PDA

View Full Version : புல்லாங்குழல்



ப்ரியன்
04-04-2006, 10:28 AM
வண்டொன்று
குறும்பாய்
மூங்கிலில் துளையிட்டபோது
அறிந்திருக்கவில்லை;
தான்,
உலகின் முதல் புல்லாங்குழலின்
உருவாக்கத்திலிருப்பதை!

- ப்ரியன்.

kavitha
04-04-2006, 10:56 AM
நாம் வைத்த பெயர் புல்லாங்குழல்.
கண்டுபிடிக்கப்படாமல் கண்டுபிடிக்கப்பட்ட ரகசியங்கள் உலகில் சொல்லப்படும்போது அதிசயமானவை.
படிந்து படிந்து கிடக்கும் பாசிக்குத் தெரியுமா அது பவழப்பாறையாகப்போவது?
கவிதை நன்று.

பென்ஸ்
04-04-2006, 11:27 AM
ஆருமையான கவிதை ப்ரியன்...
காதல், முயர்ச்சி என்று எங்கு வேண்டுமென்றாலும் பொருத்தி பார்க்கும் ஒரு அருமையான கவிதை...

ப்ரியன்
05-04-2006, 11:36 AM
நன்றி கவிதா


படிந்து படிந்து கிடக்கும் பாசிக்குத் தெரியுமா அது பவழப்பாறையாகப்போவது?


இந்த கருத்து அழகு அதே சமயம் பொறுமையை முன் நிறுத்தும் அழகான கருத்து

gans5001
06-04-2006, 11:36 AM
Ģ ʨ ȨĨ Ţ ξ Ţ¢ .

Ȣ Ƹ Ţ.

பென்ஸ்
06-04-2006, 11:50 AM
வலிதாங்கிய
மூங்கிலின் அழுகை
கவிதையாய் ஒலிக்கின்றதோ!!!

தாமரை
07-04-2006, 04:54 AM
மலரில்
தேனுண்ட வண்டு
துளைத்ததால்தான்
குழலும்
தேனிசையோ?