PDA

View Full Version : மஸாகி என்றால் - கொக்கா..?மஸாகி
12-04-2006, 04:35 AM
அனைவருக்கும்
என் - இனிய வந்தனங்கள்..

என்னைப் பற்றி சுருக்கமாக சொல்வதென்றால்,
நான் குனிந்துகொண்டே - தலை நிமிர்வதற்கான வழியை யோசிப்பவன்.

என்னைப் பற்றி விரிவாக சொல்வதென்றால்,
நான்
தாயின் கர்ப்ப அறையிலிருக்கும்போதே
கடவுள் - எனக்கொரு
பேனாவை கொடுத்திருக்க கூடாதா..? என
கவலைப் படுபவன்.

ஏனெனில்,
வயிற்றுக்குள் படுத்துக்கொண்டே
பத்து மாதங்களை
சும்மா - வேஸ்ட் பண்ணிவிட்டேனே..

எனக்குப் பிடித்த - நானே எழுதிய தத்துவம் என்றால்,
வாழ்க்கை என்பது - கொஞ்சம் ரிஸ்க்.. கொஞ்சம் ரிலாக்ஸ் அவ்வளவுதான்.

நான் - அனைத்து இளைஞர்களுக்கும் சொல்ல விரும்புவது என்னவென்றால்,
நண்பனாயிரு - உயிர் கொடுக்கவும் தயாரென்றால்..
காதலனாய் இரு - கல்யாணம் பண்ணவும் தயாரென்றால்..

நான் - நமது தமிழ் மன்ற நண்பர்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால்,
அப்பப்ப சில குறும்புத்தனங்கள் பண்ணுவேன். கிறுக்குத்தனமாக எதையாவது எழுதுவேன்.அவை எல்லாமே - உங்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்கே அன்றி, மனங்களைப் புண்படுத்த அல்ல..

என் வார்த்தைகளில் ஏதாவது - உங்கள் மனதில், தர்ம சங்கடங்களை ஏற்படுத்தினால், அதற்காக என்னை மன்னித்து - தவறை, என் தனிப்பட்ட ஈமைல் முகவரிக்கு அறியத்தாருங்கள். நன்றி..

என்றும் நட்புடன்,
மஸாகி
12.10.2006

ஈ-mail : mazaagy@yahoo.com
Website : http://www.computervaathy.blogspot.com

pradeepkt
12-04-2006, 06:38 AM
முதலிலேயே ஒரு டிஸ்கிளெயிமர் போட்டுவிட்டார் மஸாகி,
மக்களே, கவனமாக இருங்கள்... :)

மஸாகி,
நீங்கள் கலக்குங்கள்

மதி
12-04-2006, 07:04 AM
மஸாகி என்றால் கொக்கா...???
குறும்புத்தனங்கள் கொண்டோர் இங்கும் நிறைய உண்டு..உமக்கு சளைக்காமல்..போட்டியிட..

ஆகவே வந்தனங்களும் வரவேற்புகளும்..

தாமரை
12-04-2006, 07:35 AM
ரிஸ்கிற்கும் ரிலாக்ஸிற்கும் இடையே அலைபாயும் மஸாக்கிற்கு...

பத்து மாதங்கள் ரிலாக்ஸிற்கு கவலைப் படவேண்டாம்.. இப்போதான் அதற்கான ரிஸ்கை எடுக்கிறீர்களே...

ஆமாம் உயிரைக் கொடுத்து கல்யாணம் செய்திருக்கிறோமே! எங்களை யாராய் இருக்கச் சொல்லப் போகிறீர்கள்?

gragavan
12-04-2006, 07:54 AM
வாருமய்யா மசாக்கி....கலக்கோ கலக்குன்னு கலக்குங்க...

அறிஞர்
12-04-2006, 02:18 PM
குறும்புத்தனங்களுடன் கலக்க ஒரு ஆள் ரெடியாகிவிட்டார்.. கலக்குங்க...

மற்றவர்கள் மனதில் எண்ணி... புண்படுத்தாமல் பதிவுகளை கொடுங்கள்...

மஸாகி
15-04-2006, 03:47 AM
ரிஸ்கிற்கும் ரிலாக்ஸிற்கும் இடையே அலைபாயும் மஸாக்கிற்கு...

பத்து மாதங்கள் ரிலாக்ஸிற்கு கவலைப் படவேண்டாம்.. இப்போதான் அதற்கான ரிஸ்கை எடுக்கிறீர்களே...

