PDA

View Full Version : சதுரங்கம்



தீபன்
10-05-2006, 07:45 PM
சதுரங்கம்

(எனக்குப் பிடித்த உள்ளரங்கு விளயாட்டு இது... அதனால்தான் அதன் புகழ் பாடுகிறேன்...)

சதுரங்கம் - அது
அறிவுச் சுரங்கம்!

சிந்தனையால் பந்தலிட்ட
அரங்கம்!

மன்னவன் உயிர்காக்க
அவன்
அன்னவள் வாளேந்தும்
வீரப்போர்!

நெறிதவறா படைவீரரின்
முறை தவறா படை நகர்த்தலில்
கறைபடியாதுருவாகும்
களப்போர்!

எண்ணெட்டு கட்டங்களுள்
எண்ணி காட்டும்
கணிதம்!

பாரதம் படைத்த
நிழல் அரசு!

இன்று
பார்முழுதும் கொடியுயர்த்தி
பகைவென்ற அரசன்!

மூழைக்குள் பொறிகிழப்பும்
விளையாட்டுலகின்
முடிசூடா மன்னன்.


(சதுரங்கம்-Chess)

sarcharan
11-05-2006, 01:36 PM
நல்லார்க்கு சாமியோவ்....

Tamilvasan
11-05-2006, 08:25 PM
நானும் இந்த விளையாட்ட ரொம்ப நாளா விளையாடி இருக்கேன் , இந்த கோணத்துல யோசிச்சது இல்ல. நல்ல கருத்துள்ள கவிதை.
~வாசன்

பென்ஸ்
12-05-2006, 02:22 PM
வாழ்த்துகள் தீபன்....
கவிதை நன்றாக இருக்கிறது...
சதுரங்கம் நீங்கள் சொன்னது போல் நிழல் விளையாட்டுதான்...
ஆனால்... அறிவு வளர்க்கும் விளையாட்டு...

இலக்கியன்
21-06-2008, 06:35 PM
மிகவும் நன்றாக அமைந்த வரிகள் பாரட்டுக்கள்

ஆதவா
24-06-2008, 12:37 PM
:)

சதுரங்கம் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.. அது அறிவுத்திறனைத் தூண்டுவதோடு மட்டும் இல்லாமல் ஒரு படையை எப்படி கொண்டு செல்லவேண்டும் என்ற அறிவுரையும் வழங்கப்படுகிறது.

முன்பு நான் அலுவலகத்தில் முடங்கிக் கிடந்தபோது ஒவ்வொரு சனி இரவு முதல் ஞாயிறு மதியம் வரை சதுரங்கம் விளையாடுவோம்.. இன்னும் பலகையும் காய்களும் இதோ, இங்கே தான் கிடக்கின்றன.

சதுரங்க விளையாட்டில் குறிப்பாக நாம் கவனிக்கவேண்டியவை, எதிராளியின் நகர்த்தல். அந்த நகர்த்தலைச் சுற்றி நாம் கவனிக்கும் நேரத்தில் மற்ற காய்களை நகர்த்தி வெற்றிபெற வைக்க வேண்டும். அதாவது திசை திருப்பும் ஆட்டம்... வாழ்வினில் அப்படி இருக்கப் போய் பல உதைகளும் வாங்கியதுண்டு..,,, எனக்கு சதுரங்கத்தில் தாக்குதல் பாணி ஆட்டமே மிகவும் பிடிக்கும். கையில் எது கிடைத்தாலும் போட்டுத்தள்ளுவது..... யதார்த்த சதுரங்கத்தில் தாக்குதல் எடுபடவில்லை.... பெரும் சக்தியான ராணி கைக்ககப்படவில்லை..

ஒரே ஒரு யானை வைத்து ஜெயித்த கதை உண்டு..... அப்பொழுதெல்லாம் மிகவும் யோசிப்போம்.. (?)

எனது நினைவுகளைக் கிளறிவிட்ட கவிதை..... வாழ்த்துகள்..

தீபன்
27-06-2008, 12:55 AM
நன்றாயிருக்கிறது தீபன், தொடரட்டும் உங்கள் கவி மழை.
ஏறக்குறைய இரண்டு வருடங்களிற்கு பிறகு தூசுதட்டி மன்ற நண்பர்கள் பார்வையில் மீண்டும் பட வைத்துள்ளீர்கள். நன்றி நண்பா பாராட்டுக்களிற்கு.


மிகவும் நன்றாக அமைந்த வரிகள் பாரட்டுக்கள்
நன்றி நண்பா


:)

யதார்த்த சதுரங்கத்தில் தாக்குதல் எடுபடவில்லை.... பெரும் சக்தியான ராணி கைக்ககப்படவில்லை..
ஒரே ஒரு யானை வைத்து ஜெயித்த கதை உண்டு..... அப்பொழுதெல்லாம் மிகவும் யோசிப்போம்.. (?)

