேண்டியுள்ளது.

புதிய பட்டாளங்கள்.. தோனி, ரெய்னா, பவார், உத்தப்பா கலக்குகிறார்கள்.....

டிராவிட், யுவராஜ், பதான் நல்ல பார்மில் இருக்கிறார்கள்.

சேவாக், கைப் இங்காவது பிரகாசிக்கனும்...

போட்டி விபரம்

http://i13.photobucket.com/albums/a282/aringar/untitled.jpg

இந்திய அணி -(ஒருநாள் போட்டி)

டிராவிட், சேவாக், உத்தப்பா, யுவராஜ்,கைப், ரெய்னா, தோனி, வேணுக்கோபால் ராவ், பதான், ரமேஷ் பவார்,ஹர்பஜன் சிங், அகார்கர், ஸ்ரீசாந்த், ஆர்.பி.சிங், முனாப் பட்டேல்.

இளையவன்
12-05-2006, 11:12 PM
இந்தச் சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு மிகவும் சவாலானதாகவே இருக்கும். அனுபவ லாராவின் தலைமையில் மே.தீவுகள் அணி பலமானதாகவே தெரிகிறது. சந்தர்போல் மீண்டும் துடுப்பாட்டத்தில் கலக்கத் தொடங்கிவிட்டார் என்பதும் கெய்ல் மற்றும் சர்வான் நல்ல பார்மில் இருக்கிறார்கள் எனபதும் இந்திய அணிக்கு கவலைதரும் விடயமே. கடைசிகட்டத்தில் அதிரடியாக ஓட்டங்கள் எடுக்க ஸ்மித் உள்ளார் என்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். பந்து வீச்சைப் பொறுத்தவரை ரைலர் கலக்குகிறார்.

அறிஞர்
17-05-2006, 01:47 PM
ஒருநாள் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா.. 116 ரன் வித்தியாசத்தில் ஜமைக்கா அணியை வென்றது.

இந்தியா : 289/7
ஜமைக்கா : 173

டிராவிட், தோனி தவிர அனைவரும் பந்து வீசி பயிற்சி பெற்றனர்.

26 பந்தில் 45 ரன் குவித்த தோனி.. ஆட்ட நாயகன்

அறிஞர்
18-05-2006, 01:43 PM
முதல் இரண்டு ஒருநாள் ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டது

இளையவன்
18-05-2006, 04:10 PM
போட்டி மீண்டும் தொடங்கிவிட்டது. மே.தீவுகள் விக்கட் இழப்பின்றி 54 ஓட்டங்கள (8 ஓவர்).

இளையவன்
18-05-2006, 04:37 PM
கெய்ல் அரைச் சதம் 52(46). மே.தீவுகள் விக்கட் இழப்பின்றி 86 ஓட்டங்கள் (13ஓவர்)

அறிஞர்
18-05-2006, 04:57 PM
ஆட்டம் இல்லை என அறிவித்தார்கள்... இப்ப என்னவென்றால் மேற்கு இந்திய அணி அடித்தாடி கலக்குகிறார்கள்..

94-2 16 ஓவர்

மதி
18-05-2006, 06:35 PM
மேற்கு இந்திய தீவு..220/3 (39 ஓவர்கள்)

அறிஞர்
18-05-2006, 07:07 PM
251/6 (45 ஓவர்). கிரிஸ் கெய்ல் இருந்து இருந்தால் 270 போயிருக்கும்...

இரண்டாம் முறை விளையாடி வெற்றி பெறும் வெற்றியை தொடருமா... இந்தியா

அறிஞர்
18-05-2006, 08:04 PM
இந்திய அணியின் துவக்கம் அருமையாக உள்ளது

விக்கெட் இழப்பின்றி 50 - 8 ஓவரில்

அறிஞர்
19-05-2006, 12:09 AM
பரபரப்பான ஆட்டத்தில் ஒரு பந்து மீதி இருக்கும்போது இந்தியா வெற்றி...

44.5 ஓவரில் 254/5 (டிராவிட் 105, கைப் 66)

42 ஓவரை கைப் மெய்டன் பண்ணி டென்சனை அதிகரித்தார். கடைசியில் அவரே ஆட்டத்தை முடித்துவைத்தார்.

இந்தியாவின் 17 வது சேஸிங் சாதனை இங்கும் தொடர்கிறது..

