PDA

View Full Version : வாக்கிங் ஸ்டிக்



மஸாகி
18-04-2006, 04:23 AM
அவனது
வயது முதிர்ந்த தாய்க்கு
மூக்கு கண்ணாடிக்காக
வைத்தியர் சிபாரிசு செய்தபோது,
வாக்கிங் ஸ்ட்டிக்
வாங்கி கொடுக்கப் பட்டது,
பாவம்,
கண் தெரியாதவர்
எங்கேயாவது தவறி,
விழுந்து விடக் கூடாதென்று..
பின்னர்தான் தெரிந்தது,
அது கூட அவனது
வயது முதிர்ந்த குடையின்
கைப்பிடி என்று..
..............................................................மஸாகி

(மஸாகியின் 'மிஸ்டர் மிலேனியம்' கவிதைத் தொகுப்பிலிருந்து)

பென்ஸ்
18-04-2006, 02:34 PM
வாவ்... அருமை மஸாகி....

முதல் கவிதை முதல் மூன்றாம் கவிதை வரை நான் கண்ட வித்தியாசம்...
அடாங்கப்பா... கலக்கிவிட்டீர்கள்...

தேவைகளை பூர்த்தி செய்யாமல், எளிதான ...
தன்னிடம் இருக்கும் தேவையில்லாத ஒன்றை கொடுத்து திருப்தி படுத்துதல்....

கண்ணாடிக்கு பதில் கைத்தடி மட்டும்தானா.... ????

வாழ்க்கையில் இன்னும் எத்தனை எத்தனையோ விஷயத்தில் இப்படிதானே இருக்கிறோம்...

மஸாகி
19-04-2006, 03:53 AM
நீங்கள்
கொடுக்கும் - உற்சாகத்திற்கு
நன்றி பெஞ்சமின்..

என்
ஒவ்வொரு கவிதையும்
புதிய ரசனையை
வாசகர்களுக்கு கொடுக்க வேண்டுமென
நினைக்கிறேன்..

உங்கள் - ஆலோசனையை
கருத்தில் கொள்ள முயற்சிக்கிறேன்.

வாழ்த்துக்களுடன்
மஸாகி
19.04.2006

அறிஞர்
02-05-2006, 03:23 PM
தாயின் அருமை இருக்கும்போது தெரியாது...
இல்லாதபோது அதின் வலி தெரியும்
உண்மையாய் தாயை அறிந்தவருக்கு.

இராசகுமாரன்
14-05-2006, 01:54 PM
அருமையான ஆழ்ந்த அர்த்தம் கொண்ட கவிதை..

வாழ்த்துக்கள் மஸாகி..