PDA

View Full Version : அந்த இரவு.........மயூ
10-05-2006, 05:17 AM
2020 ம் ஆண்டு யாழ்பாணம் வவுனியா அதிவேக நெடுஞ்சாலையில், மாருதி மாடல் ஒன்று மணிக்கு 112 கீ.மீ வேகத்தில் பயனித்துக்கொண்டு இருந்தது. சிறிது நேரத்தில் மழை பேயாட்டம் ஆடப்போவதை பறைசாற்றும் முகமாக கிழக்கிலிருந்து கரு கரு என கறுத்த முகில்கள் வேகமாக முன்னேறிவந்தன.

காரில் செல்லும் குமரன் யாழ்ப்பாண பல்கலையில் பொறியியலாளராகப் பட்டம் பெற்று தற்போது நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சில் பணிபுரிகின்றான். தற்போது திருகோணமலையை யாழ்பாணத்துடன் இனைக்கும் நெடுஞ்சாலையை அமைக்கும் பராஜக்டில் தலமை பொறியியலாளர். திருமணமாகி இரண்டு குளந்தைகளின் தந்தை. ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என ஆணும் பெண்ணுமாக இரண்டு குளந்தைகள். மனைவிபெயர் நிஷாந்தி பாடசாலைகாலத்துக் காதல் சாதி மதம் எல்லாவற்றையும் தாண்டி நிறைவேறியது.

குமரன் மனதுக்குள் எதையோ நினைத்து புழுங்கிக்கொண்டிருப்பதை அவனது முகம் தெளிவாக காட்டியது.

கார் இப்போது ஆனையிறவுப் பகுதியினுள் நுழைந்தது கொண்டு இருந்தது. மாலை சுமார் ஏழு மணியளவில் நன்றாக இருட்டிவிட்டது. 300 மீட்டர் தூரத்தில் விடுதி ஒன்று இருப்பதாக காரில் பொருத்தியிருந்த சிறிய கருவி சமிஞ்சை கொடுக்கும் முகமாக பீப் பீப் என ஒலி எழுப்பியது. எத்தனை சிறப்பு பொருந்திய பகுதியிது, இந்தப் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க எத்தனை உயிர்கள் இழக்கப்பட்டது. ஒருவாறு யுத்தம் ஓய்ந்து விட்டது ஆயினும் அதன் வடுக்கள் இன்னும் ஆறவில்லை என நினைத்தவாறு குமரன் தனது காரின் வேகத்தை படிப்படியாக 100, 80, 50, 30 எனக்குறைத்து தூரத்தில் ஹொட்டேல் ஏதும் தெரிகின்றதா எனப் பார்த்தான் குமரன்

சுமார் 100 மீட்டர் தூரத்தில் ஒரு ஹொட்டேல். வெளிப்பார்வைக்கே தெரிந்தது மிகவும் பழைய ஹொட்டேல் சரியாகப் பராமரிக்கப்படவில்லை போல. காரை வாசலில் நிறுத்திய குமரன் ஹொட்டலினுள்ளே நோட்டம் விட்டான். ம்....யாரோ உள்ளே வரவேற்பாளர் மேசையில் விழுந்து தூங்குவது தேரிந்தது.

ஐயா! ஐயா......! சத்தம் இல்லை. மழைவேறு சாதுவாக தூறத்தொடங்கிவிட்டது. இந்நிலையில் வாகனம் ஓட்டுவது முட்டாள்தனமென நினைத்த குமரன் முன்னுக்கு இருந்த கார் போச்சினுள் தனது காரை நிறுத்தினான். காரினால் இறங்கிய குமரன் தனது சிறிய பயணப் பொதியை தூக்கியவாறு ஹொட்டலினுள் நுழைந்தான்.

