PDA

View Full Version : வேர்வைக் கசகசப்பில் ஒரு பயணக் கட்டுரை



gragavan
29-03-2006, 04:37 PM
வேர்வைக் கசகசப்பில் ஒரு பயணக் கட்டுரை

1. நிங்ஙள் எவிடே போகுன்னு

"சரி. சரி. அவரு ஸ்டேசனுக்கு வந்துருவாரா....அப்பச் சரி.....ஓட்டலுக்கு அவரே கூட்டீட்டுப் போயிருவாரா....சரி. சரி. அப்ப...அங்க போயிட்டு ஒங்களுக்குப் ஃபோன் போடுறேன். சரிதானாய்யா! சரி. பாக்கலாம்." நண்பர் பெஞ்சமின் கிட்டதான் பேசுனது. நாகர்கோயில் போய் எறங்குனதும் கார் ஏற்பாடு செஞ்சி தங்க ஓட்டலும் ஏற்பாடு செஞ்சிருக்காரே.

நாங்க நண்பர்கள் ஆறு பேரு. தமிழ்நாட்டுத் தமிழர் ரெண்டு பேரு. பெங்களூர்த் தமிழன் ஒருத்தன். கன்னட கவுடா ஒருத்தன். பெங்களூர்த் தெலுங்கன் ஒருத்தன். ஒரிசாக்காரன் ஒருத்தன்னு ஆறு பேர் மொத்தம். ஆனை, குதிரை, பூனை, சிங்கம், புலி, ஆடு ஏல்லாத்தையும் ஒரு தேருல கட்டுன மாதிரி பயணத் திட்டம்.

போன வருசம் மூனு பேரு சேந்து தஞ்சைப் பக்கமா போய்ட்டு வந்தோம். அந்த மூனு இந்த வருசம் ஆறாகிப் பயணமும் தெக்க திரும்புச்சு. வெள்ளி, சனி, ஞாயிறுன்னு மூனு நாளுக்கும் பயணத் திட்டம். வெள்ளிக்கெழம நாகர்கோயில். சனிக்கிழமை திருநெல்வேலி, சங்கரங்கோயில், கழுகுமலை, கோயில்பட்டி. ஞாயிறு திருச்செந்தூர்னு பெரிய திட்டமே போட்டாச்சு. அதுக்கு ஏத்த மாதிரி நாகர்கோயில் ஏற்பாடை நண்பர் பெஞ்சமின் கிட்டயும் கோயில்பட்டி ஏற்பாட்டை என்னுடைய உறவினர் கிட்டயும் விட்டாச்சு.

திட்டப்படி காலைல பதினோரு மணிக்கு நாகர்கோயிலுக்கு வண்டி சேரனும். நேரா ஓட்டலுக்குப் போயி குளிச்சிட்டு பத்மநாபபுரம் அரண்மனை, திற்பரப்பு அருவி, குமாரகோயில், சுசீந்திரமுன்னு திட்டம். அருவியில குளிக்க வேண்டிய துணிமணிகளையும் எடுத்து வெச்சுக்கிட்டாச்சு.

கன்னட கவுடா மொதல்ல வர்ரதாவே இல்லை. பெங்களூர் மராட்டி ஒருத்தன் வர்ரதாத்தான் இருந்துச்சு. ஆனா அவன் கடைசி நேரத்துல கால வாரி விட்டுட்டான். அதுனால அவனுக்கு மாத்தா இந்த பெங்களூர் கவுடா உள்ள வந்தான். ஆறு பேர் கணக்கு சரியாப் போச்சு.

இதுல நான் திருச்செந்தூர்ல மொட்ட போடப் போறதா இன்னொரு திட்டம். கர்நாடகாவுல இருக்குற காட்டி சுப்பிரமணியாவுல போட வேண்டியது. தள்ளிக்கிட்டே போனதால....திருச்செந்தூருல போடுறதா முடிவு செஞ்சாச்சு. அதுனால என்ன...அடுத்த வருசம் காட்டி சுப்பிரமணியாவுல போட்டாப் போச்சு.
நாங்க ஆறு பேரும் ஆறு வெவ்வேறு ஆபீசுல வேல பாக்குறோம். அத்தன பேரும் வீட்டுக்குப் போயி கெளம்பி ஸ்டேஷனுக்கு வந்துரனும்னு திட்டம். அதே போல சரியான நேரத்துக்கு ஸ்டேஷனுக்கும் போய் எல்லாரும் பாத்துக்கிட்டாச்சு. சுடச்சுட நந்தினியில பாதாம் பால் வாங்கிக் குடிச்சிட்டு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நிக்குற ஸ்டேஷனுக்குப் போனோம்.

வண்டில பட்டியல் பாத்தோம். அதுல ஒரு நண்பனுக்கு அடுத்து ஆரியாதேவி வயசு 58ன்னு போட்டிருந்தது. அத வெச்சி அந்த நண்பனைக் கொஞ்ச நேரம் கிண்டலடிச்சோம். பெறகு கொஞ்சங் கொஞ்சமா வண்டியில கூட்டம் ஏறி நெரம்புச்சு. நெறைய மலையாளிகள் இருந்தாங்க. நாங்க யாரையும் கண்டுக்காம UNO அப்படீங்குற விளையாட்டை ஆடுனோம். ரொம்பச் சுவாரசியமாப் போச்சு.

ஆரியாதேவின்னு மொதல்ல சொன்னேனே....அவங்க வீட்டுக்காரரோட வந்திருந்தாங்க. அவருக்கு ஒரு அறுவத்திச் சொச்சம் இருக்கும். பத்தரை மணிக்கெல்லாம் அவங்களுக்குத் தூக்கம் வந்துருச்சு. படுக்கனும்னு சைகைல சொன்னாங்க. சரீன்னு பெர்த்துகளை மாட்டினோம். அவங்க எங்க போறாங்கன்னு தெரிஞ்சிக்க ஒரு ஆவல் வந்துச்சு. மலையாளத்துலயே கேட்டேன். "நிங்ஙள் எவிடே போகுன்னு?"
அவரும் ஒடனே சொன்னாரு...."ஞங்ஙள்.....திருவனந்தபுரம்....."
என்னது திருவனந்தபுரமா! எனக்குத் தலையில் இடியே விழ்ந்த மாதிரி இருந்தது. திருவனந்தபுரம் வழியாப் போகுதா அல்லது நாகர்கோயில் வழியா திருவனந்தபுரம் போகுதான்னு ஒரு சந்தேகம். ஆனா வண்டியோ கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ். அப்புறம் எப்படி திருவனந்தபுரம் போகும்!

பிடி டீ.டீ.ஆரை. அவர்கிட்ட வெளக்கமா கேட்டதுக்கு அப்புறந்தான் ஒரு விஷயம் புரிஞ்சது. நான் இண்டர்நெட்ல பாத்துச் சொன்ன கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வேற. என்னோட நண்பன் டிக்கெட் பதிஞ்ச கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வேற. நான் பாத்தது வாரத்துக்கு மூனு நாளுதான் போகுது. அதுதான் பதினோரு மணிக்கு நாகர்கோயில் போகும். இது சாந்தரம் அஞ்சு மணிக்கு மேலதான் நாகர்கோயில் போகுது. என்ன செய்றதுன்னு ஒன்னும் புரியலை. ஒரு நா முழுக்க ரயில்ல இருக்கனும். கேரளா முழுக்க ரயில்லயே பாத்திரலாம். ஆனா அது சரியா?

நண்பர் பெஞ்சமினுக்கு ஒரு ஃபோன் போட்டுப் பேசினேன். அவரும் கொஞ்ச ஐடியாக்கள் குடுத்தாரு. அவரு கிட்ட பேசீட்டு சைடு பெர்த்துல ஜன்னலோரமா கால நீட்டீட்டு உக்காந்து யோசிச்சேன். பட்டுன்னு ஒரு ஐடியா வந்துச்சு. ஒடனே எல்லார் கிட்டயும் சொன்னேன். சொன்னதும் எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க.
தொடரும்...

மதி
29-03-2006, 08:42 PM
அட ஆரம்பமே ஜோரா போகுது....! மேற்கொண்டு என்ன ஆச்சு..சீக்கிரம் சொல்லுமையா..!!!

ஆமா உங்க பயண குழறுபடிக்கும் பெஞ்சமினுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா...?

gragavan
30-03-2006, 03:32 AM
அட ஆரம்பமே ஜோரா போகுது....! மேற்கொண்டு என்ன ஆச்சு..சீக்கிரம் சொல்லுமையா..!!!

கொஞ்சம் பொறுங்க மதி. அடுத்த பாகம் எழுதனும்ல........



ஆமா உங்க பயண குழறுபடிக்கும் பெஞ்சமினுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா...?அதை யாமறியோம் பராபரமே....அவரு எனக்கு உதவிதான் செய்தார்...

பாரதி
30-03-2006, 12:17 PM
பயணக்கட்டுரையின் ஆரம்பம் நன்றாக இருக்கிறது இராகவன். கசகசப்பு முடிந்ததும் அடுத்த பதிவைக்கொடுங்கள். படிக்க காத்திருக்கிறேன்,

pradeepkt
30-03-2006, 06:36 PM
அடடா...
வேர்வைக் கசகசப்புன்னவுடனே என்னமோ நினைச்சேன்... அருமையா எழுதிருக்கீங்க
சரி சரி அதெல்லாம் சீக்கிரம் எழுதுங்க.

மதி
30-03-2006, 08:59 PM
அடடா...
வேர்வைக் கசகசப்புன்னவுடனே என்னமோ நினைச்சேன்... அருமையா எழுதிருக்கீங்க
சரி சரி அதெல்லாம் சீக்கிரம் எழுதுங்க.
அப்படி என்னத்த நினைச்சீங்க..??:confused: :confused: :confused:

gragavan
31-03-2006, 03:08 AM
அப்படி என்னத்த நினைச்சீங்க..??:confused: :confused: :confused:அப்படிக் கேளுங்க மதி. அப்படி என்னன்னுய்யா நெனச்சீரு? உண்மையச் சொல்லீரும் பிரதீப்பு..............

gragavan
31-03-2006, 03:10 AM
பயணக்கட்டுரையின் ஆரம்பம் நன்றாக இருக்கிறது இராகவன். கசகசப்பு முடிந்ததும் அடுத்த பதிவைக்கொடுங்கள். படிக்க காத்திருக்கிறேன்,என்னண்ணா அப்படிச் சொல்லீட்டீங்க...பயணம் முழுக்கவே கசகசப்புதான...வெயில்ல...வேத்து ஊத்தி.....

மதி
31-03-2006, 03:13 AM
என்னண்ணா அப்படிச் சொல்லீட்டீங்க...பயணம் முழுக்கவே கசகசப்புதான...வெயில்ல...வேத்து ஊத்தி.....
சரி சரி..அப்படியே..எடுத்துவுடறது...அடுத்த பாகத்த..

gragavan
31-03-2006, 03:36 AM
சரி சரி..அப்படியே..எடுத்துவுடறது...அடுத்த பாகத்த..மண்டே மண்டே...நண்பர்கள் கிட்ட இருந்து போட்டோ வாங்கத்தான் காத்திருக்கேன்.....

பென்ஸ்
31-03-2006, 04:32 AM
ஆஆ.... ராகவன் நிங்கள் அடிபொளியாயிட்டு எழுதுனுன்டு... பக்க்ஷெ நிங்களுட யாத்ர பிரஸ்னம் ஆயதில் எனிக்கு ஒரு பங்கும் இல்லா கேட்டோ...

pradeepkt
31-03-2006, 05:52 AM
யோவ் பென்ஸூ,
தமிழே தகராறு, எங்களால எழுத்துப் பிழை கண்டு பிடிக்க முடியாதபடி புது டெக்னிக்ல எழுதுறாப்புல தெரியுது...
இதெல்லாம் நல்லதுக்காத் தெரியலை ஆமா :)

தாமரை
31-03-2006, 05:55 AM
யோவ் பென்ஸூ,
தமிழே தகராறு, எங்களால எழுத்துப் பிழை கண்டு பிடிக்க முடியாதபடி புது டெக்னிக்ல எழுதுறாப்புல தெரியுது...
இதெல்லாம் நல்லதுக்காத் தெரியலை ஆமா :)
அவர விட்டுடுங்க அய்யா..!!!

sarcharan
31-03-2006, 09:02 AM
ஆஆ.... ராகவன் நிங்கள் அடிபொளியாயிட்டு எழுதுனுன்டு... பக்க்ஷெ நிங்களுட யாத்ர பிரஸ்னம் ஆயதில் எனிக்கு ஒரு பங்கும் இல்லா கேட்டோ...
ஓ பென்ஸேட்டா, நிங்கள் மலையாளம் நன்னாயிட்டு
சம்சாரிக்கிந்தல்லோ.....
ஆரா படிப்பிச்சது....

sarcharan
31-03-2006, 09:06 AM
யோவ் பென்ஸூ,
தமிழே தகராறு, எங்களால எழுத்துப் பிழை கண்டு பிடிக்க முடியாதபடி புது டெக்னிக்ல எழுதுறாப்புல தெரியுது...
இதெல்லாம் நல்லதுக்காத் தெரியலை ஆமா :)
பிரதீப், ஒரு வளர்ற பையனை தலையில தட்டி வளர்ச்சிய குறைக்கிற....:D :D :D

பென்ஸ்
31-03-2006, 09:15 AM
ஓ பென்ஸேட்டா, நிங்கள் மலையாளம் நன்னாயிட்டு
சம்சாரிக்கிந்தல்லோ.....
ஆரா படிப்பிச்சது....

ஓஓ என்றே ஜீவிததில் ஓமன குட்டி ஆரும் இல்ல கேட்டோ....:rolleyes: :rolleyes:

ஆனா வேற கதை இருக்கு ... சொல்லுறேன்....:D :D :D

sarcharan
31-03-2006, 09:17 AM
ஓஓ என்றே ஜீவிததில் ஓமன குட்டி ஆரும் இல்ல கேட்டோ....:rolleyes: :rolleyes:

ஆனா வேற கதை இருக்கு ... சொல்லுறேன்....:D :D :D
அப்போ இது தான் உங்கள் ட்ரெக்கிங் சீக்ரெட்டா...:p :p

pradeepkt
31-03-2006, 09:33 AM
பிரதீப், ஒரு வளர்ற பையனை தலையில தட்டி வளர்ச்சிய குறைக்கிற....:D :D :D
பென்ஸூ இனியும் வளந்தா என்னத்துக்கு ஆவுறதுன்னு ஒரு நல்ல எண்ணந்தேன்.

பென்ஸ்
31-03-2006, 09:44 AM
வாயா வா...
நாளைக்கு போரத்தில் எங்களை மீட் பன்ன வாரிரு இல்லியா... வாரும்...
செல்வன் கையில உம்மை பிடித்து கொடுக்கிறேன்....
ராகவன் மொட்டை தலையால உம்மை முகத்தில் உரச சொல்லுறேன்...
சரவணன் கிட்ட ஜோக்கு சொல்ல சொல்லுறேன்...

pradeepkt
31-03-2006, 09:45 AM
சரி சரி கோச்சுக்காதீங்க, நமக்குள்ள என்ன?
ஆனாலும் நாளைக்கு நான் வரேன்னு உங்களுக்கு யாரு சொன்னது... ஏப்ரல் ஒண்ணு நாளைக்குத்தானே..

sarcharan
31-03-2006, 10:03 AM
சரி சரி கோச்சுக்காதீங்க, நமக்குள்ள என்ன?
ஆனாலும் நாளைக்கு நான் வரேன்னு உங்களுக்கு யாரு சொன்னது... ஏப்ரல் ஒண்ணு நாளைக்குத்தானே..

ஹி ஹி ஏப்ரல் ஒண்ணு அன்னிக்குத்தானே வர்ற... ;) ;)

gragavan
31-03-2006, 10:16 AM
ஐயா...நாளைக்கு ஃபோன் போட்டு கூப்பிட்டுக்கிருங்க...நான் மறந்தாலும் மறந்திருவேன்.

அப்புறம்..தாமரை...சீடி....அதையும் கொண்டு வாங்க.........

mukilan
31-03-2006, 04:26 PM
இவங்களாவே சந்திப்பு நடத்திக்கிறது.... அப்புறம் பயணக்கட்டுரை வேற, சி.டியாம். ஃபோரமாம், பெர்ஸியாவாம் எல்லாம் என் வயித்தெரிச்சலை கிளப்புது ஆமா சொல்லிட்டேன்.

வயிற்றெரிச்சலுடன்

மதி
31-03-2006, 04:31 PM
இவங்களாவே சந்திப்பு நடத்திக்கிறது.... அப்புறம் பயணக்கட்டுரை வேற, சி.டியாம். ஃபோரமாம், பெர்ஸியாவாம் எல்லாம் என் வயித்தெரிச்சலை கிளப்புது ஆமா சொல்லிட்டேன்.

வயிற்றெரிச்சலுடன்
என்னங்க முகிலன்..
இப்படியெல்லாம்..வயிறெரியக் கூடாது.
அப்புறம் அது மட்டுமே நமக்கு வேலையா போயிடும்..

அங்க இருந்தா நானும் போயிருப்பேன்..
ஹ்ம்ம்...:eek: :eek:

sarcharan
01-04-2006, 08:08 AM
இவங்களாவே சந்திப்பு நடத்திக்கிறது.... அப்புறம் பயணக்கட்டுரை வேற, சி.டியாம். ஃபோரமாம், பெர்ஸியாவாம் எல்லாம் என் வயித்தெரிச்சலை கிளப்புது ஆமா சொல்லிட்டேன்.

வயிற்றெரிச்சலுடன்
முகில்ஸ்,
வராத உங்களுக்கே இப்படி எரிஞ்சா வந்த பெஞ்சு கதை....

pradeepkt
02-04-2006, 01:34 PM
எங்கய்யா அடுத்த கட்டுரை?

gragavan
03-04-2006, 01:57 AM
புதுசா ஒரு ஐடியா வந்ததுன்னு போன பதிவுல சொன்னேன். அத ஒடனே பெஞ்சமினுக்கும் ஃபோன் போட்டுச் சொன்னேன். அவரும் அது நல்ல திட்டமுன்னு ஒத்துக்கிட்டாரு. அதை நண்பர்களும் முழு மனசோட ஒத்துகிட்டாங்க. நானும் எல்லாரையும் தூங்கப் போகச் சொல்லீட்டு செல்போன்ல காலைல அஞ்சர மணிக்கு அலாரம் வெச்சேன்.

புதுத்திட்டம் என்னன்னா கோயமுத்தூர்ல எறங்கிக்கிறது. காலைல ஆறு மணிக்குப் போய்ச் சேரும். சேந்ததும் குளிச்சிட்டு செஞ்சிட்டு வண்டியப் பிடிச்சி சுத்திப் பாக்கலாம்னு திட்டம். பாத்துட்டு ராத்திரி புறப்பட்டு மதுரைக்கோ இல்லைன்னா நேரடியா கோயில்பட்டிக்கோ போயிர்ரது. அப்புறம் வழக்கம் போல கழுகுமலை, சங்கரங்கோயில், திருநெல்வேலி, திருச்செந்தூர்னு போயிரலாம்னு சொன்னேன். நாகர்கோயில் இல்லைன்னாலும் கோயமுத்தூர் வந்ததுல எல்லாரும் ஒரு திருப்திதான்னு வெச்சுக்கோங்களேன்.

அதுல பாருங்க ஒரு நண்பனோட சொந்தக்காரங்க கோயமுத்தூர்ல இருக்காங்களாம். அதுனால அவங்ககிட்ட எங்கெங்க போறதுன்னு கேட்டுக்கிற முடிவு செஞ்சோம். அஞ்சரைக்கு அலாரம் வெச்சேனே ஒழிய தூக்கம் ஒழுங்கா பிடிக்கலை. தொடக்கமே இப்பிடி இருக்கே முழுக்க எப்படி இருக்குமோன்னு கொஞ்சம் கலக்கம். அப்பனே முருகா...எது எப்படியோ திருச்செந்தூர்ல மொட்ட போடனும்னு வேண்டிக்கிட்டேன். அரமணிக்கு ஒரு வாட்டி எந்திரிச்சி மணி பாத்தேன். ஈரோடு வந்ததுக்கு அப்புறம் தூக்கம் வரல. எந்திரிச்சி உக்காந்துகிட்டு வெளிய பாத்துக்கிட்டிருந்தேன்.

அப்பதான் தெரிஞ்சது இன்னும் ரெண்டு பேரு தூக்கமில்லாம இருந்தது. ரெண்டு பேரும் பெர்த்துல இருந்து இறங்கி வந்து கூட உக்காந்துகிட்டாங்க. அவங்களுக்கு எனக்குத் தெரிஞ்ச இடங்களையும் வழிகளையும் பத்திச் சொன்னேன். பேசிக்கிட்டேயிருக்கிறப்ப கோயமுத்தூர் வந்திருச்சி. படபடன்னு எறங்கி ஸ்டேஷன விட்டு வெளிய வந்தோம். பக்கத்துலயே ஒரு லாட்ஜ்ல ரெண்டு ரூம் போட்டோம். யாருக்கும் தூக்கமும் இல்லை. நண்பன் அவனோட சொந்தக்காரங்க வீட்டுக்குப் போன் போட்டு சுத்திப் பாக்க வெவரம் கேட்டான். தகவல்கள் கொஞ்சம் வந்தது.

சரி. குளிச்சிட்டு காம்ளிமெண்ட்ரி பிரேக்பாஸ்ட்ட கட்டு கட்டீட்டு குவாலிஸ் புக் பண்ணலாம்னு நெனச்சோம். ஆனா அதுக்கு அவசியம் வெக்காம நண்பனோட அக்காவே ஒரு வண்டியை ஏற்பாடு பண்ணி அவங்க அண்ணனையும் கூட அனுப்பி வெச்சாங்க. வாழ்க வளமுடன்.
அதுக்குள்ள எல்லாரும் குளிச்சி தயாரா இருந்தாங்க. அவங்கள சாப்பிடக் கூட்டீட்டுப் போனேன். பொங்கலும் இட்டிலும் தேங்காய்ச் சட்டினி, தக்காளிச் சட்டினி சாம்பாரோட பரிமாறுனாங்க. நல்லா இருந்தது. அதுக்குள்ள அந்த அண்ணனும் வண்டியோட வந்துட்டாரு. அவரே ஒரு திட்டமும் வெச்சிருந்தாரு. நேரா பேரூர் கோயில். (மொதல்ல பத்மநாபபுரம் அரண்மனைன்னு முடிவு செஞ்சிருந்தோம். ஆனா அது தானா கோயிலாயிருச்சு. அதுதான் ஆண்டவன் விருப்பம் போல.) அப்புறமா கோவைக்குற்றாலம். பெறகு பூண்டி கோயில். (இன்னொரு கோயில்). அப்புறம் ஈஷா தியான மண்டபமாம். (இந்தப் பேரை எங்கயோ கேட்டிருந்தேன். அவ்வளவுதான்.). அப்புறம் மருதமலையாம். (என்னடா என்னைக் கடைசியா பாக்க வர்ரியான்னு மொத நாள்ளயே முருகன் முந்திக்கிட்டாரோ என்னவோ!).

சரீன்னு எல்லாரும் வேண்டிய துணிமணிகளையும் தண்ணி பாட்டில்களையும் எடுத்துக்கிட்டு வண்டீல ஏறுனோம். பெங்களூர்க்காரங்களான எங்களுக்கு கோயமுத்துரோட துப்புரவான ரோடுகளும் மிகவும் மென்மையான தூய காத்தும் ரொம்பச் சுகமா இருந்தது. ரசிச்சிக்கிட்டே இருக்கும் போது பேரூர் கோயில் வந்திருச்சி.
வண்டீலயே செருப்ப விட்டுட்டு கீழ எறங்குனோம். கோயில் பழைய கோயில். வழக்கமான கல்கட்டிடம். பேரூர் பட்டீசுவரர் கோயில்னு எழுதீருந்தது. வாசல்லயே ஒரு பெரிய தேரு. வாசல்ல இருந்து நேராப் பாத்தாலே சிவலிங்கம் தெரிஞ்சது. இருட்டு அறைக்குள்ள சிவலிங்கத்துக்குப் பின்னாடி வட்ட வடிவமா சிறுவிளக்குகளை அலங்காரமா வெச்சிருந்தாங்க. அவ்வளவுதான் கருவறை வெளிச்சம். நம்ம குடியிருந்த கருவறைக்குள்ளயும் இருட்டுதான. அதுல இருந்து வெளிச்சத்துக்கு வர்ரதுதான பிறப்பு.

வெள்ளிக்கிழமையானலும் கோயில்ல கூட்டம் குறைச்சலா இருந்தது. வாய் விட்டு நமச்சிவாய வாழ்க செய்யுளைச் சொன்னேன். தீபாராதனை காட்டி மணியடிக்கும் போது கண்கள் மூடின. கண்ணுக்கு முன்னாடி இருந்த எல்லாம் மறஞ்சு ஒரு பரவசம். சிவசிவான்னு சொல்லித் திருநீறு வாங்கிப் பூசிக்கிட்டு கோயிலைச் சுத்தி வந்தோம். கோயில் முழுக்க சிற்ப அற்புதங்கள். ஒவ்வொன்னயும் விளக்கிச் சொல்ல ஒவ்வொரு பதிவு வேணும். எடுத்துக்காட்டுக்கு ஒன்னு ரெண்டு சொல்றேன்.

