PDA

View Full Version : துணை இராணுவக் குழுவினரின் முகாம்கள் தாக்



இளையவன்
30-04-2006, 07:17 AM
பொலநறுவையில் துணை இராணுவக் குழுவினரின் முகாம்கள் தாக்கியழிப்பு: 20 பேர் பலி

சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசமான பொலநறுவையில் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரது முகாம்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் தாக்கியழித்தனர். இதில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 15 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 பேர் படுகாயமடைந்தனர். கடத்தப்பட்டு முகாமில் வைக்கப்பட்டிருந்த வவுனியா வர்த்தகர் விடுவிக்கப்பட்டுள்ளார்.


மட்டக்களப்பு-பொலநறுவை எல்லையில் வெலிக்கந்தைக்கு கிழக்கில் 7 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள காசங்குளம் என்ற இடத்தில் இம்முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட சிறப்புத் தளபதி கேணல் பானுவின் கண்காணிப்பின் கீழ் இத்தாக்குதல் நடத்தப்பட்டு துணை இராணுவக் குழுவினரது முகாம்கள் அழிக்கப்பட்டன.

கருணா குழுவைச் சேர்ந்த மார்க்கன், ரீகசீலன், சின்னத்தம்பி ஆகியோரும் இம்முகாமில் இருந்ததாகக் கூறப்படுகின்றது.

முகாமிலிருந்த 2 பிகே எல்.மி.ஜி, ஒரு ஆர்.பி.ஜி, ஒரு 81 மி.மீ மோர்ட்டார், 6 ஏ.கே.எல்.எம்.ஜிகள், 16 ஓட்டோமேட்டிக் ரைபிள்கள், 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு தகவல் தொடர்புசாதனத்தை விடுதலைப் புலிகள் மீட்டனர்.

தாக்குதல் சம்பவத்தில் காமயடைந்த ஒன்பது பேர் வெலிக்கந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களை கொழும்பு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல சிறிலங்கா இராணுவத்தினர் ஏற்பாடு செய்து வருவதாக தெரிகிறது.

சம்பவ இடத்திலிருந்து 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் நடைபெற்ற போது முகாமை நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் ஆட்லறி எறிகணை வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அம் முகாமில் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரின் இரு வாகனங்கள் இருந்துள்ளன.

தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்துக்கும் இடையே இன்று காலை 9 மணி முதல் துப்பாக்கிச் சண்டை நடப்பதாக வெலிக்கந்தை சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் குறித்து ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சி.புலித்தேவன் தொலைபேசியூடாக கூறியதாவது:

எமது சிறப்பு அதிரடிப்படையணியினர் இத்தாக்குதலை நடத்தி மூன்று முகாம்களை அழித்தனர். இதில் 20 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலானது துணை இராணுவக் குழுவினருக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் பாரிய பின்னடைவு.

அம்முகாம்களை நாங்கள் எரித்துவிட்டோம். சிறிலங்கா இராணுவத்தினரால் வழங்கப்பட்ட ஆயுதங்களும் வெடிபொருட்களும் அம்முகாமில் இருந்தன.

இத்தாக்குதலின் போது சிறிலங்கா இராணுவத்தினர் எமது போராளிகள் மீது ஆர்ட்டிலறி தாக்குதல் நடத்தினர். அதன் பின்னர் தங்கள் நிலைகளுக்கு அவர் பின்வாங்கினர். ஒரு போராளி படுகாயமடைந்தார். 20 கருணா குழுவினர் கொல்லப்பட்டனர். 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


மேலும் இரு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரது வாகனங்களும் அம்முகாமில் இருந்தன. ஆனால் கடத்தப்பட்ட 7 பணியாளர்கள் அங்கிருந்தமைக்கான தடயங்கள் ஏதும் இல்லை என்றார் புலித்தேவன்.

இத்தாக்குதல் சம்பவத்தை சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் எந்த ஒரு துணை இராணுவக் குழுக்களும் இல்லை என்று தொடர்ந்து சிறிலங்கா அரசாங்கம் மறுத்து வந்த நிலையில் விடுதலைப் புலிகள் தாக்குதல் மூலம் அம்முகாம்கள் இருப்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி: புதினம்

தீபன்
30-04-2006, 05:12 PM
துணை ராணுவ குளுக்களே தம்மிடம் இல்லயென்கிறதே அரசு... அப்படியானால் தாக்கி கொல்லப்பட்டவர்களை யாரென சொல்லப்போகிறார்கள்...?

இளையவன்
30-04-2006, 10:51 PM
அண்மையில் ஒஸ்ரேலியத் தொலைக்காட்சிச் செவ்வியொன்றில் இலங்கையின் பாதுகாப்புச் செயலரும் சனாதிபதியின் சகோதரருமான கோட்டபாய ராஜபக்ஸ கூறியிருந்தார், விடுதலைப் புலிகள் தங்கள் முகாம்களை கருணாவினரின் முகாம் என்று செய்தியாளருக்குக் காட்டியிருக்கக் கூடும் என்று. இப்பொழுது இப்படிச் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை "புலிகள் தங்கள் உறுப்பினர்களைத் தாங்களே கொன்றுவிட்டு கருணா குழுவினரின் முகாம்களைத் தாக்கியதாக கூறுகிறார்கள்"