சேர்! ரூம் ஒண்டு கிடைக்குமே?பதில் இல்லை. எரிச்சலடைந்த குமரன் தூங்கிங்கிக்கொண்டிருந்த உருவத்தை உலுப்பினான். ஐயோ! என்ன பயங்கரம்
அந்த மனிதனின் மார்பிலே கத்தி ஒன்று பாய்ச்சப்பட்டு இருந்தது.


வெளியே மழை சோ.................! எனக் கொட்டிக்கொண்டு இருந்தது. இன்ஸ்பெக்டர் ரட்ணம் குமரனின் கண்களின் உள்ளே ஏதும் கபடம் தெரிகின்றதா என உற்றுப்பார்த்துக்கொண்டு இருந்தார்.

நல்லவேளையாக இன்ஸ்பெக்டர் அதே ஹொட்டலில்தான் தங்கி இருந்தார். குமரனின் அலறலால் வெளியே வந்து அதே கோரமான காட்சியைக் கண்டார்.

சரி..... குமரன். ம்...... அப்பிடி எண்டால் எத்தன மணிக்கு ஹொட்டலுக்குள்ள வந்தீங்க?

அ.... எப்பிடியும் இரவு 7 மணி இருக்கும் சேர்.

இன்ஸ்பெக்டர் நெத்தியை சுழித்தவாறே நேரத்தைப் பார்த்தார். சரியாக இரவு 8 மணி 40 நிமிடங்கள் என அது காட்டியது.

சேர் இங்க ஒரு லெட்டர்......... என இழுத்தார் குமரன். இறந்த உடலுக்கு அருகே அந்தக் கடிதம்.

காலம் கலிகாலம்
நான் எமனோட பரிவாரம்
நீ நிஜமானால்
நான் நிழலாவேன்

கடிதம் என்று சொல்லுவதை விட கவிதை என்றே சொல்லலாம்.

இன்ஸ்பெக்டர் கவிதையை மறுபடியும் வாசித்தார். விசயம் கொஞ்சம் விவகாரமாத்தான் இருக்கும் போல என குமரனைப் பார்த்து கூறினார். குமரன் எதுவும் விளங்காமல் இன்ஸ்பெக்டர் ரட்னத்தின் முகத்தை வெறித்துப் பார்த்தான்.

இதேவேளை வேறு ஒரு அறையிலிருந்து ஒரு பெண் வீல்................... எனக் கத்தும் சத்தம் கேட்டது. இருவரும் அந்தத் திசையை நோக்கி ஓடினர். அங்கே ஓரு பெண் பார்வைக்கே தெரிந்தது ஏதோ பார்க்காததை பார்த்து விட்டாள் என்று. அருகே ஒரு ஆடவனின் உடல் இரத்த வெள்ளத்தில் தோய்ந்து கிடந்தது.
அது....! அது.....! என்று சில வார்த்தைகள் கூறிவிட்டு அந்த மாதுவும் தன் கணவனுடன் இணைந்து கொண்டாள். மரணத்திலும் பிரியாத ஜோடிகள்.

கடும் மழை காரணமாக கையடக்க தொலைபேசி முதல் காவல் துறையின் பிரத்தியேக தொலைத் தொடர்புக் கருவியும் செயல் இழந்து காணப்பட்டது. மொத்தத்தில் வெளி உலக தொடர்பில்லாத ஒரு பிரதேசமாக அவ்விடம் மாறி விட்டிருந்தது.

சரி, எனிமேலும் தாமதிப்பதுக்கு இல்லை. எல்லா ரூமில இருக்கிறவையளயும் ஒரு ரூமுக்கு மாத்துவம். அதுதான் பாதுகாப்பு என்றார் இன்ஸ்பெக்டர்.

ஆம் என்பது போல் மேலும் கீழும் தலையை ஆட்டிய குமரன் ஏனைய அறைகளை நேக்கிப் பாய்ந்தான்.