கோயில்ல ஒவ்வொரு தூண்லயும் ஒவ்வொரு டிசைன். அதாவது ஒரு தூணின் இரண்டு பாகங்களை இணைக்கும் இடைவெளியில் செய்திருக்கும் வேலைப்பாடுகள் ஒரு தூணில் இருப்பது போல மறுதூணில் இல்லை. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகை. அடுத்து பேரூர் கோயிலுக்குப் போகின்றவர்கள் சரியாகப் பாருங்கள்.
அதே மாதிரி இன்னும் பல சிற்ப அற்புதங்கள். ஆனையுரிபோர்த்தவர் என்று ஒரு சிலை. எதுக்க வந்த ஆனையைக் கொன்னு அதோட தோலச் சிவபெருமான் போத்திக்கிற காட்சி. இதச் சிற்பமாச் சொல்லனும். எப்படிச் சொல்றது. ஆனையக் குப்புறத்தள்ளி அதோட தலைல ஏறி நின்னுக்கிட்டு வயித்தப் பிடிச்சிக் கிழிச்ச தோலை ரெண்டு கையாலயும் விரிச்சுப் போத்திக்கிட்டா! இப்ப ஆனையோட வாலு சிவனோட தலைக்கு மேல போயிருமில்லயா? கிழிச்ச தோலோட ரெண்டு பக்கத்துலயும் ரெண்ரெண்டு கால்கள் தெரியுமில்லையா? இதக் கற்பனைல நெனச்சுப் பாருங்க. ஆனைத்தலை மேல சிவன். ரெண்டு கையையும் விரிச்சுத் தோலைப் பிடிச்சிருக்காரு. தலை கீழ இருக்கிறதால வாலு மேல இருக்கு. பாத்த கண்ண எடுக்க முடியல. அவ்வளவு அழகான சிற்பம். போர்வ மாதிரி விரிஞ்ச தோல்ல ஒரு மேடு பள்ளம் கெடையாது. அவ்வளவு நேர்த்தி.

அத விட இன்னொன்னு கண்டிப்பாச் சொல்லனும். கூரைல இருக்கிற சிற்ப அலங்காரம். தாமரப் பூ பெரிசா விரிஞ்சிருக்கு. கீழ இருந்து பாத்தா தலைகீழா தெரியும். கிளிகள் அந்தத் தாமரைப் பூவோட இதழ்கள்ள தலைகீழா உக்காந்துக்கிட்டு பூவுக்குள்ள கொத்திக்கிட்டு இருக்குற மாதிரி சிற்பம். ரொம்ப நுணுக்கமா...அழகா...நேர்த்தியா..திறமையா செஞ்சிருக்காங்க. ஆனா பாருங்க...அப்பேற்பட்ட கற்சிற்பத்துல பெயிண்ட் அடிச்சு வெச்சிருக்காங்க. இயற்கை அழகை மறைக்கிறதுல தமிழனை மிஞ்சிக்கிறதுக்கு ஆளில்லை.

இந்தத் தாமரைப் பூவச் சுத்தி பாம்புக படமெடுத்தாப்புல இருக்கு. அந்தப் பாம்புகள்தான் கொக்கிகள். அந்தக் கொக்கிகள்ள இருந்து சங்கிலிக தொங்குது. நாலு பக்கமும் நாலு பாம்புக் கொக்கி. அந்தக் கொக்கிகள்ள கற்சங்கிலி. அந்தச் சங்கிலிகள்ள என்ன சிறப்பு தெரியுமா? ஒவ்வொரு சங்கிலியிலயும் கடைசி ரெண்டு வளையங்கள்ள அந்தச் சிறப்பு இருந்தது. கடைசி வளையம் ஆணைக் குறிக்கும் சின்னம் போல இருந்தது. வட்டத்துல அம்புக்குறி போடுவாங்களே. அந்த மாதிரி. கடைசி ரெண்டு வளையங்கள் ஆணும் பெண்ணும் சேர்ந்த மாதிரி தெரிஞ்சது.

இன்னும் நெறைய அழகான சிற்பங்கள். சொல்லச் சொல்ல நேரம் பத்தாது. சிவபெருமானையும் பச்சை நாயகியையும் தண்டாயுதபாணியையும் கும்பிட்டுட்டு வெளிய வந்தோம். ஆளுக்கொரு எளநி குடிச்சிட்டுக் கோவைக் குற்றாலத்துக்குப் பொறப்பட்டோம். போற வழியிலதான் நடிகர் சூர்யாவோட சொந்த ஊரான மாதம்பட்டி இருக்கு. அதத் தாண்டிக் கோவைக் குற்றாலத்து அடிவாரத்துக்குப் போனோம்.
நாங்க போன நேரம்.....யாரையும் உள்ள விடல. அது ஒரு ஆனைப் பிரச்சனை.........

தொடரும்.....

மதி
03-04-2006, 04:49 AM
ம்ம்..தொடரட்டும்....!!!

தாமரை
03-04-2006, 05:15 AM
. அதத் தாண்டிக் கோவைக் குற்றாலத்து அடிவாரத்துக்குப் போனோம்.
நாங்க போன நேரம்.....யாரையும் உள்ள விடல. அது ஒரு ஆனைப் பிரச்சனை.........
தொடரும்.....
போற இடத்தில சும்மா இருக்காம.... பிரச்சனையா?

gragavan
03-04-2006, 05:26 AM
போற இடத்தில சும்மா இருக்காம.... பிரச்சனையா?நாங்க சும்மாதானய்யா இருந்தோம்.........ஆனா...........

தாமரை
03-04-2006, 05:31 AM
நாங்க சும்மாதானய்யா இருந்தோம்.........ஆனா...........
அதாவது பிரச்சனை வேற ஒரு ஆனையினால... :rolleyes: :rolleyes: :rolleyes:

gragavan
03-04-2006, 05:42 AM
அதாவது பிரச்சனை வேற ஒரு ஆனையினால... :rolleyes: :rolleyes: :rolleyes:பின்னே....பெங்களூருல சில பூனைகளே பிரச்சனை பண்றப்போ ஆனைக பண்ணக்கூடாதா :D :D :D

தாமரை
03-04-2006, 05:45 AM
பின்னே....பெங்களூருல சில பூனைகளே பிரச்சனை பண்றப்போ ஆனைக பண்ணக்கூடாதா :D :D :D
ஆமாம் ஆமாம்... பூனை இனம்னாலே உங்களுக்கு பயம் அதிகம்தான்..

gragavan
03-04-2006, 05:48 AM
ஆமாம் ஆமாம்... பூனை இனம்னாலே உங்களுக்கு பயம் அதிகம்தான்..அடடே அப்படி வேற ஒங்களுக்கு நெனப்போ :D :D

pradeepkt
03-04-2006, 07:28 AM
அடடே... அடுத்த பாகம் வந்துருச்சா..
அருமை ஐயா.
நல்லா உத்துக் கவனிச்சுப் பாத்திருக்கீரு... விஷயம் இல்லைன்னாலே எழுத்துல பொளந்து கட்டுவீரு ... இப்ப இத்தனை விஷயம் வேற இருக்கே... ஆமா ஆனைகிட்ட என்ன பிரச்சினை...

பென்ஸ்
03-04-2006, 10:03 AM
ராகவா... போட்டா எங்க ஓய்...

இந்த சந்திப்பிலையும் போட்டோ எடுக்க உம்ம திருமுகத்தை காட்டாமல் போயிட்டிரு...

ஆமா, இவ்வளவு விரிவா ஏன் என்கிட்ட போனில் சொல்லலை, ... :rolleyes: :rolleyes: :rolleyes:
ஓஓ அப்படியாவது நான் தமிழ் படித்து பழகட்டும்ன்னுதானே... எம்மாம் நல்ல மனசுயா உமக்கு...!!!:D :D :D

ராகவன் உங்களுக்கு அருமையா எழுத வருது... ரசித்து வாசித்தேன்...

gragavan
04-04-2006, 07:07 AM
போட்டோக்கள் வரும். கண்டிப்பாக வரும்...இன்னும் மொட்ட போடலயேய்யா..

ஆனாலும் அடுத்த பாகத்தில இருந்து போட்டோக்கள் வரும்.

பாரதி
06-04-2006, 02:20 PM
... á..! Ţɡ . .. .

gragavan
07-04-2006, 03:58 AM
பாரதி அண்ணாவின் பதிப்பை யுனிகோடில் கீழே கொடுத்திருக்கிறேன்.

// அட... சின்ன வயசுல போன பேரூரை நினைவு படுத்திட்டீங்களே இராகவன்..! இப்ப நீங்க சொன்ன அளவுக்கு எனக்கு நினைவில்லைன்னாலும் ஓரளவுக்கு பழைய சம்பவங்கள் மீண்டு வந்தது. மிகவும் மகிழ்ச்சி.. தொடருங்கள். //

pradeepkt
07-04-2006, 05:40 AM
போட்டோக்கள் வரும். கண்டிப்பாக வரும்...இன்னும் மொட்ட போடலயேய்யா..

ஆனாலும் அடுத்த பாகத்தில இருந்து போட்டோக்கள் வரும்.
நீங்க மத்தவங்களுக்குப் போட்டாப் போதாதோ :D

gragavan
07-04-2006, 06:35 AM
3. படிப்படியா மலையிலேறி...

ஆனையால பிரச்சனைன்னு சொன்னேல்ல....அது என்னன்னு இப்பச் சொல்றேன்.

கோவைக் குற்றாலங்குறது கோயமுத்தூருக்குப் பக்கத்துல இருக்கக் கூடிய காட்டருவி. கொஞ்சம் மலைக்காட்டுக்குள்ள போயி அருவீல குளிக்கனும். அதுக்குக் கோவைலருந்து பஸ்சும் போகுது. ஆனாலும் வண்டி வெச்சுக்கிட்டு போறது நல்லது. வழியில நல்ல இயற்கைக் காட்சிகள் உண்டு. அழகான பச்சை மலைகள். மலைக்குக் கீழ பச்சை வயல்கள். ரொம்ப நல்லாருந்தது பாக்க.

நாங்க பேரூர் கோயில முடிச்சிக்கிட்டு நேரா கோவைக் குற்றாலத்துக்குப் போனோம். வழியில காருண்யா காலேஜ் நல்லா எடத்த வளைச்சுப் போட்டுக் கட்டீருக்காங்க. அங்கயே ஜெபக் கூடம் எல்லாம் இருக்கு. நாங்க அதெல்லாம் கண்டுக்காம இயற்கை அழக ரசிச்சிக்கிட்டே மலையடிவாரத்துக்குப் போய்ச் சேந்தோம்.

எங்களுக்கு முன்னாடியே ஒரு பஸ்சும் சில வேன்களும் நின்னுக்கிட்டு இருந்திச்சு. ஆனா யாரையும் உள்ள விடல. ஒரு தூக்குத் தூக்கி கதவு (சினிமா செக் போஸ்ட்டுல பாத்திருப்பீங்களே) கீழ இறக்கியிருந்தது. சரீன்னு வண்டிய விட்டு எறங்கி கொறிக்கிறதுக்கும் குடிக்கிறதுக்கும் (பச்சத் தண்ணிதாங்க) வாங்கிக் கிட்டோம்.

நெறைய முன்னோர்கள் இருந்தாங்க. என்ன துறுதுறுப்பு. என்ன சுறுசுறுப்பு.அவங்கள வெரட்டிக்கிட்டு கடைக்காரங்க நல்ல வியாபாரம் பண்ணீட்டிருந்தாங்க. நாங்க நேரா டிக்கெட் கவுண்டருக்குப் போய் விசாரிச்சோம். அப்பத்தான் அந்த ஆனைப் பிரச்சனை தெரிஞ்சது.

ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு ஆனை உள்ள வந்து ஒரு சின்னப் பிள்ளைய கீழ தள்ளி விட்டுருச்சாம். அப்புறம் எங்கயோ உள்ள ஓடிப் போயிருச்சு போல. அதே போல இன்னைக்குப் பன்னெண்டு ஆனைக உள்ள வந்துருச்சாம். அதுல பிரச்சனையில்லை. ஒத்த ஆனையா இருந்தாத்தான் பிரச்சனை. கூட்டமா வந்தாக் கூட்டமா அமைதியாப் போயிருமாம். ஆனா பாருங்க...இந்தப் பன்னெண்டுல ஒன்னு மட்டும் வழிமாறிப் போயிருச்சாம். அத தெச திருப்பிக் காட்டுக்குள்ள வெரட்ட ஆளுங்க போயிருக்கிறதால யாரையும் உள்ள விட மாட்டாங்களாம்.

எப்ப உள்ள விடுவாங்கன்னு அவங்களுக்கும் தெரியாததால....அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சோம். நண்பனோட அண்ணந்தான் பூண்டியையும் ஈஷா தியான மண்டபத்தையும் மொதல்ல பாத்துட்டா சாப்பாட்டுக்கு அப்புறமா திரும்ப வந்து பாப்போம்னு சொன்னாரு. சரீன்னு வண்டிய பூண்டியப் பாத்துத் திருப்புனோம்.

போற வழியிலேயே ஒரு பக்கமாத் திரும்புனா ஈஷா தியான மண்டபம் வரும். ஆனா நாங்க நேரா பூண்டிக்குப் போனோம். நல்ல வெயில். புளியமரங்க நெறைய இருந்திச்சு. அந்த எலைகளும் சில புளியம் பிஞ்சுகளும் ரொம்பக் காஞ்சதுகளும் அங்கங்க கெடந்தது. அதையெல்லாம் கண்டும் காணாம நேரா கோயிலுக்குள்ள போனோம். நடுவுல சிவன். இந்தப் பக்கம் அம்மன். அந்தப் பக்கம் பிள்ளையாரு. இங்க ஐயருங்க பூஜை கெடையாது. கவுண்டர்கள்தான். நிர்வாகமும் அவங்க கிட்டதான் இருக்குது. இங்க மட்டும் இல்லாம பொதுக்கோயில்கள்ளயும் இது போல எல்லாச் சமூகத்தாரும் பாகுபாடு இல்லாம பூஜை செய்ற நெலம வரனும். (இது பத்தி இன்னொரு பதிவு போடனும். அதுனால இங்க நிப்பாட்டிக்கிரலாம்.)

அங்க சாமியக் கும்புட்டுட்டு திரும்பிப் பாத்தா நெறையப் பேரு கைல மூங்கில் கழியோட நிக்குறாங்க. வயசானவங்க இல்ல. இளவட்டங்களும் நல்லா கெதியா இருக்குறவங்களும் கூட கழியோட இருந்தாங்க. என்னன்னு கேட்டா மலையக் காட்டுனாங்க. செங்குத்தா கற்படிகள் போகுது. அதுல நாலு மணி நேரம் படிப்படியா மலையிலேறிப் போனா அங்க ஒரு குகைக்கோயில் இருக்காம். அதுக்குள்ள ஒரு சிவலிங்கமும் இருக்காம். பெரும்பாலும் ராத்திரி மலையேறி விடியக்காலைல சாமியப் பாத்துட்டு காலைலயே கெளம்பி மதிய வேளைக்கு கீழ வந்துருவாங்களாம்.

நாங்க போனது மதியங்கறதுனால கீழ எறங்குறவங்களத்தாம் பாத்தோம். மொத்தம் ஏழுமலையத் தாண்டிப் போகனுமாம். அந்தக் குகைல ஒரு ஓட்டை இருக்காம். அதுல தேங்காய உருட்டி விட்டா நேரா மலையடிவாரத்துக்கு வந்துருமாம். நாங்க மேல போகலையா அதுனால தேங்காய உருட்டி விடலை.

வந்தது வந்துட்டோமேன்னு கொஞ்ச தூரம் ஏறுனோம். செங்குத்தா இருக்குறதால மூச்சு வாங்குச்சு. கம்பில்லாம ரொம்ப ஏற முடியாதுன்னு தெரிஞ்சது. சரீன்னு ஒவ்வொருத்தரா கீழ எறங்கினோம். இப்போ இன்னமும் கஷ்டமா இருந்தது. நிதானமா எறங்குனோம். வழியில ஒரு பக்கத்துல சின்ன ஒத்தையடிப் பாத மாதிரி தெரிஞ்சது. அப்பிடியே அதுல உள்ள போனேன். ஒரு பயலும் கூட வரல. உள்ள போனா அங்க ஒரு சின்ன ஓட்ட. சின்ன குகை வாசல் மாதிரி இருந்தது. குனிஞ்சி உள்ள எட்டிப் பாத்தேன். உள்ள பத்துப் பன்னிரண்டு பேரு நிக்கவும் உக்காரவும் வசதியுள்ள ஒரு குகை. அதுல என்ன இருக்குங்குறீங்க? ஒரு சிவலிங்கம்.

குகைக்குள்ள நேரா நுழைய முடியாது. தரையோட தரையா குனிஞ்சி போகனும். சட்டைய அழுக்காக்க வேண்டாம்னு உள்ள போகல. அதுக்குள்ள நண்பர்கள் ரெண்டு பேரும் என்னமோன்னு வந்துட்டாங்க. அவங்களும் குனிஞ்சி குகையப் பாத்துக்கிட்டாங்க. ஒரு நண்பனோட ஃபிலிம் கேமராவுல கொஞ்ச ஃபோட்டோக்கள் எடுத்துக்கிட்டோம்.

கீழ எறங்கி அங்க இருந்த கொழாயில கையக் காலக் கழுவிக்கிட்டு வண்டீல ஏறி நேரா ஈஷா தியான லிங்கத்துக்குப் போனோம். போற வழியில ரெண்டு பக்கமும் மரங்கள் ரொம்ப அழகா இருந்தது. எறங்கி ஃபோட்டோ எடுத்துக்கிட்டோம். ரெண்டு பக்கமும் மரங்கள் இருந்த அந்த வழியில கடைசீல இருந்தது ஈஷா தியான மண்டபம்.

தொடரும்...

pradeepkt
07-04-2006, 07:52 AM
அடடா, என்ன பயணம், என்ன பயணம்? நானும் ஒரு நாலு நாள் லீவு போட்டு ஊர் சுத்தணுமின்னு நினைக்கிறதுதான், எங்க அதுக்கெல்லாம் குடுப்பினை.

நீங்க மலையேறினதைப் படிக்கும்போதே எனக்கு மூச்சு வாங்குது :D
அந்த சிவலிங்கம் ஒரு வேளை யாராச்சும் பெரிய சித்தரு பூசை பண்ணினதா இருக்கும். கோவையைச் சுத்தி இருக்குற பல்வேறு மலைகளில் இது போன்ற பல மறைவிடங்கள் இருப்பதாகப் படித்திருக்கிறேன்.

ஆமா ஈஷா தியான மண்டபம் வெள்ளியங்கிரி மலையிலதானே இருக்கு?

gragavan
16-04-2006, 04:55 PM
4. தியானமும் கம்பங்கூழும்

ஈஷா தியான லிங்கமுன்னு நான் சமீப காலமாகத்தான் கேள்விப் பட்டிருக்கேன். அதோட சேத்து ஜிக்கீங்கறவரையும் சேத்துச் சொல்வாங்க. இவ்வளவுதான் எனக்கு இருந்த அறிமுகம். பொதுவா நான் கடவுள் மனிதர்களை ஏற்றுக் கொள்வதில்லை. அதுலயும் ஆசிரமம் வெச்சிருந்தா....வாய்ப்பேயில்லை. அதுனால அங்க போறதுக்கு எனக்கு அவ்வளவா ஆர்வம் இருக்கல. ஆனா கூட வந்தவரு கண்டிப்பா போய்ப் பாருங்கன்னு சொன்னதால போனோம்.

நல்லா ரெண்டு பக்கமும் மரங்கள். நடுவுல வழி. ரோடெல்லாம் இல்லை. ஆனாலும் துப்புரவா இருந்தது. வண்டிய நிப்பாடீட்டு இறங்கினோம். பாத்தா புத்தம் புதுசாக் கட்டுன பெரிய நட்சத்திர சுற்றுலாத்தலம் மாதிரி இருந்துச்சு. நல்ல உயரமான கூரை. அதுல நல்ல பெரிய சதுரத் தூண்கள். அந்தத் தூண்களும் கூரையும் சந்திக்கிற இடத்துல கருகருன்னு நாகப்பாம்புக தொங்கீட்டிருந்துச்சு. பொம்மப் பாம்புகதான். ஆனா மரத்துல செஞ்சி நல்லா பாலீஷ் போட்ட மாதிரி பளபளன்னு இருந்துச்சு.

அங்க ரெண்டு பெரிய வட்டமான பாத்திரத்துல தண்ணிய நெரப்பி அதுல ஒரு அக்கா செந்தாமரைப் பூக்கள லேசா விரிச்சாப்புல விரிச்சி வெச்சுக்கிட்டிருந்தாங்க. பாக்கவே ரொம்ப அழகா இருந்தது. பக்கத்துல இன்னொரு பொண்ணு அதே வேலைய ஆனா இன்னொரு சட்டில செஞ்சிக்கிட்டிருந்தாங்க. செக்கச் செவேல்னு ரொம்ப அழகா இருந்தது தாமரப் பூக்கள். அத அப்படியே கேமராவுல அப்பீட்டோம்.

வரவேற்புப் பகுதி ரொம்ப நல்லா அமைஞ்சிருந்தது. செடி கொடிகள் வெச்சி...ஓலைக் கூரை போட்ட அழகான கலையம்சமா இருந்துச்சு. அங்கேயே சாப்பிடவும் சின்னதா ஒரு கடை இருந்துச்சு. பன், கேக், ஊறுகாய் வகைகள் இருந்துச்சு. தகவல் புத்தகங்களும் நிறைய இருந்துச்சு. நாங்கள்ளாம் காலைக் கழுவிக்கிட்டு பக்கத்துல இருக்குற கோயில் பகுதிக்குப் போனோம். அதுக்கு முன்னாடி அங்க ஒரு பலகைல செல்போன்களை இங்கே ஒப்படைக்கவும்னு எழுதியிருந்துச்சு. நான் கண்டுக்கலை. என் கூட வந்தவங்களுந்தான்.

கோயில் பகுதியில் நுழைவுல ஒரு பெரிய கல்மரம். (கொடிமரம் போல). அதுல அனைத்து மதச் சின்னங்களும் இருந்துச்சு. இந்தப் பக்கமா ஒரு பெரிய வரைபடம். அதாவது ஈஷாவின் முழுப்பரப்பும் வரைபடமா வழிகளோடு இருந்தது வர்ர போறவங்களுக்குப் பயனாயிருந்தது. நாங்க அதப் பெருசாக் கண்டுக்காம நேரா கோயிலுக்குள்ள போனோம்.

ரெண்டு பக்கமும் சொவத்துல கல்லுல நல்ல கதைகளைச் செதுக்கி வெச்சிருந்தாங்க. கர்நாடகத்துல அக்கம்மாதேவீன்னு ஒரு சிவபக்தை. அவங்கள அவமானப் படுத்த நினைக்கிறான் அரசன். அவைக்கு வரச்சொல்லி அத இதச் சொல்லி துணியெல்லாம் உருவச் சொல்றான். துணி உருவத் தொடங்குன அந்த நொடியிலேயே தன்னுடைய உணர்வுகள் முழுவதும் மொத்தமா எடுத்து இறைவன் மேல வெச்சிர்ராங்க. அதுனால அவங்க துணிய எடுத்ததும் எடுக்காததும் அந்தம்மாவுக்கு ஒன்னுதான். குழந்தை துணியில்லாம இருந்தாலும் துணியோட இருந்தாலும் ஒன்னும் விகல்ப்பமா நெனைக்காதில்லையா. அந்த மாதிரி உள்ளம் வந்திருச்சு அவங்களுக்கு. அதுக்குப் பெறகு அவங்க செஞ்சதெல்லாம் இறையருளால நன்மைகள்தான். அவங்க புகழும் பரவுச்சு. அந்த அம்மாவோட கதையையும் அங்க படமா வெச்சிருந்தாங்க. பூசலார் கதையும் இருந்துச்சு.

அதப் பாத்துக்கிட்டே உள்ள போனோம். வட்ட வடிமான பெரிய அறை. அரைக்கோளத்த எடுத்து அதுக்குக் கூரையா வெச்ச மாதிரி அமைப்பு. அந்த வட்ட அறையின் நடுவுல பெரிய சிவலிங்கம். அதைச் சுற்றிக் கொண்டு ஒரு பாம்பு. ரொம்பவே நேர்த்தியா இருந்தது. அதோட தலைக்கு மேல உச்சீல வெளிய இருக்குற வெளிச்சம் உள்ள வர்ர மாதிரி ஆனா மழைத்தண்ணீ உள்ள வராத மாதிரியான தெறப்பு. இந்தச் சிவலிங்கத்துக்கு முன்னாடி அழகான அமைப்புல அடுக்கி வெச்ச பூக்களும் பூஜைப் பொருட்களும்.