ஆமாம் உயிரைக் கொடுத்து கல்யாணம் செய்திருக்கிறோமே! எங்களை யாராய் இருக்கச் சொல்லப் போகிறீர்கள்?

எனது மரிதைக்கும் - மதிப்புக்குமுரிய - மேன்மை தங்கிய திருவாளர் தாமரைச் செல்வன் அவர்களுக்கு,

(நீங்களெல்லாம் - பெரிய மனுசாளுக.. என்னால முடிஞ்சளவுக்கு கவுரவித்துள்ளேன், இதுல ஏதும் குறச்சல் இருந்தால் ஸாரு என்ன - கோபித்து, ரத்தம் கக்கி சாக வச்சுடாதீங்க.. பிளீஸ்.)

அட.. என்னடாது - நமக்கு, இவ்வளவு மதிப்பும் மரியாதையும் கிடைக்குதேன்னு யோசிக்கிறீங்களா..?

நீங்கள் - சம்டைம் ஆவியுலக சீ.எம் ஆகவோ, தாதா ஆகவோ இருந்திடப் போரீங்க.. - அது தெரியாம, நான் ஏதாவது ஏடாகூடாமா பேசிட்டா - அப்புறம் ஆளவுட்டு என்ன தூக்கிடுவிங்கள்ள.. (ம்.. ம்.. அந்தப் பயம் இருக்கணும் என்று மனசுக்குள்ள நினைக்கிறீங்களா..?)

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா..? அவனவன் - ஆவியுலக நட்பு கிடைப்பதற்காக, அலையாய் அலைஞ்சிக்கிட்டிருக்க - எனக்கு இவ்வளவு சீக்கிரமா, அந்த சான்ஸ் கிடைக்குமென்னு நான் - நினைக்கவே இல்ல. தாங்ஸ் காட்.

ஏனென்றால் - நீங்கதான் உயிரக் கொடுத்து கல்யாணம் பண்ணியவராச்சே..

அன்டகாகசம்.. அபூகாஹுகும்.. போயிர்ரேன் சிஷ்யா..

Tnx 4 Ur - " Upasarippuku.. "

என்றும் நட்புடன்
மஸாகி
15.04.2006

மஸாகி
15-04-2006, 03:51 AM
வாருமய்யா மசாக்கி....கலக்கோ கலக்குன்னு கலக்குங்க...

அதுக்கென்ன கல... கல.. கல.. கலவென - கலக்கிட்டாப் போச்சு..

என்றும் நட்புடன்
மஸாகி
15.04.2006

மஸாகி
15-04-2006, 03:59 AM
குறும்புத்தனங்களுடன் கலக்க ஒரு ஆள் ரெடியாகிவிட்டார்.. கலக்குங்க...

மற்றவர்கள் மனதில் எண்ணி... புண்படுத்தாமல் பதிவுகளை கொடுங்கள்...

உங்கள்
அன்பிற்கு நன்றி..
அறிவுக்கு வாழ்த்துக்கள்..

என்றும் நட்புடன்
மஸாகி
15.04.2006

மஸாகி
15-04-2006, 04:05 AM
முதலிலேயே ஒரு டிஸ்கிளெயிமர் போட்டுவிட்டார் மஸாகி,
மக்களே, கவனமாக இருங்கள்... :)

மஸாகி,
நீங்கள் கலக்குங்கள்

அட.. என்ன ஸார் நீங்க..
இத விட பேசாம,
மஸாகி வந்துவிட்டார் - பராக்.. பராக்.. என்று சொல்லிருக்கலாமுள்ள.. தாங்ஸ்.

என்றும் நட்புடன்
மஸாகி
15.04.2006

மஸாகி
15-04-2006, 04:09 AM
மஸாகி என்றால் கொக்கா...???
குறும்புத்தனங்கள் கொண்டோர் இங்கும் நிறைய உண்டு..உமக்கு சளைக்காமல்..போட்டியிட..

ஆகவே வந்தனங்களும் வரவேற்புகளும்..

என்னை வரவேற்ற அனைவருக்கும் - நன்றிகள்.
காலமெல்லாம் குறும்பர்கள் வாழ்க..

என்றும் நட்புடன்
மஸாகி
15.04.2006

மயூ
16-04-2006, 05:28 AM
வருக மசாகி. உங்கள் குறும்புதனத்திற்கு இங்கு போதிய உணவு கிடைக்கும்.

sarcharan
17-04-2006, 09:17 AM
அதுக்கென்ன கல... கல.. கல.. கலவென - கலக்கிட்டாப் போச்சு..

