PDA

View Full Version : PDF மாற்றம் பற்றி பழைய பதிவு



suma
12-12-2003, 07:24 PM
உங்கள் உதவி தேவை.
word டாக்குமெண்டில் சில விளம்பரம் அடித்துள்ளேன். அதை பத்திரிகைக்கு தரும் போது அவர்களிடம் முரசு அஞ்சல் இல்லாத பட்சத்தில் வேலை செய்யாது... இல்லையா? அதனால் அனைவரும் எழுத்துரு இல்லாமல் படிக்கும் படி செய்ய, pdf file ஆக மாற்றினால் அனைவராலும் படிக்க முடியும் என கேள்விப்பட்டேன். அப்படி மாற்ற என்ன செய்ய வேண்டும்?

முத்து
12-12-2003, 07:55 PM
[/URL]
சுமா ..
நீங்கள் பிடிஎப் பைலாக மாற்ற உங்களுக்கு
பிடிஎப் டிஸ்டில்லர் வேண்டும் ...
அது இருந்தால் வேர்டில் இருந்தபடியே பிடிஎப்
ஆக மாற்றிவிடலாம் ...
ஆனால் அது இலவசமாகக் கிடைப்பதில்லை ...

நீங்கள் மற்றவர்களுக்குத் தமிழில் ஏதாவது அனுப்ப வேண்டும்
என்று நினைத்தால் தமிழில் பெயிண்ட் சாப்ட்வேரில் தட்டச்சு
செய்து பைலை ஜேபிஜி பைலாக அனுப்பலாம் .. இது மிக எளிது ..
அனைத்துக் கம்பியூட்டரிலும் பெயிண்ட் சாப்ட்வேர் இருப்பதால்
நீங்கள் எதுவும் டவுன்லோன் செய்ய வேண்டியதில்லை ...

சிபி மெயிலில் தமிழிலேயே மெயில் அனுப்பலாம் ...
தட்டச்சு செய்யவும் , மற்றவர்கள் படிக்கவும் எந்த
எழுத்துருவும் தேவையில்லை.. ... இதைக்கூட நீங்கள்
முயற்சி செய்து பார்க்கலாம் ...

உதாரணத்துக்கு [URL="http://www.angelfire.com/moon/muthu/tamilmantram.pdf"]இங்கே (http://www.angelfire.com/moon/muthu/tamilmantram.pdf) கிளிக் செய்து பாருங்கள் ...

பாரதி
13-12-2003, 12:33 AM
அன்பு சுமா,
வெறும் *.txt கோப்பை pdf ஆக மாற்றும் ஒரு freeware என்னிடம் இரண்டு நாட்களுக்கு முன்புதான் வந்தது. ஆனால் அதில் ஒரு சிக்கல். ஆங்கில எழுத்துக்கள் மட்டுமே அதில் நன்றாக இருக்கின்றன. தமிழ் எழுத்துக்கள் அறியாத எழுத்துக்களாகி விடுகின்றன. உங்களுக்கு அதை தனிமடலில் அனுப்புகிறேன். சில மாதங்களுக்கு முன்பு வேறொரு freeware உபயோகித்து பார்த்த நியாபகம் இருக்கிறது. தேடிப்பார்த்துவிட்டு அதையும் வேண்டுமெனில் அனுப்புகிறேன்.

முத்து
13-12-2003, 12:40 AM
டிஸ்டில்லர் வேண்டும் என்கிற அவசியம் இல்லை முத்து..word-ல் இருந்து
export to pdfன்னு சொன்னாலே போதும்..தற்போது என்னிடம் word இல்லை....ஆகவே செக் பண்ணி விட்டு சொல்கிறேன்

பப்பி அவர்களே ...
நான் அப்படி நினைக்கவில்லை ...
நம் கணினியில் pdf distiller அல்லது இணையான வேறு ஏதோ
மென்பொருள் இருந்தால் மட்டுமே வேர்டில் export to pdf
என்பது ஆக்டிவாக இருக்கும் என்று நினைக்கிறேன் ..
உண்மையில் pdf - ஆக மாற்றும்போது வேர்டிலுள்ள
export to pdf என்ற கட்டளையை உபயோகித்துதான்
செய்வோம் .. ஆனால் வேர்டில் உள்ள அந்த கட்டளை
டிஸ்டில்லர் அல்லது இணையான மென்பொருள் நம் கணினியில்
இல்லாவிட்டால் வேலை செய்யாது என்று நினைக்கிறேன் ..

