PDA

View Full Version : மீண்டும் பெங்களுரில் ஒரு சந்திப்பு.. 03பென்ஸ்
04-04-2006, 08:16 AM
நானும்தான் சரவணன் பெங்களுர் சந்திப்பை பற்றி ஒரு பதிவை போடுவார்.. தலைப்பு,

தாமரை ஏமாந்தது எப்படி???

ராகவனின் குஷியின் ரகசியம்..??

பென்ஸ் லேன்ட் மார்க் வர மறுத்தது ஏன்??

மூக்கு கண்ணாடியும் அதன் பயன்களும்... சரவணனின் முழு நீள கட்டுரை...

என்ற தலைப்பில் எல்லாம் பதிவுகள் வரும் என்று எதிர் பார்த்து... கடுப்பாகி... நானே இந்த திரியை துவங்குகிறேன்.....

ராகவா... அன்னைக்கு இருந்த அதே பாமில் இன்னைகும் பதிவுகளை போடுங்க....

செல்வன், நீங்கள் வாங்கி கட்டியதையும் சொல்லலாமே.. அதுவும் நீங்களே...

சரவணா, பேசுப்பா... பேசு...

gragavan
04-04-2006, 08:44 AM
ஆகா தொடங்கீட்டீரா....பிரமாதம்....இன்னைக்கு வேல நெறைய இருக்கு...ராத்திரி வீட்டுக்குப் போயி கொஞ்ச விவரங்கள எடுத்து விடுறேன்.... குறிப்பா தாமரை ஏமாந்தது எப்படீன்னு....அதுக்குள்ள தாமரை குறுக்க புகுந்து ஏமாறலைன்னு சொன்னாலும் சொல்லலாம். சொல்லாம தனியா உக்காந்து அதப் பத்தியே யோசிச்சிக்கிட்டு இருந்தாலும் இருக்கலாம்.

மதி
04-04-2006, 02:46 PM
அட சீக்கிரம் சொல்லுங்கப்பா...

gragavan
05-04-2006, 05:11 AM
அதாகப்பட்டது...முதல்ல ஃபோரத்துக்குப் போனது நானு. அப்புறம் நாலஞ்சு நிமிசத்துல வந்தது பெஞ்சு. அடுத்து ரெண்டு மூனு நிமிசத்துல வந்தது சரவணன். மூனு பேரும் தாமர எப்ப வருவாருன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தோம்.

பெங்சு சொன்னாரு அவரு ஒரு அஞ்சு நிமிசத்துல வந்துருவாருன்னு....சரவணன் சொன்னாரு அவரு வழியில எங்கேயாவது மாட்டிக்கிட்டு இருப்பாருன்னு...நாஞ் சொன்னேன்....அவரு வீட்டுலதான் இருப்பாரு. நாம எல்லாரும் வந்துட்டமான்னு தெரிஞ்சிக்கிட்டு அப்புறமா பொறப்படுவாருன்னு. ஏன்னா ஏப்ரல் ஒன்னாந்தேதி பாத்தீகளா....அவர எங்க ஏமாத்தீருவோமோஓஓஓன்னு பயம்.

சரவணன் லேசா அலுப்பாயிருக்குன்னு சொல்லவும் காப்பி குடிக்கலாமுன்னு கெபே காப்பி டேய்க்குப் போனோம். மரியாத இல்லாம டேன்னு பேரு வெச்சதோட விட்டானா...உக்காரத்துக்கு எடங் கூட இல்ல. ரொம்பப் பேரு நின்னுக்கிட்டு இருந்தாங்க.

அந்நேரம் வந்ததய்யா போனு. தாமரகிட்ட இருந்து எனக்கு. ஒடனே நாம் பேசாம பெஞ்சுகிட்ட குடுத்து நீங்களே பேசுங்க..ஆனா அவரு நான்னு நெனைக்கனுமுன்னு சொன்னேன். ஒடனே பெஞ்சு ஃபோன வாங்கீட்டு லேசா இருமுனாரு...காரியங் கெட்டதேன்னு நெனச்சேன். ஆனா பாருங்க...நல்லாவே பேசிச் சமாளிச்சாரு. தாமரையுங் கண்டுபிடிக்கல. தாமர கெளம்பீட்டாருன்னு வெவரம் தெரிஞ்சதும் நாங்க கல்மனே காப்பிக் கடைக்குப் போயிட்டோம்....அங்க என்ன நடந்துன்னு பெஞ்சோ சரவணனோ சொல்வாங்க....

