PDA

View Full Version : தேன்கூட்டின் தேன்மழைgragavan
27-04-2006, 12:53 PM
இன்னைக்குக் காலைல கொஞ்சம் நேரங்கழிச்சி எந்திரிச்சேன். ஏன்னா நேத்து ராத்திரி வீட்டுக்கு வரும் போது நடுநிசி. மயில்களை எல்லாம் பாக்கலாம்னு உக்காந்தா பொன்ஸ் கிட்ட இருந்து ஒரு மயில்......ராகவன்...சதி நடக்குது....ஒங்கள சாமியார் ஆக்கப் பாக்குறாங்கன்னு....தேன்கூட்ட ஒடனே பாக்கச் சொன்னாங்க....நானும் படக்குன்னு போய்ப் பாத்தேன். அட! வாசகர் பரிந்துரைன்னு மகரந்த வலைத்தளத்த இன்றைய பரிந்துரைல போட்டிருக்காங்க. அதுவும் படத்தப் போட்டு. நன்றி தேன்கூடு. தேன்மழைதான் இந்தப் பரிந்துரை. பரிந்துரை செஞ்ச அந்த நண்பருக்கும் நன்றி.

என்னப் பத்தி என்ன சொல்லீருக்காங்கன்னு கீழ குடுத்திருக்கேன். அதுக்கு நடுவுல என்னோட குறிப்புகளும் இருக்கு. ஊதா நிறத்துல.

திருமணம் ஆகாத அழகான இளைஞர். தூத்துக்குடியை சேர்ந்தவர். தற்போது பெங்களூரில் கணிப்பொறி வல்லுநராக இருக்கிறார்.

போட்டுத் தாங்கீட்டாங்க. அழகுல தொடங்கி வல்லுனர்ல முடிச்சிருக்காங்க. :-) தூத்துக்குடி நாம் பொறந்த ஊராச்சே.....சின்ன வயசுல ஓடியாடி திரிஞ்ச ஊராச்சே....அதுனாலதான் மத்த ஊர்கள விட தூத்துக்குடி மேல பாசம் நெறைய.

ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு, அதிலும் முருகக்கடவுள் மீது தீராத அன்பு.

உண்மைதாங்க. அந்த அன்பும் முருகன் தந்ததுதான். எல்லாம் தமிழ் காட்டிய வழி.

பழமையை உடைத்தெறிந்து புதிய பாதையில் உலகை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் தீராத ஆர்வம் கொண்டவர், தன் கருத்தை கடைப்பிடிப்பவரும் கூட.

இந்தக் கருத்தைச் சொன்ன நண்பருக்கு என்னைப் பத்தித் தெரிஞ்சிருக்கு. ஐயா, யாருய்யா நீங்க...எனக்கு ஒரு மயிலாவது தட்டி விடுங்க gragavan at gmail dot com. முடிஞ்ச வரைக்கும் சொல்றதச் செய்யனும்னு நெனப்பேன். நெனச்சத முடிஞ்ச வரைக்கும் செய்வேன். என்னைய ஒருத்தன் அடிக்கக்கூடாதுன்னு நெனச்சேன்னா...நானும் அடுத்தவன அடிக்கக் கூடாதுன்னு நெனக்கிறேன். இவ்வளவுதாங்க.

பல தளங்களில் எழுதியிருக்கிறார், வீரப்பன் ராஜ்குமாரை கடத்தியதை வைத்து எழுதிய நகைச்சுவை தொடர் மிகவும் பிரபலமானது.பட்டிமன்றத்தில் இளம்வயதிலேயே நடுவராக பணி புரிந்த அனுபவம் உண்டு.நல்ல சமையல் கலைஞரும் கூட, தினம் தினம் எதையாவது புதிதாக சமைக்க முயற்சி செய்வார்.நட்பு பாராட்டுவதிலும் வல்லவர். விரைவில் இமயமலைக்கு ஆன்மீகப்பயணம் செல்லும் எண்ணமும் உண்டு.