பாரதி
13-12-2003, 12:45 AM
நம் கணினியில் pdf distiller அல்லது இணையான வேறு ஏதோ
மென்பொருள் இருந்தால் மட்டுமே வேர்டில் export to pdf
என்பது ஆக்டிவாக இருக்கும் என்று நினைக்கிறேன் ..


அன்பு முத்து,
Open office - மென்பொருளை நிறுவி இருந்தால் அதில் வேர்ட் போன்றே (write என்று நினைக்கிறேன்) கோப்புகளை சேமிக்கலாம். அதில் பப்பி சொன்னது போல் நேரடியாக pdf கோப்பாக மாற்ற வழி இருக்கிறது. செய்தும் பார்த்து இருக்கிறேன்.

முத்து
13-12-2003, 12:51 AM
பாரதி ...
நன்றி .... நானும் ஓப்பன் ஆபீஸ் வைத்திருந்தேன் ...
write - ல் உள்ள pdf command என்னிடம் டிஸ்ட்டில்லர்
இருந்ததால்தான் வேலை செய்தது என்று இதுவரை நினைத்துக்கொண்டிருந்தேன் ...
நானும் முயற்சி செய்து பார்க்கிறேன் ...

மைக்ரோசாப்ட் வேர்டிலும் இதே போல் வேலை செய்யுமா .. ?

prabhaa
13-12-2003, 05:28 AM
டிஸ்டில்லர் வேண்டும் என்கிற அவசியம் இல்லை முத்து..word-ல் இருந்து
export to pdfன்னு சொன்னாலே போதும்..தற்போது என்னிடம் word இல்லை....ஆகவே செக் பண்ணி விட்டு சொல்கிறேன்

Adobe Distiller இருந்தால் மட்டுமே, Microsoft Wordல், SaveAs -> PDF format என்ற option இருக்கும் !

prabhaa
13-12-2003, 06:07 AM
சுமா, என்னிடம், Adobe Acrobat Distiller 4 இருகிறது. இதை வைத்து, PDF file உருவாக்கலாம். இதன் setup file 15MB இருகிறது.
உங்களிடம், அதிவேக இணைய தொடர்பு இருந்தால் கூறுங்கள்,
எனது FTP மகவரி தருகிறேன், அங்கிருந்து இறக்கிக்
கொள்ளுங்கள்.

பாலமுருகன்
13-12-2003, 08:27 AM
நீங்கள் மற்றவர்களுக்குத் தமிழில் ஏதாவது அனுப்ப வேண்டும்
என்று நினைத்தால் தமிழில் பெயிண்ட் சாப்ட்வேரில் தட்டச்சு
செய்து பைலை ஜேபிஜி பைலாக அனுப்பலாம் .. இது மிக எளிது ..
அனைத்துக் கம்பியூட்டரிலும் பெயிண்ட் சாப்ட்வேர் இருப்பதால்
நீங்கள் எதுவும் டவுன்லோன் செய்ய வேண்டியதில்லை ...


உங்கள் கூற்றை சற்று மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகிறேன். எதை உபயோகித்து நீங்கள் PDF பைலாக மாற்றினாலும் மறு முனையில் அஞ்சல் இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் எழுத்துருவை படிக்க முடியும். யாராவது அஞ்சல் இல்லாமல் தமிழில் இருந்து பெறப்பட்ட PDF பைலை அஞ்சல் இல்லாத ஒரு கனினியில் திறந்து பார்த்திருந்தால் எனக்கு எப்படி செய்வது என்று சொல்லவும்.