வட்டமான அறைன்னு சொன்னென்லயா...அதோட சுத்துச் சொவர்ல குழிகுழியா இருந்துச்சு. அதுக்குள்ள உக்காந்து அமைதியா தியானம் செய்யலாம். ஒரு சத்தம் கிடையாது. நெறையப் பேரு குழிக்குள்ளயும் குழிக்கு வெளியவும் அமைதியா உக்காந்திருந்தாங்க. நானும் ஒரு குழிக்குள்ள உக்காந்து கண்ண மூடிக்கிட்டேன். அமைதியா இருக்குறதும் எவ்வளவு ஆனந்தம். அந்த அமைதிய ரசிச்சிக்கிட்டேயிருந்தபதான் எனக்கு ஒன்னு தோணிச்சு. என்னோட செல்போன கையோட கொண்டு வந்துட்டேனே....ஒருவேள அதுல யாராவது கூப்புட்டாலோ அல்லது மெசேஜ் வந்தாலோ என்னாகும்! அந்த அமைதியான அறை முழுக்க எதிரொலிக்குமில்லையா....அதுனால அதுக்கு மேல அங்க இருக்க விரும்பாம படக்குன்னு எந்திரிச்சி வெளிய வந்துட்டேன். வர்ர வழியில திருநீறு குங்குமம் வெச்சிருந்தாங்க. நம்மளே தொட்டு வெச்சிக்கலாம்.
நா வெளிய வர்ரதப் பாத்துட்டு கூட வந்த எல்லாரும் வெளிய வந்துட்டாங்க. ரொம்பவே அமைதியான சூழல்.


அப்படியே வெளிய வந்து வரவேற்புப் பகுதிக்குத் திரும்ப வந்தோம்.
பசிவேளையில்லையா....அதான் ஏதாவது சாப்பிடலாம்னு. ஆனா எங்க நேரம் அங்க கேக்கு பன்னு வகையறாக்களும் லஸ்ஸியும் இருந்துச்சு. வழக்கமா இருக்குற தயிர்ச்சோறு கூட அன்னைக்கு இல்ல. ஆனா பாருங்க அங்க ஒரு அட்டைல கம்பங்கூழ் கிடைக்கும்னு எழுதித் தொங்க விட்டிருந்தாங்க.

ஒடனே நமக்குள்ள இருந்த பட்டிக்காட்டானும் health freakம் எந்திரிச்சிக்கிட்டு அதக் குடிக்கனும்னு அடம் பிடிச்சாங்க. மத்தவங்க எல்லாம் லஸ்ஸி ஜூசுன்னு கொண்டாடுனப்போ நா கம்மங்கூழ்னு கேட்டேன். கூட மாங்க ஊறுகாயோட கெடச்சது கம்மங்கூழு...அடடா! உண்மையிலே சொகமோ சொகம். ஒரு வாய்க் கூழு. ஒரு தொட்டு ஊறுகா. குடிச்சப்புறம் ஒரு நெறைவு.

அப்புறம் அங்கயிருந்து பொறப்பட்டு திரும்பவும் கோவைக் குற்றாலம் போனோம். அதுக்குள்ள நான் கோயில்பட்டீல என்னோட சொந்தக்காரங்களுக்கு ஃபோன் போட்டு அடுத்த நாள் காலைல நாங்க வர்ரோம்னு சொல்லீட்டேன். தங்குறதுக்கு நல்ல லாட்ஜ்ல ரூம் போடச் சொல்லீட்டேன். இப்பக் கோயில்பட்டிக்குப் போறதுக்கு டிக்கெட் எடுக்கனுமே.....அதுக்கு நம்ம கூட வந்த நண்பரே உதவி செஞ்சாரு. அவரு ஆஃபீஸ் பையனுக்குப் ஃபோன் போட்டு விவேகம் டிராவல்ஸ்ல எல்லாருக்கும் டிக்கெட் வாங்கி வெக்கச் சொல்லீட்டாரு. உதவி எப்படியெல்லாம் வருது பாருங்க!

இப்பப் போனப்ப கோவைக் குற்றாலத்துக்குள்ள ஆளுங்கள விட்டுக்கிட்டு இருந்தாங்க. அதுனால நாங்க ஜம்முன்னு உள்ள போனோம்.

தொடரும்..............

gragavan
16-04-2006, 05:03 PM
http://i29.photobucket.com/albums/c291/gragavan/EntranceOfEsha.jpg
http://i29.photobucket.com/albums/c291/gragavan/LotusInPot.jpg
http://i29.photobucket.com/albums/c291/gragavan/LotusIn2Pots.jpg

படங்கள் இங்கே........

gragavan
18-04-2006, 01:07 AM
இத யாருமே பாக்கலையா? அடுத்த பாகம் போட்டிருக்கேனே...........

மதி
18-04-2006, 08:28 AM
இதோ நான் பார்த்துட்டேன்..
நானும் ஒரு முறை ஈஷா யோகா மையம் போய் இருக்கறேன்..
அந்த அமைதியும் சுத்தமும் மிகவும் பிடிக்கும்...

பென்ஸ்
18-04-2006, 01:57 PM
ஆனா ராகவா... மொட்டை அடிச்சதுக்கு அப்புறம் எடுத்த போட்டோவை போடவேயில்லை....

gragavan
19-04-2006, 01:27 AM
அது மொட்டை அடிச்சதச் சொல்றப்போ போடப்படும்.

pradeepkt
20-04-2006, 03:27 PM
அடேயப்பா...
என்னா போட்டோ என்னா போட்டோ
ஸ்ரீராம் தோத்தாரு போங்க... நிஜமாவே நல்லாருக்குய்யா..
ஆமா அடுத்த பாகமெங்கே

gragavan
21-04-2006, 05:35 AM
அடேயப்பா...
என்னா போட்டோ என்னா போட்டோ
ஸ்ரீராம் தோத்தாரு போங்க... நிஜமாவே நல்லாருக்குய்யா..
ஆமா அடுத்த பாகமெங்கேஸ்ரீராம் தோத்தாரா....அடப் பாவமே...

அடுத்த பாகம்...வந்துக்கிட்டே இருக்கு.........

தாமரை
22-04-2006, 05:02 AM
ஸ்ரீராம் தோத்தாரா....அடப் பாவமே...

அடுத்த பாகம்...வந்துக்கிட்டே இருக்கு.........
ஏன் இப்படி அப்பாவி மாதிரி நடிக்கறீங்க.. மூஞ்சியெல்லாம் ஒரே இருட்டா இருக்குன்னு சொல்றாரு...

ஆமாம் இத்தனை தாமரையை பார்த்ததும் என்ன ஞாபகம் வந்தது???:rolleyes: :rolleyes: :rolleyes:

பென்ஸ்
23-04-2006, 01:53 PM
"தாமரைனாலே தண்ணியில தான் எப்பவும் மிதக்கனும் போல" என்று தோன்றி இருக்கும்...

gragavan
24-04-2006, 04:25 AM
"தாமரைனாலே தண்ணியில தான் எப்பவும் மிதக்கனும் போல" என்று தோன்றி இருக்கும்...அதே அதே....சரியா எடுத்துக் கொடுத்தீரய்யா பெஞ்சமின்...........

gragavan
24-04-2006, 04:27 AM
காலைல கோவைக் குற்றாலத்துக்குப் போகைல உள்ள விடல....எல்லாம் ஆனைக பண்ணுன அட்டகாசம்னு சொன்னேன். அப்புறமா பூண்டி முருகன் கோயில், வெள்ளியங்கிரி மலை, ஈஷா தியானலிங்கம் எல்லாம் பாத்துட்டு திரும்ப வரும் போது எங்கள உள்ள விட்டாங்க. ஜீப்பிலேயே கொஞ்ச தூரம் உள்ள போனா வண்டிகள எல்லாம் நிப்பாட்ட எடம் இருந்தது. அங்க வண்டியப் போட்டுட்டு ஒன்ற மைலு உள்ள நடக்கனும்.
[/URL]
வண்டிக நிக்குற எடத்துல ஒரு பெரிய மரத்தை வெட்டி அதோட அடி மட்டும் இன்னும் இருந்துச்சு. பள்ளிக்கூட நெனப்புல அதுல ஏறி நின்னுக்கிட்டு ஒரு ஃபோட்டோ எடுத்துக்கிட்டேன். :-)

அப்புறம் நடப்பாதைல எல்லாரும் நடந்து போனோம். நல்ல வேளைக்குத் தண்ணி பாட்டில்களும் நொறுக்குத் தீனிகளும் வாங்கி வெச்சிருந்தோம். ஆனா போறப்போ எங்களுக்குத் தேவைப்படல. நாங்க போறப்போ நெறைய பேரு திரும்ப வந்துகிட்டு இருந்தாங்க. நாலு மணிக்கு மேல அங்க இருக்க விட மாட்டாங்க. அதுனால மொதல்ல போனவங்க குளிச்சிட்டு வந்தாங்க.

(http://photos1.blogger.com/blogger/2224/1103/1600/Punishment.jpg)மலைப்பாதைல போறது நல்லாயிருந்தது. ஊதாப்பூக்கள் நெறைய தென்பட்டது. பச்சை எலைகளும் ஊதாவும் வெள்ளையும் கலந்து பாக்க நல்லாயிருந்தது. ஒரு பக்கம் மலை. மறுபக்கம் பள்ளத்தாக்கு. இந்த மாதிரி இயற்கை அழகுள்ள எடத்துக்குப் போனாலே ஒரு சந்தோஷம் வரும். அடிக்கடி இந்த மாதிரி எடங்களுக்குப் போறதும் உள்ளத்துக்கு நல்லது. ஒரு மாறுதலாவும் இருக்கும்.

அப்படியே நடந்து போய் அருவிக்குப் போனோம். பெரிய அருவீன்னு சொல்ல முடியாது. சிறுசுதான். ஆனாலும் ஒரு அழகோட இருந்தது. ஆனாலும் அங்கங்க பிளாஸ்டிக் கவர்களும் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைகளுமா இருந்தது. ஒரு அப்பாவும் மகனும் குளிச்சிட்டு ஈரத்துண்டோட உக்காந்திருந்தாங்க. ரெண்டு பேர் கைலயும் பிளாஸ்டிக் தட்டு. அதுல தக்காளிச் சோத்த எடுத்துப் போட்டுக்கிட்டு இருந்தாங்க அம்மா. மூனு பேரும் நல்லா சாப்பிட்டுட்டு அந்தத் தட்டுகள அப்படியே ஒரு ஓரமாவே போட்டுட்டாங்க. அவங்க இருக்கிற எடத்துல குப்பையாக்கலை. தமிழன் கிட்ட பல கெட்ட பழக்கங்க இருக்கு. அதுல ஒரு கொடுமையான பழக்கம் துப்புரவா வெச்சிருக்கத் தெரியாமை. பொது இடங்கள்ள குப்பையப் போடுறதுல தமிழனுக்கு நிகர் தமிழனேதான். சொற்குப்பைகளையும் சேத்துத்தான் சொல்றேன்.

தமிழ்நாட்டுல இருந்து கேரளாவுக்குப் போங்க......தமிழ்நாடு தாண்டுற வரைக்கும் குப்பையா இருக்கும். அதுக்கப்புறமா துப்புரவா இருக்கும். பண்பாடு பண்பாடுன்னு வாய் கிழியப் பேசுறோம். ஆனா தமிழ்நாட்டையே குப்பையாக்கி வெச்சிருக்கோம்.


[URL="http://photos1.blogger.com/blogger/2224/1103/1600/KovaiKutralam1.jpg"] (http://photos1.blogger.com/blogger/2224/1103/1600/SourceOfTheFalls.jpg)சரி. நம்ம கதைக்கு வருவோம். அங்க அருவி ரெண்டு அடுக்கா அமைச்சிருக்காங்க. மேலடுக்கு பெண்களுக்கு. கீழடுக்கு ஆண்களுக்கு. கீழடுக்குல இருந்து சறுக்கிக்கிட்டே போனா தடாகம். அதுலயும் பலர் குளிச்சிக்கிட்டு இருந்தாங்க.

இந்தி சினிமாவுல ஜான் அப்பிரஹாம்னு ஒருத்தர் நடிக்கிறாரே. பெரும்பாலும் துணியே போடாம வந்து வயசுப் பிள்ளைக தூக்கத்தக் கெடுக்கிறாரே.....அவரு துணியப் போட்டும் போடாமலுந்தான் காட்சி குடுப்பாரு. இந்திக்கு அவர் ஒருத்தர்தான். நம்மூர்ல நெறையப் பேரு அப்படி இருக்காங்க. கோவைக் குற்றாலத்துல பாத்தேன்.

வெறும் ஜட்டி மட்டும் போட்டுக்கிட்டு பாறைகள்ள அப்படியே படுத்துக்கிட்டு சூரியக் குளியல் நடத்திக்கிட்டு இருந்தாங்க ஒரு கூட்டம். நல்ல வேளை தமிழ்நாட்டுப் பெண்கள் எல்லாரும் கற்புக்கரசிகள். இல்லைன்னா இந்த மாதிரி அரைகுறையா பாத்துட்டு தப்புப் பண்ணீருவாங்க இல்லையா. ஆனா பெண்கள் மட்டும் உடம்பை மூடிக்கனும். அடக்கமா ஒடுக்கமா இருக்கனும். அவங்க அரைகுறையா வந்தா ஆண்கள் தப்புப் பண்ண வாய்ப்பாயிரும். ஆண்களைத் தப்பு செய்ய வெச்ச குத்தமும் பெண்கள் மேல சேரும். அடப்பாவிங்களா!

பொது எடத்துல எப்படி நடந்துக்கனும்னு தமிழ்நாட்டு ஆம்பிளைகளுக்குச் சொல்லிதான் குடுக்கனும். இங்க மட்டுமில்ல. ஒவ்வொரு எடத்துலயும் இப்பிடித்தான். வெளிநாட்டுக்காரன் திரியலையான்னு கேக்கலாம். அவன் அந்த உரிமைய எல்லாருக்கும் குடுத்திருக்கான். ஆனா நம்மூர்ல....உடைக் கட்டுப்பாடு வேணும்னா அது பொம்பளைங்களுக்கு மட்டும். உடைச் சுதந்திரம் வேணும்னா அது ஆம்பிளைகளுக்கு மட்டும். ரெண்டு பேருக்கும் பொதுவா நாயம் பேச ஒருத்தனும் வர மாட்டேங்குறான்.

ஆனாலும் ஒருத்தனையாவது கெளப்பி விடனும்னு தோணிச்சு. கூட வந்த நண்பர்களோட சேந்து பேசி....ஒரு ஜான் அப்பிரஹாமப் பாத்து வேணுக்குமின்னே கிண்டல் பண்ற மாதிரி சிரிச்சோம். கொஞ்ச நேரத்துல அவனுக்கே ஒரு மாதிரி ஆகி ஒரு துண்டைக் கட்டிக்கிட்டு ஒழுங்கா போனான். இதெல்லாம் பொம்பளப் புள்ளைங்க செய்ய வேண்டியது. அவங்களும் தலையக் குனிஞ்சிக்கிட்டே போய்க்கிட்டு இருந்தாங்க. தலையெழுத்து.

சரி. இப்ப நம்ம குளிக்கனும்ல. நல்ல ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டுதான் குளிச்சோம். கீழடுக்குல அருவி ஒரே சீரா விழுந்துச்சு. அதாவது பெரிய டேம் நெறைஞ்சி வழியிற மாதிரி. அதுக்குள்ள தலையக் கொடுத்தோம். விழுகுற தண்ணிக்கும் அருவிக்கும் நடுவுல கொஞ்ச எடவெளி இருந்தது. அதுக்குள்ள நின்னுக்கிட்டோம். இப்போ எங்களுக்குப் பின்னாடி மலை. முன்னாடி சீரா விழுகுற தண்ணி. அந்தத் தண்ணியத் தாண்டி ஆளுகளும் மரம் மட்டைகளும் தெரியுது. ரொம்ப நல்லாயிருந்தது அந்த அனுபவம். இப்பிடி உள்ள இருந்து பாக்கும் போது தெளிவில்லாம தெரிஞ்சது. ஆனா வெளியருந்து உள்ள பாத்தா தண்ணிக்குள்ள யாரு நிக்கிறாங்கன்னு தெளிவாத் தெரிஞ்சது. ரொம்ப நேரம் தண்ணீல வெளையாண்டோம்.

சரியா நாலு மணிக்கு விசில் ஊதி எல்லாரையும் பத்துனாங்க. நாங்களும் தொடச்சிட்டு துணியப் போட்டுக்கிட்டு பொறப்பட்டோம். தண்ணீல ரொம்ப நேரம் வெளையாண்டுதலயோ என்னவோ எல்லாருக்கும் பசி. மசாலாக் கடலையும் நேந்திரங்காய் சிப்சும் பகபகன்னு பசிக்குற வயித்துல கபகபன்னு போச்சு. தண்ணியக் குடிச்சிட்டு நடந்தோம். ஒரு புத்துணர்ச்சி இருந்தது உண்மைதான். அருவீல குளிச்சதால இருக்கும்னு நெனைக்கிறேன்.

அது சரி....அந்த நொறுக்குத்தீனி பிளாஸ்டிக் பைகள என்ன செஞ்சோம்னு சொல்லவேயில்லையே. எல்லாத்தையும் ஒரு பைல போட்டுக்கிட்டு ராத்திரி லாட்ஜுக்குத் திரும்புனப்புறம் ரூம்ல இருந்த குப்பைத் தொட்டீல போட்டோம்.

அப்புறம் வண்டீல ஏறி நேரா மருதமலைக்குப் போனோம்.........

தொடரும்......

gragavan
24-04-2006, 04:55 AM
இதோ சில புகைப்படங்கள். இப்போ ஸ்ரீராம் தோத்தாரா ஜெயிச்சாரான்னு சொல்லுங்க

http://photos1.blogger.com/blogger/2224/1103/1600/Punishment.jpg
http://photos1.blogger.com/blogger/2224/1103/320/WalkingWayToFalls.jpg
http://photos1.blogger.com/blogger/2224/1103/320/SourceOfTheFalls.jpg
http://photos1.blogger.com/blogger/2224/1103/320/KovaiKutralam1.jpg

pradeepkt
24-04-2006, 05:13 AM
மொட்டை... மொட்டை... மொட்டை போட்டோ எங்கய்யா...
ஆமா... சந்தடி சாக்குல சிந்து பாடறீங்க... :)

gragavan
24-04-2006, 05:15 AM
மொட்டை... மொட்டை... மொட்டை போட்டோ எங்கய்யா...
ஆமா... சந்தடி சாக்குல சிந்து பாடறீங்க... :)என்னய்யா இது டூரோட மொத நாளே இன்னும் முடியல...மூனாவது நாள்தானய்யா மொட்ட போட்டது. அன்னைய பதிவு போடும் போதுதான மொட்டை ஃபோட்டோவப் போட முடியும்..........

பென்ஸ்
24-04-2006, 06:14 AM
ஆனா... ஒரு ஒரு நாளு சம்பவத்தை முப்பது நாளா பதிக்க ராகவனால மட்டும் தான் முடியும்... சீக்கிரம் அடுத்த நாளை பற்றி சொல்லும்யா...

gragavan
24-04-2006, 06:36 AM
ஆனா... ஒரு ஒரு நாளு சம்பவத்தை முப்பது நாளா பதிக்க ராகவனால மட்டும் தான் முடியும்... சீக்கிரம் அடுத்த நாளை பற்றி சொல்லும்யா...அதெப்படி முடியும்...இன்னமும் மருதமலைக்கே போகலை. அப்புறமா சாப்டுட்டு நைட்டு பஸ்ஸப் பிடிச்சிக் கோயில்பட்டிக்குப் போறது ரெண்டாவது நாளு. அங்க கழுகுமலை, சங்கரங்கோயிலு, திருநெல்வேலி எல்லாம் முடிஞ்சிதானே திருச்செந்தூரு. கொஞ்சம் பொறுங்க....

pradeepkt
24-04-2006, 07:13 AM
பொறுக்குறோம், பொறுக்குறோம்... :D :D :D

gragavan
02-05-2006, 09:27 AM
6. மருதமலையில் அல்பப் பண்டம்

கோவைக் குற்றாலம் முடிஞ்சதும் நேரா மருதமலைதான். ரொம்பச் சின்னப் பிள்ளைல மருதமலை பாத்த நெனவு. அதுக்கப்புறம் போனதேயில்லை. அப்பக் கீழ இருந்து மேல நடந்தே ஏறுனோம். பொதுவா முருகங் கோயில் மல மேல இருந்தா நடந்துதான் ஏறுறது வழக்கம். ஆனா மருதமலை அடிவாரம் வந்தது தெரியாம வண்டிக்குள்ள உக்காந்திருந்தேன். வண்டி மலைல ஏறத் தொடங்கீருச்சு.
நிப்பாட்டுங்க நிப்பாட்டுங்கன்னு கத்தி எறங்கீட்டேன். கூடவே நாலு நண்பர்களும் எறங்கீட்டாங்க. அப்படியே படியில ஏறிப் போனோம்.

நல்ல காத்து. உறைக்காத வெயில். ஏற்கனவே ரொம்பச் சுத்துனதுனால கொஞ்சம் களைப்பு. ஆனாலும் ஏறுனோம். வழியில முழுக்க மண்டபங்கள். அத்தனையும் தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்பாத் தேவர் கட்டுனது. அருமையான முருக பக்தர் அவர். கருப்புப் பணமே வெச்சிருக்காத நல்ல திரைத்துறைக்காரர்.

அப்படியே ரெண்டு மூனு போட்டோ பிடிச்சிக்கிட்டு மலையேறுனோம். ஏறுனப்புறந்தான் தெரிஞ்சது தங்கத் தேர் பொறப்பட இருக்குறது. சரி. தேர் நகர்ரதப் பாத்துட்டு முருகனப் பாக்கலாம்னு தேர் கிட்ட போனோம். தங்கத் தேர் இழுக்க நமக்கும் ஆசைதான். ஆசையிருக்கு அம்பாரி ஏறன்னு பழமொழியே இருக்கே. தேர் நகரல. எல்லாரும் வந்து தள்ளுங்கன்னு கூப்டாங்க. ஆகா வந்ததுடா வாய்ப்புன்னு தேரப் பிடிச்சித் தள்ளுனோம். திடீர்னு ஒருத்தர் வந்து நகருங்க நகருங்கன்னாரு. என்னடான்னு நகந்துகிட்டோம்.

அப்புறம் தேர் நகரலை. அங்கையே நின்னுச்சு. இழுத்து இழுத்துப் பாக்குறாங்க....ம்ஹூம்...கடைசீல சங்கிலி ஏதோ மாட்டிக்கிட்டு சிக்கிக்கிட்டு இருக்கு. தேரப் பாக்கனும்னு நெனச்சோம். பாத்தாச்சு. இழுக்கனும்னு நெனச்சோம் தள்ளியே விட்டாச்சு. இப்ப கோயிலுக்குள்ள போவோமுன்னு உள்ள போனோம். கூட்டமில்லை. நல்ல தரிசனம். தமிழில் சொல்லாகி, அந்தச் சொல்லுக்கும் மதிப்பைத் தரும் பொருளாகி எல்லாமுமாகி நிற்கிறவனைக் கண்டு தொழுது வணங்கிகோம்.

அப்புறம் அப்படியே பாம்பாட்டிச் சித்தர் குகைக்குப் போனோம். அது கொஞ்சப் படிக கீழ எறங்கனும். அங்க போகும் போதுதான் எங்க கூட வந்தவரு மலைக்கு மேல இருக்குற பழைய முருகங் கோயிலைப் பத்திச் சொன்னாரு. அதுக்குக் காட்டுக்குள்ள போகனுமாம். முந்தி ஒரு நண்பர் வந்து போகனும்னு அடம் பிடிச்சாராம். இவங்கள்ளாம் என்னடான்னு வேண்டா வெறுப்பாக் கூடப் போனாங்களாம். ஆனா தண்ணி கிண்ணி எடுத்துக்காம. எல்லாரும் கோயிலுக்குப் போயிட்டுத் தவிச்சுப் போயி தவங்கிப் போயி வந்திருக்காங்க. ஆனா அங்க போகனும்னு ஒத்தக்கால்ல நின்னவரு நல்லா ஜம்முன்னு ஏறி எறங்கீட்டாராம்.

இதப் பேசிக்கிட்டே வந்து அங்க பிரசாதக் கடைல முறுக்கு, தினைமாவு எல்லாம் வாங்கிக் கிட்டோம். எறங்குற எடத்துலயே ஒரு ஓட்டல். உள்ள போயி ஆளுக்கொரு காப்பி. நல்லா இருந்தது. சின்னக் கடைன்னாலும் கமகமன்னு ஆவி பறக்கக் காப்பி சுகமா இருந்துச்சு. ரசிச்சுக் குடிச்சிட்டு கீழ எறங்குனோம்.