மதி
19-05-2006, 12:12 AM
இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.
கடைசில..ரொம்ப தான் டென்சன் ஆக்கிட்டாங்க.. டிராவிட் மற்றும் கைஃப்பின் ஆட்டங்கள் பிரமாதம்..

அறிஞர்
19-05-2006, 01:28 AM
இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.
கடைசில..ரொம்ப தான் டென்சன் ஆக்கிட்டாங்க.. டிராவிட் மற்றும் கைஃப்பின் ஆட்டங்கள் பிரமாதம்.. டிராவிட் ஆட்டம் சரி... கைப் கடைசியில் சொதப்பிட்டாரு.. தோற்று இருந்தால் அவரை ஒருவழி பண்ணியிருப்பார்கள்

ஓவியா
19-05-2006, 07:22 PM
இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.

aren
20-05-2006, 02:59 AM
கைஃப் ஆட்டம் நன்றாகவே இருந்தது. அவர் அவரசப்படாமல் அமைதியாக ஆடியது நல்லதே. தோனி இன்னும் ஒரு ஓவர் நின்றிருந்தால் 44 ஓவருக்குள் ஆட்டத்தை முடித்திருக்கலாம். அவர் அவுட் ஆகிவிட்டதால் இந்த ஆட்டம் கடைசி பந்துவரை கொண்டு சென்றுவிட்டது.

அடுத்த ஆட்டத்தில் இந்தியா எப்படி ஆடுகிறார்கள் என்று பார்க்கலாம்.

aren
20-05-2006, 03:01 AM
இரண்டாவது ஆட்டத்தில் ஆர்பி சிங்கிற்கு பதில் ஸ்ரீசந்த் ஆடலாம் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி ஸ்ரீசந்த் இன்னும் குணமாகவில்லையென்றால் பவார் ஆடுவார் என்று நினைக்கிறேன்.

மற்றபடி வேறு எந்த மாற்றமும் இருக்காது என்று நினைக்கிறேன்.

இளையவன்
21-05-2006, 01:11 AM
இரண்டாவது ஒரு நாள் போட்டியில் மே.தீவுகள் 1 ஓட்டத்தால் வென்றுள்ளது.

மே.தீவுகள் 198/9(50)
சர்வான் 98(138) (ஆட்ட நாயகன்)

பதான் 3 விக்கட்

இந்தியா 197/10(49.4)
யுவராஜ் 93(121)

பிரட்சா 3 விக்கட்

அறிஞர்
22-05-2006, 09:17 PM
பரபரப்பான ஆட்டத்தில் கவிழ்த்து விட்டார்கள்..

17... சேஸ் தொடர் வெற்றி சாதனை நின்றது.

அடுத்த ஆட்டம் என்ன ஆகிறது எனப்பார்ப்போம்... ஸ்ரீசந்த் உள்ளே வருவார்...... பேட்டிங்கில் 3வது பதான் இறங்கமாட்டார்.

அறிஞர்
23-05-2006, 01:33 PM
இன்று டாஸ் ஜெயித்து..... பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளார் டிராவிட்...

யுவராஜ், முனா படேல் விளையாடவில்லை... வேணுகோபால் ராவ், ஸ்ரீசந்த் விளையாடுகிறார்கள்

அறிஞர்
23-05-2006, 01:49 PM
இந்தியா 7-1... டிராவிட் முதல் ஓவரில் முட்டையுடன் வெளியேறினார்

அறிஞர்
23-05-2006, 11:05 PM
அடுத்த தோல்வியை இந்தியா சந்தித்தது... சேவாக், கைப் தவிர மற்ற பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டம், ஹர்பஜன், அகர்கர் தவிர மற்ற பவுலர்களும் கவிழ்த்துவிட்டனர்.

அறிஞர்
27-05-2006, 12:10 AM
ஒருவழியாக ஒருநாள் தொடரை கோட்டைவிட்டார்கள் இந்தியர்கள்.....

நம் வீரர்கள் ரன் எடுக்க தடுமாறியது ஆச்சரியத்தை தருகிறது.

pradeepkt
29-05-2006, 06:07 AM
ஒருவழியாக ஒருநாள் தொடரை கோட்டைவிட்டார்கள் இந்தியர்கள்.....