நன்பர் முத்து சொன்ன முறையை பின்பற்றலாம்

பாலா

முத்து
13-12-2003, 08:47 AM
பாலமுருகன் அவர்களே ... pdf கோப்பாக மாற்றப் பட்டபின்னும் எழுத்துரு தேவையா ... எழுத்துரு தேவையில்லை என்றல்லவா இதுவரை நினைத்துக்கொண்டிருந்தேன் ..எதற்கும் முயற்சி செய்து பார்த்துவிட்டுச் சொல்கிறேன் ...

பாலமுருகன்
13-12-2003, 08:49 AM
கண்டிப்பாக தேவை முத்து அவர்களே.. புதிதாக OS நிறுவப்பட்ட கனினியில் சோதித்து இங்கே சொல்லுங்கள்.

பாலா

puppy
13-12-2003, 08:52 AM
அதெல்லாம் தேவை இல்லை பாலா......
linux,unixலே சோதித்து விட்டேன் பாலா...போதுமா

பாலமுருகன்
13-12-2003, 09:00 AM
நிச்சயமாகவா பப்பி அக்கா?

நான் தமிழ் மன்றத்த்லிருந்து எனக்கு பிடித்தவைகளை வீட்டில் கான்பிக்கலாம் என்று pdf பைலாக மாற்றிதென் வீட்டு கனினியில் காப்பி செய்தி திறந்தேன். தமிழ் உரு கிடைக்கவில்லை. பின் மறுநாள் அஞ்சல் என் வீட்டு கனினியில் நிறுவிய பின்னர்தான் என்னால் படிக்க முடிந்தது. அந்த அனுபவத்தில்தான் சொன்னேன். எந்தரப்பில் தவறு இருப்பின் ஆராயமல் கூறியதற்கு மன்னிக்கவும்.

நன்றி
பாலா

puppy
13-12-2003, 09:01 AM
fonts embedded பண்ணனும் நீங்கள்....எப்படி pdfக்கு மாற்றீன்ர்கள் அதை சொல்லுங்கள்.....

பாலமுருகன்
13-12-2003, 09:03 AM
fonts embedded பண்ணனும் நீங்கள்....எப்படி pdfக்கு மாற்றீன்ர்கள் அதை சொல்லுங்கள்.....
என் அலுவலக கனினியில் adobe acrobat full package including distiller
னிறுவியிருந்ததன் மூலம் என்னால PDF பைலாக மாற்ற முடிந்தது.

முத்து
13-12-2003, 09:09 AM
நான் இப்போது என்னுடைய வடக்கிந்திய நண்பரின்
கணினியில் சோதித்துக்கொண்டிருக்கிறேன்...
இன்னும் ஐந்து நிமிடத்தில் எனக்கு இங்கு வேலை செய்கிறதா என்று
சொல்கிறேன் ...

முத்து
13-12-2003, 09:18 AM
பாலமுருகன் அவர்களே ...

நான் இப்போதுதான் நண்பரின் கணினியில் சோதித்தேன் ...
அவரின் கணினியில் தமிழ் எழுத்துரு இல்லையாததால் நம்
தமிழ் மன்றத்தைப் படிக்க இயலவில்லை ...

ஆனால்
http://www.angelfire.com/moon/muthu/tamilmantram.pdf
இதைப் படிக்க முடிகிறது .... இதை அடோபி டிஸ்டில்லர் வைத்துதான் உருவாக்கினேன் ...

இராசகுமாரன்
13-12-2003, 10:14 AM
Fineprint PDF Factory pro என்றொரு மென்பொருள் உள்ளது, அதைத் தான் நான் உபயோகிக்கிறேன். உபயோகிப்பது மிக மிக எளிது. (அதன் கடவுச் சொல் இலவசமாக கிடைத்தது)

நான் நிறைய தமிழ் செய்திகளை மற்றவர்களுக்கு தினம் தோறும் அனுப்பும் போது அவர்களிடம் தமிழ் எழுதுரு இருப்பதில்லை. இதில் Font embed செய்து அனுப்புகிறேன், ஒரு சிலர் 'இ' தெரியவில்லை என முன்பு சொன்னார்கள் அது தவிர இதுவரை எந்த பிரச்சனை இல்லை.