அப்பத்தான் என் கண்ணுல பட்டுச்சு அது. அதாங்க எலந்தவடை. தூத்துக்குடிப் பக்கமெல்லாம் கெடைக்காது. நாங்க கரூர்ல இருந்தப்பதான் எலந்தவடை எங்களுக்கு அறிமுகம் ஆச்சு. பத்துகாசுக்கு ஒரு சின்ன பாலித்தீன் பாக்கெட்டுல கருப்பாக் களிம்பா கிடைக்கும். அதுக்குள்ள எலந்தக் கொட்டைகளும் முழுசாவோ ஒடஞ்சோ கெடக்கும். அதப் பல்லால கடிச்சு பைக்குள்ள இருக்குறத வாய்க்குள்ள எடுத்துக்கனும். சொவச்சிச் சொவச்சிச் சாப்புட்டுட்டு கொட்டையெல்லாம் மெல்ல முடிஞ்சா மெல்லலாம். இல்லைன்னா துப்பீறலாம். அதுதான் எலந்த வடை. எலந்தப் பழமும் புளியும் வெல்லமும் போட்டு இடிச்சிச் செஞ்ச நம்மூர் அமுதம்.

அது சிட்ட சிட்டயா ஒரு கடைல தொங்குச்சு. அத வாங்குனேன். அப்பயே ஒன்னப் பிச்சித் தின்னு என்னோட பழைய மறந்து போன சுவையத் தெரிஞ்சிக்கிட்டேன். அடடா! எலந்த வடையோ எலந்த வடை!

அப்புறம் இருட்டு வேளை. படபடன்னு லாட்ஜுக்குப் போயி துணிமணிகள எடுத்துக்கிட்டு நண்பனோட அக்கா வீட்டுக்கு வலுக்கட்டாயமா கடத்தப் பட்டோம். அங்க இட்லி, ரவா உப்புமா, வடை, சட்டினி, சாம்பார், பூண்டுக்கொழம்பு, இன்னும் சில பல வகையறாக்களால தாக்கப்பட்டு ஒரு வழியா தப்பிச்சி பஸ்ஸப் பிடிச்சிக் கோயில்பட்டில வந்து விடியக் காலைல நாலரை மணிக்கு எறங்குனோம்.

தொடரும்.

gragavan
02-05-2006, 09:31 AM
http://photos1.blogger.com/blogger/2224/1103/1600/IlandaVadai.jpg
http://photos1.blogger.com/blogger/2224/1103/1600/ChinnapaThevarMandabam.jpg
http://photos1.blogger.com/blogger/2224/1103/1600/ClimbingMaruthamalai.jpg

இதோ புகைப்படங்கள்.

பென்ஸ்
02-05-2006, 09:55 AM
இட்லி, ரவா உப்புமா, வடை, சட்டினி, சாம்பார், பூண்டுக்கொழம்பு, இன்னும் சில பல வகையறாக்களால தாக்கப்பட்டு
ஆமா அப்படியே இதையும் படம் பிடிச்சு போடுறது...
மனுஷன் இருக்கிற இருப்புக்கு ஏம்யா இதையெல்லாம் படமா போட்டு....
போங்கயா...

gragavan
02-05-2006, 12:43 PM
ஒம்ப இருப்புக்கு என்னய்யா.........இருப்பும் பொறுப்பும் பலம்னு கேள்வி..........

மதி
02-05-2006, 12:59 PM
ஆ........எலந்தவடை..
நாக்குல எச்சில் ஊர வச்சிட்டீரே..!

pradeepkt
08-05-2006, 09:44 AM
ஐயா
நீங்க சாப்பிட்டது எலந்த வடை இல்லை... எலந்த ஜூஸ்... இது லேசா தித்திப்பாவும் புளிப்பாவும் இருக்கும்.

எலந்த வடைங்கறது புளிப்பாத்தான் இருக்கும். காஞ்ச மொளகா போடுறதுனால கொஞ்சம் ஒறைப்பாவும் இருக்கும். அத்தோட அதை வடை மாதிரி தட்டி வெய்யில்ல காய வச்சிருப்பாக... அதுனால அது வடை மாதிரியே காஞ்சு இருக்கும்...

அடடா... எங்க வீட்டுல இருந்த எலந்த மரத்துல மொளச்ச காய்களையும் பழங்களையும் திரும்ப நினைவு படுத்திட்டீங்களே ஐயா. எலந்த மரத்துல காயும் நல்லாருக்காது பழமும் கொஞ்சம் பிசுபிசுன்னு கொழகொழன்னு சுமாராத்தேன் இருக்கும். பழத்துக்கு உப்பு மொளகாத்தூளு போட்டுச் சாப்பிட்டாப் பிரமாதமா இருக்கும்.

ஆனாப் பாருங்க, காயும் இல்லாம பழமும் இல்லாம செங்காயா எலந்தப் பழம் இருக்குமே.... அடடா அந்தச் சுவையைக் கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர். சொல்லற்கரிய சுவை ஐயா அது! அருமையான பதிவு அதில அருமையான எலந்தப் பழம்!

gragavan
09-05-2006, 03:54 AM
7. கதிரேசன் கோயில்

கோயில்பட்டீல எங்க சொந்தக்காரங்க இருக்காங்க. அவங்களுக்கு ஃபோன் போட்டு ஒரு நல்ல லாட்ஜுல ரூம் போடச் சொன்னோம். காலைல எறங்கிக் குளிச்சிட்டு எட்டு மணிக்கு மேல கோயில்பட்டிக் கதிரேசன் கோயில், அப்புறம் கழுகுமலை, சங்கரங்கோயில், திருநெல்வேலிய முடிக்கிறதாத் திட்டம். அதுக்கு ஒரு வண்டியும் ஏற்பாடு செய்யச் சொல்லியிருந்தேன்.

எல்லாம் குளிச்சிக் கெளம்புற வேளைல அவங்க வீட்டுல காலைல டிஃபனுக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அதுக்கு முந்துன ராத்திரிதான் நாங்க கோயமுத்தூர்ல தாக்கப்பட்டிருந்தோம். அதோட தொடர்ச்சி கோயில்பட்டியிலயும் தொடந்துச்சு. தகதகன்னு மஞ்சமஞ்சேர்னு கேசரி. ஒரே அளவா இட்டிலிகள் (அதெப்படி ஊத்துறாங்களோ!).

காய்கறியெல்லாம் போட்டுக் கிண்டுன உப்புமா. வீட்டுல சுட்ட மெத்துத் தோசை. இதுகள்ளாம் தனியாப் போகக் கூடாதுன்னு தொணைக்குத் தொவையலு, சாம்பாரு, பொடின்னு ஒரு கூட்டம். முடிஞ்சதும் ஆளுக்கொரு வாழப்பழமும் டீயும். ஒரு வயிறுதான இருக்குன்னு வருத்தப்படத்தான் முடிஞ்சது. அன்னைக்கு முழுக்கவே சாப்பிடத் தேவையில்லைன்னு எல்லாரும் முடிவு கட்டுனாங்க....ஆனா நா மட்டும் இல்ல....மதியம் சங்கரங்கோயில்ல சாப்பிடுவேன்னு உறுதியாச் சொன்னேன் (சங்கரங்கோயில்காரங்க இங்க இருந்தா நான் என்ன சொல்ல வர்ரேன்னு தெரிஞ்சிருக்கும்,)

வீட்டு மாடீக்குப் போனோம். லட்சுமி மில்ஸ் காம்பவுண்டுல மரங்க நெறைய இருந்துச்சு. அதுல அங்கங்க மயில்கள். இந்தப் பக்கந் திரும்புனா மல மேல கதிரேசன் கோயில். கோயில்பட்டீல இருக்குற பழைய கோயில் கதிரேசன் கோயில். அதுவும் ஒரு சின்ன மலை மேல. பாழடஞ்சி போயி ஆளும் பேரும் போகாம சிதஞ்சு போய் இருந்துச்சு. அந்தக் கோயிலச் செம்ம பண்ணி நல்ல படியா ஆக்கனும்னு அப்பவே எனக்கு ஆசை. என்னைக்காவது ஒரு நாள் செய்யனும்னு நெனப்பேன். அப்புறம் படிச்சி முடிச்சி வேலைன்னு வந்தப்புறமும் ஆசை அப்பப்ப எட்டிப் பாக்கும்.

மலைல ஏற்ற படியெல்லாம் செதஞ்சு போய் மண்ணாகி அதுல இருட்டு வேளைல நெறையப் பேரு அசிங்கஞ் செஞ்சிக்கிட்டிருந்தாங்க. என்னையப் போலவே நெறையப் பேரு நெனச்சிருப்பாங்க போல. அந்தக் கோயிலுக்கும் ஒரு விடிவு காலம் வந்துருச்சு. இப்ப பழைய சிதைவுகளைத் தட்டி விட்டுட்டு புதுக் கோயில் கட்டியிருக்காங்க. உள்ள முருகன் சிலை கெடையாது. வேல்தான். கதிர்காமத்துலயும் செல கிடையாது. கதிரேசன் கோயில்லயும் செல கெடையாது. இப்பக் கோயில்ல புதுசா பெரிய வேல்தான் நட்டீருக்காங்க. அதே போல மலைவலம் வர்ரவங்களுக்கு நல்ல தார்ச்சாலையும் போட்டிருக்காங்க. ஏற மாட்டாதவங்களுக்காக வண்டிய நேரடியா மேல கொண்டு போற வசதியும் உண்டு.

எல்லாரும் ஜீப்புல போக, நானும் ஒரு நண்பனும் நடந்தே ஏறுனோம். சாமி கும்பிடுறப்பத்தான் அந்த ஐயரக் கவனிச்சேன். ஒரு பரிவும் பச்சாதாபமும் வந்தது. அதுக்குக் காரணம் அவரோட ஒடம்புல இருந்த வெள்ளிப் புள்ளிகள். சொரியாசிஸ்னு பேரு. சொறிஞ்சா செதில் செதிலா வரும். அதுக்கு மருந்தே இல்லையாம். ஒட்டுவாரொட்டியும் இல்லையாம். அதாவது ஒட்டுவார் ஒட்டி. ஒருத்தர் கிட்ட இருந்து இன்னொருத்தருக்குப் போகாது. ஆனால் ஜீன்கள் வழியாப் போகும். வழிவழியாப் போகுமாம்.

என்ன கொடுமை பாத்தீங்களா! அதுவுமில்லாம இது ஏன் வருதுன்னு கூடக் கண்டு பிடிக்கலையாம். மன அழுத்தம் அது இதுன்னு சொல்றாங்க. அதெல்லாம் நோய் ஊக்கிகள் தானாம். நோய் ஜீனுக்குள்ள உக்காந்துகிட்டு இருக்காம். மன அழுத்தமோ வேலைப்பளுவோ வேறு ஏதாவது பிரச்சனைகளோ கொடுமைப் படுத்தும் போது இது வெளிய வந்துருமாம். சொறிஞ்சிக்கிட்டே இருக்க வேண்டியதுதான். அதுனாலதானோ என்னவோ இங்கிலீஷ்ல பேரு வெக்கும் போது கூட சொரியாசிஸ்னு வெச்சிருக்கான்.

பொதுவா இது தலையில தொடங்குமாம். எல்லாரும் பொடுகு நெனச்சு மொதல்ல கண்டுக்காம விட்டுருவாங்க. ஏதாவது டீவீல காட்டுற ஷாம்புகளைப் போட்டுக் குளிச்சிட்டு ஒன்னும் கேக்கலையே டாக்டர் கிட்ட போனா அவரு குண்டத் தூக்கிப் போடுவாரு. இது வந்து தோற்றத்தைப் பாதிக்கிற ஒரு நோய். தொழுநோயோ வெண்குட்டமோ மொதல்லயே தெரிஞ்சிட்டாப் போயிரும். ஆனா இது அப்படியில்லை. போனாலும் திரும்பத் திரும்ப வரும். தோற்றம் பாதிக்கப்படும் போது அவங்க மனம் ரொம்பப் பாதிக்கப் படும். மத்தவங்களோட ஒழுங்கா பழக முடியாது. கூட இருக்கிறவங்களும் ஒரு மாதிரி அருவெறுப்பு இருக்கும். இதுனால ஒடிஞ்சி நொடிஞ்சி போனவங்க நெறையப் பேரு. அவங்களுக்குக் கவுன்சிலிங் பண்ணக் கூட ஒழுங்கா ஒரு வசதி கிடையாது. பாவம்.

அந்த ஐயர், அதையெல்லாம் பெருசு பண்ணாம தீபாராதனை காட்டித் திருநீறு குடுத்தாரு. வாங்கிப் பூசிக்கிட்டேன். கோயில விட்டு வெளிய வந்து பாத்தாக் கோயில்பட்டி ஊர் முழுக்கப் பாக்கலாம். ஒரு பக்கம் வீடுகள். இன்னொரு பக்கம் நேஷனல் பொறியியல் கல்லூரி. ஒரு பாலிடெக்னிக். ஒரு பெண்கள் கல்லூரி. நீளமாக் கோடு போட்ட மாதிரி தேசிய நெடுஞ்சாலை. பச்சைப் பெயிண்ட் அடிச்ச மேம்பாலம். எல்லாத்தையும் பாத்துட்டு தெரிஞ்சவங்களுக்குப் போயிட்டு வர்ரேன்னு சொல்லீட்டுக் கழுகுமலைக்கு வண்டிய விட்டோம்.

தொடரும்

gragavan
09-05-2006, 04:35 AM
http://photos1.blogger.com/blogger/2224/1103/1600/PointingCollegesInKovilpatti.jpg
http://photos1.blogger.com/blogger/2224/1103/1600/GangInTheHillTop.jpg
http://photos1.blogger.com/blogger/2224/1103/1600/KathiresanKoyil.jpg

புகைப்படங்கள் இங்கே........

pradeepkt
09-05-2006, 05:07 AM
அடடேஏஏஏஏஏஏஏஏ...
அந்த சூரியனைப் பிடிக்கிற போட்டோ இங்கன எடுத்ததுதானா...
சூப்பரு சூப்பரு...
நானும் வரணும்யா, மதுரையில இருந்துக்கிட்டே கொள்ள நாளு உங்க கதிரேசன் கோயிலப் பாக்காம இருந்துட்டனே...

மதி
09-05-2006, 05:08 AM
என்னய்யா..??இடமே விடாம தொடர்ச்சியா எழுதிருக்கீரு..?

pradeepkt
09-05-2006, 05:16 AM
இப்ப மாத்திட்டாருல்ல...
எலந்த வடையப் பத்தி யாராச்சும் சொல்றீங்களா பாருங்க...

பென்ஸ்
09-05-2006, 05:30 AM
சாப்பாடு இதை தவிர வேற எதுவும் தெரியாதா ஓய்....
கேசரியாம், ஒரே சைசில் இட்டிலியாம், சட்டினியாம், சாம்பாறாம்...
குக்கும்.....
வந்திட்டாரு..
(பிடுங்கி கொண்டு போனால் நான் பொறுப்பு அல்ல):D :D :D

ராகவன், இந்த சொரியாசிஸ் நோய் வந்த நண்பன் ஒருவன் எனது
ஊரில் இருக்கிறான்... எனது பக்கத்து வகுப்பில் படித்தவன்,
விளையாடும் போது கூட யாரும் அவனை சேர்க்க மாட்டார்கள்...
ஆனால் எனக்கு எப்போதும் அவனிடம் ஒரு அன்பு உன்டு,
இன்றும் நான் ஊருக்கு சென்றால் என்னை வீடு தேடி வந்து பார்ப்பான்....

நம்மில் பலர் இவர்களை அருவேறுப்புடன் பார்த்து ஒதுக்குவதால்
இவர்கள் மனாழுத்தம் அடைகின்றனர், மற்றவர்கள் இவர்கள் மீது
பரிதாபம் மட்டுமே படுவதால் அது இன்னும் அவர்களை மன
அழுத்ததிற்க்கு கொண்டு செல்லுகிறது... கவுன்சிலிங் கண்டிப்பாக
இவர்களுக்கு தேவை.

அரசு மருத்துவமனையில் உள்ள மனோதத்துவ மருத்துவர்களில்
பலர் கவுன்சிலிங் திறமை கொண்டவர்களே, இருப்பினும் நமது ஊரில்
மனோதத்துவ மருத்துவரை நாடுவது என்பது ஏற்றுகொள்ளபடாதாக
இருப்பதால் இன்னும் பலர் மனாழுத்ததின் உச்சியில் நம்முடனையே
இருக்கிறார்கள்....

மதி
09-05-2006, 05:30 AM
இப்ப மாத்திட்டாருல்ல...
எலந்த வடையப் பத்தி யாராச்சும் சொல்றீங்களா பாருங்க...

எலந்தவடைக்கு என்னங்க கொறச்சல்...????
மதுரையில வேலை பார்த்துட்டு இருந்தப்போ..ஒரு நாள் ராத்திரி படத்துக்கு போனோம். ஒன்னுமே சாப்பிடலை.. தியேட்டர் பக்கத்துல ஒரு பொட்டிகட பாத்தோம். அங்க போய் சாப்பிட்டோம் பாருங்க.. எலந்தவடை, குழாய்...தேன்மிட்டாய்..இத்யாதி..இத்யாதி...ரொம்ப நாளைக்கு பொறவு வேற சாப்பிட்டதால அநேகமா கடையையே காலி பண்ணிட்டோம்.. ஆனா மொத்தமே 25 ரூவா தான் ஆச்சு..

பிரதீப் இதுல எலந்தவடை வருதுல்ல..

pradeepkt
09-05-2006, 05:34 AM
ஆஆஆஆங்
வருது வருது...
இதைச் சொல்ல இத்தனை நேரமா... சமீபத்துல சோழமண்டலம் முழுக்க ஒரு டூர் அடிச்சோம் - நவக்கிரக டூர்.
பொட்டிக்கடைகளாப் பாத்து பாக்கெட் பாக்கெட்டா தேன் மிட்டாயைக் காலி பண்ணினோம்... என்ன ருசி என்ன கலர்... ஆகா...

மதி
09-05-2006, 05:35 AM
ஆஆஆஆங்
வருது வருது...
இதைச் சொல்ல இத்தனை நேரமா... சமீபத்துல சோழமண்டலம் முழுக்க ஒரு டூர் அடிச்சோம் - நவக்கிரக டூர்.
பொட்டிக்கடைகளாப் பாத்து பாக்கெட் பாக்கெட்டா தேன் மிட்டாயைக் காலி பண்ணினோம்... என்ன ருசி என்ன கலர்... ஆகா...
ஒரு வேலை மட்டும் பாத்தா பரவாயில்ல.. டி.வி., சாட்டிங்..இப்படி பண்ணினா...நேரம் தான் ஆகும்..

மதி
09-05-2006, 05:37 AM
ராகவன். நீங்க எழுதினதை படிக்கும் போது எனக்கும் இங்க ஊர் சுத்தினதைப் பத்தி எழுதலாம்னு தோணுது..கூடிய கீக்கிரம் எழுத முயற்சி பண்றேன்.. நல்லாயில்லேனா கோச்சுக்காதீங்க..

பென்ஸ்
09-05-2006, 05:42 AM
குழல்... தேன் மிட்டாய்... ஆகா...
இன்னைக்கு மடிவால மார்க்கேட் பக்கமாதான்யா வீட்டுக்கு போவேன்...
நானும் சாப்பிடுறேன்....

என்ன ராகவன் மட்டும் பிரதிப் சைசுக்கு ஆயிட்டா போதுமா, நானும் ஆக வேண்டாமா???

பிரதிப்பு... என்ன உங்க வீட்டு டிரட்மில் உடைந்து போச்சாமே!!!!! உண்மையா????

மதி
09-05-2006, 05:52 AM
குழல்... தேன் மிட்டாய்... ஆகா...
இன்னைக்கு மடிவால மார்க்கேட் பக்கமாதான்யா வீட்டுக்கு போவேன்...
நானும் சாப்பிடுறேன்....

என்ன ராகவன் மட்டும் பிரதிப் சைசுக்கு ஆயிட்டா போதுமா, நானும் ஆக வேண்டாமா???

பிரதிப்பு... என்ன உங்க வீட்டு டிரட்மில் உடைந்து போச்சாமே!!!!! உண்மையா????

இந்த கொடுமை எப்போ நடந்தது..?

mukilan
09-05-2006, 05:58 AM
தனி மனிதத் தாக்குதல் களை கண்டிக்கிறேன். இது கருத்து திணிப்பு. எதிர்க்கட்சிகள் ஊடகங்களைக் கையில் போட்டுக்கொண்டு செய்கிற புரட்டுத்தனம்.!! (தேர்தல் எQபெக்ட் பென்ஸூ கண்டுக்காதீங்க)

பென்ஸ்
09-05-2006, 06:02 AM
முகில்ஸ்... பிரதிப்பு சொல்லட்டும்யா... டிரட்மில் உடஞ்சுதா இல்லையான்னு....
ஆமா.... டிரட்மில் என்றால் ஏன் உமக்கு பொத்துகிட்டு வருது... ???

mukilan
09-05-2006, 06:03 AM
7. கதிரேசன் கோயில்

கோயில்பட்டீல எங்க சொந்தக்காரங்க இருக்காங்க. அவங்களுக்கு ஃபோன் போட்டு ஒரு நல்ல லாட்ஜுல ரூம் போடச் சொன்னோம். காலைல எறங்கிக் குளிச்சிட்டு எட்டு மணிக்கு மேல கோயில்பட்டிக் கதிரேசன் கோயில், அப்புறம் கழுகுமலை, சங்கரங்கோயில், திருநெல்வேலிய முடிக்கிறதாத் திட்டம். அதுக்கு ஒரு வண்டியும் ஏற்பாடு செய்யச் சொல்லியிருந்தேன்.

எல்லாம் குளிச்சிக் கெளம்புற வேளைல அவங்க வீட்டுல காலைல டிஃபனுக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அதுக்கு முந்துன ராத்திரிதான் நாங்க கோயமுத்தூர்ல தாக்கப்பட்டிருந்தோம். அதோட தொடர்ச்சி கோயில்பட்டியிலயும் தொடந்துச்சு. தகதகன்னு மஞ்சமஞ்சேர்னு கேசரி. ஒரே அளவா இட்டிலிகள் (அதெப்படி ஊத்துறாங்களோ!).

காய்கறியெல்லாம் போட்டுக் கிண்டுன உப்புமா. வீட்டுல சுட்ட மெத்துத் தோசை. இதுகள்ளாம் தனியாப் போகக் கூடாதுன்னு தொணைக்குத் தொவையலு, சாம்பாரு, பொடின்னு ஒரு கூட்டம். முடிஞ்சதும் ஆளுக்கொரு வாழப்பழமும் டீயும். ஒரு வயிறுதான இருக்குன்னு வருத்தப்படத்தான் முடிஞ்சது. அன்னைக்கு முழுக்கவே சாப்பிடத் தேவையில்லைன்னு எல்லாரும் முடிவு கட்டுனாங்க....ஆனா நா மட்டும் இல்ல....மதியம் சங்கரங்கோயில்ல சாப்பிடுவேன்னு உறுதியாச் சொன்னேன் (சங்கரங்கோயில்காரங்க இங்க இருந்தா நான் என்ன சொல்ல வர்ரேன்னு தெரிஞ்சிருக்கும்,)

வீட்டு மாடீக்குப் போனோம். லட்சுமி மில்ஸ் காம்பவுண்டுல மரங்க நெறைய இருந்துச்சு. அதுல அங்கங்க மயில்கள். இந்தப் பக்கந் திரும்புனா மல மேல கதிரேசன் கோயில். கோயில்பட்டீல இருக்குற பழைய கோயில் கதிரேசன் கோயில். அதுவும் ஒரு சின்ன மலை மேல. பாழடஞ்சி போயி ஆளும் பேரும் போகாம சிதஞ்சு போய் இருந்துச்சு. அந்தக் கோயிலச் செம்ம பண்ணி நல்ல படியா ஆக்கனும்னு அப்பவே எனக்கு ஆசை. என்னைக்காவது ஒரு நாள் செய்யனும்னு நெனப்பேன். அப்புறம் படிச்சி முடிச்சி வேலைன்னு வந்தப்புறமும் ஆசை அப்பப்ப எட்டிப் பாக்கும்.

மலைல ஏற்ற படியெல்லாம் செதஞ்சு போய் மண்ணாகி அதுல இருட்டு வேளைல நெறையப் பேரு அசிங்கஞ் செஞ்சிக்கிட்டிருந்தாங்க. என்னையப் போலவே நெறையப் பேரு நெனச்சிருப்பாங்க போல. அந்தக் கோயிலுக்கும் ஒரு விடிவு காலம் வந்துருச்சு. இப்ப பழைய சிதைவுகளைத் தட்டி விட்டுட்டு புதுக் கோயில் கட்டியிருக்காங்க. உள்ள முருகன் சிலை கெடையாது. வேல்தான். கதிர்காமத்துலயும் செல கிடையாது. கதிரேசன் கோயில்லயும் செல கெடையாது. இப்பக் கோயில்ல புதுசா பெரிய வேல்தான் நட்டீருக்காங்க. அதே போல மலைவலம் வர்ரவங்களுக்கு நல்ல தார்ச்சாலையும் போட்டிருக்காங்க. ஏற மாட்டாதவங்களுக்காக வண்டிய நேரடியா மேல கொண்டு போற வசதியும் உண்டு.

