PDA

View Full Version : மழையும் சில நினைவு துளிகளும்....



பென்ஸ்
24-04-2006, 08:43 AM
மழையும் சில நினைவு துளிகளும்....

மழை....
"சின்ன சின்ன மழைதுளிகள் சேர்த்துவைப்பேனோ...."
"மண்ணிலே மண்ணிலே வந்து உடையுதே வானம்..."
மழையை பற்றி யாராவது கூறினாலே எனக்கு சந்தோசம் பொங்கும். அதிலும் யாராவது பாடினாலோ கவிதை எழுதினாலோ.. அடேங்கப்பா சொல்லவே வேண்டாம்....

மழை...
"மோனே, மழை வருது... முதல் மழையில் நனையாதேடா.." என்று கூவும் அம்மாவின் குரல் காதில் கேக்காதவன் போல்... "மழை வருது, மழை வருது நெல்லை கூட்டுங்க, அன்னா வாறா மாமனுக்க ரெண்டு பக்கா அரிசி கொடுங்க.. சும்மா வாறா மமனுக்கு ரெண்டு சூடு கொடுங்க.." என்று பாடி ஆட்டம் போடுவது என்றால் அதில் இருக்கும் ஆனந்தம் தான் என்ன....

அந்த சிறு கிராமத்தின் சிறுவண்டு கூட்டங்களை எல்லாம் அழைத்து, சிறு ஓடையாய் ஓடும் நீரில் மண் அனைத்து அணை இட்டு... அணை உடைய கூட காத்திருக்காமல், வீட்டில் அருகில் உள்ள குளத்தை நோக்கி ஓடி, கால்சட்டையை கழற்றி பத்திரமாக தென்னை மரத்தின் கீழ நனையாமல்(!!!) வைத்து... ஆல மரத்தின் விழுது பிடித்து ஊஞ்சால் ஆடி குளத்தின் உள்லே சாடி குளித்தாலும்... அந்த மழை ஒரு போதும் என் உற்சாகத்தை கரைத்ததில்லை... குளத்தில் வந்து சேரும் நீரில் எதிர் நீச்சல் போட்டு வரும் "ஏத்து கைலி" மீண்களை காலால் நீரை தெறிக்க வைத்து அவற்றிக்கு நோகாமல் பிடித்து கார்லிக்ஸ் குப்பியில் போட்டு வீட்டிற்க்கு கொண்டு போவோம்... அந்த மீனையும் நசுக்கி அதில் இருந்து வடியும் பால் போன்ற திரவத்தையும் ரசிக்கு கூட்டத்தியும் நான் நிஜமாகவே கோபப்பட்டிருக்கிறேன்...
பள்ளிக்கு போக ஆரம்பித்த காலத்தில் துவங்கிய இந்த மழை காதல் இன்னும் தொடர்ந்த படியே...

முதல் நாள் பள்ளியின் முந்தய நாள், புது பை, ஜியாமிட்டரி பாக்ஸ், பென்சில் எல்லாவற்றிக்கும் வீட்டில் சண்டை நடக்கும், எப்படியாவது அழுது பிரண்டு புதியது வாங்கிவிடுவோம்...ஜோல்னா பை தரையில் படாமல் இருக்க (அப்ப நம்ம உயரத்துக்கு அந்த பை நீளம் கூடுதல் தான்) கை பிடியை இடையில் முடிந்து , அதில் புது புத்தகம் , டிபன் பாக்ஸ், எல்லாம் அடுக்கி வைத்து தரும் அம்மாவிர்க்கு முத்தம் கொடுத்து சென்றால் ... அரை மைல் கூட செல்ல அனுமதிக்காமல் மழை பொழிய ஆரம்பிக்கு.... எல்லோரும் "ஐயோ மழை" என்று ஓடும் போது.. நானும் "ஐயா.. மழை" என்று அவர்கள் கூடவே ஓடுவேன்....அப்படியே ஓடும் போது மழைக்கு பயந்து ஒதுங்கி நிற்பவர் மீது கீழெ இருக்கு தண்ணிரை காலால் அடித்து நனைப்பது ஒரு சந்தோசம்...