எனது நினைவுகளைக் கிளறிவிட்ட கவிதை..... வாழ்த்துகள்..
என்ன, றொம்ப புலம்ப வைத்து விட்டேனோ... உங்கள் நினவுகளுடன் கூடவே ஏக்கங்களையும் கிளறிவிட்டது போலுள்ளதே...!

அப்பவாவது யோசிச்சிருக்கியளே... அதான், ராணி மாட்டல!!

அறிஞர்
27-06-2008, 12:58 AM
தன்னையும் பாதுகாக்க வேண்டும்..
எதிரியையும் வீழ்த்த வேண்டும்..

வாழ்க்கையின் தந்திரங்கள்.. சதுரங்கத்தில்

அநேகருக்கும்.. எனக்கும் பிடித்த விளையாட்டு...

தீபனின் வரிகள் அற்புதம்....
வாழ்த்துக்கள்.. தீபன்.

kavitha
27-06-2008, 07:47 AM
மன்னவன் உயிர்காக்க
அவன்
அன்னவள் வாளேந்தும்
வீரப்போர்!
அட...என விளித்த வரிகள்.
சதுரங்கத்திற்காக ஒரு கவிதை. நன்றாக இருக்கிறது

தீபா
09-07-2008, 07:45 AM
நல்ல சதுரங்க கவிதை... தொடர்க.

இளசு
15-07-2008, 07:22 PM
இந்தியா கண்ட விளையாட்டு..
இந்தியர்கள் உலகை வென்ற விளையாட்டு..

( எனக்கு எட்டாத விளையாட்டு - மூளை வேண்டுமாமே...)

நல்ல விளையாட்டுக்குத் தக்க மரியாதை அளிக்கும் கவிதை!

வாழ்த்துகள் தீபன்..

ஆனந்த் விஸ்வநாதனுக்கு மின்மடலில் இதை அனுப்புங்க மக்கா..!

தீபன்
16-07-2008, 09:15 PM
எனக்கு எட்டாத விளையாட்டு - மூளை வேண்டுமாமே...


இது கொஞ்சம் ஓவரா படுது...!:icon_rollout::icon_rollout::icon_rollout:

செல்வா
16-08-2008, 11:43 PM
அருமையான கவிதை தீபன். விளையாட்டு பற்றி சாதாரணமாக மன்றத்தில் காண இயலாத கருப்பொருள்.



( எனக்கு எட்டாத விளையாட்டு - மூளை வேண்டுமாமே...)


ஆமாம் அண்ணா உங்களுக்கு மூளை வேண்டும் தான். அப்புறம் இருக்கும் மூளை எல்லாம்
பயன்படுத்தித் தீர்த்துவிட்டால்
புதிதாய்க் கற்றுக்கொள்ள
புதுமூளை வேண்டும் தானே

(மனிதன் தன் வாழ்வில் தனது மூளையில் மூன்றில் ஒருபங்கைக் கூட பயன்படுத்துவதில்லை என்று எங்கோ படித்த ஞாபகம்...)

ஷீ-நிசி
17-08-2008, 05:44 AM
எனக்கும் சதுரங்க விளையாட்டு மிகப் பிடிக்கும்... (பின்ன.... நமக்கெல்லாம் மூளை இருக்குன்னு நிரூபிக்கிற விளையாட்டு இல்ல.... :) )



நெறிதவறா படைவீரரின்
முறை தவறா படை நகர்த்தலில்
கறைபடியாதுருவாகும்
களப்போர்!

அருமையான சொற்கட்டு!

வாழ்த்துக்கள் தீபன்!

சிவா.ஜி
17-08-2008, 06:18 AM
மனித வாழ்க்கையைப் பலவிதங்களில் பிரதிபலிக்கும் புத்திசாலி விளையாட்டு. ஆனால் நமக்குப் பொறுமை போதாதுங்க. அடப் போப்பா என்று எழுந்துபோய்விடுவேன். கவிதையில் சொற்கட்டு மிகப் பிரமாதம். வாழ்த்துகள் தீபன்.

poornima
17-08-2008, 08:11 AM
64 கட்டங்கள் - சராசரி(க்கு மேலான/கிட்டத்தட்ட) மனித வாழ்க்கை
எட்டு எட்டாய் வாழ்க்கையை பிரித்து வாழச் சொல்லும் ராஜ தந்திரம்.
யானையாய் குதிரையாய் பலமாய் சமயத்தில் இடறலாய்...
குறுகலாய் நெடுகலாய் என்றெல்லாம் வாழ்க்கை ஓட்டம்
பலிகொடுத்தும் - பலியாகியும்..
மதியூகியாய் விளையாண்டாலும் எஞ்சி நிற்கும் வெற்றியின் பின்னால்
எல்லாவற்றையும் பலிகொடுத்து..
===============
சதுரங்கம் எனக்கு கற்றுத் தருகிறது பல பரிமாணங்களை வாழ்வியல் சூழலில்
===========
நல்லதோர் சிந்தனையை தொட்டு எழுப்பிய கவிதை..பாராட்டுகள்..

