PDA

View Full Version : நீயொரு சர்வதேச அழகு..



மஸாகி
11-04-2006, 03:58 AM
ஆயிரம்
நிலவுகள் ஒன்று கூடி,
உன் அழகிய வதனத்தில்
மாநாடு நடத்துகின்றனவோ,
ஏன் உனக்கு மாத்திரம்,
இத்தனை பிரகாசமான
முகவமைப்பு..

உன் புன்னகை
என்ன பூக்கடையா?
தினமும் வாடாமல்
புதிதாய் இருக்கிறதே..

உனது பற்களை
இன்னமும்,
சிக்னல் கம்பனிக்காரர்கள்
காணவில்லையா?
உலகிலேயே
உனக்கு மாத்திரம்தான்
மிக அழகிய பற்கள் இருக்;கின்றன
என்பது
அவர்களுக்கேன்,
தெரியாமல் போனது..

நீயொரு சர்வதேச
அழகு மஹா சமுத்திரமா?
பிரம்மன்
எத்தனை அழகான
ஓவியன் என்பதனை
உன்னைப் பார்ப்பவர்கள்
புரிந்து கொள்வார்கள்..

என் அன்பு
குட்டி மருமகனே,
உன்னை இதைவிட
வார்த்தைகளால் வர்ணிக்க,
எனக்குத் தெரியாது..

- மஸாகி


(எனது முந்தைய கவிதைக்கு - வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்.)

பென்ஸ்
18-04-2006, 02:26 PM
நல்ல கவிதை மஸாகி....

மருமகனுக்கு ஒரு அன்பு கவிதை... வாசிக்கும் போது நுகர முடிகிறது அவன் மேல் உங்கள் பாசம்...

மீண்டும் தொடர்ந்து எழுதுங்கள் ... இங்கு நல்ல படைப்புகளும் இருக்கின்றன... படியுங்கள்...
இங்கு நல்ல பல கவிஞர்கள் இருக்கிறார்கள், அவர்களது கவிதைகள், மற்றும் அவர்களது
அதன் பின்னோட்டங்கள் அனைத்தையும் படியுங்கள்...
அது உங்கள் கவிதைக்கு நல்ல வடிவம் கொடுக்கும்....


கவிதைக்கு கவிதை நன்றாக இருக்கிறது... நல்ல முன்னேற்றம்... பாராட்டுகள்...

அறிஞர்
02-05-2006, 03:15 PM
பெண்ணை வர்ணிக்கும் பாணியில்.. குழந்தைக்கு ஒரு தாலாட்டு அரும்..

பற்களை கவனிக்காதது வருத்தம் தான்.. ஆனால்.

பற்கள் இல்லாமல்
சிரிக்கும்
பொக்கை சிரிப்பின்
அழகே தனி.