எல்லாரும் ஜீப்புல போக, நானும் ஒரு நண்பனும் நடந்தே ஏறுனோம். சாமி கும்பிடுறப்பத்தான் அந்த ஐயரக் கவனிச்சேன். ஒரு பரிவும் பச்சாதாபமும் வந்தது. அதுக்குக் காரணம் அவரோட ஒடம்புல இருந்த வெள்ளிப் புள்ளிகள். சொரியாசிஸ்னு பேரு. சொறிஞ்சா செதில் செதிலா வரும். அதுக்கு மருந்தே இல்லையாம். ஒட்டுவாரொட்டியும் இல்லையாம். அதாவது ஒட்டுவார் ஒட்டி. ஒருத்தர் கிட்ட இருந்து இன்னொருத்தருக்குப் போகாது. ஆனால் ஜீன்கள் வழியாப் போகும். வழிவழியாப் போகுமாம்.

என்ன கொடுமை பாத்தீங்களா! அதுவுமில்லாம இது ஏன் வருதுன்னு கூடக் கண்டு பிடிக்கலையாம். மன அழுத்தம் அது இதுன்னு சொல்றாங்க. அதெல்லாம் நோய் ஊக்கிகள் தானாம். நோய் ஜீனுக்குள்ள உக்காந்துகிட்டு இருக்காம். மன அழுத்தமோ வேலைப்பளுவோ வேறு ஏதாவது பிரச்சனைகளோ கொடுமைப் படுத்தும் போது இது வெளிய வந்துருமாம். சொறிஞ்சிக்கிட்டே இருக்க வேண்டியதுதான். அதுனாலதானோ என்னவோ இங்கிலீஷ்ல பேரு வெக்கும் போது கூட சொரியாசிஸ்னு வெச்சிருக்கான்.

பொதுவா இது தலையில தொடங்குமாம். எல்லாரும் பொடுகு நெனச்சு மொதல்ல கண்டுக்காம விட்டுருவாங்க. ஏதாவது டீவீல காட்டுற ஷாம்புகளைப் போட்டுக் குளிச்சிட்டு ஒன்னும் கேக்கலையே டாக்டர் கிட்ட போனா அவரு குண்டத் தூக்கிப் போடுவாரு. இது வந்து தோற்றத்தைப் பாதிக்கிற ஒரு நோய். தொழுநோயோ வெண்குட்டமோ மொதல்லயே தெரிஞ்சிட்டாப் போயிரும். ஆனா இது அப்படியில்லை. போனாலும் திரும்பத் திரும்ப வரும். தோற்றம் பாதிக்கப்படும் போது அவங்க மனம் ரொம்பப் பாதிக்கப் படும். மத்தவங்களோட ஒழுங்கா பழக முடியாது. கூட இருக்கிறவங்களும் ஒரு மாதிரி அருவெறுப்பு இருக்கும். இதுனால ஒடிஞ்சி நொடிஞ்சி போனவங்க நெறையப் பேரு. அவங்களுக்குக் கவுன்சிலிங் பண்ணக் கூட ஒழுங்கா ஒரு வசதி கிடையாது. பாவம்.

அந்த ஐயர், அதையெல்லாம் பெருசு பண்ணாம தீபாராதனை காட்டித் திருநீறு குடுத்தாரு. வாங்கிப் பூசிக்கிட்டேன். கோயில விட்டு வெளிய வந்து பாத்தாக் கோயில்பட்டி ஊர் முழுக்கப் பாக்கலாம். ஒரு பக்கம் வீடுகள். இன்னொரு பக்கம் நேஷனல் பொறியியல் கல்லூரி. ஒரு பாலிடெக்னிக். ஒரு பெண்கள் கல்லூரி. நீளமாக் கோடு போட்ட மாதிரி தேசிய நெடுஞ்சாலை. பச்சைப் பெயிண்ட் அடிச்ச மேம்பாலம். எல்லாத்தையும் பாத்துட்டு தெரிஞ்சவங்களுக்குப் போயிட்டு வர்ரேன்னு சொல்லீட்டுக் கழுகுமலைக்கு வண்டிய விட்டோம்.

தொடரும்

நான் சங்கரங்கோயில் எல்லாம் இல்லீங்க! ஆனா உங்களோட முந்தைய பதிவுகளில் இருந்து கோமதியம்மன் கோவிலை விட சங்கரங்கோயில் பிரியாணி பிரபலம்னு தெரிஞ்சிகிட்டேன்! கண்டுபிடிச்சிட்டேன்ல! கண்டுபிடிச்சிட்டேன்ல!
பி.கு: போற இடத்தில எல்லாம் இப்படி நல்லா வகை வகையா சாப்பிட வேண்டியது , அதை என்னைப்போல நல்ல சாப்பாடு சாப்பிட்டு நாளான பயககிட்டு சொல்லிக்காட்டி வயித்தெரிச்சலைக் கொட்டிக்க வேண்டியது. அதெப்படிய்யா! உங்களுக்கு மட்டும் அப்படி அமையுது. (பெங்களூரில் வலைப்பதிவாளர் சந்திப்பு பதிவை இளவஞ்சி பதிவில் படிச்சிட்டேன்):D

pradeepkt
09-05-2006, 06:05 AM
ஏய்யா ராகவனும் என்னை மாதிரி இளைச்சுத் துரும்பாப் போயிட்டாருங்கறீங்களா...
உங்களை மாதிரி ஆளுங்க கண்ணு படுமின்னுதானே நான் என்னுடைய சமீபத்திய போட்டோக்களைப் போடுவதில்லை.

mukilan
09-05-2006, 06:06 AM
அன்று பதினாலாம் நூற்றாண்டிலே ஜெர்மனியின் வீதிகளிலே ட்ரெட்மில்களில் சமத்துவம் வழிந்தோடிய போது அந்த மாவீரன் சொன்னான்..... (மறந்து போச்சே! யாராவது எடுத்துக் கொடுங்க சாமி!) ட்ரெட் மில்லை சொன்னா எனக்கென்ன கோபம். யாரைப்பார்த்து கேள்வி கேட்கிறீர்கள். ஒண்டிக்கி ஒண்டிக்கு வருகிறீர்களா?

pradeepkt
09-05-2006, 06:08 AM
தனி மனிதத் தாக்குதல் களை கண்டிக்கிறேன். இது கருத்து திணிப்பு. எதிர்க்கட்சிகள் ஊடகங்களைக் கையில் போட்டுக்கொண்டு செய்கிற புரட்டுத்தனம்.!! (தேர்தல் எQபெக்ட் பென்ஸூ கண்டுக்காதீங்க)
சரியாச் சொன்னீங்க முகில்ஸூ.
இந்தப் பென்ஸூ எப்பவுமே இப்படித்தான்... நெஞ்சில் வஞ்சம் கொண்டு நெஞ்சில் வஞ்சம் இல்லாதோரைக் கொஞ்சம் கொஞ்சம் வஞ்சம் தீர்க்காவிடில் இவருக்கும் துஞ்சும் நேரம் கொஞ்சம்தான் போலும்...

அட இது கலைஞர் விசு பேச்செல்லாம் கேட்ட எஃபெக்டு... :D :D :D

பென்ஸ்
09-05-2006, 06:13 AM
டென்சன் ஆகாதிங்க முகில்ஸ்...

பிரதிப்பு புதுசா டிரட்மில்லே வாங்கி இளச்சுட்டார்..
ராகவன் "கேல்த் கிளபில்" சேர்ந்து இளச்சுட்டார்...
சரவணன்.. கேள்பிரண்டை நினச்சு இளச்சுட்டார்...

நாமும் யாதாவது ஒரு முறையில் இளைத்துவிடலாம்.....

pradeepkt
09-05-2006, 06:15 AM
அன்று பதினாலாம் நூற்றாண்டிலே ஜெர்மனியின் வீதிகளிலே ட்ரெட்மில்களில் சமத்துவம் வழிந்தோடிய போது அந்த மாவீரன் சொன்னான்..... (மறந்து போச்சே! யாராவது எடுத்துக் கொடுங்க சாமி!) ட்ரெட் மில்லை சொன்னா எனக்கென்ன கோபம். யாரைப்பார்த்து கேள்வி கேட்கிறீர்கள். ஒண்டிக்கி ஒண்டிக்கு வருகிறீர்களா?
அட அட அட...
முகில்ஸூ... அப்ப அடுத்த ஐடி மினிஸ்டர் நீங்கதானா?
பின்றீங்கய்யா...

mukilan
09-05-2006, 06:20 AM
அட அட அட...
முகில்ஸூ... அப்ப அடுத்த ஐடி மினிஸ்டர் நீங்கதானா?
பின்றீங்கய்யா...

நான் 2 பேரு பேசினதையும் கலந்தடிச்சா நீரு நமக்கே வேட்டு வைக்கிறீரே! நமக்கு வேளாண்துறை கிடைத்தால் நல்லா இருக்குமே! ஆனா எங்க தாத்தா எந்தக் கட்சியிலும் இல்லையே!

mukilan
09-05-2006, 06:22 AM
டென்சன் ஆகாதிங்க முகில்ஸ்...

பிரதிப்பு புதுசா டிரட்மில்லே வாங்கி இளச்சுட்டார்..
ராகவன் "கேல்த் கிளபில்" சேர்ந்து இளச்சுட்டார்...
சரவணன்.. கேள்பிரண்டை நினச்சு இளச்சுட்டார்...

நாமும் யாதாவது ஒரு முறையில் இளைத்துவிடலாம்.....

என்னது நாமும்னு என்னையும் சேர்க்கிறீங்க. நான் அப்படியெல்லாம் இல்லீங்கோ! ஜஸ்ட் 20 கிலோ எக்ஸ்ட்ரா அவ்வள்வே! ஹ்ம்ம் விட்டா நம்மள அந்த லிஸ்ட்ல சேர்த்திடுவீங்க போல.

தாமரை
09-05-2006, 07:45 AM
நான் சங்கரங்கோயில் எல்லாம் இல்லீங்க! ஆனா உங்களோட முந்தைய பதிவுகளில் இருந்து கோமதியம்மன் கோவிலை விட சங்கரங்கோயில் பிரியாணி பிரபலம்னு தெரிஞ்சிகிட்டேன்! கண்டுபிடிச்சிட்டேன்ல! கண்டுபிடிச்சிட்டேன்ல!
பி.கு: போற இடத்தில எல்லாம் இப்படி நல்லா வகை வகையா சாப்பிட வேண்டியது , அதை என்னைப்போல நல்ல சாப்பாடு சாப்பிட்டு நாளான பயககிட்டு சொல்லிக்காட்டி வயித்தெரிச்சலைக் கொட்டிக்க வேண்டியது. அதெப்படிய்யா! உங்களுக்கு மட்டும் அப்படி அமையுது. (பெங்களூரில் வலைப்பதிவாளர் சந்திப்பு பதிவை இளவஞ்சி பதிவில் படிச்சிட்டேன்):D
ராகவன் சாப்பாட்டை தேடிப்போவதில்லை. அதுவா அமையுது. அவர் என்ன உளவுத்துறை வச்சு எங்க எங்க என்ன ஸ்பெஷல் என்று ஆராய்ந்தா போகிறார்? அதெல்லாம் சும்மா. ஏதோ போறார்.. கிடைக்கிறதை ரசிச்சு சாப்பிடுறார்.

வயிறு எரியாதீர்கள்.

gragavan
09-05-2006, 10:44 AM
நான் சங்கரங்கோயில் எல்லாம் இல்லீங்க! ஆனா உங்களோட முந்தைய பதிவுகளில் இருந்து கோமதியம்மன் கோவிலை விட சங்கரங்கோயில் பிரியாணி பிரபலம்னு தெரிஞ்சிகிட்டேன்! கண்டுபிடிச்சிட்டேன்ல! கண்டுபிடிச்சிட்டேன்ல!
பி.கு: போற இடத்தில எல்லாம் இப்படி நல்லா வகை வகையா சாப்பிட வேண்டியது , அதை என்னைப்போல நல்ல சாப்பாடு சாப்பிட்டு நாளான பயககிட்டு சொல்லிக்காட்டி வயித்தெரிச்சலைக் கொட்டிக்க வேண்டியது. அதெப்படிய்யா! உங்களுக்கு மட்டும் அப்படி அமையுது. (பெங்களூரில் வலைப்பதிவாளர் சந்திப்பு பதிவை இளவஞ்சி பதிவில் படிச்சிட்டேன்):Dஹி ஹி......கண்டுபிடிச்சிட்டீங்களா....என்ன பண்ணச் சொல்றீக. இளவஞ்சிதான் கூப்பிட்டு வாங்கன்னாரு. போனோம். ஹி ஹி.

gragavan
09-05-2006, 10:48 AM
அன்று பதினாலாம் நூற்றாண்டிலே ஜெர்மனியின் வீதிகளிலே ட்ரெட்மில்களில் சமத்துவம் வழிந்தோடிய போது அந்த மாவீரன் சொன்னான்..... (மறந்து போச்சே! யாராவது எடுத்துக் கொடுங்க சாமி!) ட்ரெட் மில்லை சொன்னா எனக்கென்ன கோபம். யாரைப்பார்த்து கேள்வி கேட்கிறீர்கள். ஒண்டிக்கி ஒண்டிக்கு வருகிறீர்களா?டான் பாஸ்கோவின் வீட்டுக்குள்லே வண்டு நுழைந்த பொழுது நடந்ததை வெளியே சொன்னால் என்ன ஆகும் தெரியுமா? போர் போர் என்று முழங்கிக் கொண்டே தூங்கினானே அந்த மாவீரன்.

இதையே வேற மாதிரி சொன்னா...

நகரும் நத்தை. கடிக்கும் எறும்பு. இவைகளுக்கெல்லாம் இல்லாத மானமும் ரோசமும் உனக்கெதற்கு என்று கேட்பதற்கு ஆளே இல்லையே.

இன்னொரு டைப்.

நான் கொள்ளையடிக்க வேண்டியதெல்லாம் கொள்ளையடித்து விட்டேன். இனிமேல் முடிவு தெரிந்த பிறகுதான் மிச்சத்தையும் கொள்ளையடிக்கனும்.

gragavan
09-05-2006, 10:52 AM
ராகவன் சாப்பாட்டை தேடிப்போவதில்லை. அதுவா அமையுது. அவர் என்ன உளவுத்துறை வச்சு எங்க எங்க என்ன ஸ்பெஷல் என்று ஆராய்ந்தா போகிறார்? அதெல்லாம் சும்மா. ஏதோ போறார்.. கிடைக்கிறதை ரசிச்சு சாப்பிடுறார்.

வயிறு எரியாதீர்கள்.ரொம்பச் சரியா சொன்னீங்க தாமரை. கிடைக்கறத ரசிச்சுச் சாப்பிட்டறதுதான் என்னோட வழக்கம். நம்ம ரசிச்சத அப்படியே எடுத்தும் விடுறது. நல்லாருக்கும்னு நெனச்சிக்கிட்டே மத்தவங்களும் சாப்பிட்டா நல்லாவே இருக்கும்.

தாமரை
12-05-2006, 09:07 AM
டென்சன் ஆகாதிங்க முகில்ஸ்...

பிரதிப்பு புதுசா டிரட்மில்லே வாங்கி இளச்சுட்டார்..
ராகவன் "கேல்த் கிளபில்" சேர்ந்து இளச்சுட்டார்...
சரவணன்.. கேள்பிரண்டை நினச்சு இளச்சுட்டார்...

நாமும் யாதாவது ஒரு முறையில் இளைத்துவிடலாம்.....
என்ன பென்ஸூ.. மூணு நாளா ரெய்ன் ரைடா? ரொம்ப கேள்விபட்டேன்... அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்ளலாமே.. உடல்நில அனுமதித்தால்..


அதுவும்,... மழையில நனைஞ்சுகிட்டே, செல்ஃபோன்ல என்னோட பேசற மாதிரி உங்க ஆளுக்கு ஜாடையா சேதி சொன்னீங்களே அதையும் சேர்த்துதான்.

மதி
12-05-2006, 12:57 PM
என்ன பென்ஸூ.. மூணு நாளா ரெய்ன் ரைடா? ரொம்ப கேள்விபட்டேன்... அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்ளலாமே.. உடல்நில அனுமதித்தால்..


அதுவும்,... மழையில நனைஞ்சுகிட்டே, செல்ஃபோன்ல என்னோட பேசற மாதிரி உங்க ஆளுக்கு ஜாடையா சேதி சொன்னீங்களே அதையும் சேர்த்துதான்.
இதென்ன புதுக் கதையெல்லாம்..~!

பென்ஸ்
12-05-2006, 01:42 PM
அட் போங்கையா... எதோ சிதம்பர ரகசியம் மாதிரி...
ஒன்னும் இல்லை... ஒரு சின்ன ஜலதோசம்... அவ்வளவுதான்.
அதுக்கு போயி ஏன் இவ்வளவு பில்டப்பு...

gragavan
15-05-2006, 07:52 AM
இந்தப் பேர நெறையப் பேரு கேள்விப் பட்டிருப்பீங்க. கொஞ்சப் பேரு பாத்திருப்பீங்க. ஆனா இந்தக் கோயிலோட பெருமையும் பழமையும் ஒங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்க வாய்ப்புகள் குறைவுன்னே நெனைக்கிறேன்.

தமிழகத்துல இருக்குற பழைய முருகன் கோயில்கள்ள இதுவும் ஒன்னு. குடவரைக் கோயில் வகையைச் சார்ந்தது. அதாவது மலையக் கொடஞ்சி கோயில் கட்டுறது. இன்னொரு பிரபலமான குடவரைக் கோயில் திருப்பரங்குன்றம். இந்தக் குடவரைக் கோயில்ல சாமியச் சுத்த முடியாது. ஏன்னா சாமிய குகைச் சுவத்துல செதுக்கீருப்பாங்க. அதுனால சுத்துனா முழு மலையையும் சுத்தனும். திருப்பரங்குன்றத்துலயும் மலைவலம் வருவாங்க. கழுகுமலைலயும் அப்படிச் செய்வாங்க.
தமிழ்நாட்டுல பெரிய கோயில்கள் எல்லாமே அரசாங்கத்தோட அறநிலையத்துறையோட கட்டுப்பாட்டுல இருக்கு. சில பழைய கோயில்கள்தான் தனியார் கிட்ட இருக்கு. கழுகுமலையும் அதுல ஒன்னு. எட்டையபுரம் சீமைச் சமீனுக்குச் சொந்தமான கோயில்தான் கழுகுமலை. ஒரு எட்டப்பன் தவறு செஞ்சிருக்கலாம். ஆனா அவருக்கு முன்னும் பின்னும் இருந்தவங்க நல்லாவே ஆட்சி செஞ்சிருக்காங்க. இந்தக் கோயிலையும் இன்னமும் நல்லாவே பராமரிச்சிக்கிட்டு வர்ராங்க.

வறண்ட பூமிதான். ஆனா கழுகுமலைக் கோயில் கொளத்துல நான் தண்ணியில்லாமப் பாத்ததில்லை. அதுல எறங்கி நின்னா குளுகுளுன்னு வெயிலுக்குச் சொகமா இருந்துச்சு. அப்படியே கால் கழுவீட்டுப் போனோம். கோயிலோட பழமையும் குளுமையும் ஒன்னா வரவெத்தது. இங்க மயில் மேல உக்காந்த முருகன். வழக்கமா மயில் வலப்பக்கமா திரும்பீருக்கும். இங்க இடப்பக்கமா திரும்பீருக்கும். அமைதியா கூட்டமில்லாம இருந்துச்சு. பொறுமையாக் கோயிலச் சுத்திப் பாத்துட்டு வெளிய வந்தோம்.

கழுகுமலைக்கு இன்னும் ரெண்டு பெருமைகள் இருக்கு. அங்க சமணர்கள் வாழ்ந்த இடம் இன்னமும் இருக்கு. அதாவது பழைய சமணக் கோயில். இப்ப இருக்குற ஊர விட்டு ஒதுக்குப் புறமா இருக்கு. ஆனா நாங்க போக முடியலை. காரணம் நேரமில்லாமைதான்.

அண்ணாமலை ரெட்டியார்னு கேள்விப் பட்டிருப்பீங்க. காவடிச் சிந்து எழுதுறதுல ரொம்பப் பெரிய ஆளு. எல்லாம் முருகன் கொடுத்ததுதான. முருகன் மேல அத்தன காவடிச் சிந்து எழுதீருக்காரு. ஒன்னொன்னும் தமிழருவிதான். அவரோட சொந்த ஊர் கழுகுமலைதான்.
வண்ண மயில் முருகேசன்
குற வள்ளி பதம் பணி நேசன்
உரை வளமே தரு
கழுகாசலபதி கோயிலின்
வளம் நான் மறவாதே
இப்படி எழுதியிருக்காரு அவரு காவடிச் சிந்துல. நெறைய இருக்கு. தெரிஞ்சவங்க ஒன்னொன்னா எடுத்துச் சொன்னா நமக்கும் கேக்குறதுக்கு நல்லாயிருக்கும்.

கோயில்பட்டீல இருந்து நேராப் போனா திருநெல்வேலி. ஆனா கோயில்பட்டி தாண்டி கொஞ்ச தூரத்துலயே இடப்பக்கமா திரும்பி உள்ள போனா கழுகுமலை வரும். அங்கிருந்து அப்பிடியே நேராப் போனா சங்கரங்கோயில் வரும். அப்படியே திரும்பி வளைச்சிக்கிட்டு போனா நேராத் திருநெல்வேலிக்கே கொண்டு போயிரும்.

கோயில்பட்டீல இருந்து நேரா திருநெல்வேலி போனா வழியில கயத்தாறு வரும். கட்டபொம்மனத் தூக்குல போட்ட எடத்தப் பாத்திருக்கலாம். ஆனா நாங்க கழுகுமலை சங்கரங்கோயில்னு போனதால அதப் பாக்கல. நாங்க சங்கரங்கோயில் போறப்போ கிட்டத்தட்ட 11.30 மணி. நல்ல வெயில். 12 மணிக்கு நட வேற சாத்தீருவாங்க. அதுனால விறுவிறுன்னு வண்டிய நிறுத்தீட்டு கோயிலுக்குள்ள போனோம்.

சங்கரங்கோயிலும் பழைய கோயில்தான். அந்தக் காலத்துல நெற்கட்டுஞ்செவல் சமீனுக்குச் சொந்தமா இருந்திருக்கு. கோயிலுக்குள்ள போகும் போது பூலித்தேவனை நெனைக்காமப் போக முடியாது.
நெற்கட்டும் செவல் சீமைக்குத் தலையா இருந்தவர் பூலித்தேவர். இவரு கூடதான் வெள்ளக்காரன் மொதமொதலா இந்தியாவுல சண்ட போட்டான். ஆனா அத வரலாறுல படிக்கிறதே இல்லை. சிப்பாய்க் கலகத்துல இருந்துதான் தொடங்குவாங்க. மொதப் போர்ல பூலித்தேவருக்குத்தான் வெற்றி. அடுத்த போர்ல வஞ்சகமாக் காட்டிக் குடுத்தான் கான் சாகிப்ங்குறவன். அட...அதாங்க கமலோட வாழ்க்கை லட்சியப் பாத்திரம் மருதநாயகம். கமலுக்கு வேணும்னா இவர் கதாநாயகனா இருக்கலாம். ஆனா வரலாற்றுக்கு எதிர்நாயகன்.

இப்ப வெள்ளக்காரன் பூலித்தேவரப் பிடிச்சாச்சு. கொண்டு போறாங்க. எதுக்கு? பேருக்கு விசாரணைன்னு வெச்சு தூக்குல போடத்தான். வழியில சங்கரங்கோயில். குலதெய்வத்தக் கும்புட அனுமதி கேட்டாரு பூலித்தேவர். வெள்ளக்காரனும் கோயிலச் சுத்திக் காவல் போட்டு இவர உள்ள அனுப்புனான். உள்ள போனவரு போனவருதான். எங்க போனாரு...ஏதுன்னு கண்டு பிடிக்க முடியலை. அவர் காணாமப் போன எடத்தைக் குறிச்சி மரப்பந்தல் போட்டு வெச்சிருக்காங்க. இவரக் காணம்னு ரெக்கார்டுல எழுதிக் கேச மூடீட்டான் வெள்ளக்காரன். ஆனா ஒன்னு...அடுத்து பக்கத்தூரு பாஞ்சாலங்குறிச்சிக்காரனப் பிடிச்சப்ப...எங்கயும் நிப்பாட்டலை. நேரா கயத்தாறு. விசாரணை. தூக்கு. வெள்ளக்காரன் சுதாரிச்சிக்கிட்டான்.

தொடரும்.

gragavan
15-05-2006, 07:56 AM
http://photos1.blogger.com/blogger/2224/1103/1600/KazhugumalaiKoyilEntrance.jpg
http://photos1.blogger.com/blogger/2224/1103/1600/Kazhugumalai_Padithurai.jpg
http://photos1.blogger.com/blogger/2224/1103/1600/Kazhugumalai_TheppakulaEntrance.jpg
http://photos1.blogger.com/blogger/2224/1103/1600/Kazhugumalai_Theppakulam.jpg

புகைப்படங்களை இங்கே காணலாம்

பென்ஸ்
15-05-2006, 08:23 AM
ராகவன்....
கட்டுரையின் இடையில் வரலாறும் கலந்து வரும் போது
இன்னும் கலக்கலா இருக்கு..... தொடருங்கள்....