இன்ஸ்பெக்டரின் அறையில் அனைவரும் கூடியிருந்தனர். யாவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு அமர்ந்து இருந்தனர். இன்ஸ்பெக்டர் தொண்டையைக் செருமியவாறே பேசத் தொடங்கினார்.

நான் சொல்றத கேட்டு யாரும் பயப்படத் தேவையில்ல!. இண்டைக்கு இராவு இஞ்ச மூண்டு கொலை நடந்திருக்கு

இப்படி இன்ஸ்பெக்டர் சொன்னதும் அனைவரும் விழிகளைப் பிதுக்கி ஒருவரை ஒருவர் பார்த்தனர். தமக்குள் கிசு கிசு எனப் ஏதோ பேசிக்கொண்டனர்.

யாரும் குழம்பத் தேவையில்லை. நான் ஒரு இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் ரட்ணம். எனக்கூறி தனது அடையாள அட்டையை வெளியே எடுத்துக் காட்டினார்.

அதனால் என்ன! நீங்க இருந்தும் கொலை நடந்துதானே இருக்கு...? அங்கே இருந்த ஒருவர் பதட்டத்துடன் கேட்டார். கேட்டவரின் கண்களிலே பீதி வழிந்து ஒடிக்கொண்டிருந்தது.

ஹல்லோ! மிஸ்டர். நடந்ததைப் பற்றி பேசிப் பிரயோசனம் இல்லை, நடக்கப்போவதைப்பற்றிப் பார்ப்போம். சிறிது அதட்டலாகவே சொன்னார் இன்ஸ்பெக்டர் ரட்ணம்.

அனைவரையும் அங்கு அந்த அறையினுள் இருக்குமாறு பணித்த இன்ஸ்பெக்டர். இரண்டாவது கொலை நடந்த இடத்திற்குச் சென்று கொலை நடந்த இடத்தில் ஏதும் தடையம் இருக்கின்றதா எனப் பரிசோதித்தார். அங்கே அதே கவிதை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதப்பட்டு இருந்தது.

காலம் கலிகாலம்
நான் எமனோட பரிவாரம்
நீ நிஜமானால்
நான் நிழலாவேன்

என்னதான் கொலைகளைப் பலதடவை நேரடியாகப் பார்த்தவராக இருந்தாலும் இன்ஸ்பெக்டரின் உடல் மெதுவாக உதறத்தான் செய்தது. தனது செல்லிடத் தொலைபேசியில் அந்த பிரேதத்தை சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். சீ..... என்ன அகோரமான கொலை என இன்ஸ்பெக்டரின் மனது கூறிக்கொண்டது. அதேவேளை ஏனையவர்கள் இருந்த பக்கத்தில் இருந்து இரைச்சல் வரவே தனது இடுப்பில் இருந்த துப்பாக்கியை உருவியவாறு சத்தம் வந்த திசையை நோக்கிப் பாய்ந்தார் இன்ஸ்பெக்டர்.

அங்கே பண்டக சேமிப்பு அறையில் ஏனையவர்கள் ஒரு வாலிபனை தூணுடன் கட்டி வைத்திருந்துடன் அவனைத்தாக்கவும் தயாராக இருந்தனர்.

சற்றுப் பொறுங்கள்.......... என சத்தமிட்டவாறே தனது துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தார் இன்ஸ்பெக்டர்.

சேர்! இவன்தான் இந்த கொலைகளைச் செய்திருக்கிறான். இவனிண்ட கைகளைப் பாருங்கோ....! என சத்தமிட்டான் குமரன்.

அந்த வாலிபன் ஏற்கனவே ஏனையவர்களால் தாக்கப்பட்டிருந்தமை அவனது வாயிலிருந்து வழிந்த குருதியில் இருந்து புரிந்தது. அவனது சேட்டினுள் அணிந்திருந்த பெனியனில் கொலை செய்யும்போது ஏற்பட்ட இரத்தக் கறைகள் தெளிவாகத் தெரிந்தது. இன்ஸ்பெக்டரும் தன் பங்குக்கு தன் கையிலிருந்த துப்பாக்கியின் கைபிடியால் அந்த இளைஞனின் தலையில் ஒரு போடு போட்டார். அவ்வளவுதான் அடுத்த சில நிமிடங்களுக்கு அவன் எழுந்திருக்கவேயில்லை.