நம் வீரர்கள் ரன் எடுக்க தடுமாறியது ஆச்சரியத்தை தருகிறது.
இதுதான் எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது

அறிஞர்
06-06-2006, 01:45 PM
ஏதோ முதல் டெஸ்டில்.. இந்தியா விளையாடுகிறது.......

முதல் இன்னிங்க்ஸ் பாவம்..

ஆனால் இரண்டாம் இன்னிங்க்ஸில் கலக்கிவிட்டனர். சபாஷ் ஜாபர்....

பரஞ்சோதி
06-06-2006, 01:51 PM
என்ன மக்கள் யாருமே ஆர்வம் காட்டவில்லையா?

இன்று 90 ஓவரில் 370+ ரன்கள் அடித்தால் வெ.இ. வெற்றி பெறும், 10 விக்கெட்களை வீழ்த்தினால் இந்தியா வெல்லும். எது நடக்கும் நண்பர்களே!

அறிஞர்
06-06-2006, 01:57 PM
என்ன மக்கள் யாருமே ஆர்வம் காட்டவில்லையா?

இன்று 90 ஓவரில் 370+ ரன்கள் அடித்தால் வெ.இ. வெற்றி பெறும், 10 விக்கெட்களை வீழ்த்தினால் இந்தியா வெல்லும். எது நடக்கும் நண்பர்களே! இந்தியா ஒருநாளில் அடிவாங்க ஆரம்பித்தவுடன் யாரும் இந்த பக்கம் வரவில்லை.. மேலும்... இரவு நேரங்களில் ஆட்டம்....

கரீபிய மண்ணில் ஒரு நாளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல....

அப்படி நடந்தால் அது மிகப்பெரிய சாதனைதான்

பரஞ்சோதி
06-06-2006, 02:01 PM
முக்கியமானவர்களான கெயில், சர்வான், லாரா விக்கெட் எடுத்தாலே போதும், ஆட்டம் நம்ம கையில்..

aren
06-06-2006, 02:11 PM
முக்கியமானவர்களான கெயில், சர்வான், லாரா விக்கெட் எடுத்தாலே போதும், ஆட்டம் நம்ம கையில்..

பிராவோவை விட்டு விட்டீர்களே?

நம் மக்கள் பத்து விக்கெட்டுக்களை எளிதாக வீழ்த்தமுடியாது என்று நினைக்கிறேன். ஹர்பஜனும், பத்தானும் வேறு களத்தில் இல்லை. வெறும் கும்ளேயை வைத்துக்கொண்டு சாதிப்பது அவ்வளவு எளிதல்ல என்பது என்னுடைய கருத்து.

லாரா, சந்தர்பால், சர்வான், கெய்ல், பிராவோ என்று ஒரு கூட்டமே இருக்கிறது.

ரொம்ப காலம் கழித்து கங்காவும் களத்தில் உள்ளார், அவர் இடத்தை தக்க வைத்துக்கொள்ள உயிரைக்கொடுத்து ஆடக்கூடும். மேலும் ராம்தின் வேறு.

மேற்கு இந்தியத்தீவீன் குழுவில் நிறைய ஆட்டக்காரர்கள் நின்று விளையாடக்கூடியவர்கள்.

நம் மக்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று பார்க்கலாம்.

அறிஞர்
06-06-2006, 02:38 PM
மேற்கு இந்திய அணி தெளிவாக விளையாடுகிறார்கள்... டிராவை நோக்கி ஆட்டம் செல்கிறது

pradeepkt
06-06-2006, 08:51 PM
என்னமோ இந்த கிரிக்கெட்டு மேட்ச் நடந்த மாதிரியே தெரியவில்லை...
விளம்பரங்கள் இல்லையா? இல்ல, எங்க ஆபீசுல எல்லாப் பயமக்களும் வேலை செய்ய ஆரம்பிச்சுட்டாங்களா?

அறிஞர்
06-06-2006, 09:21 PM
இன்னும் ரெண்டு விக்கெட் வீழ்த்தினால் இந்தியா வெற்றி பெறலாம்.

அறிஞர்
06-06-2006, 09:22 PM
என்னமோ இந்த கிரிக்கெட்டு மேட்ச் நடந்த மாதிரியே தெரியவில்லை...
விளம்பரங்கள் இல்லையா? இல்ல, எங்க ஆபீசுல எல்லாப் பயமக்களும் வேலை செய்ய ஆரம்பிச்சுட்டாங்களா? ஒருநாள் போட்டியில் இந்தியா அடிபட்டவுடன்.. உங்க மக்களுக்கு அலுவலகம் நியாபகம் வந்திருக்கும்....