அங்க போயி ஆளுக்கொரு காப்பி வாங்கிக் குடிச்சி முடிச்சி பில்லுக்குப் பணமும் குடுத்துட்டு வெளிய வந்து கொஞ்ச நேரம் நின்னுட்டு லேண்டு மார்க்குக் கடைக்குள்ளயும் போயாச்சு...தாமர வரலை. அங்கருக்கிற சீடிக்கள ஒன்னொன்னா பொரட்டிப் பாக்குறப்போ மறுபடியும் தாமரையோட போன். வந்துட்டாராம். வந்துட்டாராம்.

ஆனா ஒன்னு கடைசி வரைக்கும் போன்ல பேசுனது யாருன்னு சொல்லலை. நடுவுல சரவணன் லேசா ஒளரப் பாத்தாலும் அடக்கி வெச்சிட்டோம். இதானய்யா தாமர ஏமாந்த கதை.

மதி
05-04-2006, 06:11 AM
ம்ம்ம்...அப்புறம்..

மதி
05-04-2006, 06:11 AM
தாமரை..லேட்டா வந்ததும் தான் வந்தாரு..செல்போன்ல சார்ஜ் இல்லாமயா வரணும்...?!

பென்ஸ்
05-04-2006, 06:12 AM
ராகவன்... தாமரை இப்போ எப்படி சமாளிக்கிறார் பாருங்க...
"எனக்கு அப்பவே தெரியுமே, அது பென்ஸுதான்னு..???"
"நான் , பென்ஸுதான் பேசுறான்னு நம்புற மாதிரி எமாத்தினேன்!!" என்று ...என்ன எல்லாம் சொல்ல போறாரோ???

பென்ஸ்
05-04-2006, 06:14 AM
செல் போனில் சார்ஜ் இல்லை என்றால் ... கால் வராது...
சத்தம் வராது என்று எனக்கு அன்றுதான்யா தெரியும்.... ஒரு பெரிய மனுஷன் அப்படி சொன்னாருன்னு நீங்களும் நம்பிடேயேலா???

மதி
05-04-2006, 06:24 AM
செல் போனில் சார்ஜ் இல்லை என்றால் ... கால் வராது...
சத்தம் வராது என்று எனக்கு அன்றுதான்யா தெரியும்.... ஒரு பெரிய மனுஷன் அப்படி சொன்னாருன்னு நீங்களும் நம்பிடேயேலா???
நான் சொன்னது பேட்டரி சார்ஜ்..

gragavan
05-04-2006, 06:28 AM
ராகவன்... தாமரை இப்போ எப்படி சமாளிக்கிறார் பாருங்க...
"எனக்கு அப்பவே தெரியுமே, அது பென்ஸுதான்னு..???"
"நான் , பென்ஸுதான் பேசுறான்னு நம்புற மாதிரி எமாத்தினேன்!!" என்று ...என்ன எல்லாம் சொல்ல போறாரோ???இப்படியெல்லாம் சொல்லிச் சமாளிக்கிறது இருக்கட்டும். ஒன்னுமே சொல்லாம அமுக்கமாச் சமாளிக்கப் பாத்தாலும் பாப்பாரு. :D

pradeepkt
05-04-2006, 06:40 AM
ஹா ஹா ஹா...
இத்தனை நடந்துருக்கா அன்னைக்கு... :D :D
அடடா, நாந்தேன் மிஸ் பண்ணிப்புட்டேன்.

மதி
07-04-2006, 06:58 AM
என்னங்க சந்திப்பு நடந்து ஒரு வாரமாகப்போகுது..
யாரும் அத பத்தி எழுதல..அவ்வளவு வேலைப்பளுவோ..??

