PDA

View Full Version : கடற்புலி-கடற்படை மோதல் (24பேர் உயிரிழப்பு)



இளையவன்
11-05-2006, 11:30 PM
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிக் கடற்பரப்பில் வைத்து ஸ்ரீலங்கா கடற்படையின் இரண்டு அதிவேக டோறா பீரங்கிப் படகுகள் கடற்புலிக ளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. 700 கடற்படையினருடன் முற்றுகையிடப்பட்ட கப்பல் சர்வதேச கடற்பரப்பிற்குத் தப்பியோடியது.

எழு நூறு வரையான படையினரை ஏற்றிக் கொண்டு யாழ். குடாவிலிருந்து திருகோணமலைத் துறைமுகம் நோக்கிச் சென்ற பேர்ல் குறுஸ் என்ற கப்பலும் அதற்கு பாதுகாப்பு வழங்கிச் சென்ற இரு டோறா கலங்களும் வடமராட்சி கிழக்கில் கடற்புலிகளுடன் மோத ஆரம்பித்தன.

இதன்போது கடற்படையினரின் இரு டோறாக்களும் கடற்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டன. இதனையடுத்து படையினரை ஏற்றிச் சென்ற கப்பல் நீண்ட நேரம் கடற்புலிகள் தமது முற்றுகையில் வைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிந்திக் கிடைத்த செய்திகளின் படி குறித்த கப்பல் சர்வதேசக் கடற்பரப்பிற்குள் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

டோறாப் படகுகள் அழிக்கப்பட்டதில் கடற்படையைச் சேரந்த 20 பேர் வரை பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடற்படைமீதான தாக்குதலில் 4 கடற்புலிகள் வீரச்சாவைடைந்தனர்.

அறிஞர்
12-05-2006, 08:32 PM
துயரமான செய்தி...... உயிர் பலி என்றுதான் நிற்குமோ

தீபன்
14-05-2006, 04:55 PM
அப்படி நின்னுட்டா சனத்தொகை பெருகி உலகம் தாங்காதே ஐயா...?