வீரப்பன் ராஜ்குமாரைக் கடத்திய வெச்சு எழுதுன விக்கிரமாதித்தன் கதை நகைச்சுவைக் கதை. மாரப்பன்,அரசகுமார், இளங்கோ (இளைய மகன்) மேல் பாசம் கொண்ட அன்புச்செல்வர், வெற்றிச்செல்வி எல்லாரும் வருவார்கள். இவங்கள்ளாம் யாருன்னு தெரியுதுல்ல. அப்போ எழுத இடங்கொடுத்தது Forumhub. அதுலதான் எழுதினேன். பலர் விரும்பிப் படிச்சாங்க.

அதே மாதிரி பட்டிமன்றம்....இது தினம் ஒரு கவிதைக் குழுவுக்காக பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நடந்த பட்டிமன்றம். அதை நடத்தி வந்த நாகா வாய்ப்பு கொடுத்தார். அடுத்து மகேந்திரன் என்ற நண்பர் வழியா பாரதியா பிறந்த நாள் விழாவுக்கு பெங்களூர் டவுன்ஹாலில் நடந்த பட்டிமன்றத்தில் வாய்ப்புக் கிடைத்தது. இந்த வாய்ப்புகள் கிடைக்கக் காரணமான நண்பர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.

இமயமலைக்கா? நான் ஏற்கனவே போயிருக்கேனே...தூரத்துல இருந்து K-2 சிகரத்தையும் பாத்திருக்கேனே....ஆனா அது ஆன்மீகச் சுற்றுலா இல்ல. நல்ல இன்பச் சுற்றுலாதான். ஆகஸ்ட்டுல Valley of flowers போக வேண்டியது. மூனு மாசம் சென்னைக்குப் போக வேண்டியிருக்கிறதால போக முடியாது. :-(

அருணகிரி நாதரின் பாடல்களுக்கு விளக்கம் எழுதிய சொல்ல சொல்ல இனிக்குதடா புகழ் பெற்ற பதிவு.இதற்கு மேலே உங்களுக்கே தெரியும் தானே :)

இதச் சிரிச்சிக்கிட்டே சொல்றீங்க....அதுனால நீங்க யாருன்னு தெரிஞ்சி போச்சு.....நேத்து அப்படி ஒரு கேள்வி கேட்டப்போ தெரியாயது இப்பத் தெரிஞ்சி போச்சு. :-)

சுமார் ஓராண்டுக்கும் மேலாகத் தமிழ் இணையத்திலும், வலைப்பதிவுகளிலும் ஆர்வமுடன் பங்கேற்று வரும் கோ.ராகவனின் வலைப்பதிவு:
மகரந்தம்

நன்றி: #வாசகர் பரிந்துரை (27/04/06)

தேன்கூட்டிற்கும் என்னை ஊக்கப்படுத்தி வரும் நண்பர்கள் அனைவருக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களுக்கும் நன்றி.

அன்புடன்,
கோ.இராகவன்

பென்ஸ்
27-04-2006, 01:55 PM
ராகவன்.. இது மிகவும் சந்தோசமான விஷயம்... வாழ்த்துகள்....
அப்படியே.. கமென்ட்ஸ் பாஒட்டு கலக்கி போட்டியளே...
அப்படியே அது வந்த லிங்கை கொடுக்க கூடாதா???

பரஞ்சோதி
27-04-2006, 06:51 PM
வாழ்த்துகள் அண்ணா.

பென்ஸ், இது தான் அந்த லிங்க் http://www.thenkoodu.com

சீக்கிரம் பாருங்க, அண்ணா அட்டகாசமாக போஸ் கொடுத்திருக்கிறார்.

மதி
27-04-2006, 10:25 PM
ராகவன் வாழ்த்துக்கள்...

gragavan
28-04-2006, 12:34 PM
நன்றி நன்றி நன்றி....வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி

munnaa
05-05-2006, 09:51 PM
படித்தேன், ரசித்தேன், மகிழ்ந்தேன் . . .

இளசு
03-07-2006, 11:20 PM
வாழ்த்துகள் இராகவன்

தேன்கூடு சென்று அங்கே மகரந்தம் தேடி வலைப் -பூவைப்பார்த்தேன். வண்ணமயம். விரைவில் சேகரிக்க வருவேன்,