வெளியே மழை அடாது பெய்து கொண்டே இருந்தது. குமரன் ஒரு நிலையில்லாமல் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தான்.

சேர்! இனிமேலும் இங்க இருக்கிறது நல்லதா எனக்குப் படேல. நான் அப்ப போயிட்டு வாறன் சேர் என குமரன் சொன்னான்.

சரி என இன்ஸ்பெக்டர் தலையை ஆட்டினாலும் ஏதோ தப்பு செய்வது போல அவரது உள்மனது உறுத்தியது முகத்தில் தெட்டத் தெளிவாக தெரிந்தது. சரி குமரன் நீங்கள் போகலாம். ஆனால் உங்கள நாங்க தொடர்புகொள்ள கூடிய தகவல்கள் வேணும் எனக் கூறினார்.

தனது பர்ஸ்சை திறந்து ஒரு விசிட்டிங் காட்டை எடுத்துக் கொடுத்தான். பின் தனது காரிற்குச் சென்று அதை ஸ்டார்ட் செய்ய முயன்றபோது. ம்.... வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேன் என்றது. அதைப் பார்த்துக்கொண்டிருந்க இன்ஸ்பெக்டரின் உதட்டோரத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது.

உள்ளே வந்த இன்ஸ்பெக்டர் ரட்ணம் நேரடியாக சந்தேக நபர் கட்டி வைக்கப்பட்டிருந்க இடத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு வந்தபோது ஏனையவர்களும் தமது பெட்டி படுக்கைகளுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறுவதை கண்டார்.

அருகே வந்த பெண்மணி ஒருவர், நீங்களாச்சு கொலையாளியாச்சு இனி ஒரு நிமிசமும் நாங்க இங்க இருக்க மாட்டம் எனக் கூறினார். ரட்ணமும் சரி என்பது போல தலையை மிகவும் நிதானமாக ஆட்டினார்.

அந்த ஹொட்டலில் தற்போது இன்ஸ்பெக்டரும் சந்தேக நபரும் மட்டுமே இருந்தனர். சிறிது நேரத்தில் வாலிபன் மயக்கம் தெளிந்து எழுந்தான்.

ராஜா! கவலைப்படாத உனக்காக தூக்கு மெடை காத்துக்கொண்டு இருக்குது. இப்போ நல்லா தூங்குப்பா என்றார் ரட்ணம் நக்கலாக.

சேர், என்னமோ கொலை செய்தது நான்தான். ஆனால் என்னை தூண்டியது வேற ஒருவன் சேர்.

இந்தக கதையெல்லாம் கோட்டில போய்ச் சொல்லுடா ராஸ்கல்

ஆனால் தூண்டினவன் இங்கதான் இருக்கிறான். அவன நீங்க யோக்கியன் என்று நினைக்கிறீங்க, சேர்....! அது அந்த என்ஜினியர் குமரன் என்று முனகியவாறே கூறினான்.
குமரனை நிறுத்தும் நோக்கில் வாசலை நோக்கிப்பாய்ந்த இன்ஸ்பெக்டர் ரட்ணத்திற்கு திரும்பியவுடனேயே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே குமரன் கையில் துப்பாக்கியுடன் நின்றுகொண்டிருந்தான்.

சபாஷ் சபாஷ் சபாஷ். கடைசியில் உண்மையை கண்டு பிடிச்சிட்டியா முட்டாள் குமரன் கண்களில் வெறிபறக்க கேட்டான்.