தாமரை
07-04-2006, 12:01 PM
மே மாத இரண்டாம் வாரம் "TEAM" நிறுவனத்தின் தலைவர் கார்த்திகேயன் ஈஸ்வரமூர்த்தி பெங்களூர் வர இருக்கிறார். அவருடனான ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யலாமென இருக்கிறேன். எனவே அந்த வாரம் அவர் வரும் நாள் தெரிந்தவுடன் சொல்கிறேன். அவசர மீட்டிங் தான். அவரின் அனுபவங்கள் மிக மிக உதவியாக இருக்கும்.

pradeepkt
07-04-2006, 01:56 PM
மக்களே,
அடுத்த வாரம் தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி மூன்று நாட்கள் சேர்ந்தாற்போல் விடுமுறை வருகிறது.
எனவே வெள்ளி சனி ஞாயிறு பெங்களூர் வருகிறேன் - இந்தத் தடவை ஏப்ரல் ஒண்ணு இல்லைங்கோவ், நிஜமாகவே வருகிறேன்.
மூன்று நாட்களில் ஏதேனும் சந்திப்பு ஏற்பாடு செய்யலாமா?

gragavan
10-04-2006, 06:39 AM
ஞாயிற்றுக் கிழமை வைத்துக் கொள்ளலாம் பிரதீப். தமிழ்ப் புத்தாண்டு அன்று எனக்கு விடுப்பு இல்லை. சனிக்கிழமை வேலை இருக்கிறது. ஆகையால் ஞாயிற்றுக்கிழமை வைத்துக் கொள்ளலாம்.

மதி
10-04-2006, 07:22 AM
அதெல்லாம் இருக்கட்டும்..
மொதல்ல..போன வாரம் நடந்த சந்திப்பை பற்றி..எழுதுங்கப்பா..

gragavan
10-04-2006, 08:51 AM
நான் எழுத வேண்டிய எழுதீட்டேன். மௌனமொழித் தாமரையும் சுறுசுறு சரவணனும்தான் மிச்சம்.

தாமரை
10-04-2006, 08:54 AM
ஞாயிற்றுக் கிழமை வைத்துக் கொள்ளலாம் பிரதீப். தமிழ்ப் புத்தாண்டு அன்று எனக்கு விடுப்பு இல்லை. சனிக்கிழமை வேலை இருக்கிறது. ஆகையால் ஞாயிற்றுக்கிழமை வைத்துக் கொள்ளலாம்.

நான் இந்தவாரம் ஈரோடு செல்ல இருக்கிறேன். சந்திப்பு சீரோடு நடக்கட்டும்.

gragavan
10-04-2006, 08:57 AM
ஆகா! என்ன பெஞ்சமின் இது....தாமரை பயந்து ஓடுறாரா....வேண்டாம் தாமரை....ஈரோடு போயி திருச்சி வரு :-)

பென்ஸ்
10-04-2006, 09:39 AM
ராகவன்... தாமரை இப்போ கொஞ்சம் தெளிவா இருக்காரு.... அதுதான் எஸ்கேப் ஆகிறார்...

பிரதிப்பு.... எந்த தேதி என்று சொன்னால் வசதியாக இருக்கும்ப.... இல்லாட்டாலும் வருவேன், ஆனா ஊருக்கு போயிர கூடது இல்லையா, அதுதான்...

தாமரை
10-04-2006, 09:40 AM
ஆகா! என்ன பெஞ்சமின் இது....தாமரை பயந்து ஓடுறாரா....வேண்டாம் தாமரை....ஈரோடு போயி திருச்சி வரு :-)
திருச்சி... ஏப்ரல் 29,30, மே 1.

pradeepkt
10-04-2006, 01:40 PM
திருச்சி... ஏப்ரல் 29,30, மே 1.
என்ன ஆச்சரியம்,
அந்தத் தேதிகளில் நானும் திருச்சியில் இருப்பேன்... :D

தாமரை
11-04-2006, 07:10 AM
என்ன ஆச்சரியம்,
அந்தத் தேதிகளில் நானும் திருச்சியில் இருப்பேன்... :D
"Ensemble 89"

மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் படித்த முதல் மாணவர்களாகிய
1989 ல் பட்டம் பெற்ற நாங்கள் அனைவரும் (170) பேர் ஏப்ரல் 30 ஆம் தேதி எங்கள் கல்லூரியில் கூடிக் களிக்க இருக்கிறோம். எங்களுடைய முன்னாள் முதல்வர் சண்முகநாதன் அவர்களும் எங்களுடன் இணைந்து நினைவுகளை அசைபோட்டு அந்த நாளைக் கொண்டாட இருக்கிறோம்.