முத்து
13-12-2003, 11:09 AM
Fineprint PDF Factory pro என்றொரு மென்பொருள் உள்ளது, அதைத் தான் நான் உபயோகிக்கிறேன். உபயோகிப்பது மிக மிக எளிது. (அதன் கடவுச் சொல் இலவசமாக கிடைத்தது)


நல்ல பயனுள்ள தகவல்..
நன்றி அண்ணன் ராசகுமாரன் அவர்களுக்கு..
நிறையக் கடவுச் சொற்கள் பல கிராக் இணையத்தளங்களில்
கிடைப்பதாய்க் கேள்விப்பட்டேன் ... :wink:

முத்து
13-12-2003, 11:19 AM
dos ஆகிவிட போகுது




இதுவரைக்கும் D.O.S
பிரசணை வந்ததில்லீங்க....


பப்பி அவர்களே .. DOS பிரச்சனை என்றால் என்ன .. ?
சில காலத்துக்கு முன் யாகூவில் ஆனதே ...... denial-of-service என்று சொல்வார்களே அதுவா .. ?

பாரதி
13-12-2003, 12:41 PM
நன்றி பாலா. நன்றி முத்து. நன்றி இராசகுமாரன். நீங்கள் குறிப்பிட்ட மென்பொருள் இலவசமானது இல்லை போல..?

அன்பு பிரபா...
உங்கள் தளத்தை திறக்க முடியவில்லை. பிழைச்செய்தி வருகிறது..!

suma
13-12-2003, 03:00 PM
12 மணி நேரத்தில் இத்தனை பயன் உள்ள தகவலா?
பிரமிப்பாய் உள்ளது...
பிரபா எனக்கு இணைய USERNAME AND PASSWORD தர இயலுமா?
என்னிடம் DIALUP CONNECTION தான் உள்ளது.

இராசகுமார் அவர்கள் தந்த தளத்தையும் இறக்குமதி செய்ய முடியுமா?

முத்து
13-12-2003, 03:09 PM
சுமா .. அண்ணன் ராசகுமாரன் சொன்ன மென்பொருளை இங்கிருந்து இறக்கிக்கொள்ளலாம் ...

http://www.fineprint.com/

கடவுச்சொல்லும் உங்களுக்கு எங்காவது கிடைக்கலாம் ...

முத்து
13-12-2003, 03:22 PM
எங்காவது கடவு சொல் கிடைக்கும் பொருள் என்ன முத்து?

இதற்காக சில தளங்கள் உள்ளதாய்க் கேள்வி ...

பாரதி
13-12-2003, 03:43 PM
எங்காவது கடவு சொல் கிடைக்கும் பொருள் என்ன முத்து?


சுமா,
சில மென்பொருட்களை நாம் இலவசமாக பரிசோதித்துப்பார்க்கலாம். அதற்குப் பின் நாம் அதை விலை கொடுத்து வாங்கி பதிவு செய்து கொள்ள வேண்டும். அது போன்ற மென்பொருட்களை பதிவு செய்ய குறிப்பிட்ட எண் அல்லது கடவுச்சொல் (பாஸ்வேர்ட்) தேவை. அதையே முத்து குறிப்பிட்டு உள்ளார்.

prabhaa
13-12-2003, 08:46 PM
Fineprint PDF Factory pro என்றொரு மென்பொருள் உள்ளது, அதைத் தான் நான் உபயோகிக்கிறேன். உபயோகிப்பது மிக மிக எளிது. (அதன் கடவுச் சொல் இலவசமாக கிடைத்தது)

முகவரி: http://www.fineprint.com/release/FppPro210.exe
கடவு சொல்: EE8Y-5QNL-KQHZ

ஜெய்
14-12-2003, 12:18 AM
latex என்று ஒரு மென்பொருள் உண்டு..அதை பயன்படுத்தி நீங்கள் நேரடியாக pdf கோப்பு உருவாக்கலாம். ஆனால் நீங்கள் html code எழுதுவது போல் இதில் code எழுத வேண்டும். latex ஒரு இலவச மென்பொருளே..

http://tex.loria.fr/english/ இந்த இணைய தளத்தில் சென்று பார்க்கவும்...