நீங்கள் இருவரும் இண்டைக்கு எப்படியோ சாகத்தான் போறீங்க அதனால என்ன உண்மையை அறிஞ்சிட்டு சாகலாமே. நான் இந்த முட்டாளத்தான் என்னோட துரேகியைக் கொலை செய்யப் பயன்படுத்தினேன். காரணம்...... குமரனின் கண்களில் சிந்தனை ரேகைகள் படரத்தொடங்கியது.

நிஷாந்தி என்னோட அழகான மனைவி. அளவான குடும்பம் நிறைவான வருமாணம் என்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த எமது வாழ்கையில் சூறாவளிபோல வந்தவன்தான் இந்த ஹொட்டேல் மனேஜர் சுந்தரன். பெயருக்கேற்ற வகையில் அவனும் சுந்தரன்தான். சந்தரன் என்னோட பள்ளித் தோழன் பாம்பை பசு என்று நம்பி வீட்டினுள் விட்டது என் தப்புத்தான். அன்று ஒரு நாள் இப்படித்தான் வேளைக்கு வீடு திரும்பியபோது சுந்தரனும் நிஷாந்தியும் சீ................... ஓங்கி அருகிலிருந்த மேஜையில் கைகளால் குத்தினான் குமரன். ஒரு நிமிடம் பற்களை நறுவிக்கொண்டு மீண்டும் தொடரலானான்.

முதலில் நான் தற்கொலை செய்யத்தான் முடிவெடுத்தேன், ஆனால் எதற்காக நான் சாகோனும் அதனால் துரோகிகளைக் கொலை செய்ய முடிவு செய்தேன். அதற்காகத்தான் நம்ம் ஏரியா தாதா சுப்பனை அணுகினேன் ஆனால் அவன் வந்த இடத்தில் வந்த காரியத்தை மட்டும் பார்க்காம வேற ஒரு பெண்ணையும் கெடுக்கப்போய் ஒரு கொலையை மூண்டு கொலையாக்கிட்டான் என்று கூறியவாறே தனது கைத்துப்பாக்கியால் சுப்பனை சரமாரியாக சுட்டுத் தள்ளினான்.

குமரன் தனது துப்பாக்கியை இன்ஸ்பெக்டரை நோக்கித் திருப்பினான். அப்ப நீங்களும் பொயிட்டு வாங்கோ சேர்

குமரன் ஒரேயொரு கேள்வி. கேட்கலாமா? தனது கைகளை உயர்த்தியவாறே கேட்டார் இன்ஸ்பெக்டர்.

ம்..

அப்போ உங்க மனைவி இப்ப எங்க?, அவங்க உயிரோடதானே இருக்காங்க? அதென்ன கவிதை எல்லாம்

ஹா... ஹா... காவல்துறையை திசைதிருப்பத்தான் அந்தக் கவிதை எல்லாம். நான் இங்க வரும்போதே அவளை எங்கட வீட்டுக் கிணத்தில தள்ளிப்போட்டன். பிள்ளயள என்ற அக்காட் விட்டிட்டன். என்று கூறிய குமரன் தனது கைகளால் முகத்தை மூடியவாறு தன்னை ஆசுவாசப்படுத்த முயன்றான்.

இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட விரும்பாத இன்ஸ்பெக்டர் ரட்ணம் மின்னலெனப் பாய்ந்து குமரன் கையிலிருந்த துப்பாக்கியைத் தட்டிவிட்டார். துப்பாக்கி சுமார் பத்து அடி தள்ளிப்போய் விழுந்தது. திடீர் தாக்குதலால் சற்றே குளம்பிய குமரன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொணடு இரட்ணம் மீது பாய்ந்தான். இருவரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். இறுதியில் இன்ஸ்பெக்டரின் தாக்குதலில் குமரன் மயக்கமடைந்து கீழே சாய்ந்தான்.

