PDA

View Full Version : ப்ளாக் பெர்ரியில் தமிழ்மன்றம்!



karikaalan
18-04-2006, 06:59 AM
நண்பர்களே

என்னுடைய ப்ளாக் பெர்ரியில் தமிழ்மன்றத்தில் நுழைய முடிகிறதே தவிர, மன்றத்தில் எழுதவோ, படிக்கவோ முடிவதில்லை. முரசு இல்லாததால் என்று நினைக்கிறேன்.

எவ்வாறு இது கைகூடும் என்று கணினி ஜாம்பவான்கள் சொல்லித்தந்தால் மகிழ்வேன்.

===கரிகாலன்

பரஞ்சோதி
20-04-2006, 05:12 PM
கரிகாலன் அண்ணாவை பார்த்து நீண்ட நாட்களாகி விட்டது.

மன்ற பொறுப்பாளர்கள் உடனே அண்ணாவுக்கு நல்ல வழி காட்டவும்.

இராசகுமாரன்
23-04-2006, 08:42 PM
ப்ளாக் பெர்ரி என்றால் என்ன?
ஏதும் புதிய கைக் கணணியா?
முதலில் அதை பற்றி நன்றாக தெரிந்து கொண்டு வருகிறேன்.
(வாங்குவது இப்போது முடியாத காரியம்)

அதற்குள் அதை வைத்திருக்கும் நண்பர்கள் யாராவது நண்பர் கரிகாலனுக்கு உதவுங்கள்.

Mano.G.
24-04-2006, 02:32 AM
தலைவரே நானும் DUPOD 900 எனும் கையடக்க கணனி
உபயோக படுத்துகிரேன். (Pocket PC) இதில் இணையம் செல்ல
முடிகிறது ஆனால் நமது மன்றத்தை தமிழில் பார்க்க முடியவில்லை
இதற்கு ஏதேனும் தமிழ் மென்பொருள் கிடைக்குமா?
சற்று உதவுங்களேன்.

மனோ.ஜி

இராசகுமாரன்
25-04-2006, 08:00 AM
மனோ ஜி,

விரைவில் நானும் கைக் கணணி ஒன்று வாங்க முடிவு செய்துள்ளேன், அதில் தமிழ் மன்றம் நுழைந்து விட்டு பிறகு பதில் கூறுகிறேன்.

நன்றி

aren
25-04-2006, 08:15 AM
பிளாக்பெரி ஒரு கைக்கணிணி. இதை தொலைபேசியாகவும் உபயோகிக்கலாம். மிகவும் உபயோகமானது.

பாரதி
26-04-2006, 11:13 AM
அண்ணலே,
இது எந்த அளவிற்கு உபயோகமாக இருக்கும் என்று தெரியவில்லை. இயலுமென்றால் மனோ ஜியும் முயற்சித்துப்பார்க்கவும். கீழ்க்கண்ட சுட்டியில் தமிழ் எழுத்துருக்களுக்கான பதிவிறக்க சுட்டி உள்ளது.

https://www.handango.com/secureDownload.jsp?shoppingUrl=http%3A%2F%2Fwww.handango.com%2Fhome.jsp%3FsiteId%3D1%26jid%3D85E24A6FXBAE2D9B7C5B6BDB9D8A27B1&jid=85E24A6FXBAE2D9B7C5B6BDB9D8A27B1&siteId=1&productId=72284&productName=Tamil+Installation&orderId=null&fileUrl=http%3A%2F%2Fwww.handango.com%2Fservlet%2Fd%2Ftamil_font.exe%3Fs%3D1%26p%3D72284%26secw%3D208e1e1a

அறிஞர்
26-04-2006, 02:22 PM
விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப மன்றமும் மாறும்.... விரைவில் இராசகுமாரன் முயற்சித்து தன் கருத்தை கூறுவார்.

பாரதி சொன்னது.. உபயோகமாக இருந்ததா.... என மனோஜியும், கரிகாலன் ஜியும் சொல்லுங்கப்பா...

Mano.G.
27-04-2006, 01:28 AM
எனது DOPOD 900 ன் ஆப்பரேடிங் சிஸ்தம் MicroSoft Mobil version 5.0 os 5.1.1700 (build 14354.0.1.1)

நேற்று தம்பி பாரதி கொடுத்த சுட்டியிலிருந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து எனது கையடக்க கண்ணியில் பதிவேற்றம் செய்யும் பொழுது (tamil font is not valid Pocket PC application) என வருகிறது.

மாற்று வழிகள் இருந்தால் கூறுங்களேன்.


மனோ.ஜி

karikaalan
24-05-2006, 08:07 AM
பாரதிஜி

இன்றுதான் தங்களது பதிவினைப் படித்தேன். BlackBerryயில் முயன்றேன்... மாட்டேன் என்கிறது... பார்ப்போம்...

===கரிகாலன்

prabhafriend
19-06-2006, 12:26 AM
Unicode Mobile பதிப்பு இன்னும் வெளிவரவில்லையா என்ன? நிச்சயம் வந்திருக்கும் . நன்றாக தேடிப்பாருங்கள் .