PDA

View Full Version : பனை



kavinila
07-05-2006, 10:38 AM
பனைக்கும் பானைக்கும் இங்கு
பெரிய வித்தியாசமில்லை.....................
நாடு நன்றாக வாழப் பனை.......
நாடு நடுத்தெருவில் விழ.................
பனையில் உள்ள பானை!!!


குடிக்கிறேன் குடிக்கிறேன்
குடித்துக்கொன்டு இருக்கிறென்
ஏன்
என் அருமை தமிழ்ப் பாட்டி
ஊக்க மது கைவிடெல் என்ரு சொன்னதாலல்லவா

paarthiban
07-05-2006, 07:46 PM
பனை போய் டாச்மாக் பாட்டில் இப்போது. குடி கொடுமை விளக்கும் கவிநிலா கவிதை அருமை

kavinila
08-05-2006, 07:53 AM
பாராட்டுக்கு நன்றிகள்

Mano.G.
08-05-2006, 08:41 AM
பனைக்கும் பானைக்கும் இங்கு
பெரிய வித்தியாசமில்லை.....................
நாடு நன்றாக வாழப் பனை.......
நாடு நடுத்தெருவில் விழ.................
பனையில் உள்ள பானை!!!


குடிக்கிறேன் குடிக்கிறேன்
குடித்துக்கொன்டு இருக்கிறென்
ஏன்
என் அருமை தமிழ்ப் பாட்டி
ஊக்க மது கைவிடெல் என்ரு சொன்னதாலல்லவா

அடடா ஔவைப் பாட்டி இதையா சொன்னாங்க
இவ்வளவு நாளும் நமக்கு தெரியாம போச்சே

மனோ.ஜி

Tamilvasan
08-05-2006, 08:09 PM
கவிநிலா கவிதை அருமை

பனையிலிருந்து வந்தது பானை
பணத்துக்கு வந்தது வினை-இதனால்
அடுப்புக்குள் வந்தது பூனை!

--தமிழ்வாசன்

kavinila
10-05-2006, 09:09 AM
அடுப்புக்குள் வந்த பூனை
அழித்துப்போனதே குடும்பங்களில் அன்பெனும் தேனை

gragavan
10-05-2006, 11:44 AM
ஆகா.....அருமையாகச் சொன்னீர்கள் கவிநிலா....கைவிடேல்னு சொன்னவங்க வாய் விடேல்னு சொல்லீருந்தா சரியாயிருந்திருக்கும். :-) நல்லாயிருக்கு இந்தக் கவிதை முடிவு.

பென்ஸ்
12-05-2006, 02:17 PM
ஐயோ ஐயோ... கலக்கல் கவிதை....
நல்ல ஜோக்கா இருக்கு...
கவிநிலா.... என்ன இது.. என்ன இது.. கேக்குறேன்மில்லையா????
உன்மையை சொல்லுமைய அது ஊக்கமதுவா... ஊக்கமாதுவா????

இராசகுமாரன்
14-05-2006, 01:45 PM
ஊக்கமது கைவிடேலுக்கு.... இப்படியும் ஒரு அர்த்தம் இருக்கிறதா?

நல்ல சிந்தனை... நல்ல கவிதை வாழ்த்துக்கள்.. கவிநிலா!