பள்ளியில் நனைந்த துனியுடன் சென்று நிற்கும் போது... "சரி... வேளியில் நின்று துனை காய்ந்த பிறகு வா" என்று ஆசிரியர் சொல்லுவதற்க்காக காத்திருக்கும் மனது... அந்த வரம் கிடைக்கும் சில பொழுதுகளில்... ஒன்ரை ஒன்று முந்தி கொண்டு விழும் அந்த துளிகளை பார்ப்பது ஆகா... ஆகா...

ஆறாவது படிக்கும் போது ஓட்டு கட்டிட பள்ளி அறையின் மேலே கல் வீசி, ஓட்டை உடைத்து செல்லும் மழை மாலைகள்... அடுத்த நாள் நனைந்த வகுப்பின் விடுமுறை காலைகள்...
ஏழாவது படிக்கும் போதும்... ஓலை குடிசையான எங்கள் பள்ளியில், தண்ணிர் கூரையின் உள்ளே நுளையாமல் இருக்க மண்ணை அனைத்து வைத்திருப்பார்கள்... பள்ளிக்கு காலையிலையே வந்து இந்த மண்ணை உடைத்து விட்டு.. எல்லா மழை நீரையும் வகுப்பினுள் விட்டு... விடுமுறை அறிவிப்புக்காக காத்திருக்கும் மனம்....

பத்தாவது படிக்கும் போது , அந்த துரு பிடித்த எனது சைக்கிளின் முன்னால் ஒருத்தனை இருத்தி, பின் காரியரில் ஒருத்தனை இருத்தி மழை வேகமாக முகத்தில் அடித்தாலும் அந்த ஒரு அழகான அவளின் கவனத்தை திருப்ப வேகமாக மிதித்து ஒரு "கட்" அடிக்க நினைக்க... பேன்ட் எல்லாம் தோளியாக, கை உரைந்து ரத்தம் வர, எல்லோரும் சிரித்தாலும் அவர்களுடன் சிரித்து "வலிக்கலையே" என்று சொல்லி... "ஏண்டா சைக்கிளில் சரியா இருக்க தெரியாதா??" என்று பழியை அடுத்தவன் தலையில் போட்டு... வெக்க பட்டு போனாலும் மழை மீதான காதல் மட்டும் இன்னும் கொஞ்சம் அதிகமாக...

பனிரெண்டாவகுப்பு படுக்கும் போது... சனிகிழமைகளில் மலை மீது உள்ள எங்கள் தோட்டதிற்க்கு செல்வது வழக்கம். மலை மீது என்பதால் காட்டோடைகளை கடந்தும், காட்டோடையோடும் பல இடங்களில் நடக்க வேண்டி வரும்... ஒரு பலத்த மழையிம் பொது, அக்காவுக்கு பலாபழம் வெட்டி வீட்டிற்க்கு கொண்டு வரும் பொது மழை வலுக்க... காட்டோடை சீறியது, இருளும் சூழ, திரும்பி பத்தாய புரைக்கும் செல்ல முடியாது என்ரு தைரியத்தை வரவழைத்து, பலாபழத்தையும் சுமந்து காட்டாறு கடந்து... உயிர் பிழைத்து வந்தது இன்னும் பயமாய் இருந்தாலும்... மழையும் நானும் மட்டும் இன்னும் நட்பாய்...

கல்லூரி நாட்களில்... மழையில் நனைந்து கொண்டே சத்தமாக பாட்டுபாடி எனது பைக்கை ஓட்டி செல்வது வழக்கம்...

