PDA

View Full Version : முதற்கண் வணக்கங்கள்.



றெனிநிமல்
09-04-2006, 04:52 PM
வணக்கம் எம் தமிழ் உறவுகளே!
சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள் என் முன்னோர்கள் என்று ஏட்டிலே பாடம் படித்தேன் அன்று.
இன்று அதனை இங்கே காண்கின்றேன்.
முத்தமிழ் மன்றம் வைத்து தமிழ் வளர்ப்பவர்கள்
அனைவருக்கும் என் முதற்கண் வணக்கங்கள்.

ராசராசன்
09-04-2006, 07:29 PM
வணக்கம், வாருங்கள், றெனிநிமல்..ஈழத்தமிழரே!

pradeepkt
10-04-2006, 05:07 AM
வணக்கம் நிமல் (அப்படி அழைக்கலாம்தானே).
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

gragavan
10-04-2006, 05:45 AM
வாங்க நிமல். நல்லாருக்கீங்களா? மன்றத்துக்கு உங்களை வருக வருக என்று வரவேற்கிறோம்.

Mano.G.
10-04-2006, 10:05 AM
முதல் பதிப்பே தமிழில் வாழ்த்துக்கள்

உங்களை இங்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி
இங்கு அனைவரும் தமிழால் ஒன்றுபட்ட முகமறியா
குடும்ப உறுப்பினர்கள், பாசபிணைப்புகளால்
தினமும் இங்கு வந்து மன்றத்தை பார்த்து
செல்வதில் ஒரு மகிழ்ச்சி, நீங்களும்
அத்தகைய உறவுகளில் திலைக்க வாழ்த்துக்கள்

மனோ.ஜி

பரஞ்சோதி
10-04-2006, 12:35 PM
வாங்க வாங்க றெனிநிமல்

என் மருமகன் நலம் தானே. பார்த்து பேசி பல மாதங்கள் ஆகிவிட்டது தானே.

அன்புடன்
பரஞ்சோதி

மயூ
10-04-2006, 12:38 PM
மீண்டும் ஒரு ஈழ தமிழரை சந்த்திப்பதில் மகிழ்ச்சி. வருக வருக......

பாரதி
10-04-2006, 02:14 PM
வாருங்கள் நண்பரே... உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்கிறேன்.

றெனிநிமல்
10-04-2006, 04:55 PM
என்னை வரவேற்ற அன்பு உள்ளங்கள் தேனிசை, பிரதீப்,கிரகவன்,மனோ,பரம்ஸ்,மயூரேசன்,பாரதி ஆகியோருக்கு எனது நன்றிகள்.

என்னை றெனி என்று அழைக்கலாம்.

வணக்கம் பரஞ்சோதி நலமா? சக்தி நலமா? இங்கே கெவின் நலமே!

அறிஞர்
12-04-2006, 02:22 PM
வாருங்கள்... றெனி... மகன் கெவின் நலம் என்பதில் சந்தோசம்...

பல படைப்புக்களை கொடுத்து அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்துங்கள்...

றெனிநிமல்
12-04-2006, 03:32 PM
நன்றி அறிஞர்
உங்கள் வாக்கு நிறைவேறட்டும்!

பரஞ்சோதி
06-06-2006, 01:41 PM
றெனி,

உங்க அவதாரில் இருப்பவர் கெவினா?

சக்தி நலம், பயங்கரமான வால் பொண்ணாக இருக்கிறார். தட்டச்சு தெரிந்தால் இங்கே வந்துடுவார்.

அறிஞர்
06-06-2006, 01:43 PM
றெனி,

உங்க அவதாரில் இருப்பவர் கெவினா?

சக்தி நலம், பயங்கரமான வால் பொண்ணாக இருக்கிறார். தட்டச்சு தெரிந்தால் இங்கே வந்துடுவார்.கற்றுக்கொடுக்கவேண்டியது தானே..... சக்தியின் புது போட்டோவை அனுப்பிவையுங்கள்

பரஞ்சோதி
06-06-2006, 01:49 PM
கற்றுக்கொடுக்கவேண்டியது தானே..... சக்தியின் புது போட்டோவை அனுப்பிவையுங்கள்

ஏற்கனவே கணினி முன்னால் உட்கார விடுவதில்லை, மேலே ஏறி, எலியாரின் வாலை பிடித்து கடித்து விடுகிறார். :D

பரஞ்சோதி
06-06-2006, 01:50 PM
கற்றுக்கொடுக்கவேண்டியது தானே..... சக்தியின் புது போட்டோவை அனுப்பிவையுங்கள்

கட்டாயம், முடிந்தால் இன்றே அனுப்பி வைக்கிறேன் நண்பரே!

அறிஞர்
06-06-2006, 01:58 PM
ஏற்கனவே கணினி முன்னால் உட்கார விடுவதில்லை, மேலே ஏறி, எலியாரின் வாலை பிடித்து கடித்து விடுகிறார். :Dஇன்னும் கடிக்கிறாரா... என் சின்னவனின்...லொள்ளு அதற்கு மேல்... :D :D :D

இளசு
20-06-2006, 10:55 PM
வருக றெனி அவர்களே..

அன்பு பரம்ஸின் நண்பரா? இனி மன்றம் முழுக்க உங்கள் சொந்தம்தான்..

அன்பான வரவேற்புகள்..

றெனிநிமல்
21-06-2006, 07:46 PM
றெனி,

உங்க அவதாரில் இருப்பவர் கெவினா?

சக்தி நலம், பயங்கரமான வால் பொண்ணாக இருக்கிறார். தட்டச்சு தெரிந்தால் இங்கே வந்துடுவார்.
ஆம் அங்கே இருப்பவர் கெவின் தான்.
எப்படி இருக்கின்றான்?

றெனிநிமல்
21-06-2006, 07:48 PM
உங்கள் வரவேற்புக்கு நன்றி இளசு.