PDA

View Full Version : பிரமோத் மகஜன் மரணம்



aren
03-05-2006, 12:55 PM
பாஜகவின் முக்கிய தலைவர்களும் ஒருவரான பிரமோத் மகஜன் இன்று மரணமடைந்தார். அவருடைய குடும்பத்திற்கு நம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வோம்.

பாஜகாவின் அடுத்த தலைவராகவும், பிரதம மந்திரியாவதற்கு தகுதியுள்ளவர். பாவம் தன்னுடைய தம்பியாலேயே சுடப்பட்டு இறந்தார்.

gragavan
03-05-2006, 01:46 PM
அடடா! பாவம். வளர்த்த கடா மார்பில் பாய்வது இதுதான் போல.....பாவம். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

இளையவன்
03-05-2006, 02:08 PM
அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன் அவருடைய குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அறிஞர்
03-05-2006, 04:08 PM
பாஜகவின் நம்பிக்கை நட்சத்திரம் இறப்பு.. பாஜகவிற்கு மிகப்பெரிய இழப்பு...... குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்

சேரன்கயல்
04-05-2006, 09:23 AM
பிரமோத் மகாஜன் இறப்பு பி.ஜே.பிக்கு நிச்சயம் இழப்புதான்...
அடுத்தக் கட்ட தலைமை மாற்றம் என்பது எல்லா கட்சிகளுக்கும் சிக்கலாகி வருகிறது...

தாமரை
04-05-2006, 09:58 AM
பிரமோத் மகாஜன் இறப்பு பி.ஜே.பிக்கு நிச்சயம் இழப்புதான்...
அடுத்தக் கட்ட தலைமை மாற்றம் என்பது எல்லா கட்சிகளுக்கும் சிக்கலாகி வருகிறது...
பிரமோத் மஹாஜன் எதிர் கட்சியினர் உடன் கூட நல்லுறவு கொண்டிருந்தார்.. தம்பி யை கவனிக்கத் தவறிவிட்டதாய் சொல்லுகிறார்கள்..
ஆனால் தம்பியை திருத்த முடியாது என தள்ளி வைத்து இருந்திருக்கலாம் என்றே கருதுகிறேன். பணக்கார அண்ணனின் ஏழைத் தம்பி...

ஏழை அண்ணன் பணக்காரத் தம்பியை போட்டு தள்ளியதாக கேள்விப்பட்டதில்லை..

பிஜேபிக்கு இது பெரிய இழப்பு. இந்தியாவிற்கும்தான்..