நான் இது வரைக்கும் தமிழ் எழுத்து உருக்களை பயன்படுத்தி பார்க்கவில்லை..

என்க்கு சில ஆங்கில கணிப்பொறி சொற்களுக்கு சரியான தமிழ் சொற்கள் தெரியவில்லை. (எடு:code) தவறு இருந்தால் மன்னிக்கவும்.

முத்து
14-12-2003, 12:23 AM
நன்றி ஜெய்...
இது அனைவருக்கும் பயனுள்ள தக்வல் ...

suma
14-12-2003, 12:33 AM
பிரபா எனக்கு கீழ்கண்ட தவறு வருகிறது...
எப்படி சமாளிப்பது???

Fpfile error 7 occurred in CFpFile.
system error: opcode 19 at offset 0000c829

puppy
14-12-2003, 07:58 AM
ஆமாம் அதுவே தான் முத்து




dos ஆகிவிட போகுது




இதுவரைக்கும் D.O.S
பிரசணை வந்ததில்லீங்க....


பப்பி அவர்களே .. DOS பிரச்சனை என்றால் என்ன .. ?
சில காலத்துக்கு முன் யாகூவில் ஆனதே ...... denial-of-service என்று சொல்வார்களே அதுவா .. ?

இராசகுமாரன்
14-12-2003, 11:50 AM
நான் கூறிய pdf மென்பொருள், கடவுச் சொல்லுடன் வேண்டுமானால் சொல்லுங்கள் அனுப்பி வைக்கிறேன். (ஆனால் அது லேட்டஸ்ட் வெர்ஷன் அல்ல)

பாரதி
14-12-2003, 03:59 PM
பிரபா.... நேற்று மறுபடி பதிவிறக்க முயற்சித்ததில் வெற்றி கிட்டியது. அருமையாக வேலை செய்கிறது. ரொம்ப ரொம்ப நன்றி பிரபா.

prabhaa
14-12-2003, 08:23 PM
[/URL]

Acrobat Distiller [URL="http://24.60.53.243:666/tamilmantram/AcrobatDistiller4.exe"]இங்கே (http://24.60.53.243:666/tamilmantram/AcrobatDistiller4.exe) இருகிறது.

முன்பு கொடுத்த முகவரி தவறாயிருந்த்தால், மன்னிக்கவும் நண்பர்களே,

முத்து
14-12-2003, 09:21 PM
Acrobat Distiller இங்கே இருகிறது.

முன்பு கொடுத்த முகவரி தவறாயிருந்த்தால், மன்னிக்கவும் நண்பர்களே,

மிக்க நன்றி பிரபா ,
இது நமது நண்பர்கள் அனைவருக்கும் மிக உதவும் ...
இந்த மென்பொருளை நிறுவும்போது வரிசை எண் கேட்குமே ( ?) ..

prabhaa
14-12-2003, 09:58 PM
மிக்க நன்றி பிரபா ,
இது நமது நண்பர்கள் அனைவருக்கும் மிக உதவும் ...
இந்த மென்பொருளை நிறுவும்போது வரிசை எண் கேட்குமே ( ?) ..

எனக்கு கேட்கவில்லை முத்து, உங்களுக்கு கேட்டால், சொல்லுங்கள் பிடித்து தருகிறேன்.

suma
16-12-2003, 10:08 PM
நன்றி பிரபா ....
எப்படி பயன்படுத்துவது என தெரியலை..

puppy
16-12-2003, 10:13 PM
சுமா முத்து அழகா சொல்லி இருக்கிறாரே முதலில் அதை பாருங்க..இல்லைனா இன்னும் விளக்கமா சொல்ல சொல்றேன்

முத்து
17-12-2003, 12:28 AM
நன்றி பிரபா ....
எப்படி பயன்படுத்துவது என தெரியலை..

சுமா ...
டிஸ்டில்லர் உங்கள் கணினியில் இருந்தாலே போதும்
பிடிஎப்-ஆக மாற்ற வேண்டியதை வேர்டில் ஒட்டி
வேர்டில் பிரிண்ட் என்பதைத் தேர்வு செய்யுங்கள் ...
கணினியில் எந்தப் பிரிண்டரும் இணைக்கப் பட்டிருக்காமல் இருந்தால் தானாகவே பிடிஎப் கோப்பாக மாறிவிடும் ...

