PDA

View Full Version : புள்ளி



ப்ரியன்
19-04-2006, 12:42 PM
தூரத்தில் தங்கி
தயங்கி நிற்கும்
நிலா!

அவளின் நெற்றியில்
ஒற்றைப் பொட்டு!

என் கவிதைகளின்
கடைசி மைச்சொட்டு!

ஒவ்வொன்றும்
ஒவ்வொன்றைக் குறித்தாலும்
தூரம் நின்றுப் பார்த்தால்
எல்லாம் புள்ளி!

வெறும் புள்ளி!

ஒன்றின் தொடக்கமாகவோ
முடிவாகவோ
நிற்கும் மாயப் புள்ளி!

- ப்ரியன்.

பென்ஸ்
19-04-2006, 01:34 PM
நெருங்கி இருக்கும் வரை
அதுவும் மனதோடு இருக்கும்வரை
யவரும் "பெரும்புள்ளிதான்"

பிரிந்து போக போக
இடைவேளி கூட கூட
சிறு பூள்ளியாய் தேய்ந்து....
வேறும் முற்று புள்ளியாய்...

பென்ஸ்
19-04-2006, 01:36 PM
ஒன்றின் தொடக்கமாகவோ
முடிவாகவோ
நிற்கும் மாயப் புள்ளி!

அருமையான வரிகள்....
வாழ்த்துகள் பிரியன்....

தாமரை
19-04-2006, 01:37 PM
தூரத்தில் தங்கி
தயங்கி நிற்கும்
நிலா!

அவளின் நெற்றியில்
ஒற்றைப் பொட்டு!

என் கவிதைகளின்
கடைசி மைச்சொட்டு!

ஒவ்வொன்றும்
ஒவ்வொன்றைக் குறித்தாலும்
தூரம் நின்றுப் பார்த்தால்
எல்லாம் புள்ளி!

வெறும் புள்ளி!

ஒன்றின் தொடக்கமாகவோ
முடிவாகவோ
நிற்கும் மாயப் புள்ளி!

- ப்ரியன்.

தூர நின்றால் புள்ளி
அருகில் வந்து
ஆராய்ந்தால்
எதுவுமே ஒரு பள்ளி
ஆமாம்
நிறைய கற்கலாம்..

Tamilvasan
23-04-2006, 06:41 AM
தூரம் நின்றுப் பார்த்தால்
எல்லாம் புள்ளிதாங்க , பூமியும் கூட......

தேர்தல் நேரத்துல...என்ன அனைவரும் 'புள்ளி' விபரங்கள அள்ளி விடுரீங்க...
நம்ப கேப்டன் மாதிரி...
அருமையான கவிதைகள்...பாராட்டுக்கள்
--தமிழ்வாசன்

gans5001
03-05-2006, 01:58 PM
என் கவிதைகளின்
கடைசி மைச்சொட்டு!


சரேலென இதயத்தின் மையப்புள்ளியைத் தொட்டுவிட்டது இந்த வரிகள்..
பாராட்டுகள்