Tamilvasan
28-04-2006, 05:03 AM
அவள்!
உடல்
கடல் நுரையால் செய்த வேலை-அவள்
செய்கூலி,சேதாரமில்லா தங்க சிலை
கால் முளைத்த கரும்பு -நான்
கடிக்க விரும்பும் எரும்பு
சட்டைப் போட்ட வட்டநிலா -அவள்
பட்டைப் போட்ட வைரநிலா
சாயம்பட்ட இதழ்கள் - அங்கே
காயம்பட்ட இதயம் - இங்கே
50 கிலோ பஞ்சுமிட்டாய்-நீ
உலக அழகையெல்லாம் மிஞ்சிவிட்டாய்
நட்சத்திரக் கூட்டத்தோடு நிலா -அவள்
சிறுவர் கூட்டத்தோடு போகும் உலா
மொத்தத்தில் ஓர் இயற்கை எழிற்கூடம் -அவள்
மத்தவர் மனதை மாசுபடுத்தும் தொழிற்கூடம்
என் கவிதை ஊற்றின் ஆதாரம் -அவளே
எந்த ஜென்மத்திலும் என் தாரம்
என் மனம் புரிந்துகொள்வாயா?
என்னை மணம் புரிந்துகொள்வாயா?
-தமிழ்வாசன்
உடல்
கடல் நுரையால் செய்த வேலை-அவள்
செய்கூலி,சேதாரமில்லா தங்க சிலை
கால் முளைத்த கரும்பு -நான்
கடிக்க விரும்பும் எரும்பு
சட்டைப் போட்ட வட்டநிலா -அவள்
பட்டைப் போட்ட வைரநிலா
சாயம்பட்ட இதழ்கள் - அங்கே
காயம்பட்ட இதயம் - இங்கே
50 கிலோ பஞ்சுமிட்டாய்-நீ
உலக அழகையெல்லாம் மிஞ்சிவிட்டாய்
நட்சத்திரக் கூட்டத்தோடு நிலா -அவள்
சிறுவர் கூட்டத்தோடு போகும் உலா
மொத்தத்தில் ஓர் இயற்கை எழிற்கூடம் -அவள்
மத்தவர் மனதை மாசுபடுத்தும் தொழிற்கூடம்
என் கவிதை ஊற்றின் ஆதாரம் -அவளே
எந்த ஜென்மத்திலும் என் தாரம்
என் மனம் புரிந்துகொள்வாயா?
என்னை மணம் புரிந்துகொள்வாயா?
-தமிழ்வாசன்