என்றும் நட்புடன்
மஸாகி
15.04.2006
லக... லக.. லக.. லகவென - கலக்காம இருந்தா சரி..;) ;)

தாமரை
17-04-2006, 09:38 AM
எனது மரிதைக்கும் - மதிப்புக்குமுரிய - மேன்மை தங்கிய திருவாளர் தாமரைச் செல்வன் அவர்களுக்கு,

(நீங்களெல்லாம் - பெரிய மனுசாளுக.. என்னால முடிஞ்சளவுக்கு கவுரவித்துள்ளேன், இதுல ஏதும் குறச்சல் இருந்தால் ஸாரு என்ன - கோபித்து, ரத்தம் கக்கி சாக வச்சுடாதீங்க.. பிளீஸ்.)

அட.. என்னடாது - நமக்கு, இவ்வளவு மதிப்பும் மரியாதையும் கிடைக்குதேன்னு யோசிக்கிறீங்களா..?

நீங்கள் - சம்டைம் ஆவியுலக சீ.எம் ஆகவோ, தாதா ஆகவோ இருந்திடப் போரீங்க.. - அது தெரியாம, நான் ஏதாவது ஏடாகூடாமா பேசிட்டா - அப்புறம் ஆளவுட்டு என்ன தூக்கிடுவிங்கள்ள.. (ம்.. ம்.. அந்தப் பயம் இருக்கணும் என்று மனசுக்குள்ள நினைக்கிறீங்களா..?)

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா..? அவனவன் - ஆவியுலக நட்பு கிடைப்பதற்காக, அலையாய் அலைஞ்சிக்கிட்டிருக்க - எனக்கு இவ்வளவு சீக்கிரமா, அந்த சான்ஸ் கிடைக்குமென்னு நான் - நினைக்கவே இல்ல. தாங்ஸ் காட்.

ஏனென்றால் - நீங்கதான் உயிரக் கொடுத்து கல்யாணம் பண்ணியவராச்சே..

அன்டகாகசம்.. அபூகாஹுகும்.. போயிர்ரேன் சிஷ்யா..

Tnx 4 Ur - " Upasarippuku.. "

என்றும் நட்புடன்
மஸாகி
15.04.2006

மடத்தனம் பண்ணிட்டியே மஸாகி... காட் - ஐ இங்க அழைச்சு என் கோவத்துக்கு ஆளாகிட்டியே... காட் ஐ தேங்க் பண்ணினதுக்கு உங்களுக்கு காடுதான்,

ஓவியா
04-05-2006, 02:12 PM
அனைவருக்கும்,,,வந்தனங்கள்

இந்த பக்கம் ப்டிக்க மிகவும் நகைசுவையாக இருக்கு

ஆவி வரம் எனக்கும் கிடைக்குமா???????????????//

ஆவியாரெ..வாய்ப்பு இருந்தால் இப்படி கொஞ்ஜ்ஜ்ஜம் லன்டன் வந்து போகும்மையா...

அய்யோ அய்யையோ....மாசாகீ...சார் என்ன உங்க குறும்பு...அப்ப...ப்ப....

ஆமா,,, மாசகி என்றால் என்ன?......

ஒய்யாரமாய் ஓர்
ஓவிய

Narathar
05-05-2006, 07:20 AM
மஸாகியை இருகரம் கூப்பி வரவேற்கின்றேன்

munnaa
05-05-2006, 09:47 PM
கலக்கலான அறிமுகம் . . .வாழ்த்துக்கள்

மஸாகி
16-05-2006, 04:01 AM
அனைவருக்கும்,,,வந்தனங்கள்

இந்த பக்கம் ப்டிக்க மிகவும் நகைசுவையாக இருக்கு

ஆவி வரம் எனக்கும் கிடைக்குமா???????????????//

ஆவியாரெ..வாய்ப்பு இருந்தால் இப்படி கொஞ்ஜ்ஜ்ஜம் லன்டன் வந்து போகும்மையா...

அய்யோ அய்யையோ....மாசாகீ...சார் என்ன உங்க குறும்பு...அப்ப...ப்ப....

ஆமா,,, மாசகி என்றால் என்ன?......