பி.கு :
சதுரங்கம் விளையாட்டு எனக்கும் பிடிக்கும்.அதில் அதிகம் தோற்கவே விரும்புகிறேன்.. ஒவ்வொரு முறை தோற்கும் போதும் எதிராளியின் பலவீனம்
அது வெற்றியாய் இருப்பினும் கூட நான் குறித்து வைத்துக் கொள்ள ஏதுவாகிறது.

தீபன்
01-09-2008, 10:35 AM
64 கட்டங்கள் - சராசரி(க்கு மேலான/கிட்டத்தட்ட) மனித வாழ்க்கை
எட்டு எட்டாய் வாழ்க்கையை பிரித்து வாழச் சொல்லும் ராஜ தந்திரம்.
யானையாய் குதிரையாய் பலமாய் சமயத்தில் இடறலாய்...
குறுகலாய் நெடுகலாய் என்றெல்லாம் வாழ்க்கை ஓட்டம்
பலிகொடுத்தும் - பலியாகியும்..
மதியூகியாய் விளையாண்டாலும் எஞ்சி நிற்கும் வெற்றியின் பின்னால்
எல்லாவற்றையும் பலிகொடுத்து..
===============
சதுரங்கம் எனக்கு கற்றுத் தருகிறது பல பரிமாணங்களை வாழ்வியல் சூழலில்
===========
நல்லதோர் சிந்தனையை தொட்டு எழுப்பிய கவிதை..பாராட்டுகள்..

பி.கு :
சதுரங்கம் விளையாட்டு எனக்கும் பிடிக்கும்.அதில் அதிகம் தோற்கவே விரும்புகிறேன்.. ஒவ்வொரு முறை தோற்கும் போதும் எதிராளியின் பலவீனம்
அது வெற்றியாய் இருப்பினும் கூட நான் குறித்து வைத்துக் கொள்ள ஏதுவாகிறது.

பாராட்டுக்களிற்கு நன்றி செல்வா, ஷீ-நிசி, சிவா.ஜி அண்ணா, பூர்ணிமா.
பூர்ணிமா... ரொம்பவே தத்துவார்த்தமா விளையாட்டை பார்க்கிறீங்க. ஆனால், மிகவும் மதியூகமா விளையாடினால் அளிவுகள் பெரிதும் இல்லாமல்கூட வெற்றி கிடைக்கும் சந்தர்ப்பங்கள் உண்டு. அதனால் உங்கள் அந்த கருத்து எல்லா நேரமும் பொருந்தாது..!

poornima
02-09-2008, 06:42 AM
விளையாட்டா விளையாட்டா மட்டும் பார்க்க கூடாதில்லே :-)
மதியூகமா விளையாடினா அழிவுகள் பெரிதும் இருக்காதுன்னு சொல்றீங்க
உண்மைதான்.. ஆனா ஒரு வெற்றி என்பதே ஏதேனும் இழப்புக்குப் பின்னால்தான்
இல்லையா..?

சதுரங் விளையாட்டு - எதிராளியை விளையாட்டில் மட்டுமல்ல.. நிஜமாகவே வீழ்த்த வேண்டும் என்று எண்ணினால் மட்டுமே வெல்லமுடியும் என நினைக்க
வைக்கும் விளையாட்டு..

இது என் கருத்துதான்.. பரவலான கருத்து இல்ல :-)

தீபன்
03-09-2008, 05:07 PM
சதுரங்கத்தில் 3 move made என்று ஒரு முறை உண்டு. மொத்தம் 3 நகர்வுக்குள் எதிராளியை தோற்கடிக்கும் முறை. இதில் எந்த இழப்புக்களும் இரு பக்கமும் ஏற்படுத்தாமல் வெற்றி பெறும் சாத்தியமும் இருக்கிறது. அதைத்தான் சொன்னேன்...!
(இதெல்லாம் சதுரங்கத்தில் ஆரம்ப நிலையில் எதிராளி இருந்தால்தான் சாத்தியமென்பது வேறு....!)