PDA

View Full Version : அவள்!



Tamilvasan
28-04-2006, 05:03 AM
அவள்!

உடல்
கடல் நுரையால் செய்த வேலை-அவள்
செய்கூலி,சேதாரமில்லா தங்க சிலை
கால் முளைத்த கரும்பு -நான்
கடிக்க விரும்பும் எரும்பு
சட்டைப் போட்ட வட்டநிலா -அவள்
பட்டைப் போட்ட வைரநிலா
சாயம்பட்ட இதழ்கள் - அங்கே
காயம்பட்ட இதயம் - இங்கே
50 கிலோ பஞ்சுமிட்டாய்-நீ
உலக அழகையெல்லாம் மிஞ்சிவிட்டாய்
நட்சத்திரக் கூட்டத்தோடு நிலா -அவள்
சிறுவர் கூட்டத்தோடு போகும் உலா
மொத்தத்தில் ஓர் இயற்கை எழிற்கூடம் -அவள்
மத்தவர் மனதை மாசுபடுத்தும் தொழிற்கூடம்
என் கவிதை ஊற்றின் ஆதாரம் -அவளே
எந்த ஜென்மத்திலும் என் தாரம்
என் மனம் புரிந்துகொள்வாயா?
என்னை மணம் புரிந்துகொள்வாயா?

-தமிழ்வாசன்

அறிஞர்
28-04-2006, 07:28 PM
ஒரு பெண்ணை மணம் புரிய இவ்வளவு பாராட்டனும் போல....

கலக்குங்க..... உங்கள் மனம் புரிந்து...... அவள் உங்களை மணக்க வாழ்த்துக்கள்

மதி
28-04-2006, 08:49 PM
அடடே..எதுகைமோனையோட..
கலக்குங்க வாசன்.

ஆமாம் கல்யாணம் பண்ணிக்க இவ்வளவு பொய் சொல்லனுமா என்ன.?

குழப்பத்துடன்,
மதி

Tamilvasan
28-04-2006, 09:12 PM
"கவிதைக்கு பொய் அழகு"
"ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்"
இப்படி ஏதாவது சொல்லி தப்பித்து கொள்ள வேண்டியதுதான் :)

நன்றி,
--தமிழ்வாசன்

பென்ஸ்
29-04-2006, 11:17 AM
பொய் சொல்லுகிறோம் என்று தெரிந்தே கவுக்க நினைக்கும் ஆண்மனம்
பொய் சொல்கிறான் என்று தெரிந்தும் கவுந்து போகும் பெண் மனம்...

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை வாழும் இந்த ஏமாற்று கும்பல்...
கூடவே காதலும்......

gans5001
03-05-2006, 01:45 PM
š Ţ ո. TR ŢŢ Ȩ áŢ ͨ .

, ȡâ Ţ . Ш ¢Ȣ š򨾸Ǣħ ɨ () Ţš.

ȡ Ţġ, 츢.

தாமரை
03-05-2006, 02:17 PM
"கவிதைக்கு பொய் அழகு"
"ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்"
இப்படி ஏதாவது சொல்லி தப்பித்து கொள்ள வேண்டியதுதான் :)

நன்றி,
--தமிழ்வாசன்
பெண் = அழகு
அழகு - பொய்
பெண் = ???
தயவு செய்து போட்டு குடுத்திறதீங்க
ஹி ஹி ஹி..