ஒய்யாரமாய் ஓர்
ஓவிய

என்ன ஓவியா - ஆவி வரம் எல்லாம் கேட்கிறீங்க..?
உங்க லண்டன் நண்பர்கள் - யாரையாவது
பயமுறுத்த வேண்டியிருக்கிறதா..?

என்றும் நட்புடன்
மஸாகி
16.05.2006

தாமரை
16-05-2006, 05:03 AM
என்ன ஓவியா - ஆவி வரம் எல்லாம் கேட்கிறீங்க..?
உங்க லண்டன் நண்பர்கள் - யாரையாவது
பயமுறுத்த வேண்டியிருக்கிறதா..?

என்றும் நட்புடன்
மஸாகி
16.05.2006
என்ன மஸாகி.. புரியலையா? தங்கைக்கு கல்யாண வரம் வேணுமாம்....

உயிரைக் கொடுத்து கல்யாணம் பண்ணினவர் - ஆவி..

ஆவி வரம் வேண்டும்... -- கல்யாணம் வேண்டும்...

ஓவியா
17-05-2006, 11:00 PM
என்ன ஓவியா - ஆவி வரம் எல்லாம் கேட்கிறீங்க..?
உங்க லண்டன் நண்பர்கள் - யாரையாவது
பயமுறுத்த வேண்டியிருக்கிறதா..?

என்றும் நட்புடன்
மஸாகி
16.05.2006

ஆமாம் ...ஆமாம்
எங்க பல்கலைகலகத்தின் ப்ரின்சிபாலை பயமுறுத்தவேண்டும்

ஆவியாரிடம் நீங்க தான் ரெகமென்ட் பன்னவேண்டும்....

உங்கள் அறிமுகயுரை அமர்க்களம்,,,வாழ்த்துகள்

ஓவியா
17-05-2006, 11:24 PM
என்ன மஸாகி.. புரியலையா? தங்கைக்கு கல்யாண வரம் வேணுமாம்....

உயிரைக் கொடுத்து கல்யாணம் பண்ணினவர் - ஆவி..

ஆவி வரம் வேண்டும்... -- கல்யாணம் வேண்டும்...

தங்கையாயாயா,,

இந்த தங்கைக்கு ஒரு கல்யாணம் செய்து பார்க்க உங்களுக்கு இத்தனை ஆசையயா...நான் மட்டும் இப்பொழுது ஆசியாவில் இருந்திருந்தால்...அங்கே இந்தோனேசியாவில் குமுரும் எரிமலையை என் ஆனந்த கண்ணிரால் அணைத்திருப்பேன்

அண்ணா உன்யிதயம் நான் கன்ட உலகம்....லல்லல்லலா,,,லல்லல்ல லா :p :p :p :p :p :p :p

ஓவியா

மதி
18-05-2006, 12:09 AM

அடடா....
ஒரே பாசமலர் காட்சியால இருக்கு..??

pradeepkt
18-05-2006, 04:50 AM
எனக்கே விக்கி விக்கி அழுவணும் போல இருக்குன்னா பாருங்களேன்... :)

ஓவியா
18-05-2006, 05:11 PM
எனக்கே விக்கி விக்கி அழுவணும் போல இருக்குன்னா பாருங்களேன்... :)

இதையேல்லாம் படித்து:mad: :mad:

நானோ இங்கே குலுங்கி குலுங்கி சிரிக்கின்றென்:D :D :D :D :D

மதி
18-05-2006, 06:37 PM
இதையேல்லாம் படித்து:mad: :mad:

நானோ இங்கே குலுங்கி குலுங்கி சிரிக்கின்றென்:D :D :D :D :D
எதை நினைத்து அப்படி சிரிக்கறீங்க..?!:confused: :confused: :confused:

ஓவியா
18-05-2006, 08:53 PM
எதை நினைத்து அப்படி சிரிக்கறீங்க..?!:confused: :confused: :confused:

கலியுகத்தில் ஆண்கள் விக்கி விக்கி அழுவதை பார்த்து:D :D

நாங்கள் (பெண்கள்) கூந்தலில் தான் பூ சுத்துவது , காதில் இல்லை:p :p :p

மதி
18-05-2006, 08:55 PM
கலியுகத்தில் ஆண்கள் விக்கி விக்கி அழுவதை பார்த்து:D :D

நாங்கள் (பெண்கள்) கூந்தலில் தான் பூ சுத்துவது , காதில் இல்லை:p :p :p
அதென்ன கலியுகத்தில்..
வேறு யுகத்தில் ஆண்கள் விக்கி விக்கி அழவில்லையா...??