எப்படியப்பு... மணிரத்தினம் மாதிரி எல்லாம் போட்டா எடுத்து இருக்கீங்க.... :rolleyes: :rolleyes:
நிழல் மட்டும் தெரியுது.. ஆளையே காணோம்...:D :D :D

pradeepkt
15-05-2006, 11:55 AM
அடுத்துக் கழுகுமலை முருகன் கோயிலா?
பாக்கவே நல்லாருக்கே... அந்த மணிரத்னம் படத்துல நீங்களும் இருக்கீகளா ஐயா

gragavan
15-05-2006, 01:29 PM
ராகவன்....
கட்டுரையின் இடையில் வரலாறும் கலந்து வரும் போது
இன்னும் கலக்கலா இருக்கு..... தொடருங்கள்....

எப்படியப்பு... மணிரத்தினம் மாதிரி எல்லாம் போட்டா எடுத்து இருக்கீங்க.... :rolleyes: :rolleyes:
நிழல் மட்டும் தெரியுது.. ஆளையே காணோம்...:D :D :D ஹி ஹி அதெல்லாம் டெக்கினிக்கி....நமக்குத்தான் அந்த ஐடியாவெல்லாம் வரும்...எல்லாருக்கும் வருமா?

gragavan
15-05-2006, 01:30 PM
அடுத்துக் கழுகுமலை முருகன் கோயிலா?
பாக்கவே நல்லாருக்கே... அந்த மணிரத்னம் படத்துல நீங்களும் இருக்கீகளா ஐயாஇருக்கேன். இருக்கேன். எங்கன்னு கண்டு பிடிங்க பாக்கலாம்..........

mukilan
15-05-2006, 02:47 PM
இருக்கேன். இருக்கேன். எங்கன்னு கண்டு பிடிங்க பாக்கலாம்..........
இடது பக்கம் சுவரோரமா சாய்ஞ்சிக்கிட்டு இருக்கிறீங்களே! கழுகுமலைக்கு நான் போனதில்லையே. எல்லாம் நம்ம ஊரு பக்கம்தான். எப்படியாவது இந்த் முறை போயிட்டு வந்திடறேன். எப்படியோ ராகவன் உங்க எழுத்து வழியா நம்ம ஊரு பக்கமும் இம்புட்டு அழகா இடங்கள் இருக்குன்னு தெரியறப்போ சந்தோஷமா இருக்கு. இன்னமும் மீதமிருக்கும் அனுபவங்களையும் சங்கரன்கோயில் அனுபவங்களையும் எழுதுங்கள்.

gragavan
16-05-2006, 03:45 AM
இடது பக்கம் சுவரோரமா சாய்ஞ்சிக்கிட்டு இருக்கிறீங்களே! கழுகுமலைக்கு நான் போனதில்லையே. எல்லாம் நம்ம ஊரு பக்கம்தான். எப்படியாவது இந்த் முறை போயிட்டு வந்திடறேன். எப்படியோ ராகவன் உங்க எழுத்து வழியா நம்ம ஊரு பக்கமும் இம்புட்டு அழகா இடங்கள் இருக்குன்னு தெரியறப்போ சந்தோஷமா இருக்கு. இன்னமும் மீதமிருக்கும் அனுபவங்களையும் சங்கரன்கோயில் அனுபவங்களையும் எழுதுங்கள்.இப்பத்தானே ரெண்டாம் நாள் தொடங்கீருக்கு.....மொத்தம் மூனு நாளாச்சே...........கண்டிப்பா இன்னமும் வரும்......

gragavan
22-05-2006, 05:48 AM
9. கோமதி செஞ்ச சேட்டை

சங்கரங்கோயில் எனக்குச் சின்ன வயசுலயே பழக்கம். தூத்துக்குடீல அத்த வீட்டுல இருந்து படிச்சப்போ மாதத்துக்கு ஒரு வாட்டி அங்க போவோம். காலைலயே எந்திரிச்சி அத்த இட்டிலி அவிச்சி அதோட கெட்டித் துவையல் அரைச்சு, அதுவும் கெட்டுப் போகாம இருக்க அதச் சுட வெச்சுக் கொண்டு வருவாங்க. கோயில்ல சாமி கும்பிட்டுட்டு அங்க குளத்தடில உக்காந்து சாப்பிட்டிட்டு பகல்ல கெளம்பி வருவோம். மறக்காத நினைவுகள்.

அதே போலச் சங்கரங்கோயில் பிரியாணியும் நல்லாயிருக்கும். அங்க ஒரு சாயிபு கடை இருக்கு. அதுல பிரியாணி பிரமாதமா இருக்கும். அங்க போன பல சமயங்கள்ள அதைப் பார்சல் வாங்கீட்டும் வந்திருக்கோம்.

இப்பிடியாகப் பட்ட சங்கரங்கோயிலுக்குப் போறோம்னதுமே ரெண்டு வாங்கனும்னு உறுதியா இருந்தேன். ஒன்னு புத்து மண்ணு. இன்னொன்னு பிரியாணி. புத்து மண்ணக் குழச்சி நெத்தீல புருவ நடுவுல வெச்சுக்கிறது ரொம்ப நாள் பழக்கம். அந்தப் புத்து மண்ண உருட்டிச் சின்னச் சின்னக் குழாயா பாக்கெட்ல போட்டு விப்பாங்க. புத்துமண் குழாயோட தண்டியப் பொருத்து விலை கூடிக் கொறயும்.
கோயிலுக்குள்ள நுழையும் போதே கடைகள்ள புத்துமண் எக்கச்சக்கமா கண்ணுல பட்டது. திரும்ப வர்ரப்ப வாங்கிக்கலாம்னு நேரா உள்ள போனோம்.

மொதல்ல கண்ணுல பட்டது பூலித்தேவன் அறை. அவர் இறைவனோட இணைஞ்சதாச் சொல்ற எடத்துல அழகா மரவேலைப்பாடு செஞ்சிருக்காங்க. உண்மையிலே பிரமாதம். குறிப்பா சின்னச் சின்ன அழகான மரவேலைப்பாடுகள்.

அடுத்து சங்கரனைப் பாத்தோம். தோடுடைய செவியன். விடை ஏறியோர் தூவெண்மதி சூடியவன் இங்கு ஆவுடையாராக காட்சி தந்தான். வணங்கி விட்டு அப்படியே நேராகச் சங்கரகோமதியைக் கண்டோம். சரிவளை. விரிசடை. எரிபுரை வடிவினள். அன்பொழுக அருள் செய்து கொண்டிருந்தாள். வணங்கி விட்டுச் சுற்றி வந்தோம்.
மாவிளக்குப் போடுறத இங்க நெறையப் பாக்கலாம். எனக்கும் இங்க எங்கத்த மாவிளக்குப் போட்டிருக்காங்கன்னு நெனைக்கிறேன். சரியா நெனவு இல்ல. பச்சரிசிய இடிச்சி வெல்லஞ் சேத்து இடிச்சி விளக்கு செஞ்சி அதுல குழியாக்கி நெய் நெரப்பி ஏத்துறதுதான் மாவிளக்கு. கண்ணு வலி சரியாப் போச்சுன்னா வாழையெலைல மாவிளக்கு வெச்சி யாருக்கு வேண்டுனாங்களோ அவங்க கண்ணுக்கு மேலா வெச்சிக் காட்டுறது. வயித்துவலிக்கு வயித்து மேல வெக்கிறது. இப்பிடி நெறைய.
அதே மாதிரி அங்க ஒரு தொட்டீல புத்து மண்ணப் போட்டு வெச்சிருப்பாங்க. வேணுங்கிறவங்க எடுத்துக்கலாம்.

அப்புறம் சங்கரநாராயணர். பாதி சங்கரன். பாதி நாராயணன். ஒரு பக்கம் வில்வம். இன்னொரு பக்கம் துளசி. ஒரு பக்கம் புலித்தோல். இன்னொரு பக்கம் பட்டுத்துணி. ஒரு பக்கம் பாம்பு தொங்குது. இன்னொரு பக்கம் மணிமாலைகள் தொங்குது. இப்படி ரெண்டு வேறுபட்ட துருவங்கள் ஒன்னா இருக்குறதுதான் சங்கரநாராயணர். அவருக்கும் ஒரு வணக்கம் போட்டுட்டு நேரா கோமதி இருக்கிற எடத்துக்குப் போனோம்.

கோமதீங்குறது ஆனையோட பேரு. ஒரு பெரிய கொட்டாரத்துல இருந்துச்சு. நல்லா தென்ன மட்டைகள உரிச்சித் தின்னுக்கிட்டிருந்த கோமதி கிட்டப் போயி ஆசீர்வாதம் வாங்கினேன். காசு கொடுத்துதான். அப்ப இன்னொரு நண்பனும் பக்கத்துல வந்து நின்னான். அவனுக்குக் கொஞ்சம் நடுக்கம்னு வெச்சுக்கோங்களேன். ஏதோ எப்படியோ வந்துட்டான்.

அதுவும் கழுத்துல ரோஜா மாலையோட. சந்நிதீல போட்ட மாலையோட வந்து நின்னான். கோமதி தும்பிக்கைய நீட்டி அவனத் தடவிப் பாத்தா. ரோஜா மாலைய ரெண்டு வாட்டி மோந்து பாத்தா. அந்த வாசம் அவளுக்கு ரொம்பப் பிடிச்சிப் போச்சு. என்னடா தடவுதே மோந்து பாக்குதேன்னு இவனுக்கு லேசா ஆட்டம்.
ஆனா கோமதி விடலை. மாலையத் தும்பிக்கைல பிடிச்சு லேசா இழுத்தா. இவன் கிடுகிடுன்னு ஆடி என்ன பண்றதுன்னு முழிக்கிறான். ஓடக் கூடத் தோணாம. நாந்தான் மாலையக் கழட்டிக் குடுன்னு சொன்னேன். சொன்னதும் படக்குன்னு குனிஞ்சி மாலையக் கழட்டீட்டான்.

கோமதி அப்படியே அந்த மாலையக் கால்ல வெச்சு பட்டுன்னு முடிச்ச உடைச்சது. இப்ப மாலை நீளமான பூச்சரமாச்சு. தும்பிக்கையால பிடிச்சிக்கிட்டே தும்பிக்கையால சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு ரோஜாப் பூக்கள உருவி லபக்குன்னு வாயில போட்டுக்கிட்டா. ரெண்டு சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருதான்...அப்புறம் நாருதான் மிச்சம். ஒரு சந்தோஷம் அவளோட மொகத்துல.

கோமதிக்கு டாட்டா காட்டீட்டு வெளியே வந்தோம். நான் புத்து மண் வாங்கினேன். தினைமாவும் வெல்லமும் கொஞ்சம் நெய்யும் கலந்து நண்பன் வாங்கிச் சாப்பிட்டான். இப்போ நல்ல பசி வேளை. எல்லாருக்கும் பசி. வெயில் வேற. அவதியவதியா ஓடி வண்டீல ஏறுனோம். ஆனா சாப்பாடு என்னாச்சு?

தொடரும்.....

gragavan
22-05-2006, 06:39 AM
புகைப்படங்கள் இங்கு..........

http://photos1.blogger.com/blogger/2224/1103/1600/SKoyil_Gomathai.jpg
http://photos1.blogger.com/blogger/2224/1103/1600/SKoyil_GomathiAndRose.jpg
http://photos1.blogger.com/blogger/2224/1103/1600/SKoyil_SpeakingToThePagan.jpg

தாமரை
23-05-2006, 04:28 AM
ராகவன்,

இந்த வாரம் நான் மதுரை, திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் செல்ல இருக்கிறேன்..

என்ன சாப்பிடலாம்? எங்கு சாப்பிடலாம்..

நீங்கள் இதுக்குன்னு ஒரு பிளாக் எழுதினால் என்ன?

gragavan
23-05-2006, 04:46 AM
ராகவன்,

இந்த வாரம் நான் மதுரை, திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் செல்ல இருக்கிறேன்..

என்ன சாப்பிடலாம்? எங்கு சாப்பிடலாம்..

நீங்கள் இதுக்குன்னு ஒரு பிளாக் எழுதினால் என்ன?அதத்தான் அப்பப்ப எழுதுறேனே...மதுரைக்குப் போனீங்கன்னா...சைவச் சாப்பாடுக்கு காலேஜ் ஹவுஸ் லாட்ஜுக்குள்ள இருக்குற ரெஸ்டாரண்ட்டுக்குப் போங்க. நல்லாயிருக்கும். அசைவத்துக்கு....எங்கன்னு தெரியலை.....பிரதீப்புதான் சொல்லனும்.

திருச்செந்தூருன்னா மணி ஐயர் ஓட்டல்தான். அதான் பெஸ்ட். ராமேசுவரம் போனதில்லையே........

mukilan
23-05-2006, 05:49 AM
மதுரையில நான் கொஞ்ச நாள் இருந்தேங்கற தகுதியில் சின்ன தகவல்
மதுரை இட்லிக்கடைன்னு (முருகன் இட்லிக்கடை) ஒன்னு தல்லாகுளத்துக்குப் பக்கத்துல இருக்கு.

அப்புறம் அம்மா மெஸ், அம்சவல்லி புரோட்டாக்கடைன்னு மதுரைல அசைவ உணவகங்கள் பிரபலம். வசந்தபவன் கூட முன்னர் நல்லா இருந்துச்சு.

mukilan
23-05-2006, 05:49 AM
புகைப்படங்கள் இங்கு..........

http://photos1.blogger.com/blogger/2224/1103/1600/SKoyil_Gomathai.jpg
http://photos1.blogger.com/blogger/2224/1103/1600/SKoyil_GomathiAndRose.jpg
http://photos1.blogger.com/blogger/2224/1103/1600/SKoyil_SpeakingToThePagan.jpg

எல்லாம் சரி, மொட்டை எப்போ?

பென்ஸ்
23-05-2006, 06:18 AM
யப்பு.. அவரு இப்பதான் இரண்டாவது நாளையே துவங்கி இருக்கார்...
மொட்டை மூன்றாவது நாள் கடைசியில் தான்.... ஏன் அவசர படுறீரு...

mukilan
23-05-2006, 06:37 AM
யப்பு.. அவரு இப்பதான் இரண்டாவது நாளையே துவங்கி இருக்கார்...
மொட்டை மூன்றாவது நாள் கடைசியில் தான்.... ஏன் அவசர படுறீரு...

உங்களுக்கென்ன நேராவே பார்த்திட்டீர். என்னைப் போல இருக்கும் ஏகப் பட்ட மக்களுக்காக ஒரு பொது நலப் பாங்கோடுதான் கேட்கிறேன்.

gragavan
23-05-2006, 12:06 PM
யப்பு.. அவரு இப்பதான் இரண்டாவது நாளையே துவங்கி இருக்கார்...
மொட்டை மூன்றாவது நாள் கடைசியில் தான்.... ஏன் அவசர படுறீரு...அதான.....ரெண்டாவது நாள் பாதிதான வந்திருக்கு. இன்னும் மூனு பதிவுல மொட்டை படம் வரலாம்.

pradeepkt
24-05-2006, 10:58 AM
ராகவா,
ஏய்யா நண்பரை கோமதிகிட்ட வம்பு பண்ண விட்டீங்க, நீங்க பக்கத்துல போயிருந்தா ஔவையாரு மாதிரி ஒரு பாட்டைப் பாடி பயமுறுத்தி இருக்கலாமில்ல?
சீக்கிரம் உங்களுக்கு மொட்டை போட்டு பாக்கணுமின்னு எங்களுக்கெல்லாம் கொள்ளை ஆசை :)

pradeepkt
24-05-2006, 11:03 AM
மதுரையில நான் கொஞ்ச நாள் இருந்தேங்கற தகுதியில் சின்ன தகவல்
மதுரை இட்லிக்கடைன்னு (முருகன் இட்லிக்கடை) ஒன்னு தல்லாகுளத்துக்குப் பக்கத்துல இருக்கு.

அப்புறம் அம்மா மெஸ், அம்சவல்லி புரோட்டாக்கடைன்னு மதுரைல அசைவ உணவகங்கள் பிரபலம். வசந்தபவன் கூட முன்னர் நல்லா இருந்துச்சு.
தல்லாகுளத்துக்குப் பக்கத்துல இருக்குறது முருகன் இட்லிக் கடை இல்லை. அங்க பேமஸூ முதலியார் இட்லிக் கடை. முருகன் சைவம், முதலியார் அசைவம் :D

அம்சவல்லி பவன் அருமை இங்க ஊரு விட்டு ஊரு வந்த பெறவுதான் தெரியுது. வைகை ஆத்துப் பாலம் தாண்டி நெல்பேட்டை வந்து சிந்தாமணி தியேட்டர் தாண்டி கொஞ்சம் முன்னாடி போனா இடது கைப் பக்கம் வரும், அம்சவல்லி பவன். தெரிஞ்சு வச்சாங்களோ தெரியாம வச்சாங்களோ, அங்க பிரியாணியும் புரோட்டாவும் அம்சமோ அம்சம்!

காலேஜூ ஹவுஸ் ஹோட்டல் சைவப் பிரியர்களுக்கு ரொம்பப் புடிக்கும். அங்கே ஆனியன் ரவா எனக்கு ரொம்பப் புடிக்கும். காலேஜூ ஹவுஸ் வரைக்கும் போனா, முன்னாடியே பிரேமா விலாஸ் இருக்கு. சாயங்காலம் 6 மணிக்குப் போனா சுடச்சுட அல்வா தொன்னையில தருவாக. கூடவே மென்னுக்கிற கொஞ்சம்போல காராபூந்தி! அடடா! செல்வன், மிஸ் பண்ணிறாதீங்க.

அழகரைப் பாக்குற பிளான் இருந்தா போற வழியில தல்லாகுளத்துல அம்மா மெஸ் இருக்கு. கண்டிப்பா ஒரு வாய் சாப்பிட்டுப் போங்க.

gragavan
24-05-2006, 01:22 PM
ராகவா,
ஏய்யா நண்பரை கோமதிகிட்ட வம்பு பண்ண விட்டீங்க, நீங்க பக்கத்துல போயிருந்தா ஔவையாரு மாதிரி ஒரு பாட்டைப் பாடி பயமுறுத்தி இருக்கலாமில்ல?
சீக்கிரம் உங்களுக்கு மொட்டை போட்டு பாக்கணுமின்னு எங்களுக்கெல்லாம் கொள்ளை ஆசை :)ஐயா அந்தப் படத்தைப் பாருங்க....நல்லாத் தெரியும். நான் குனிஞ்சி ஆசி வாங்குனப்புறம். நான் எந்திரிக்கிறதுக்கு முன்னாடியே கூட கோமதி அந்த மாலைய மோந்து பாக்குறதப் பாருங்க.....

gragavan
24-05-2006, 01:24 PM
தல்லாகுளத்துக்குப் பக்கத்துல இருக்குறது முருகன் இட்லிக் கடை இல்லை. அங்க பேமஸூ முதலியார் இட்லிக் கடை. முருகன் சைவம், முதலியார் அசைவம் :D

அம்சவல்லி பவன் அருமை இங்க ஊரு விட்டு ஊரு வந்த பெறவுதான் தெரியுது. வைகை ஆத்துப் பாலம் தாண்டி நெல்பேட்டை வந்து சிந்தாமணி தியேட்டர் தாண்டி கொஞ்சம் முன்னாடி போனா இடது கைப் பக்கம் வரும், அம்சவல்லி பவன். தெரிஞ்சு வச்சாங்களோ தெரியாம வச்சாங்களோ, அங்க பிரியாணியும் புரோட்டாவும் அம்சமோ அம்சம்!

காலேஜூ ஹவுஸ் ஹோட்டல் சைவப் பிரியர்களுக்கு ரொம்பப் புடிக்கும். அங்கே ஆனியன் ரவா எனக்கு ரொம்பப் புடிக்கும். காலேஜூ ஹவுஸ் வரைக்கும் போனா, முன்னாடியே பிரேமா விலாஸ் இருக்கு. சாயங்காலம் 6 மணிக்குப் போனா சுடச்சுட அல்வா தொன்னையில தருவாக. கூடவே மென்னுக்கிற கொஞ்சம்போல காராபூந்தி! அடடா! செல்வன், மிஸ் பண்ணிறாதீங்க.

அழகரைப் பாக்குற பிளான் இருந்தா போற வழியில தல்லாகுளத்துல அம்மா மெஸ் இருக்கு. கண்டிப்பா ஒரு வாய் சாப்பிட்டுப் போங்க.எய்யா...இந்த மொதலியாரு கடைலதானா கறித்தோச போடுறது. மொந்தையா தோசையச் சுட்டு அதுமேல கறிவறுவலு வெச்சிக் குடுக்குறது...

mukilan
24-05-2006, 04:47 PM
தல்லாகுளத்துக்குப் பக்கத்துல இருக்குறது முருகன் இட்லிக் கடை இல்லை. அங்க பேமஸூ முதலியார் இட்லிக் கடை. முருகன் சைவம், முதலியார் அசைவம் :D

அம்சவல்லி பவன் அருமை இங்க ஊரு விட்டு ஊரு வந்த பெறவுதான் தெரியுது. வைகை ஆத்துப் பாலம் தாண்டி நெல்பேட்டை வந்து சிந்தாமணி தியேட்டர் தாண்டி கொஞ்சம் முன்னாடி போனா இடது கைப் பக்கம் வரும், அம்சவல்லி பவன். தெரிஞ்சு வச்சாங்களோ தெரியாம வச்சாங்களோ, அங்க பிரியாணியும் புரோட்டாவும் அம்சமோ அம்சம்!

காலேஜூ ஹவுஸ் ஹோட்டல் சைவப் பிரியர்களுக்கு ரொம்பப் புடிக்கும். அங்கே ஆனியன் ரவா எனக்கு ரொம்பப் புடிக்கும். காலேஜூ ஹவுஸ் வரைக்கும் போனா, முன்னாடியே பிரேமா விலாஸ் இருக்கு. சாயங்காலம் 6 மணிக்குப் போனா சுடச்சுட அல்வா தொன்னையில தருவாக. கூடவே மென்னுக்கிற கொஞ்சம்போல காராபூந்தி! அடடா! செல்வன், மிஸ் பண்ணிறாதீங்க.

அழகரைப் பாக்குற பிளான் இருந்தா போற வழியில தல்லாகுளத்துல அம்மா மெஸ் இருக்கு. கண்டிப்பா ஒரு வாய் சாப்பிட்டுப் போங்க.

இந்தக் குழப்பம் இருந்ததாலதான் நான் அதை அடைப்புக்குறிக்குள்ள அடைச்சிட்டேன். :D ஆமா தி.நகர்ல இருக்கிற மதுரை இட்லிக்கடை பிராஞ்ச் உங்களுக்குத்தெரியுமா?

gragavan
25-05-2006, 04:45 AM
இந்தக் குழப்பம் இருந்ததாலதான் நான் அதை அடைப்புக்குறிக்குள்ள அடைச்சிட்டேன். :D ஆமா தி.நகர்ல இருக்கிற மதுரை இட்லிக்கடை பிராஞ்ச் உங்களுக்குத்தெரியுமா?தி.நகர்ல முருகன் இட்டிலிக் கடை இருக்கு. நல்லாவே இருக்கு. அதுல பாருங்க....சாம்பார் வடைன்னு ஒரு பெரிய வடையை தொன்னைல வெச்சி....கொஞ்சம் தண்ணியா இருக்குற மாதிரி சாம்பார அதுல ஊத்தி...சொதசொதன்னு ஊறியும் போகாம மொறுமொறுன்னும் இல்லாம அந்த வடை...அடடா! அதே போல ஒரு குழிக்கரண்டி பொடிய எலைல ஊத்தி...அதக் குழிச்சி...அதுல எண்ணைய விடுவாங்க....அந்தப் பொடி நல்லா இருக்கும்.

gragavan
29-05-2006, 03:49 AM
10. சாப்பாட்டுச் சண்டையும் சாயிபு பிரியாணியும்

ஏற்கனவே நான் சங்கரங்கோயில் பிரியாணி பத்திச் சொல்லியிருந்தேன். அதுனால அதச் சாப்பிடனும்னு குறியா இருந்தேன். மொதல்ல இருந்தே நண்பர்கள் கிட்ட அதப் பத்திச் சொல்லியிருந்தேன்.

ஆனா எங்க குளுவுல சைவமும் அசைவமும் சரி பாதி. அதுல ஒரு அசைவக்காரனும் கோயில் கோயிலாப் போறதால சைவமாயிருந்தான். யார் வர்ராங்களோ வரலையோ நான் போறதா முடிவு கட்டீருந்தேன்.
அதுனால வண்டிய நேரா பிரியாணி ஓட்டலுக்கு ஓட்டச் சொன்னேன். டிரைவர் கோயில்பட்டிக்காரர். அவருக்குக் கடை நல்லாத் தெரிஞ்சிருந்தது. ஆனா எல்லாரும் வண்டிய அங்க விடக்கூடாதுன்னு சொன்னாங்க. எல்லாரும் சாப்பிடுற மாதிரி ஓட்டலுக்குப் போகனும்னு சொன்னாங்க.