சில மாதங்களுக்கு முன்.... டிரக்கிங் பிரியனான நான், மழையில் டிரக்கிங் செல்லவேன்டும் என்று நண்பர்களிடம் கூற, சரி என்று நாங்கள் போன ஆகஸ்ட் மாதம் தீவிர மழை நேரம் "மடிக்கேரி" சென்றோம்... கடுமையான பயணமாக இருக்கும் என்பதால் எல்லா பாதுகாப்பு பொருள்களும் எடுத்து கொண்டோம்... வனதுறையிடம் ஒரு "ரேஞ்சரின்" உறவினன் என்று பொய் சொல்லி அனுமதி வாங்கி "அபி" நீர்வீழ்ச்சியின் மேலே இரண்டு வனதுரை நடத்துனர்களுடன் பயனிக்க துவஙினோம்... முதல் 10 நிமிடம் ஒரு பிரச்சினை இல்லை. "லீச்"என்னும் கொளுவட்டைகள் இருக்கும் என்று தெரிந்ததால் காலை பாத்து பாத்து தான் சென்றோம்... முதல் அட்டை என் காலில் ஏறியது.."ஐயோ அப்போ" என்று கத்தி அட்டையை நான் தட்டி விட, நண்பன் "ரொம்ப ஓவர சத்தம் போடாத, மக்கள் பயந்திடும்" என்றான். அடுத்த சில வினாடிகளில் ஒவ்வொருத்தவர்களும் அலற ஆரம்பித்தார்கள்... சிலர் திரும்பி போயிடலாம் என்றும், ஆனால் "வந்ததே வந்தாச்சு, போயே தீரனும்" என்று மற்றவர்கள்.. சரி என்று நடக்க ஆரம்பித்தோம், நடை ஓட்டம் ஆனாது.. தோளில் சுமை, மழை பெய்து கொண்டிருந்ததால் நீ உள்ளே நுளைந்து சுமை அதிகம் ஆகிகொண்டிருந்தது... கொஞ்ச நேரத்தில் அட்டைகள் ஒரு மேட்டராவே தெரியவில்லை, இருந்தாலும் ஒரு இடத்தில் நின்று ஓய்வேடுக்க முடியவில்லை. அந்த அளவு அட்டைகள் இருந்தன. ஒரு சிறு காட்டோடையை கடந்து மிக செங்குத்தான ஒரு பகுதியை கடந்து மேலே போக....
இளம்பச்சை புல்வேளி... மரங்கள் இல்லாத பகுதி, சிறிய மழை, அட்டை இல்லாத நிலம்... வரும் முன் இதோ வருகிறேன் என்று குளிர்ந்த காற்றை அனுப்பும் மேகம்.. அதை "வாடி வா" என்ரு செல்லமாக கூப்பிடும் நாங்கள்... நேஜ்சை கொண்டு மேகத்தில் இடித்து.. ஆகா, அது ஒரு அற்புதமான நிலை... (புகைபடம் பின்னர் பதிக்கிறேன்).... சில மணி நேரம் அங்கிருந்து விட்டு மீண்டும் மேலே "பேஸ் காம்ப்" நோக்கி நடந்தோம்... சிறிய கட்டடம், ஒரு கால், இரு படுக்கை ஆறைகள்... கழிப்பிட வசதியும். ஆட்டமும் பாட்டுமாக இரவு எங்களுடன் கூத்தடித்தது.. ஆனாலும் வேளியே கேம் பையர் இட மழை அனுமதிக்கவில்லை, வேளியே வர கொளுவட்டைகளும் அனுமதிக்கவில்லை... அப்படியான அட்டை நினைவுகளுடன் கூடிய ஒரு நினைவுதுளியது...