ஆமாம்...ஆண்கள் அழக்கூடாதா என்ன..?

Raaga
18-05-2006, 09:03 PM
மஸாகி உனக்கு ஒரு கவிதை...

அன்புள்ள மஸாகியெ வாழ்க பல ஆண்டு
ஆனந்த விகடனே வளர்க உன் தொண்டு

இன்னலின்றி சிரிக்க வைத்தாய் இன்று
ஈகோவுக்கு இடம் தராமலிருப்பது நன்று

உல்டாப் பேசி சிரிக்க வைப்பதில் இல்லை தப்பு
ஊரறிய எவருக்கும் மறந்தும் வைக்காதே ஆப்பு

எங்களை ஆவிகள் விட்டு பயமுறுத்துவது ஆபத்து
ஏற்கனவே ஆவிதரும் ஆப்பம் இட்லி எங்கள் சொத்து

ஐயா உன் குறும்புகளை தினமும் தொடர்ந்து நடத்து

ஒவ்வொரு வாக்கியத்திலும் எங்களுக்கு பொங்குது சிரிப்பு
ஓவியர் மட்டும் ஐஸ் கட்டி கண்ணீரால் அணைப்பாள் நெருப்பு

ஔவை பாட்டி வயதை ஓவியர் அடையுமுன் அவளுக்கு திருமணத்தை நடத்துவது உன் பொருப்பு...

அன்புடன்

ராகா

அறிஞர்
18-05-2006, 09:22 PM

ராகாதமிழ் படிக்காதவன் என்றீர்... இங்கு ஒரு ஆத்திச்சூடியே பாடிவிட்டீர்... வாழ்த்துக்கள்.. தொடருங்கள்....

மஸாகி
22-05-2006, 04:21 AM
மஸாகி உனக்கு ஒரு கவிதை...

அன்புள்ள மஸாகியெ வாழ்க பல ஆண்டு
ஆனந்த விகடனே வளர்க உன் தொண்டு

இன்னலின்றி சிரிக்க வைத்தாய் இன்று
ஈகோவுக்கு இடம் தராமலிருப்பது நன்று

உல்டாப் பேசி சிரிக்க வைப்பதில் இல்லை தப்பு
ஊரறிய எவருக்கும் மறந்தும் வைக்காதே ஆப்பு

எங்களை ஆவிகள் விட்டு பயமுறுத்துவது ஆபத்து
ஏற்கனவே ஆவிதரும் ஆப்பம் இட்லி எங்கள் சொத்து

ஐயா உன் குறும்புகளை தினமும் தொடர்ந்து நடத்து

ஒவ்வொரு வாக்கியத்திலும் எங்களுக்கு பொங்குது சிரிப்பு
ஓவியர் மட்டும் ஐஸ் கட்டி கண்ணீரால் அணைப்பாள் நெருப்பு

ஔவை பாட்டி வயதை ஓவியர் அடையுமுன் அவளுக்கு திருமணத்தை நடத்துவது உன் பொருப்பு...

அன்புடன்

ராகா

என்ன ராகா..
உங்க கவிதையைப் பார்த்து - நானும் ஆஹா
இப்படியொரு அருமையான சகா கிடைப்பதற்கு -
கொடுத்து வைக்கணும் என்றிருந்தேன்..
ஆனாலும் - கடைசியில
ஓவியா கல்யாணப் பொறுப்ப
என் கையில ஒப்படைச்சி
கவுத்திட்டீங்களே ராகா.

ஆமா..
நீங்க - சும்மா ஒரு பேச்சுக்குத்தானே சொன்னீங்க..?
ஏன்னா, ஒரு கல்யாணம் பண்ணிவைக்கும் செலவை
என் தலையில சுமத்தி -
நல்லா இருக்கும் என்னை நடுரோட்டுக்கு
கொண்டு வந்திராதீங்க ஸார்..

நீங்க பாட்டுக்கு -
வெளையாட்டுக்கு சொல்றீங்கணு தெரியாம,
ஓவியாவும் அப்புறம் -
ஒய்யாரமா கிளம்பி எங்க வீட்டுக்கு வந்து -
சித்தப்பா.. என்று சொல்லிட போறார்..

