PDA

View Full Version : சுடுகாடு



ப்ரியன்
05-04-2006, 11:32 AM
பகலிலும் அலறும் ஆந்தை
கள்ளிச் செடி
காய்ந்த சருகு - அதில்
சரசரவென ஓடி ஒளியும் பாம்பு
மண்ணெண்ய் வாசத்துடன்
குபுகுபுவென எரியும் சவத்தீ!
சுழன்று அடிக்கும் காற்றில்
கனன்று பறக்கும் சாம்பல்
கால் இடறும் எலும்புகள்,
அடையாளங்களோடு
பிணம் காத்து
உக்காந்து இருக்கு சுடுகாடு
ஊருக்கு ஒதுக்குப்புறமாய்!

- ப்ரியன்.

பென்ஸ்
05-04-2006, 11:46 AM
ப்ரியன்...
சில நேரங்களில் மனம் கடிவாளம் போட்டட குதிரையாய் ஒரே திசையில் செல்லும், வழியில் உள்ள இன்ப துன்ப அழகுகளை எல்லாம் காணமுடிவதில்லை...
கவிதையை வாசிக்கும் போது அதே நிலை... நீங்கள் சுடுகாடு பற்றி மட்டும் தான் சொல்ல வந்தீர்களா????

ப்ரியன்
05-04-2006, 11:50 AM
நீங்கள் சுடுகாடு பற்றி மட்டும் தான் சொல்ல வந்தீர்களா????

ஆமாம் பெஞ்சமின் ஆனால் சுடுகாட்டை மட்டுமல்ல "மரணத்தைப் பற்றியும்"

* பிணம் காத்து * இந்த வரிகளுக்கு இரு பொருள் கொள்ளலாம் என நினைத்து எழுதினேன்

காத்து - காவலாக

காத்து - காத்திருக்கு காவலாக

பிணம் காத்து - பிணத்துக்காக காத்து - புதுப்புது பிணத்துக்காக காத்து

இப்போ படிச்சுப் பாருங்க

தாமரை
05-04-2006, 12:16 PM
பகலிலும் அலறும் ஆந்தை
கள்ளிச் செடி
காய்ந்த சருகு - அதில்
சரசரவென ஓடி ஒளியும் பாம்பு
மண்ணெண்ய் வாசத்துடன்
குபுகுபுவென எரியும் சவத்தீ!
சுழன்று அடிக்கும் காற்றில்
கனன்று பறக்கும் சாம்பல்
கால் இடறும் எலும்புகள்,
அடையாளங்களோடு
பிணம் காத்து
உக்காந்து இருக்கு சுடுகாடு
ஊருக்கு ஒதுக்குப்புறமாய்!

- ப்ரியன்.

எங்கள் ஊர் சுடுகாட்டில்
கள்ளிச் செடியில்லை...
காய்ந்த சருகுகள்
இல்லவே இல்லை..

மொட்டை வெய்யிலில்
பாலையாய்..
அங்கும் இங்கும்
சில
பார்த்தீனியப் பரவல்கள்...

விஷச் சாரயம் அருந்தி
உயிர் தொலைத்தவன்
சமாதியருகே
கள்ளச் சாராயம்
காய்ச்சப்படுகிறது

எரிந்து மிஞ்சிய
எலும்புக் கூடாய்
சுடுகாட்டுக் கூரை...
(உபயம் : செல்வகணபதி )

பிணத்தை எரிக்கத் தேவை
2 குண்டு விறகு
2 லிட்டர் மண்ணெண்ணெய்
200 ரூபாய் மாமூல்
2 பாட்டில் கள்ளச் சாராயம்


காலில் இடறும்
கபால எலும்புகளில்
மிச்சமிருக்கும் முடி
சில நேரம்


சமரசம் உலாவும் இடமாம்...
யார் சொன்னது
இங்கு கூட
ஏழைப் பிணங்கள்
புதைக்கப்பட்ட சில வருடங்களில்
எலும்பு எச்சங்கள்
தோண்டி எறியப்பட்டு
புதுப் பிணத்திற்கு
பட்டா போடப்படுகிறது..

கான்கிரீட் சமாதியின் கீழோ
பணக்கார பிணத்தின்
ஆக்ரமிப்பு!!!

சுடுகாடு முதலாளித்துவம்
செத்துக் கொண்டிருக்கிறது...
ஏனென்றால்
மின்சார எரிப்பறைகள்
கான்கிரீட் சுவர்களுக்குள்
பொதுவுடமை வளர்க்கிறது...

gans5001
06-04-2006, 11:31 AM
â ɢ
Ţ ɡ Ţ (narrative) ʸ. θ 츢. ȡ ġ