இப்போது இன்ஸ்பெக்டர் குமரனின் துப்பாக்கியை ஒரு துணியைப் போட்டு விரல் ரேகை அழியாது தூக்கும் போது தனக்குப் பின் ஏதோ சத்தம் கேட்பது போலப் படவே இன்ஸ்பெக்டர் பின்னால் திரும்பிப் பார்த்தார். அங்கே குமரன் ஒரு உடைந்த கதிரைக் காலால் இன்ஸ்பெக்டரைத் தாக்க ஓடி வருவதைக் கண்டார். இப்போது இன்ஸ்பெக்டர் கையிலிருந்த துப்பாக்கி இரண்டு தடவை டுமீல்..... டுமீல்..... என முழங்கியது. குமரனின் உயிரற்ற சடலம் நிலத்தில் சரிந்தது.

வெளியே நன்றாக விடிந்து விட்டிருந்தது. செக்கச் செவேல் எனச் சிவந்த கிழக்கு வானம் இந்த இரவின் இரத்தக்கறைபற்றி சொல்ல விழைகிறதோ என்ன??????????

மயூ
10-05-2006, 05:19 AM
இது எனது கன்னி முயற்சி நிறைகளை (அப்படி ஏதும் இருந்தால்?????) விடுத்து குறைகளை எடுத்து இயம்புவீர்களாக......

pradeepkt
10-05-2006, 07:08 AM
அடேயப்பா...
பயங்கரமான திகில் கதையா இருக்கே...
நல்லா எழுதிருக்கீங்கய்யா... இதே மாதிரி நிறைய கதைகள் எழுதிப் பழகுங்க. வெகு சீக்கிரம் சிறந்த எழுத்தாளனாக வாழ்த்துகள்.

கதைக்குக் கருன்னு ஒண்ணு வச்சிக்கிட்டு அதைச் சுத்தியே சம்பவங்களைப் பின்னுங்க, அருமையா வரும்!

gragavan
10-05-2006, 09:29 AM
அடேங்கப்பா....திகில் கதைகள் படிச்சு ரொம்ப நாளாச்சு. நல்ல கன்னி முயற்சி. பிரதீப் சொல்வது போல கரு ஒன்னு வெச்சுக்கிட்டு அதச் சுத்தி சம்பவங்களைப் பின்னுங்க.

மயூ
11-05-2006, 07:25 AM
நன்றி இருவருக்கும்! நீங்கள் கூறிய அருமையான கருத்துக்கு நன்றி. அடிப்படையே இல்லாமல் கதை எழுதி இருக்கின்றேன் இல்லையா?

gragavan
11-05-2006, 08:41 AM
மயூரேசன், அடிப்படை இருக்கிறது கதையில். ஆனால் மனைவியைச் சந்தேகிக்கும் காரணம் சற்றுப் பழையது. அதை விடுத்து....நல்ல கன்னி முயற்சி என்பதே எனது கருத்து. அடுத்து கதை எழுதுங்கள். சிறப்பாக வரும்.

மயூ
12-05-2006, 07:00 AM
மயூரேசன், அடிப்படை இருக்கிறது கதையில். ஆனால் மனைவியைச் சந்தேகிக்கும் காரணம் சற்றுப் பழையது. அதை விடுத்து....நல்ல கன்னி முயற்சி என்பதே எனது கருத்து. அடுத்து கதை எழுதுங்கள். சிறப்பாக வரும்.


உங்கள் ஊக்கம் அளிக்கும் கருத்துக்கு நன்றி இராகவன்.:)

ஓவியா
17-05-2006, 11:50 PM
மயூரன் சார், கதை நல்லா இருக்கு,

ஒரு இங்லிஷ் படம் போல் உள்ளது,,,,

இன்னும் நிறய எழுதுங்கோ...வாழ்த்துகள்

மயூ
22-05-2006, 11:18 AM
உங்கள் கருத்துக்கு நன்றி ஓவியா.... அவர்களே!