நட்புடன் - மஸாகி
22.05.2006

மஸாகி
22-05-2006, 04:29 AM
ஆமாம் ...ஆமாம்
எங்க பல்கலைகலகத்தின் ப்ரின்சிபாலை பயமுறுத்தவேண்டும்

ஆவியாரிடம் நீங்க தான் ரெகமென்ட் பன்னவேண்டும்....

உங்கள் அறிமுகயுரை அமர்க்களம்,,,வாழ்த்துகள்

ஸாரி..
எதுக்குணு கேட்கறீங்களா..?
உங்க போட்டோவ - முதன்முதலா பார்த்தப்ப
மனோரமாவோன்னு நினச்சிட்டேன் - அதுக்குதான்..

நட்புடன் - மஸாகி
22.05.2006

தாமரை
22-05-2006, 09:27 AM
என்ன ராகா..
உங்க கவிதையைப் பார்த்து - நானும் ஆஹா
இப்படியொரு அருமையான சகா கிடைப்பதற்கு -
கொடுத்து வைக்கணும் என்றிருந்தேன்..
ஆனாலும் - கடைசியில
ஓவியா கல்யாணப் பொறுப்ப
என் கையில ஒப்படைச்சி
கவுத்திட்டீங்களே ராகா.

ஆமா..
நீங்க - சும்மா ஒரு பேச்சுக்குத்தானே சொன்னீங்க..?
ஏன்னா, ஒரு கல்யாணம் பண்ணிவைக்கும் செலவை
என் தலையில சுமத்தி -
நல்லா இருக்கும் என்னை நடுரோட்டுக்கு
கொண்டு வந்திராதீங்க ஸார்..

நீங்க பாட்டுக்கு -
வெளையாட்டுக்கு சொல்றீங்கணு தெரியாம,
ஓவியாவும் அப்புறம் -
ஒய்யாரமா கிளம்பி எங்க வீட்டுக்கு வந்து -
சித்தப்பா.. என்று சொல்லிட போறார்..

நட்புடன் - மஸாகி
22.05.2006
சித்தப்பா!,

கல்யாணம் செஞ்சு வைக்கிறவங்களுக்கு
சிலநாள் செலவு
கட்டிக்கறவங்களுக்கோ

வாழ்நாள் முழுவதும் (இரண்டு அர்த்தங்கள்!!! வாழ்நாட்கள் அத்தனைக்கும், வாழ்நாட்கள் அத்தனையும்)
செலவு..

ஓவியா
22-05-2006, 07:43 PM
என்ன ராகா..

ஆனாலும் - கடைசியில
ஓவியா கல்யாணப் பொறுப்ப
என் கையில ஒப்படைச்சி
கவுத்திட்டீங்களே ராகா.

நல்லா இருக்கும் என்னை நடுரோட்டுக்கு
கொண்டு வந்திராதீங்க ஸார்..

ஓவியாவும் அப்புறம் -
ஒய்யாரமா கிளம்பி எங்க வீட்டுக்கு வந்து -
சித்தப்பா.. என்று சொல்லிட போறார்..

நட்புடன் - மஸாகி
22.05.2006

மஸாகி........சித்தப்பாவா :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek::eek: :eek: :eek: :eek: :eek:
நான் இல்லாத சமயமா பார்த்து கவுத்திட்டீங்களே:mad: :mad: :mad: :mad:

ஓவியா
22-05-2006, 07:56 PM
ஸாரி..
எதுக்குணு கேட்கறீங்களா..?
உங்க போட்டோவ - முதன்முதலா பார்த்தப்ப
மனோரமாவோன்னு நினச்சிட்டேன் - அதுக்குதான்..

நட்புடன் - மஸாகி
22.05.2006

உங்களுக்கு இப்படி ஒரு டேஷ்ட்டா... மேய்சிலிர்க்குது...

அந்த ஓவியம் மாண்புமிகு ராஜா ரவிவர்மா வரைந்தது,,,

அப்பொழுது பத்ம ஷிரி மனோராமா அம்மையார் இன்னும் பிறக்கவில்லை.....உலக கிண்னேஷ் சாதனையாலருடன் அடியேனை ஒப்பிட்டதர்க்கு நன்றி

ராஜ ரவிவர்மாவின் ரசிகை நான்.......

ஓவியா
22-05-2006, 08:01 PM
சித்தப்பா!,

கல்யாணம் செஞ்சு வைக்கிறவங்களுக்கு
சிலநாள் செலவு
கட்டிக்கறவங்களுக்கோ

வாழ்நாள் முழுவதும் (இரண்டு அர்த்தங்கள்!!! வாழ்நாட்கள் அத்தனைக்கும், வாழ்நாட்கள் அத்தனையும்)
செலவு..