இல்லையென்றால் வேர்டின் மெனுவில் help என்பதற்குப்
பக்கத்தில் acrobat எனபது இருக்கும் அதையும் பயன்படுத்தவும் ..
சந்தேகம் இருந்தால் கீழே படத்தைப் பார்க்கவும் ...

பாலமுருகன்
17-12-2003, 03:19 AM
பாராட்டுகள் முத்து அவர்களே.. மிக தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.

பாலா

இராசகுமாரன்
17-12-2003, 04:17 AM
பாரதி, சுமா
உங்கள் இருவருக்கும் அனுப்பியுள்ளேன்,
உபயோகித்துப் பார்த்து சொல்லவும்.

உங்களுக்கு PDF ஆக மாற்ற வேண்டிய கோப்பை எந்த
மென்பொருளில் (Word, Excel, NotePad, InternetExplorer, etc)
வேண்டுமானாலும் திறங்கள் அனைத்தையும் சரிபார்த்து, கடைசியில்
Print கொடுக்கும் போது பிரிண்டர் பெயராக இந்த மென்பொருளைக்
கொடுக்கவும்.

பாரதி
17-12-2003, 07:40 AM
அன்பு இராசகுமாரன்,
பதிவிறக்கி சோதனை செய்து பார்த்தேன்.
இதுவும் அட்டகாசமாக வேலை செய்கிறது.
மிகவும் நன்றி.

baranee
16-01-2004, 06:03 PM
இந்த PDF மென்பொருளை உபயோகிக்க கடவுச்சொல் எதுவும் தேவை இல்லை முற்றிலும் இலவசம்.... இதன் அளவும் மிக குறைவு (4.17M, உபயோகிக்க மிகவும் எளிதானது.

http://www.acrosoftware.com/Download.htm

அன்புடன்
பரணீ

பாரதி
17-01-2004, 01:08 AM
வாங்க.. வாங்க பரணீ.(பரணியா இல்லை பரணீயா?) என்னுடைய ஆய்வுக்கும் பயன்படும். தொடுப்பிற்கு மிகவும் நன்றி.

baranee
17-01-2004, 02:26 AM
உபயோகித்து பார்த்து விட்டு உங்கள் கருத்தினை கூறுங்கள். பாரதி..
(பரணி தான் ஆனால் பள்ளியில் பரணீ ஆக்கி விட்டார்கள்...)

அன்புடன்
பரணீ

இளசு
17-01-2004, 10:07 PM
பரணீ அவர்களே
பதிவிறக்கம் செய்து வைத்துவிட்டேன்.
பின்னர் பயன்படுத்திவிட்டுச் சொல்கிறேன்.
நன்றி நண்பரே

sujataa37
18-01-2004, 12:15 PM
மிகவும் தாமதமாக இதைச்சொலவதற்கு மன்னிக்கவும். இப்போதுதான் பார்த்தேன். நான் pdf995 என்றொரு இலவச மென்பொருள் உபயோக்கிறேன். இதை www.pdf995.com (http://www.pdf995.com) என்ற தளத்திலிருந்து இறக்கினேன். ரொம்ப சுலபமாக இருக்கிறது. அதுவே wordலும் உட்கார்ந்து கொள்கிறது.

அறிஞர்
26-04-2006, 10:29 PM
இந்த பதிவு சிலருக்கு உபயோகமாக இருக்கும்.

உதயா
27-04-2006, 04:21 AM
இந்த 5 பக்கங்களை படித்ததில் இருந்து தெறிந்து கொண்டது, pdf file லாக எப்படி மாற்றுவது என்று தான். ஆனால் pdf file லில் இருந்தி exel மற்றும் word டாக எப்படி மாற்றுவது என்று யாரும் கூறவில்லை.

thoorigai
03-02-2007, 04:39 AM
இந்த 5 பக்கங்களை படித்ததில் இருந்து தெறிந்து கொண்டது, pdf file லாக எப்படி மாற்றுவது என்று தான். ஆனால் pdf file லில் இருந்தி exel மற்றும் word டாக எப்படி மாற்றுவது என்று யாரும் கூறவில்லை.