சங்கரங்கோயில்ல சைவச் சாப்பாடு அவ்வளவு நல்லாயிருக்காது. அரமணி பொறுத்துக்கோங்க. திருநெல்வேலீல நல்ல சாப்பாடு வாங்கித்தர்ரேன். ஒரு அஞ்சு நிமிசம் கொடுத்தா நான் பார்சல் வாங்கிக்கிறேன். அப்புறமா நேரா திருநெல்வேலி போலாம்னு சொன்னேன்.

கேட்டாத்தானே. அதெப்படி. இவ்வளவு பெரிய கோயில் இருக்கு. இங்க சைவச் சாப்பாடு கிடைக்காதான்னு ஒருத்தன் கேட்டான்.
கிடைக்கும். ஆனா அவ்வளவு நல்லாயிருக்காது. திருநெல்வேலிக்குப் போயிரலாம்னு சொன்னா அவனுக்குப் புரியலை.

கோயிலுக்கு வந்துருக்குறப்ப ஏன்டா இதெல்லாம்....நாளைக்கு மொட்டையெல்லாம் போட்டுட்டு அப்புறமா சாப்பிடலாம். இன்னைக்கே இன்னொரு கோயிலுக்குப் போகனும்னு இன்னொருத்தன் சொன்னான்.

"ஒங்கள நான் சாப்பிடச் சொல்லல. அதே வேளைல என்னோட சாப்பாடு வழக்கத்துல யாரும் தலையிடாதீங்க. நான் இங்க நேரமாக்க மாட்டேன். அஞ்சே நிமிசம். பார்சல் வாங்கிக்கிறேன். அப்புறம் நேராத் திருநெல்வேலிதான். அங்க நல்ல ஓட்டலுக்கு ஒங்களக் கூட்டீட்டுப் போறேன்"னு சொன்னேன். ஒருத்தனும் கேக்கலை.

இன்னொருத்தன் வேற மாதிரி ஆரம்பிச்சான். "ராகவா! நீனு பர்லில்லாந்தரே நமகெல்லாம் ஊட்டா பேடா...நாவு ஏனு தினல்லா! (ராகவா நீ வரலைன்னா எங்களுக்கெல்லாம் சாப்பாடு வேண்டாம். நாங்க எதுவும் திங்க மாட்டோம்.)"

நானும் விடலை. "சரி. நீவேனு தின பேடா. நானு தின பேக்கு. நீவெல்லா இல்லிரி. நானு ஹோகி பர்த்தினி. (சரி. நீங்க ஒன்னும் திங்க வேண்டாம். நான் திங்கனும். நீங்கள்ளாம் இங்கயே இருங்க. நான் போயிட்டு வர்ரேன்.)"

இதென்னடா வம்பாப் போச்சுன்னு எல்லாரும் முழிக்கிறாங்க. சரீன்னு பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். அவங்கள அங்கயே ஒரு சைவ ஓட்டல்ல எறக்கி விட்டுட்டு நானும் இன்னொருத்தனும் பிரியாணி திங்கப் போறதுன்னு.

ஒரு ரொம்பச் சுமாரான ஓட்டல் (அதுதான் அங்க ரொம்பப் பிரமாதம்) ஒன்னுல அவங்கள விட்டுட்டு நானும் இன்னொருத்தனும் போயி பிரியாணிய வெட்டுனோம். திருப்தியா முடிச்சிட்டு வந்தா இங்க ஒவ்வொருத்தனும் பேருக்குத் தின்னு வெச்சிருக்கானுக. ஒன்னும் சரியில்லை போல. எல்லாரும் ஒரு அர மணி நேரம் பொறுத்திருந்தா திருநெல்வேலீல நல்ல சாப்பாடு வாங்கிக் கொடுத்திருப்பேன். எல்லாம் தலையெழுத்து. சாப்பாடு சரியில்லைன்னு ஒரே புலம்பல். அவங்கள எல்லாரையும் திருநெல்வேலீல மொதல்ல நல்ல எடத்துக்குக் கூட்டீட்டுப் போறேன்னு உறுதி சொன்னேன்.

அப்புறம் நேரா வண்டீல ஏறித் திருநெல்வேலி போனோம். வழியில நெறைய காற்றாலைகள். எக்கச் சக்கமா சுத்திக்கிட்டு இருந்தது. அதையெல்லாம் பாத்துக்கிட்டே திருநெல்வேலி ஜங்சன் வந்து சேந்தோம். நேரா எல்லாரையும் அரசனுக்குக் கூட்டீட்டுப் போயி ஐஸ்கிரீம், மில்க் ஷேக் எல்லாம் வாங்கிக் கொடுத்து சாந்தி பண்ணியாச்சு. நான் நண்பர்களோட பலமுறை போன கடை அரசன். ஐஸ்கிரீம் மில்க் ஷேக் எல்லாம் அங்க கிடைக்கும். நண்பர்களோட வந்த பழைய நினைவுகளை எல்லாம் பகிர்ந்து கிட்டேன்.

அப்புறம் ஒரு கடைக்குக் கூட்டீட்டுப் போனேன். சும்மா நான் ரெண்டு துண்டு வாங்கலாம்னுதான் நெனச்சு உள்ள போனேன். வந்தவங்களும் சும்மா பாக்கலாம்னுதான் வந்தாங்க. ஆனா......

pradeepkt
29-05-2006, 06:22 AM
எய்யா...இந்த மொதலியாரு கடைலதானா கறித்தோச போடுறது. மொந்தையா தோசையச் சுட்டு அதுமேல கறிவறுவலு வெச்சிக் குடுக்குறது...
ஆமா ஆமா ஆமா...
நான் ஆட்டுக்கறி சாப்புடறதில்லை...
ஆனா எனக்கு மட்டும் பெசலா கோழிக்கறி போட்டு வாங்கிட்டு வருவாக எங்க மாமா!

pradeepkt
29-05-2006, 06:25 AM
அந்தக் கடை எதுய்யா... இருட்டுக்கடையா?
சங்கரன்கோயிலு வரைக்கும் போயி பிரியாணி திங்காம வரலாமா? ஆனா சங்கரங்கோயிலுல ஒரு நல்ல சைவ ஓட்டலு கூடவா இல்லை, சீக்கிரமே அங்க ஒரு ஓட்டலு ஆரம்பிச்சிர வேண்டியதுதான்.

mukilan
29-05-2006, 07:01 AM
அந்தக் கடை எதுய்யா... இருட்டுக்கடையா?
சங்கரன்கோயிலு வரைக்கும் போயி பிரியாணி திங்காம வரலாமா? ஆனா சங்கரங்கோயிலுல ஒரு நல்ல சைவ ஓட்டலு கூடவா இல்லை, சீக்கிரமே அங்க ஒரு ஓட்டலு ஆரம்பிச்சிர வேண்டியதுதான்.
சஸ்பென்ஸை உடைக்கிறதே வேலையாப் போச்சி!!

gragavan
29-05-2006, 09:52 AM
ஆமா ஆமா ஆமா...
நான் ஆட்டுக்கறி சாப்புடறதில்லை...
ஆனா எனக்கு மட்டும் பெசலா கோழிக்கறி போட்டு வாங்கிட்டு வருவாக எங்க மாமா!அடடே! அடுத்து நீங்க எப்ப மதுரைக்குப் போறீங்க?

gragavan
29-05-2006, 09:54 AM
அந்தக் கடை எதுய்யா... இருட்டுக்கடையா?
சங்கரன்கோயிலு வரைக்கும் போயி பிரியாணி திங்காம வரலாமா? ஆனா சங்கரங்கோயிலுல ஒரு நல்ல சைவ ஓட்டலு கூடவா இல்லை, சீக்கிரமே அங்க ஒரு ஓட்டலு ஆரம்பிச்சிர வேண்டியதுதான்.பொதுவாகவே நம்மூர்ப் பக்கமெல்லாம் சைவச் சாப்பாடு நல்லாயிருகாது. திருநவேலி மாதிரி ஊர்கள்ளதான் ஆள் அரவம் இருக்கக்கண்டு சைவச்சாப்பாடு கெடைக்கி. அதுகூட அங்ஙன பிள்ளமார் ரொம்ப இருக்கக்கண்டுதான். மத்தபடி கோயில்பட்டி தூத்துக்குடி வட்டாரத்துல சைவச்சாப்பாட்டை விட அசைவச்சாப்பாடு நல்லாருக்கும்.

தாமரை
29-05-2006, 10:05 AM
பொதுவாகவே நம்மூர்ப் பக்கமெல்லாம் சைவச் சாப்பாடு நல்லாயிருகாது. திருநவேலி மாதிரி ஊர்கள்ளதான் ஆள் அரவம் இருக்கக்கண்டு சைவச்சாப்பாடு கெடைக்கி. அதுகூட அங்ஙன பிள்ளமார் ரொம்ப இருக்கக்கண்டுதான். மத்தபடி கோயில்பட்டி தூத்துக்குடி வட்டாரத்துல சைவச்சாப்பாட்டை விட அசைவச்சாப்பாடு நல்லாருக்கும்.
காரைக்குடி போய் சைவம் சாப்பிட்டேன். அசைவங்கள் பாவம் அழுதன.

gragavan
29-05-2006, 01:23 PM
காரைக்குடி போய் சைவம் சாப்பிட்டேன். அசைவங்கள் பாவம் அழுதன.பின்ன என்னய்யா....காரக்குடிக்குப் போயி காரக்கோழி திங்காம கத்திரிக்காயும் முருங்கக்காயும் சாப்புட்டு வந்தா நல்லாவா இருக்கும்....

gragavan
29-05-2006, 01:25 PM
11. பட்டுச் சேலைக் காத்தாட

திருநெல்வேலி டவுண்ல நடுவுல இருக்கிறது நெல்லையப்பர் கோயில்னா....அதச் சுத்தி இருக்குற வீதிகள்ள ரொம்பப் பிரபலமா இருக்குறது குறிப்பா மூனு கடைகள். அல்வாவுக்குப் பேர் போன இருட்டுக்கடை ஒன்னு. துணிமணிகளுக்குப் பேர் போன போத்தீஸும் ஆரெம்கேவியும். இப்ப இவங்க சென்னைலயும் பெரிய கடைகளைத் தொறந்து பெட்டிய நெரப்புறது எல்லாருக்கும் தெரியும்.

அதுல போத்தீஸ்ல போயி மொட்ட போடுற வேளைக்கு வேணும்னு ரெண்டு துண்டு வாங்க உள்ள போனேன். நெல்லையப்பர் கோயில் நடை நாலு மணிக்குத்தான் தொறக்கும். இருட்டுக்கடையும் அஞ்சு மணிக்கு மேலதான் தொறக்கும். அதுனால நடுவுல் இருக்குற பொழுத ஓட்ட போத்தீஸ்தான் சரியான இடம்னு உள்ள போனோம். ஒருத்தன் வேட்டி வாங்கனுங்கறது நெனவுக்கு வந்தது.

சரீன்னு மொதல்ல அவனுக்கு வேட்டி வாங்க அதுக்கான எடத்துக்குப் போனோம். அவனுக்குத் தமிழ் தெரியாதுங்கறதால அவன் கன்னடத்துல சொல்றதத் தமிழ்ல மாத்திச் சொல்லியும் கடைக்காரர் தமிழ்ல சொல்றத அவனுக்குக் கன்னடத்துல மாத்திச் சொல்லியும் மொழிச்சேவை செஞ்சேன். அப்பத்தான் இன்னொருத்தனுக்கு வேற ஏதாவது பாக்கலாம்னு தோணிச்சு. அவன் ஒரு பக்கமா போனான். இன்னொருத்தன் இந்தப் பக்கம். இப்பிடி அங்குட்டும் இங்குட்டுமாப் போயி கடைய ஒழப்பிக்கிட்டிருந்தோம்.

மொதல்ல வாங்க வேண்டிய துண்டையும் வேட்டியையும் வாங்கிக்கிட்டோம். அதுக்குள்ள ஒருத்தன் பட்டுச்சேலை பாக்கனும்னு சொன்னான். அவனக் கூட்டீட்டுப் போய் அந்தப் பகுதீல விட்டாச்சு. அவன் அதப் பெரட்டீட்டு இருக்கும் போது இன்னொருத்தன் பிரிண்டேட் சில்க்ஸ் அவனோட அம்மாவுக்கு வாங்கனும்னு விரும்புனான். அந்தப் பகுதிக்கு அவனோட ஓடு. ஒவ்வொன்னா பாக்கும் போது தாமரைச் செவப்புல ஒரு சேலை. பிரிண்டேட் சில்க்தான். நல்லாயிருந்தது. செந்தாமரை பாத்திருப்பீங்களே. ரொம்பப் பளீருன்னும் இருக்காது. ரொம்பக் கம்மலாவும் இருக்காது. அந்த நெறத்துல அழகான கருப்புப் பிரிண்ட் போட்ட சேலை. கொஞ்ச நேரம் அப்படி இப்பிடி யோசிச்சி அம்மாவுக்கு வாங்கீட்டேன். கூட இருந்தவன் அவனோட அம்மாவுக்குப் பொருத்தமா ஒரு பட்டுச்சேலை எடுத்துக்கிட்டான்.

அதுக்குள்ள இன்னொருத்தன் பொண்டாட்டிக்கு ஒன்னு, அம்மாவுக்கு ஒன்னு, தங்கச்சிக்கு ஒன்னுன்னு மூனு பட்டுச்சேலைகள அள்ளீட்டு வந்தான். அள்ளல் நெறையா இருந்ததும் கொஞ்சம் தள்ளுபடியும் கிடைச்சது. பிக் ஷாப்பர்னு சொல்ற சணல் பைகள ஒவ்வொருத்தரும் தூக்கீட்டு வந்தோம். அட! சொல்ல மறந்துட்டேன். தூத்துகுடீல இருக்குற அத்தைக்கு ஒரு காட்டன் சேலையும் எடுத்துக்கிட்டேன்.
ஆறு ஆம்பளைங்க சேலைக் கடைக்குள்ள போனாலே இப்பிடி ஆச்சே.....பொம்பளைங்க போனா என்னாகும்னு நெனச்சுக்கிட்டேன். அவங்களச் சொல்லிக் குத்தமில்லை.

வெளிய வந்ததும் பைகள வண்டீல வெச்சிட்டுக் கோயிலுக்குப் போனோம். நெல்லையப்பர் கோயில். பழைய கோயில். இன்னொரு தகவல் சொல்றேன். குறிச்சிக்கோங்க. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விட நெல்லையப்பர் கோயில் பெருசு. போய்ப் பாத்தவங்க கண்டிப்பாச் சொல்வாங்க. நீங்களும் அடுத்து போனீங்கன்னா தெரியும். ஆனா மதுரைல வெளிப் பிராகாரங்க ரொம்பப் பெருசு.

இசைத்தூண்கள். நெல்லையப்பர் சந்நிதி நுழைவில இருக்கு. தட்டிப் பாத்தேன். நல்ல இசை வந்துச்சு. இதையே இசை தெரிஞ்சவங்க தட்டுனா! ம்ம்ம்...அது சரி...தூணைத் தட்டுனவனும் இசை தெரிஞ்சவனாத்தானே இருக்கனும். கல்லுச சுதி ஏத்துற சிற்பிகள் இப்பவும் இருக்காங்களான்னு தெரியலையே!

காந்திமதியம்மன், முருகன் எல்லாருக்கும் வணக்கம் போட்டுட்டு வந்தோம். கோயிலுக்குள்ள அன்னைக்கு ஏதோ ஒரு பள்ளிக்கூடத்து ஆண்டு விழா நடந்தது. கிட்டத்தட்ட ஆறு மணி வாக்குல வெளிய வந்தோம். வந்ததும் நேராப் போனது இருட்டுக்கடைக்குதான்.
ஆளுக்கு நூறுகிராம் கைல மொதல்ல வாங்கிக்கிட்டோம். அப்புறம் ஒவ்வொருத்தனும் அரக்கிலோ காக்கிலோன்னு பாக்கெட் பாக்கெட்டா வாங்கிக்கிட்டாங்க. கொண்டு போய் பெங்களூர்ல உள்ளவங்களுக்குக் குடுக்கதான். ரொம்ப நேரம் அங்கயே இருக்காம திருச்செந்தூருக்குக் கெளம்ப முடிவு செஞ்சோம்.

முந்தி எல்லா பஸ்சும் ஜங்சன்ல இருந்துதாம் பொறப்படும். இப்ப இன்னொரு பஸ்டாண்டு இருக்கு. அதுவும் பாளையங்கோட்ட தாண்டி...தள்ளிப் போகனும்...அங்க போய் வண்டிய கோயில்பட்டிக்குத் திருப்பி அனுப்பீட்டு திருச்செந்தூர் பஸ்சப் பிடிச்சோம்.
திருநெல்வேலி எனக்குப் புது ஊர் கிடையாது. தூத்துக்குடீல இருந்துன்னாலும் கோயில்பட்டீல இருந்துன்னாலும் முக்கா மணி நேரந்தான். அதுவுமில்லாம என்னோட நெருங்கிய நண்பனின் ஊரும் திருநெல்வேலி. ரொம்ப நெருங்கிய நண்பந்தான். ஆனா இப்ப நாளாவட்டத்துல தொடர்பு கொறஞ்சு போச்சு. அமெரிக்காவுல இருக்கான். ஆனா பேச்சு வழக்கே இல்லைன்னு சொல்லலாம். எப்பவாச்சும் இந்தியாவுக்கு வந்தா ஃபோன் பண்ணுவான். பெங்களூருக்கு வந்தா சந்திப்போம். அதுவும் ஒரு வாட்டிதான். இன்னைக்கு அவனும் நல்ல நெலமைல இருக்கான். நானும் முருகன் புண்ணியத்துல நல்லாயிருக்கேன். அதுதான் உண்மை.

தொடரும்........

pradeepkt
30-05-2006, 06:18 PM
சஸ்பென்ஸை உடைக்கிறதே வேலையாப் போச்சி!!
ஏம்ப்பு நீங்களும் ஓட்டல் ஆரம்பிக்கிற ஐடியால இருக்கீகளா?
என்னைப் பார்ட்னரா சேத்துக்கிருங்க. வொர்க்கிங் (?!) பார்ட்னர்.
இப்ப எல்லாரும் ஓடி வந்து கருத்து சொல்லுவாங்க பாருங்க!

pradeepkt
30-05-2006, 06:25 PM
நெல்லையப்பர் கோயில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விட ரொம்பப் பெரிசு. ராமேசுவரம் போயிப் பாருங்க, இன்னும் ரொம்ப ரொம்பப் பெரிசு.

சொல்லப் போனா மீனாட்சி அம்மன் கோயிலு ரொம்பச் சின்னக் கோயிலாத்தான் இருந்துச்சாம். திருமலை நாயக்கரு காலத்துலதான் ரெண்டு வெளிப் பெரகாரமும் கட்டினாகளாம். அப்ப மீனாச்சியும் ஈசுவரனும் (சுந்தரன்னு பேரு எப்ப வந்துச்சுன்னு இன்னொரு ஆராய்ச்சி) தனித்தனியா இருக்க எல்லாத்தையும் சேத்து நடுவுல நவக்கிரகம், கால பைரவரு வச்சுப் பெரிய மதிற்சுவரு கட்டினாரு திருமலை மன்னரு.

அப்புறம் ராணி மங்கம்மா வந்துதேன் அத்தனை பெரிய வீதிகளையும் துப்புரவாக் கட்டி மதுரைங்கற பேருக்கு ஏத்த மாதிரி மாத்தினாகளாம். கோயிலைச் சுத்தி இருக்குற வீதிகளுக்குத் தமிழ் மாதப் பேர்களை வச்சதும் அந்தம்மாதான்னு சொல்லுவாக.

ஆனா கடைச் சங்கம் வச்சு வாழ்த்திப் பாடுனப்ப இருந்தது இதே மீனாச்சிதேன். என்ன செய்ய, சோமசுந்தரருக்கே அந்தம்மா இருக்கக் கண்டுதேன் பேரு!

pradeepkt
30-05-2006, 06:26 PM
காரைக்குடி போய் சைவம் சாப்பிட்டேன். அசைவங்கள் பாவம் அழுதன.
ஏய்யா ஆடுங் கோழியும் விட்டது ஆனந்தக் கண்ணீரா இருக்கப் போவுது, நல்லாப் பாத்தீகளா?

பென்ஸ்
03-06-2006, 08:02 AM
ராகவா...

எப்பு... மொட்டை போட்ட போட்டோவை போடும்யா... (இன்னும் மூண்றாம் நாள் வரலைன்னு சொல்லு கூடாது)..

இந்த இடம் எல்லாம் நானும் போயிருகிறேன்... ஆனால், என் கவனம் ஒருபோதும் இது போன்ற நுனுக்கதில் இருந்தது இல்லை...

இம்ம்... தொடரும், நல்லாயிருக்கு.

gragavan
04-06-2006, 05:52 PM
12. செந்திலாண்டவா எம்மை ஆள்பவா

திருநெல்வேலீல இருந்து பஸ்சப் பிடிச்சி ஆழ்வார்த்திருநகரி வழியா திருச்செந்தூர் போய்ச் சேந்தோம். எட்டேகால் இருக்கும். மணி ஐயர் ஓட்டல்ல ரூம் போட்டோம். ஓரளவுக்கு நல்லாவே இருந்துச்சு. காலைல இருந்து கசகசன்னு அலஞ்சதால குளியல் போட்டோம். அப்படியே கீழ வந்து ராச்சாப்பாட்டை முடிச்சோம். மணி ஐயர் ஓட்டல் நல்லாவே இருக்கும். தரமாவும் இருக்கும். மத்த சில ஓட்டல்களும் சுமாரா இருக்கும். அசோக் பவன்னு ஒரு ஓட்டல். அதுவும் சுமாரா இருக்கும். ஆனா பலகைல பேர் எழுதும் போது அசோக்குன்னு தமிழ்ல எழுதீட்டு இங்கிலீஷ்ல ASSHOK-ன்னு எழுதீருந்தாங்க. :-) அதையும் ஒரு படம் பிடிச்சிக்கிட்டோம். (அடுத்த நாள் காலைலதான்.)

ராச்சாப்பாடு முடிஞ்சதும் கோயிலச் சுத்தீட்டு கடலுக்குப் போனோம். திருச்செந்தூரின் கடலோரத்தின் கதையில சொல்லீருக்குற மாதிரி நேரா சின்னப்பத்தேவர் சுத்து மண்டபத்துல நொழைஞ்சி சுக்குத்தண்ணி வாங்கிக் குடிச்சிட்டு நடந்தோம். வழியில ரெண்டு ஆட்டுக்குட்டிங்க படுத்திருந்தது. கடக்காத்துக்கு ஒன்னோட ஒன்னு ஒட்டிக்கிட்டு. அந்தப் பாசக் காட்சி என்ன என்னவோ பண்ணிச்சி. அந்தப் பாசத்தைப் பிடிக்க முடியாது. ஆனா படத்தைப் பிடிக்கலாம். அதுனால ஒரு படம் எடுத்துக்கிட்டோம்.

நேரா கடல்ல போய் நின்னு விளையாண்டோம். விளையாட விளையாட நான் கடலோட ஒன்றிப் போயிட்டேன். Hallucination அப்படீன்னு இங்கிலீஷ்ல சொல்வாங்களே...அந்த மாதிரி...கடல் நம்மோட உறவாடுற மாதிரி. உண்மையச் சொல்லப் போனா...என்னோட உள்ளத்த அமைதியாக்கி அதுல மெத்துன்னு ஒரு இன்பத்தக் கடல் கொண்டு வந்துச்சு. அது ஒரு ஒட்டுதல் தானே. நான் வேணுக்குன்னே கொஞ்சம் பின்னால் வந்து "இப்ப என்னத் தொடு பாக்கலாம்னு" சொன்னேன். அலையும் துள்ளிக்கிட்டு வந்து தொட்டுருச்சு. அடன்னு சொல்லிக்கிட்டு இன்னும் கொஞ்சம் பின்னுக்கு வந்து...இப்ப பாக்கலாம்னேன். பாருங்க...அல வந்துருச்சு.....மறுபடியும் பின்னால....அதுவும் வருது....இப்பிடியே நாங் கொஞ்ச தூரம் வந்துட்டேன். அலயும் வந்துட்டுது.

அங்க ரெண்டு நண்பர்கள் மண் வீடு கட்டிக்கிட்டிருந்தாங்க. நம்ம கூட வந்த பயகதான். இப்பக் கொஞ்சம் குரூரமா நெனச்சது மனம். இப்பத் தொடுன்னு கடல் கிட்ட சொன்னேன். அப்ப அந்த மண் வீடும் அழிஞ்சிரும்ல. ஆனா பாருங்க கடல் வரல. நான் கடைசியா நின்ன எடம் வரைக்கும் வந்துக்கிட்டிருக்கு. அதுவரைக்கும் முன்ன வந்த கடல் அதுக்கப்புறம் வரவேயில்லை. எனக்குன்னா ஒரு மாதிரி ஆயிருச்சு. இந்தப் பயக படக்குன்னு வீட்டக் கட்டி முடிக்கிறான்களான்னா...அதுவும் இல்லை. நடுவுல கூம்பு எழுப்பிச் சுத்துச் சொவர் வெச்சி ஒரு வாசல் வெச்சின்னு போய்க்கிட்டே இருக்காங்க. ஒரு அஞ்சு பத்து நிமிசங் கழிச்சி திருப்தியோட அடுத்த எடத்துக்குப் போயிட்டாங்க. எனக்கு இப்பக் கடல் மேலக் கோவம் இல்லாட்டியும் லேசான வருத்தம். இதுவரைக்கும் கூட விளையாண்டியே...இப்ப விளையாடலையேன்னு....அவனுக எந்திரிச்சிப் போனதுமே கடல் படக்குன்னு வந்து வீட்டத் தட்டி விட்டுட்டு என்னத் தொட்டிருச்சி. எனக்கு ஒரு நிமிசம் ஒரு சிலிர்ப்புச் சந்தோசம்.