சரி என் கல்யாணத்திர்க்கு நான் உங்கள் யாரையுமே அழைக்கபோவது இல்லை......சந்தோஷமா.....வாழ்த்துகள்

Raaga
22-05-2006, 08:23 PM
சரி என் கல்யாணத்திர்க்கு நான் உங்கள் யாரையுமே அழைக்கபோவது இல்லை......சந்தோஷமா.....வாழ்த்துகள்

கலங்காதீர்கள் ஒவியா... நான் இன்றி உங்கள் திருமணம் நடை பெறாது... விளங்கவில்லையா....

வேறொன்றுமில்லை... நான் என் இசைகுழுவுடன் வந்து இன்னிசை மழை பொழிகிறேன் என்பதைத்தான் கூறினேன்...

ஓவியா
23-05-2006, 12:16 AM
அதென்ன கலியுகத்தில்..
வேறு யுகத்தில் ஆண்கள் விக்கி விக்கி அழவில்லையா...??

ஆமாம்...ஆண்கள் அழக்கூடாதா என்ன..?

ஓ அழலாமே தாராலமா.. கூவி..விக்கி விக்கி அழலாமே
முக்கியமா தமிழ்னாட்டில் தண்ணீர் பஞ்ஜமாவது குறையும்.....:D

ஓவியா
23-05-2006, 12:29 AM
கலங்காதீர்கள் ஒவியா... நான் இன்றி உங்கள் திருமணம் நடை பெறாது... விளங்கவில்லையா....

வேறொன்றுமில்லை... நான் என் இசைகுழுவுடன் வந்து இன்னிசை மழை பொழிகிறேன் என்பதைத்தான் கூறினேன்...

சரி, வரும் பொழுது கூடவே ஒரு மாப்பிளயையும் அழைத்து வரவும் கோடி புண்ணியமகபோவும்,,

அறிஞர்
23-05-2006, 10:41 PM
சரி, வரும் பொழுது கூடவே ஒரு மாப்பிளயையும் அழைத்து வரவும் கோடி புண்ணியமகபோவும்,, என்னது மாப்பிள்ளையை.. ராகாதான் கூட்டி வரனுமா...

Raaga
24-05-2006, 01:30 PM
அய்யா பார்த்தீர்களா எவ்வளவு பெரிய பொறுப்பு என்று...

நினைத்தாலே நடுக்கமாக இருக்கின்றது...

நான் இன்டர்வியூ வைத்து அழகான படித்த ஒரு மணமகனை தேர்ந்தெடுத்து மனவறைக்கு கொண்டு போகும் வேலையில், அங்கே கண்மணி ஓயிவா உண்மையிலே அகோரமாக தலைவிரிந்து நின்றிருந்தால் என் கதி என்னாவது...

திருமணம் ஆகாத முன்னரே அந்த ஆள் என்னிடம் ஜீவனாம்சம் கேட்பார்... மேலும், நடக்கவிருந்த திருமணம் நின்று போகாமல் இருக்க "தேவர் மகன்" கமல் போல தியாகமெல்லாம் செய்ய வேண்டி இருக்கும்...

நினைத்தாலே வியர்க்கின்றது...

ம்... ஓவியாவிடம் நன்றாக வாங்கி கட்டி கொள்ள போகிறேன் என்பது நிச்சயம்...

sarcharan
25-05-2006, 06:59 AM
நான் இன்டர்வியூ வைத்து அழகான படித்த ஒரு மணமகனை தேர்ந்தெடுத்து மனவறைக்கு கொண்டு போகும் வேலையில், அங்கே கண்மணி ஓயிவா உண்மையிலே அகோரமாக தலைவிரிந்து நின்றிருந்தால் என் கதி என்னாவது...

.
உண்மையிலேயே உமக்கு ரொம்ப லொள்ளூ ஓய்....;)

Raaga
26-05-2006, 07:25 PM
ஜொல்லை விட லொள்ளு மேல் இல்லையா.....

pradeepkt
29-05-2006, 06:05 AM
ஜொள்ளானாலும் சரி, லொள்ளானாலும் சரி, கொஞ்சம் ஓவரானால் பல்லுக்கு நல்லதில்லை :)

தாமரை
29-05-2006, 06:23 AM
ஜொள்ளானாலும் சரி, லொள்ளானாலும் சரி, கொஞ்சம் ஓவரானால் பல்லுக்கு நல்லதில்லை :)
பல்லு எகிறினா, சொல்லு கிளறும், பில்லு எகிறும், .

pradeepkt
29-05-2006, 06:31 AM
கிளறுமா, குழறுமா
அடுத்து அனேகமா குருமாதான்.

sarcharan
29-05-2006, 08:08 AM
பல்லு எகிறினா, சொல்லு கிளறும், பில்லு எகிறும், .

