PDA

View Full Version : மாற்றம்



ப்ரியன்
30-03-2006, 01:52 PM
வரைகின்ற பொழுதுகளில்
மீறி சிந்திவிடுகின்ற
ஒரு வர்ணத்துளியாகத்தான்
வந்தாய் நீ
என் வாழ்வில்!

விட்டில் பூச்சியினுடையதாய்
இருந்த என் வாழ்க்கை
வண்ணத்துப் பூச்சியினுடையதாய்
மாறியது என்னவோ உண்மை!

- ப்ரியன்.

அல்லிராணி
03-04-2006, 05:41 AM
வரைகின்ற பொழுதுகளில்
மீறி சிந்திவிடுகின்ற
ஒரு வர்ணத்துளியாகத்தான்
வந்தாய் நீ
என் வாழ்வில்!

விட்டில் பூச்சியினுடையதாய்
இருந்த என் வாழ்க்கை
வண்ணத்துப் பூச்சியினுடையதாய்
மாறியது என்னவோ உண்மை!

- ப்ரியன்.

வர்ணத் துளியில்
இறகை நனைத்து
பட்டுப் பூச்சியான
விட்டில் பூச்சியே...
.....
வெளிச்சத்தை விட்டு
பூக்களைத் தேடுகிறாயா

பூக்களின் இதழ்களில்
தேனைத் தேடுகிறாயா...

தேனின் இனிமையில்
உன்னை மறக்கிறாயா...

மாறியது
வண்ணம் மட்டுமா
இல்லை
எண்ணமுமா?
..




.....

பென்ஸ்
03-04-2006, 09:01 AM
நல்ல கவிதை ப்ரியன்...

சில சமயங்களில் ஒரு கவிதை எழுத பட்டதை விட அதிகமாகவே புரிந்து கொள்ளபடும்...
ஆனால் இந்த கவிதை புரிந்துகொள்ளுதலையும் மீறியதோ என்று மனதில் கேள்விகள் எழும்பொழுதில்...
பதில் வேண்டாம், புரிந்தவையே சுகமானவை என்று சமாதான படுத்தி கொள்ளும் மனம்....

வாழ்வை வரைகின்ற பொழுதுகளில் மீறி விளுகின்ற துளிகள் கண்டு ஒதுங்கும் மனம்...
இவளை கண்டதும் ஒதுங்கியதாலோ... இந்த வரிகள்???

ஒதுங்க நினைத்தும் விழுந்த ஒரு துளியால், பல நிறம் கொண்டு...
வண்ணத்து பூச்சியாய்... ஆச்சரியம் !!!!
இது தான் காதல் கொடுக்கும் வர்ணங்கள்....

மடிவது ஏதோ நாளை தான், நாளை விடியும் முன் இந்த பூவுலகில் ஒரு பூங்காற்றாய்...
சிறகை விரித்து....

அருமையான கவிதை தந்த உங்களுக்கு பாராட்டுகள்....

ஆனால் ப்ரியன் பல நேரங்களில் வண்ணத்து பூச்சிகளும் விட்டில் பூச்சிகளாய், பூக்கள்தாம் "பிட்செர்" பூக்களாய்...

ஆங்கில GRUNGE குளு NIRVANA வின் ஒரு பாடலில் "Meat-eating orchids forgive no one just yet" என்று வரும்... இப்படிதானே பலரும்

ஏன் அப்படி... ???? தேன் கொடுக்கும் பூக்கள் மத்தியில் , உயிர் எடுக்கும் இவர்கள் யார்???

பென்ஸ்
03-04-2006, 09:08 AM
அல்லிராணி....

மாற்றம் ஒன்றே நிலையாய்... (நன்றி: இளசு)

விளக்கை தேடிய விட்டில் பூச்சிகள், வண்ணத்து பூச்சியானால் மட்டும் அன்று,
தன்னிலையில் இருந்தாலும்... "இதை விட சிறந்த மற்றொன்றை" காணும் பொது ...

மாற்றம் ஒன்றே நிலையாய்...

தாமரை
03-04-2006, 09:47 AM
வர்ணத் துளியில்
இறகை நனைத்து
பட்டுப் பூச்சியான
விட்டில் பூச்சியே...
.....
வெளிச்சத்தை விட்டு
பூக்களைத் தேடுகிறாயா

பூக்களின் இதழ்களில்
தேனைத் தேடுகிறாயா...

தேனின் இனிமையில்
உன்னை மறக்கிறாயா...

மாறியது
வண்ணம் மட்டுமா
இல்லை
எண்ணமுமா?
..




.....

நேற்றை விட்டு
நாளை தேடி
இன்றைய பயணம்..

மலரைத் தேடினேன்...
மணம்.. வண்ணம்
இவை மட்டும் போதவில்லை
ஒளியும் தான்...

தேனைத் தேடினேன்
இனிமை மட்டும் போதவில்லை
கதகதப்பும் தான்

நேற்றின் நினைவுகள்
ஆழ்மனதில்
நாளைய கனவுகளால்
அழுத்தப்பட்டு

இன்றைய நிஜங்கள்
வெளியே!!!
காத்துக் கொண்டு...

தாமரை
03-04-2006, 09:52 AM
அல்லிராணி....

மாற்றம் ஒன்றே நிலையாய்... (நன்றி: இளசு)

விளக்கை தேடிய விட்டில் பூச்சிகள், வண்ணத்து பூச்சியானால் மட்டும் அன்று,
தன்னிலையில் இருந்தாலும்... "இதை விட சிறந்த மற்றொன்றை" காணும் பொது ...

மாற்றம் ஒன்றே நிலையாய்...

மாறாத மாற்றத்தில் மாற்றம் மாறாதா
மாற்றத்தின் மாற்றத்தில் மாற்றம்

தெரு வள்ளுவர்...

பென்ஸ்
03-04-2006, 10:05 AM
மாறாத மாற்றத்தில் மாற்றம் மாறாதா
மாற்றத்தின் மாற்றத்தில் மாற்றம்

சிரிக்கவும் செய்தேன்...
சிந்திக்கவும் வைத்தது...

gans5001
03-04-2006, 10:35 AM
째 ͨ ξ

தாமரை
03-04-2006, 10:37 AM
ஏன் அப்படி... ???? தேன் கொடுக்கும் பூக்கள் மத்தியில் , உயிர் எடுக்கும் இவர்கள் யார்???
என்னைப் பத்தி தானே சொல்றீங்க...:rolleyes: :rolleyes: :rolleyes:

பென்ஸ்
03-04-2006, 10:43 AM
째 ͨ ξ
காதல் கிறுக்கல்களுக்கே சுவை கூடுதல்தான்....

கன்ஸ்.... யூனிகோடில் பதிக்கலாமே...

பென்ஸ்
03-04-2006, 10:45 AM
என்னைப் பத்தி தானே சொல்றீங்க...:rolleyes: :rolleyes: :rolleyes:

உங்களுக்கு அப்படி ஒரு நினைப்பு வேற இருக்க... :rolleyes: :rolleyes: :rolleyes:

1-ம் தேதியா ராகவனுகிட்ட வாங்கி கட்டினது போதாதா????:D :D :D :D

தாமரை
03-04-2006, 10:55 AM
உங்களுக்கு அப்படி ஒரு நினைப்பு வேற இருக்க... :rolleyes: :rolleyes: :rolleyes:

1-ம் தேதியா ராகவனுகிட்ட வாங்கி கட்டினது போதாதா????:D :D :D :D
ஏப்ர ஃபூல் னா.. ஒண்ணாம் தேதியே பதியனும்.. இப்ப இல்ல...