LAST BUT NOT LEAST

சுமார் 5'6" உயரம், மஞ்சள் நிறம், நீள கரிய கூந்தல், பெண்களே போறாமைபடும் அந்த புன்னகை, எப்பவுமே "ராம்ப்" -ல் நடப்பது போல் இருக்கும் நடை... சிற்பம் போன்ற முகம்.. ஒரு "தம்புராட்டி" பெண் இப்படிதான் இருப்பாள் என்று சொல்லும் ஒரு தேவதை அவள்... நான் கல்லூரி நான்காவது வருடம் படிக்கும் போது முதல் வருடம் படித்த மலையாள பெண்குட்டி அவள்...
அந்த வருட துவக்கத்தில் எனது நண்பர், நண்பி பட்டாளங்களுடன் சென்று அவளை "பெண் பார்க்கும் படலம்" ஒன்று அரங்கேற்றி கூத்தடித்து, அவளுக்கு என்னை பிடிக்காமல் இருந்த காலம்... முதல் வருட வகுப்புகள் எங்கள் வகுப்புகளுக்கு வெகு தூரத்தில் இருந்தாலும், அவர்கள் தங்கள் சில செய்முறை வகுப்புகளுக்கு எங்கள் கட்டிடம் வர வேண்டும்...
அது ஒரு மழை காலம்... , எனது வசந்த காலம்... மழையில் பட்டாம்பூச்சியாய் திரிந்து வேறும் சாரல் என்று வரான்டாவில் நின்று தலை துவட்டி கொண்டிருக்க, என் அருகில் ஆணும் பெண்ணுமாக சாரலை வேடிக்கை பார்க்கும் பல முகங்கள், எல்லாம் ஒரே திசையை பார்க்க அங்கு ஒரு தேவதை, நான் சொல்லும் அழகு தேவதை... ஏனோ வருண பகவானுக்கு குறும்பு அதிகம் போலும். அவள் எங்கள் கட்டிடத்தை நேருஙும் முன்னரே சாரலை பலத்த மழையாக்கினான்... மழையை தவிர்க்க அவள் ஓட... வழுக்கி விழுந்தாள்...
அதை பார்த்து நான் அவளை நோக்கி ஓடினேன்... (சத்தியமா தூக்கி விடதான் ஓடினேன்) ...எல்லா கண்களும் எங்களை பார்த்து கொண்டிருக்க... நான் அவளை நெருங்கினேன்... நான் கை கொடுத்து அவளை தூக்குவேன் என்று அவள் உட்பட எல்லோரும் எதிர்பாக்க... நான் ஒரு சிறு பிள்ளை போல் அவள் அருகில் இருந்த சகதியை காலால் உதைத்து அவள் மேல் வீசினேன்.... அதே குறும்பான சந்தோசத்துடன்...
அதன் பின் அவள் என்னிடம் அவள் பேசியதே இல்லை.... நானும் கவலை பட்டதேயில்லை (அப்படி சும்மாதான் சொன்னேன்:mad: ) ...

ஆனாலும் இன்னும் நானும் மழையும் இணையும் தருனங்களில் மீண்டும் சிறுகுழந்தைகளாய்...:D :D :D

gragavan
24-04-2006, 11:48 AM
பெஞ்சமின்...இதை இன்னொரு முறை படித்து விட்டு முறையான பின்னூட்டம் இடுகிறேன்.

gragavan
25-04-2006, 04:23 AM
என்னய்யா விளையாட்டு இது...வாழ்க்கையை நோகாம நோம்பி நோக்குற மாதிரி அனுபவிச்சிருக்கீரு. நல்லாரும் ஓய். அந்தப் பொண்ணு ஒங்கள ஒன்னுஞ் செய்யாம விட்டாளேன்னு நீங்க ஊர்ச் சாமிகளுக்கெல்லாம் பொங்க வெக்கனும்.

அது சரி....எழுத்துப் பிழைக ரொம்ப இருக்கு...கொஞ்சம் சரி செய்யுறது.....

பென்ஸ்
25-04-2006, 04:39 AM
ஐயா... என்னுடைய கம்பூட்டரில் இ-கலப்பை இல்லை... கீழே இருக்கும் யூனிகோட் கன்வேர்ட்டரை வைத்துதான் பதிவு செய்கிறேன்...

(இ-கலப்பை இருந்திட்டாலும்.... என்று சொல்லுறது தெரியுது)

gragavan
25-04-2006, 04:39 AM
அதெல்லாஞ் சரி....இதுல பல வருசத்து நிகழ்ச்சிக இருக்கு. ஒவ்வொன்னையும் தெளிவா விரிச்சி எழுத வேண்டாமா.......நெறையா எழுதும்வே!