வெற்றி அவர்களே,

உங்களது இந்த கேள்விக்கு PDF கன்வெர்ட்டர் என்கிற திரியிலுள்ள எனது பதில் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6359&page=2)உபயோகமாகிறதா என்று பாருங்கள்.

தங்கவேல்
28-08-2007, 04:55 AM
எனக்கு பிடிஎப் எடிட்டர் தேவை. கிடைக்குமா ?

praveen
29-08-2007, 05:15 AM
எனக்கு பிடிஎப் எடிட்டர் தேவை. கிடைக்குமா ?
இந்த திரியை இப்போது தான் பார்த்தேன், ஆகா என்னிடம் உள்ளதை பகிர்ந்து கொள்ள இயலாமல் போனதே,

நீங்கள் கேட்பது, adobe acrobat என்பதால் தான் முடியும், இனையத்தில் டிரையல் வெர்சன் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். adobe தளம் சென்று. பைல் அளவு மிகப் பெரியது.

சிம்பிளாக வேண்டும் என்றால், மாற்று வழி தான்.
abbyy pdf transformer என்ற மென்பொருள் உதவியுடன், PDF பைலை வேர்டு, எக்ஸல் ஆக்கி பின் அதை PDF (மற்ற PDF தயாரிக்கும் மென்பொருள் மூலம்) ஆக்குவது தான்.

இல்லாவிட்டல் கிழே கண்டவைகளை முயற்சித்து பாருங்கள்.
Foxit PDF Editor

MicroAdobe PDF Editor v5.0
http://www.microadobe.com/products.html

VeryPDF PDF Editor VeryPDF PDF Editor

இல்லாவிட்டால் சைலண்ட்டா உங்கள் இமெயில்(கூகிள்/ரெடிப்- ஆக இல்லாமல் இருத்தல் நலம்) முகவரியுடன் எனக்கு PM செய்யுங்கள், உடனே இமெயிலில் அனுப்பி வைக்கிறேன்(அனைத்தும்),

தங்கவேல்
29-08-2007, 06:33 AM
ஆசோ, எனக்கு ஏற்கனவே உருவாக்கப்பட்ட பிடிஎப் பைலில் சில வார்த்தைகளை எடுத்து புது வார்த்தைகளை சேர்க்க வேண்டும். வெரிபிடிஎப் பயன்படுத்தினால் வாட்டர்மார்க் வருகின்றது. இலவச காப்பி ஏதாவது இருந்தால் சொல்லவும்...

praveen
29-08-2007, 06:40 AM
ஆசோ, எனக்கு ஏற்கனவே உருவாக்கப்பட்ட பிடிஎப் பைலில் சில வார்த்தைகளை எடுத்து புது வார்த்தைகளை சேர்க்க வேண்டும். வெரிபிடிஎப் பயன்படுத்தினால் வாட்டர்மார்க் வருகின்றது. இலவச காப்பி ஏதாவது இருந்தால் சொல்லவும்...




Foxit PDF Editor



இலவச காப்பி இல்லை, அந்த சாப்ட்வேரில் நான் முயன்று பார்த்தேன், நன்றாக உள்ளது. நீங்கள் தற்காலிக தீர்வு வேண்டும் என்றால் ட்ரையல் பிரியட்க்குள் அதை முடித்து விடுங்கள்.

இல்லாவிட்டால் எனக்கு PM செய்யுங்கள், குறுக்கு வழியெல்லாம் பொதுவில் கூற முடியாது, ஏற்கெனவே ஒவியன் லொள்ளுவாத்தியாருக்கு தீர்வு சொன்னதால், என் மீது கோபத்தில் இருக்கிறார்.

ஜெயாஸ்தா
11-09-2007, 03:43 PM
Foxit PDF Editor தேவைப்படுவோர் பி.எம். செய்யுங்கள். அனுப்பி வைக்கிறேன்.