அதே சமயத்தில் 1989 பேட்ச் மாணவர்கள் பங்கேற்கும் ஒரு அறக்கட்டளையை உருவாக்க இருக்கிறோம்.

பயண விவரங்கள் திட்ட விவரங்கள் மற்றும் நிழற்படங்களை (கலர்)
மன்றத்துடன் பகிர்ந்து கொள்வேன்..

மதி
11-04-2006, 06:35 PM
17 வருடங்கள் கழித்து..மீண்டும் கல்லூரி நட்பினை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியான இனிமையான நிகழ்வு..
தங்கள் சந்திப்பு இனிதாய் அமைய..வாழ்த்துக்கள்..

gragavan
12-04-2006, 05:30 AM
ஆகா பழைய நட்புகளை மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கும் என நினைக்கிறேன். எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

பிரதீப், தாமரை....திருச்சியில் ஒரு சந்திப்புன்னு எழுத வேண்டியதுதான...ஏற்கனவே பஸ்டாண்டு பக்கத்துல ஒரு சந்திப்பு (ஜங்சன்) இருக்குன்னு சொல்லாதீங்க.... ஹி ஹி

தாமரை
12-04-2006, 06:26 AM
ஆகா பழைய நட்புகளை மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கும் என நினைக்கிறேன். எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

பிரதீப், தாமரை....திருச்சியில் ஒரு சந்திப்புன்னு எழுத வேண்டியதுதான...ஏற்கனவே பஸ்டாண்டு பக்கத்துல ஒரு சந்திப்பு (ஜங்சன்) இருக்குன்னு சொல்லாதீங்க.... ஹி ஹி
நாங்க இரண்டு பேர் சந்தித்தால் அது சந்"திக் திக்"பு ஆ இருக்கும்.. ஹி ஹி..

pradeepkt
12-04-2006, 07:42 AM
கண்டிப்பாக முடிந்தால் சந்தித்து விடுவோம்...
ஆனால் நம்மைப் போலப் பல ஊர்களுக்குப் பிழைக்கப் போனவர்கள் சொந்த ஊருக்குச் செல்வதே பல வேலைகளை வைத்துக் கொண்டுதான் :). நேரம் கிடைத்தால் தாமரையைச் சந்தித்து ஒரு பெரிய பாராயணம் எழுதி விடுகிறேன்.

gragavan
12-04-2006, 09:06 AM
கண்டிப்பாக முடிந்தால் சந்தித்து விடுவோம்...
ஆனால் நம்மைப் போலப் பல ஊர்களுக்குப் பிழைக்கப் போனவர்கள் சொந்த ஊருக்குச் செல்வதே பல வேலைகளை வைத்துக் கொண்டுதான் :). நேரம் கிடைத்தால் தாமரையைச் சந்தித்து ஒரு பெரிய பாராயணம் எழுதி விடுகிறேன்.எழுதுங்க...ஆனா அது எல்லாரும் பாரா-யணமாக இல்லாமல் பார்க்கும்யணமாக இருக்க எனது வாழ்த்துகள்.:D :D :D :D

தாமரை
12-04-2006, 10:21 AM
எழுதுங்க...ஆனா அது எல்லாரும் பாரா-யணமாக இல்லாமல் பார்க்கும்யணமாக இருக்க எனது வாழ்த்துகள்.:D :D :D :D
பாராயணம் தான்.. பார்த்தால் ரணம்தான்

gragavan
12-04-2006, 11:07 AM
பாராயணம் தான்.. பார்த்தால் ரணம்தான்நீங்க பாத்தாதான....அதுதான் ஊருக்கே..ம்ஹூம் ஒலகத்துக்கே தெரிஞ்சதுதான.....

kavitha
12-04-2006, 12:15 PM
வாழ்த்துக்கள் மக்கா... சந்திப்புகளை முடிந்தால் படத்தோட போடுங்க.

அறிஞர்
12-04-2006, 03:31 PM
வாழ்த்துக்கள் மக்கா... சந்திப்புகளை முடிந்தால் படத்தோட போடுங்க. ஏன் எல்லாரும் மூங்சியையும் பார்க்க ஆவலா......

அறிஞர்
12-04-2006, 03:32 PM
கலக்கல சந்திப்புக்கள் தொடரட்டும்...

கல்லூரி சந்திப்பும் நன்முறையில் அமைய வாழ்த்துக்கள்... தாமரை....