அறிஞர்
06-06-2006, 10:13 PM
மிக விறுவிறுப்பான ஆட்டம்... டிராவில் முடிந்தது...

இந்திய அணி வீரர்கள்.. பவுலிங் சரியில்லை...... இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டிருந்தால் வென்றிருக்கலாம்..

அறிஞர்
03-07-2006, 05:10 PM
35 வருட சாதனை

கடைசி டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி...... டிராவிட்டின் பேட்டிங்க், கும்ப்ளே, ஹர்பஜன் பந்து வீச்சில் இந்தியா வெற்றி பெற்றது.

இதன் மூலம் டெஸ்ட் தொடரை 35 ஆண்டுகளுக்கு பின் மேற்கு இந்தியாவில் இந்தியா கைபற்றியுள்ளது.

டிராவிட் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதை கைபற்றினார்.

இந்தியா 200, 171 (டிராவிட் 61, 68)
மேற்கு இந்தியா 103 (ஹர்பஜன் 5 விக்கெட், 219 (கும்ப்ளே -6 விக்கெட்)

தாமரை
04-07-2006, 04:26 AM
35 வருட சாதனை

கடைசி டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி...... டிராவிட்டின் பேட்டிங்க், கும்ப்ளே, ஹர்பஜன் பந்து வீச்சில் இந்தியா வெற்றி பெற்றது.

இதன் மூலம் டெஸ்ட் தொடரை 35 ஆண்டுகளுக்கு பின் மேற்கு இந்தியாவில் இந்தியா கைபற்றியுள்ளது.

டிராவிட் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதை கைபற்றினார்.

இந்தியா 200, 171 (டிராவிட் 61, 68)
மேற்கு இந்தியா 103 (ஹர்பஜன் 5 விக்கெட், 219 (கும்ப்ளே -6 விக்கெட்)

தோற்றால் துவள்வதும் வெற்றி பெற்றால் மார்தட்டுவதும் வீரர்கள் வெளிப்படுத்தலாம்.. அறிஞர்கள் அப்படியா? தோற்றால் தோள் கொடுத்து, வென்றால் வாழ்த்தி ஆஹா அறிஞரே!!!:cool: :cool: :cool:

aren
04-07-2006, 04:52 AM
முதல் நாள் 200க்குள் இந்தியா சுருண்டது என்று படித்தவுடன், நம் மக்கள் அவ்வளவுதான், கடைசி டெஸ்டில் தோற்று தொடரையும் இழப்பார்கள் என்று நினைத்தேன்.

இரண்டாவது நாள் மேற்கு இந்தீஸ் 103க்குள் சுருண்டது, ஆனால் நம் மக்கள் 128-ல் 6 விக்கெட்டுக்களை இழந்துவிட்டார்கள் என்று படித்தவுடன், மனம் மீண்டும் முருங்கைமரத்தில் ஏறிக்கொண்டது. நம் மக்கள் இப்படி சொதப்பிவிட்டார்களே என்று.

மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா அபாரமாக பந்துவீசி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது என்று படித்தவுடன் மனதிற்குள் மகிழ்ச்சியாக இருந்தது.

ஆனால் நம் மக்கள் தொடர்ந்து வெளி நாடுகளில் வெற்றி வாகை சூடி நம்மை மகிழ்விக்கவேண்டும்.

யுவராஜ் சிங் இந்த டெஸ்ட் தொடரை மறந்துவிட்டு அடுத்த தொடரில் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

இர்பாஃன் பத்தானும் இன்னும் சிறப்பாக ஆடி இழந்த இடத்தை பிடிப்பார் என்று எதிர்ப்பார்க்கலாம்.

ஹர்பஜன் டெஸ்ட் தொடருக்கு எவ்வளவு முக்கியம் என்று கிரக் சாப்பலிற்கு இப்பொழுது தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இனிமேல் தொடர்ந்து அவர் டெஸ்ட் மாட்சுகளில் இருப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

pradeepkt
04-07-2006, 08:46 AM
சபாஷ்.
இந்திய அணிக்கு வாழ்த்துகள்.
டிராவிட்டுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்