எல்லாம் சரி பில்லு எப்படி எகிறும்... ஆஸ்பத்திரி பில்ல சொன்னீங்களோ...

தாமரை
29-05-2006, 09:44 AM
எல்லாம் சரு பில்லு எப்படி எகிறும்... ஆஸ்பத்திரி பில்ல சொன்னீங்களோ...
அதே அதே சபாபதே

sarcharan
29-05-2006, 10:09 AM
அதே அதே சபாபதே

நீங்களும் ராகவன் மாதிரி பேச ஆரம்பிச்சுட்டீங்க....

ஓவியா
29-05-2006, 03:09 PM
அய்யா பார்த்தீர்களா எவ்வளவு பெரிய பொறுப்பு என்று...

நினைத்தாலே நடுக்கமாக இருக்கின்றது...

நான் இன்டர்வியூ வைத்து அழகான படித்த ஒரு மணமகனை தேர்ந்தெடுத்து மனவறைக்கு கொண்டு போகும் வேலையில், அங்கே கண்மணி ஓயிவா உண்மையிலே அகோரமாக தலைவிரிந்து நின்றிருந்தால் என் கதி என்னாவது...
திருமணம் ஆகாத முன்னரே அந்த ஆள் என்னிடம் ஜீவனாம்சம் கேட்பார்... மேலும், நடக்கவிருந்த திருமணம் நின்று போகாமல் இருக்க "தேவர் மகன்" கமல் போல தியாகமெல்லாம் செய்ய வேண்டி இருக்கும்......நினைத்தாலே வியர்க்கின்றது...

.

ராகா சார், நீங்கள் வாதாடிய...

காதலா, காமமா ? உடுத்துவது யாருக்காக ?
எது தவறு...? இன்பம் எங்கே..?
மனதை கவரும் பாடல்கள்?, சில தத்துவங்கள்!..
மதங்களும், சடங்குகளும், சமுதாயங்களும்?
மாதா, பிதா, குரு தெய்வம்...?
வெளிநாட்டு ஜோக்குகள்...?
தமிழ் தொலைக்காட்சி அபத்தங்கள......அக்கரை பச்சை...

(உங்கள்) வாதங்களிலே சிறந்த கருத்துக்கள் நிரைய இருக்கின்றது... அவையாவும் மதிக்கதக்கவை....சில கருத்துக்களும் ஏற்கதக்கவையே

மிக வருந்த வேண்டிய ஒரு விஷயம், என்ன வேண்றால் இவ்வளவு கருத்துக்கள் தெரிந்த உங்களுக்கு
ஒரு பெண்னின் மனது புரியவில்லையே ப்ரக்டிகலா யோசிச்சா நல்ல தெரியும்......

விவாதியுங்கள், நான் வேடிக்கை பார்க்கிறேன்.
சில காயங்களுக்கு மௌனமே சிறந்த மருந்து

ஓவியா

Raaga
29-05-2006, 04:11 PM
அய்யய்யோ

மஸாகி
03-06-2006, 11:57 AM
அட சே.. இது என்ன புகைப்படம்..
உங்க பழைய படமே இத விட நல்லது..

ஏன்னா - எல்லோருமே கலைரசனை கொண்டு - ரசிக்க மாட்டாங்கமா..
( பிளீஸ் - நோ.. கமன்ட் )

மஸாகி
05-06-2006, 03:41 AM
அட சே.. இது என்ன புகைப்படம்..
உங்க பழைய படமே இத விட நல்லது..

ஏன்னா - எல்லோருமே கலைரசனை கொண்டு - ரசிக்க மாட்டாங்கமா..
( பிளீஸ் - நோ.. கமன்ட் )

-------
பரவாயில்லயே..
நான் யாருக்கு என்ன சொன்னேனோ,
அத அவங்க புரிஞ்சுக்கிட்டாங்க..

நட்புடன்
மஸாகி
05.06.2006