மதி
25-04-2006, 05:29 PM
அட அட அட...
பெஞ்சமினு...அருமையா எழுதியிருக்கீரு.
இம்புட்டு தூரம் மழையை அனுபவிச்சு ரசிச்ச நீரு..
அந்த சுகானுபவங்கள நிதானமா வெளக்க வேண்டியது தானே...
ஏதோ காலில வெந்நீர கொட்டுன மாதிரி..எல்லா பருவத்தில நடந்த விசயத்தையும் வேகவேகமா சொல்லிப்புட்டீரு...
ஆட்டோகிராப் கணக்கா.."நானும் மழையும்"னு ஒரு நாலஞ்சு பாகங்களா எடுத்துவுட வேண்டியது தானே..! என்ன நான் சொல்றது..?

gragavan
26-04-2006, 06:24 AM
அட அட அட...
பெஞ்சமினு...அருமையா எழுதியிருக்கீரு.
இம்புட்டு தூரம் மழையை அனுபவிச்சு ரசிச்ச நீரு..
அந்த சுகானுபவங்கள நிதானமா வெளக்க வேண்டியது தானே...
ஏதோ காலில வெந்நீர கொட்டுன மாதிரி..எல்லா பருவத்தில நடந்த விசயத்தையும் வேகவேகமா சொல்லிப்புட்டீரு...
ஆட்டோகிராப் கணக்கா.."நானும் மழையும்"னு ஒரு நாலஞ்சு பாகங்களா எடுத்துவுட வேண்டியது தானே..! என்ன நான் சொல்றது..?நானும் அதத்தான் சொன்னேன். நெறைய எழுதுமேய்யா...ஏன் இப்பிடி அரக்கப்பறக்க எழுதுறீருன்னு..அப்படியே எழுத்துப்பிழைகளையும் கொறச்சிக்கிரனும்.

பென்ஸ்
26-04-2006, 08:15 AM
இது நினைவு துளி ஐயா...
எனக்கு கதை போல அழகா வரமாட்டேங்குது... முயற்சிகிறேன்..

pradeepkt
26-04-2006, 02:22 PM
கதை அழகா இருக்கணுமின்னு எந்த அவசியமும் இல்லை.
அதை ரொம்ப அழகாச் சொன்னா நான் உங்க மேல சந்தேகப் படுவேன்.
உள்ளதை உள்ளபடி சொல்லி இதே போல எங்களைச் சந்தோஷப் படுத்துங்க... வாழ்த்துகள்

ஓவியன்
06-05-2007, 12:18 PM
அடடே இந்த பதிவை இன்று தூசி தட்டி பரணில் இருந்து மீட்டு வந்தேன்! - நம்ம பென்ஸ் அண்ணா இவ்வளவு குறும்புக்காரரா? என்ற கேள்வியுடன்.

poo
08-05-2007, 09:07 AM
மனசு துள்ளுதுப்பா....

மழை வருது மழை வருது நெல்லு வாருங்கோ... நினைவுக்கு வந்தவுடனே உடம்பு சிலிர்த்துக்குதே... இன்னா ட்யூனு அது.. ம்ம்ச்ச்.. குழந்தையாவே ஒரு 30 வருஷம் இருக்கனும்பா...

எல்லாத்தையும் கொட்டிட்டீங்க... அடைமழைப்போல... (ஆரு கண்டா.. அந்த அம்மணிப்போல இன்னும் சிலபேரு இல்லாமலா போயிருப்பாங்க?!..)

மனோஜ்
08-05-2007, 09:25 AM
பென்ஸ் அண்ணா மழையை உங்கள் நண்பனாக்கியதும் உங்கள் சுட்டியான விளையாட்டும் அருமை

abdullah
25-05-2007, 12:56 AM
அடே......................ங்கப்பா.........................