இதெல்லாம் தற்குறிப்பேற்றல்னு இலக்கியம் படிச்சவங்க சொல்லீருவாங்க. மூடநம்பிக்கைன்னு பகுத்தறிவாளருங்க சொல்லீருவாங்க. ஆனா கடல் எனக்கு ஒரு பாடம் சொன்னதாகவே எனக்குத் தோணிச்சு. மொதல்ல கூப்பிட்டப்ப என்னோட விளையாடக் கூப்பிட்டேன். அதுனால அது வந்துச்சு. அடுத்தடுத்து அப்பிடித்தான். ஆனா அந்த வீட்ட இடிச்சிக்கிட்டு வந்து தொடுன்னு சொன்னது தப்பு. அதுவும் அவங்க கட்டிக்கிட்டு இருக்குறாங்க. அப்பவே வந்து ஒடச்சா அவங்க மனசு வருத்தப்படும். அதுனாலதான் தப்பா நெனைச்ச என்னக் கொஞ்ச நேரம் காக்க வெச்சிக்கிட்டு அவங்க முடிச்சிட்டுப் போனப்புறம் என்னத் தொட்டுச்சி. ஆகையால எதையும் நல்லதுக்கே நெனைக்கனும்னுங்குறதுதான் எனக்குச் சொன்ன பாடம்னு எடுத்துக்கிட்டேன். இத எவ்வளவு தூரம் நான் பின்பற்றுவேன்னு தெரியலை. ஆனா முடிஞ்ச வரைக்கும் பின்பற்றனும்.
மேலெல்லாம் மண்ணாக்கிட்டு ரூமுக்குள்ள நுழைஞ்சோம். இன்னொரு குளியல் போட்டுட்டுத் தூங்கினோம். காலைல எந்திரிச்சி மொட்டையெடுக்கனுமே. சீக்கிரமா எந்திரிச்சிக் கோயிலுக்குப் போகலாம்னு நெனச்சோம். ஆனா ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு வேளைக்கு எந்திரிச்சி நேரமாயிருச்சி. சரீன்னு குளிக்காம பல்லு மட்டும் வெளக்கீட்டு மொட்டை எடுக்கக் கெளம்புனோம்.

தனியாப் போறப்ப மொட்டை எடுக்க நம்மளே சீட்டு வாங்கிக்கிரலாம். ஆனா ஆளம்போட போகும் போது கூட வந்தவங்க மொட்டச் சீட்டு வாங்குனாத்தான் ஒரு உரிமை. போன வாட்டி இப்பிடி ஊர் சுத்தப் போனப்போ ஒரு நண்பன் மொட்டை போட்டான் சுவாமிமலைல. அவனுக்குச் சீட்டு வாங்கினேன் நான். இந்த வாட்டி அவன் எனக்கு வாங்குனான்.

திருச்செந்தூர்ல கடக்கரைல நாழிக்கிணத்துக்குப் பக்கத்துல இருக்கு முடிக்காணிக்கை மண்டபம். எப்பவும் ஆளுங்களப் பாக்கலாம். சுத்துப் பக்கத்து ஊர்க்காரங்க மட்டுமில்லாம எல்லாப் பக்கத்துல இருந்தும் திருச்செந்தூர் வந்து முடிக்காணிக்கை செலுத்துவாங்க. முருகன் மேல அவ்வளவு பாசம்.

நாளைக்கு வளரப் போற முடியக் குடுக்குறதா பெரிய விஷயம்னு சொல்லலாம். ஆனால் அதில்லை அதோட உட்கருத்து. நம்ம தோற்றத்த எடுப்பாக் காட்டுறதுல முடி முக்கியப் பக்கு வகிக்குது. அந்த முடி போகும் போது தோற்றத்துல ஒரு குறைவு வருதில்லையா. அந்தக் குறைவை ஏத்துக்கிற மனப்பக்குவம் தேவை. அதாவது கர்வம் பங்கப்படுதா இல்லையா! ஆணவம் கொறையுது பாத்தீங்களா! அது எல்லாருக்கும் தேவையானது. ஆணவம் எங்க கொறயுதோ..அங்க நல்ல எண்ணம் வரும். பல பேரு வேண்டுதலைக்குத் தலையக் குடுத்தாலும் முடிய வழிக்கும் போது ஒரு ஆணவ அழிப்பு நடக்குறது உண்மைதான்.

நானும் காணிக்கை செலுத்த உதவுற ஒருத்தருக்கு முன்னாடி இருக்குற பலகைல உக்காந்தேன். சீட்டையும் அதோட குடுத்த அரப்பிளேடையும் கொடுத்தேன். அவரு பிளேடை செட்டுல மாட்டுனாரு. நான் கண்ணை மூடி மனசுக்குள்ள முருகான்னு சொன்னேன். உள்ள சின்னத் துணுக்கு. அப்ப படக்குன்னு பக்கத்துல வந்து உக்காந்தாரு மயிலாரு.

தொடரும்.

gragavan
05-06-2006, 03:47 AM
13. எனக்கும் ஒரு கனவு உண்டு

மயிலார் யாருன்னு ஒங்களுக்கெல்லாம் நான் சொல்ல வேண்டியதில்லை. நான் கொஞ்சம் துணுக்கமா உக்காந்திருந்தப்போ வந்து பக்கத்துல உக்காந்தாரு. அவர் வந்ததே எனக்குத் தெம்பா இருந்தது. பக்குன்னு கண்ணத் தொறந்து என்னைத் தயாராக்கிக்கிட்டேன். அதுக்குள்ள காணிக்கை உதவியாளரு அலுமினியச் சட்டீல இருந்த தண்ணிய எடுத்து தலைய நனைச்சாரு. மூச்சியெல்லாம் தடவுனாரு. முருகன் கிட்ட பொறுப்பை ஒப்படைச்சிட்டு நான் அமைதியா இருந்தேன்.

கத்தியத் தலைல வெச்சு ஒரு இழு இழுத்தாரு. சரக்குன்னு சின்னச் சின்னத் தடுக்கல்களோட ஒரு கொத்து முடி மடியில விழுந்துச்சு. அதுவரைக்கும் கலகலன்னு பேசிக்கிட்டிருக்குற நண்பர்கள் அமைதியாயிட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமா முடியெல்லாம் வழிஞ்சி கீழ விழுக விழுக நான் உறுதியானேன். மயிலார் துணையா இருக்கும் போது எனக்கென்ன குறைச்சல்.

முடிய வழிச்சவரு ஒரு நல்ல காணிக்கை உதவியாளர். ஒன்னும் சொல்லலை. முடிச்சதும் கைல ஏற்கனவே நான் எடுத்து வெச்சிருந்த இருபது ரூபாயக் கொடுத்தேன். ஏன் குடுத்தேன்னு கேக்குறீங்களா? நன்றிதான். ஏற்கனவே காசு கெட்டி மொட்டச் சீட்டு வாங்கீருக்கிறப்ப அவருக்கு நான் எதுவும் குடுக்கனும்னு கட்டாயமில்லை. ஆனா நான் குடுத்தேன். ஏன்?

கோயில்பட்டிக் கதிரேசன் கோயில் ஐயரைப் பத்தி முந்தி எழுதீருந்தேனே...நினைவிருக்கா? அவரோட ஒடம்புல செதிலா வர்ர சோரியாசிஸ் பத்தி. அது அவருக்கு மட்டுமில்ல. எனக்கும் உண்டு. தலையில சொரியாசிஸ் இருக்குறப்போ பல பிரச்சனைகள் உண்டு. குறிப்பா முடி வெட்டிக்கப் போகுறப்போ ஒரு தாழ்வுணர்ச்சி வரும். நம்ம தலையப் பாக்குற முடி வெட்டுறவரு என்ன நெனப்பாரோருன்னு.

போன வாட்டி நான் திருத்தணியில மொட்ட போட்டப்போ அப்பா அந்த உதவியாளருக்குக் கூடக் காசு குடுத்தாரு. ஆனா அந்த உதவியாளர் அது போதாதுன்னு கூடக் கேட்டாரு. அவரு கேட்டது பெருசில்லை. ஆனா "இந்தத் தலைக்கே நீங்க இவ்வளவு குடுக்கனும்"னு சொன்னாரு. அதுவுமில்லாம மொட்டை எடுக்கும் போது நூறு நொரநாட்டியம் சொல்லிக்கிட்டே இருந்தாரு. என்னோட மனசுல அது பதிஞ்சிட்டாலும் நான் கோவிச்சிக்கலை. அதையெல்லாம் நான் கேக்குறதுதான் முருகனோட விருப்பம்னு ஏத்துக்கிட்டேன். ஆனா கூடவே இருந்த அப்பா அம்மா மனசு?

அப்படியொரு நெலம இங்கயும் வந்துறக்கூடாதேன்னுதான் மொதல்ல எனக்கு அந்தத் துணுக்கம் வந்துச்சி. அதையெல்லாம் தூள்த்தூளாக்கி எல்லாத்தையும் அமைதியா நடத்திக் கொடுத்த உதவியாளருக்கு நான் கூடக் குடுக்கக் கூடாதா சொல்லுங்க?

வாழ்க்கையில ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமாக் கனவுண்டு. கோடிக்கோடியாச் சம்பாதிக்கிறது. நிலபுலனா வாங்கிப் போடுறது. பல பொண்டாட்டி கட்டுறது. நெறையப் பிள்ளைக பெத்துக்கிறது. கட்டிடமாக் கட்டுறது. கொல பண்றது. கொள்ளையடிக்கிறது. பதவிக்கு வர்ரது. இப்பிடியெல்லாம் இருக்கும் போது எனக்கும் ஒரு கனவு உண்டு.

ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தொடங்கனும்னு. அதுல சொரியாசிஸ் மற்றும் பல தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு மருத்துவ ஆராய்ச்சி செய்யனும். அத்தோட சொரியாசிஸ்காரங்க முடி வெட்டிக்கிறதுக்கும், மத்த பல காரியங்களுக்கும் அங்க வசதி செஞ்சிக் குடுக்குறது. உடம்புல சொரியாசிஸ் இருக்குறவங்க பொது இடங்கள்ளயோ நீச்சல் குளங்கள்ளயோ குளிக்க முடியாது. நட்சத்திர ஓட்டல்ல கூட நீச்சல் குள அனுமதி தரமாட்டாங்க. அவங்களுக்கு நீச்சல்குளம். நீராவிக்குளியல் இடம். இன்னும் பல வசதிகள் செஞ்சி ஒரு நிலையம் தொடங்கனும். அப்புறம் அதை ஊரூருக்குக் கொண்டு போகனும்.

இதவிட முக்கியமா ஒரு கவுன்சிலிங் செண்டர். அதாவது இந்த நோய்க்காரங்க மொதல்ல மனசாலதான் ரொம்ப பாதிக்கப்படுறாங்க. அவங்க பொதுவாழ்க்கையே போச்சுன்னு. நானும் மொதல்ல அப்படித்தான் இருந்தேன். ஆனா முருகன் புண்ணியத்துல நல்லா கட்டுப்பாட்டுக்குள்ள வெச்சிருக்கேன். வாழ்க்கை முறைய கொஞ்சம் மாத்தி அமைச்சிக்கிட்டா நல்லபடியா சந்தோஷமா இருக்கலாம். இதெல்லாம் எடுத்துச் சொல்ல நிபுணர்கள். இப்பிடிப் போகுது என்னோட கனவு.

ஆனா இதெல்லாம் எப்படிச் செய்றது? நான் டாக்டரும் கிடையாது. கோடீஸ்வரனும் கிடையாது. நெறைய விவரம் தெரிஞ்சவனும் கெடையாது. ஆனா நம்பிக்கை இருக்கு. முருகன் என்னோட கனவை நிறைவேத்தி வெப்பான். அதுக்கு வேண்டிய முயற்சிகளை நான் எடுத்தா அவன் ஒவ்வொரு முயற்சியையும் திருவினையாக்குவான்.

இங்க நெறைய பலதரப்பட்ட துறையில இருந்து ஆட்கள் இருக்கீங்க. இந்த மாதிரி விஷயங்கள்ள உங்களுக்கு நிறைய தெரிஞ்சிருக்கலாம். இந்தக் கனவு நனவாகுறதுக்கு உங்களால ஏதாவது உதவ முடியுமா? தனிப்பட்ட முறையில தொடர்பு கொள்ள நினைக்கிறவங்க என்னோட gragavan at gmail dot comக்கு மெயில் அனுப்புங்க. உங்களத் தொடர்பு கொள்ளவும் நான் தயார்.

சொரியாசிஸ் பத்தித் தெரிஞ்சிக்கிறதுக்குக் கீழ இருக்குற சுட்டிகளைப் பாருங்க......
http://en.wikipedia.org/wiki/Psoriasis

அன்புடன்,
கோ.இராகவன்

பென்ஸ்
05-06-2006, 07:58 AM
ஆனாலும் போட்டோ போடலையே ராகவா.... ரொம்பதாம் ஏமாத்துறிய....

ராகவன்... ஜீமெயிலில் தனிமடல் அனுப்பியுள்ளேன்....

gragavan
05-06-2006, 08:03 AM
http://photos1.blogger.com/blogger/2224/1103/320/Mottai.jpg

இதோ போட்டோ. காலையில் இருந்து கனெக்ஷன் பிரச்சனை. அதான்.

gragavan
05-06-2006, 08:04 AM
ஆனாலும் போட்டோ போடலையே ராகவா.... ரொம்பதாம் ஏமாத்துறிய....

ராகவன்... ஜீமெயிலில் தனிமடல் அனுப்பியுள்ளேன்....நன்றி பெஞ்சமின். நான் இரவு மெயில் பார்த்து விட்டு உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்.

பென்ஸ்
05-06-2006, 08:35 AM
http://photos1.blogger.com/blogger/2224/1103/320/Mottai.jpg

இதோ போட்டோ. காலையில் இருந்து கனெக்ஷன் பிரச்சனை. அதான்.

ஆகா.. ஆகா... ஆனத்தமானது.. அற்புதமானது...:p :p
நான் 2 வருஷம் கழித்து இயற்கையாகவே இருக்கும் நிலையை நீங்க செயர்கையா காமித்து இருக்கீங்க..B) :eek: :eek: :eek:

முடி கொன்சம் இருந்தா சொட்டை:rolleyes: :rolleyes:
ஒன்னும் இல்லைனா மொட்டை....:D :D
..

தாமரை
05-06-2006, 10:50 AM
ஆகா.. ஆகா... ஆனத்தமானது.. அற்புதமானது...:p :p
நான் 2 வருஷம் கழித்து இயற்கையாகவே இருக்கும் நிலையை நீங்க செயர்கையா காமித்து இருக்கீங்க..B) :eek: :eek: :eek:

முடி கொன்சம் இருந்தா சொட்டை:rolleyes: :rolleyes:
ஒன்னும் இல்லைனா மொட்டை....:D :D
..


தலையில முடி உதிர்ந்தா கவலைப் படறாங்க..
தாடையில வளர்ந்தா வழிச்சு எறியறாங்க

முடி வெளுத்தா கவலை
முகம் கருப்புன்னு கவலை..

என்ன கொடுமை இது சரவணன்..

pradeepkt
05-06-2006, 01:21 PM
அப்பாடா இப்பத்தானய்யா எங்க சென்மம் சாபல்யம் அடைந்தது...
ஒரு வழியா நீங்க மொட்டை போட்டு அந்த போட்டோவையும் போட்டு... அடடா... சும்மா செந்திலாண்டவர் மாதிரி அழகா ஆகிட்டீங்களேய்யா :)

mukilan
05-06-2006, 06:59 PM
அப்பாடா இப்பத்தானய்யா எங்க சென்மம் சாபல்யம் அடைந்தது...
ஒரு வழியா நீங்க மொட்டை போட்டு அந்த போட்டோவையும் போட்டு... அடடா... சும்மா செந்திலாண்டவர் மாதிரி அழகா ஆகிட்டீங்களேய்யா :)

பிரதீப் நான் கூடத்தான் உங்க மொட்டை படத்தைப் பார்த்தாத்தான் ஜென்மசாபல்யம் அடைவேன்னு நினைக்கிறேன். அதுக்காக நீங்க மொட்டை போடலாமே!! ஆனாலும் ராகவன் தலையில் சந்தனத்தை அப்பிக்கிட்டு பழனியாண்டவர் போலத்தான்யா நிக்கிறாரு. சந்தனம் குளிர்ச்சியா இருந்ததா ராகவன்.

மதி
06-06-2006, 03:43 AM
ராகவன்...
சூப்பருங்கோ..!!!

pradeepkt
06-06-2006, 07:45 AM
பிரதீப் நான் கூடத்தான் உங்க மொட்டை படத்தைப் பார்த்தாத்தான் ஜென்மசாபல்யம் அடைவேன்னு நினைக்கிறேன். அதுக்காக நீங்க மொட்டை போடலாமே!! ஆனாலும் ராகவன் தலையில் சந்தனத்தை அப்பிக்கிட்டு பழனியாண்டவர் போலத்தான்யா நிக்கிறாரு. சந்தனம் குளிர்ச்சியா இருந்ததா ராகவன்.
எனக்கு மொட்டை போடாம ஓய மாட்டீங்க போல...
அடுத்த தடவை நீங்க இந்தியா வரும்போது ஹைதராபாதுக்கு கண்டிப்பாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.
நீங்க என் குளோஸ் பிரண்டாச்சே... என்னைக் குளோஸ் பண்ற வரைக்கும் ஓய மாட்டீங்களே...

gragavan
06-06-2006, 08:05 AM
ஆகா.. ஆகா... ஆனத்தமானது.. அற்புதமானது...:p :p
நான் 2 வருஷம் கழித்து இயற்கையாகவே இருக்கும் நிலையை நீங்க செயர்கையா காமித்து இருக்கீங்க..B) :eek: :eek: :eek:

முடி கொன்சம் இருந்தா சொட்டை:rolleyes: :rolleyes:
ஒன்னும் இல்லைனா மொட்டை....:D :D
..விட்டா ஆனந்தமானது அற்புதமானது நானந்த மருந்தைக் கண்டு கொண்டேன்னு யேசுதாஸ் மாதிரி பாடத் தொடங்கீருவீங்க போல. :D :D

இன்னொரு செய்தி. அனேகமா ஜூலைல திருத்தணியில இன்னொரு மொட்டை போடலாம்னு இருக்கேன்.

gragavan
06-06-2006, 08:07 AM
தலையில முடி உதிர்ந்தா கவலைப் படறாங்க..
தாடையில வளர்ந்தா வழிச்சு எறியறாங்க

முடி வெளுத்தா கவலை
முகம் கருப்புன்னு கவலை..

என்ன கொடுமை இது சரவணன்..சந்திரமுகி பாக்காதீங்கன்னு திரும்பத் திரும்பச் சொன்னேன். கேட்டாத்தானே. இப்பப் பாருங்க...இப்பிடி ஆயிட்டீங்களே.......

gragavan
06-06-2006, 08:08 AM
அப்பாடா இப்பத்தானய்யா எங்க சென்மம் சாபல்யம் அடைந்தது...
ஒரு வழியா நீங்க மொட்டை போட்டு அந்த போட்டோவையும் போட்டு... அடடா... சும்மா செந்திலாண்டவர் மாதிரி அழகா ஆகிட்டீங்களேய்யா :)செந்திலாண்டவரா பழநியாண்டவரா....சரியாப் பாருங்க பிரதீப்பு.......

gragavan
06-06-2006, 08:13 AM
பிரதீப் நான் கூடத்தான் உங்க மொட்டை படத்தைப் பார்த்தாத்தான் ஜென்மசாபல்யம் அடைவேன்னு நினைக்கிறேன். அதுக்காக நீங்க மொட்டை போடலாமே!! ஆனாலும் ராகவன் தலையில் சந்தனத்தை அப்பிக்கிட்டு பழனியாண்டவர் போலத்தான்யா நிக்கிறாரு. சந்தனம் குளிர்ச்சியா இருந்ததா ராகவன்.சும்மா ஜில்லுன்னு இருந்துச்சு...அதான் நல்லா கொளயக் கொளையப் பூசிருக்கேனே.

gragavan
06-06-2006, 08:15 AM
ராகவன்...
சூப்பருங்கோ..!!!ஹி ஹி....இப்ப முடி நெறைய வளந்துருச்சு.

mukilan
08-06-2006, 06:14 AM
எனக்கு மொட்டை போடாம ஓய மாட்டீங்க போல...
அடுத்த தடவை நீங்க இந்தியா வரும்போது ஹைதராபாதுக்கு கண்டிப்பாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.
நீங்க என் குளோஸ் பிரண்டாச்சே... என்னைக் குளோஸ் பண்ற வரைக்கும் ஓய மாட்டீங்களே...
பிரதீப் குளோஸ் பிரண்ட்ஸ் எல்லாம் குளோஸ் செய்ய மாட்டாங்க. கவலைப் படாதீங்க.

gragavan
12-06-2006, 08:18 AM
14. தூத்துக்குடி வழியா பெங்களூர்

திருச்செந்தூர்ல மொட்ட போட்டுட்டு முருகனைக் கும்பிட்டுட்டு பனங்கெழங்கு வாங்கிக்கிட்டு தூத்துக்குடிக்குப் பஸ் ஏறுனோம். அங்கயிருந்துதான பெங்களூருக்கு டிரெயின். வீரபாண்டியன் பட்டணம், காயல்பட்டணம், ஆத்தூரு வழியா தூத்துக்குடி.

வழியெல்லாம் நான் சின்னப்புள்ளைல பாத்த மாதிரி வீடுக. எக்கச்சக்கமா கொசுவத்திச் சுருள்கள் (அதாங்க flashback). தூத்துக்குடிய நெருங்க நெருங்க உப்பளங்க. வெள்ள வெளேர்னு பாத்தி பாத்தியாக் கண்ணப் பறிக்குது. பாத்தி கட்டி அதுல தண்ணியத் தேக்கி உப்பு வெள்ளாம பண்றது தூத்துக்குடீல பெரிய தொழிலு.

வெயிலுக்குத் தண்ணி காஞ்சி பாத்தியெல்லாம் வெள்ள வைரங்களா உப்புக்கல்லுக ஜொலிக்கும். அதுல நடக்க முடியாது. கால்ல குத்தும். ரப்பர் ஷீட் மாதிரி காலணி போட்டுக்கிட்டுதான் அதுல எறங்க முடியும். வெயில் பட்டு பளீர்னு வெளிச்சம் மூஞ்சீல தெறிக்கும். ஒரு பெரிய சொரண்டி வெச்சுக்கிட்டு உப்பச் சொரண்டிச் சொரண்டி பாத்தி வரப்புல அள்ளிப் போடுவாங்க. அதுவேற அங்கங்க சின்னச் சின்ன மலையாட்டம் குமிஞ்சிருக்கும். பாக்க அழகோ அழகு. இந்த உப்பையெல்லாம் சேகரஞ் செஞ்சி பெரிய மலையாப் போட்டுருப்பாங்க. மழ பெஞ்சிரக் கூடாது. அப்புறம் எல்லா உப்பும் கறைஞ்சு போகும். அதுனால அந்தக்காலத்துல பனையோலைகளைப் போட்டு மூடி வெச்சிருப்பாங்க. இப்பெல்லாம் தார்ப்பாயி பாலீத்தீன் ஷீட்டுன்னு போட்டு மூடுறாங்க.

அதெல்லாம் அப்பிடியே பாத்துக்கிட்டு ஸ்பிக் நகர் வழியா தூத்துக்குடிக்குள்ள நுழைஞ்சோம். பஸ்சு புதுக்கிராமம் வழியாப் போகும். அங்கதான் என்ன வளத்த அத்தயும் மாமாவும் இருக்காங்க. நண்பர்களோட அங்க போறதா திட்டம். ஆனா ரொம்ப நேரமாயிட்டதால அவங்கள நேரா ஸ்டேஷனுக்குப் போகச் சொல்லீட்டு நா மட்டும் புதுக்கிராமத்துல எறங்குனேன். அத்தையும் மாமாவையும் பாத்து பத்து நிமிஷம் பேசீட்டு அத்தைக்கு எடுத்த சேலையக் குடுத்துட்டுக் கெளம்பினேன். எனக்குன்னு வாங்கி வெச்சிருந்த கருப்பட்டிச் சேவு, மிக்சரு, காராச்சேவெல்லாம் பெரிய பைல போட்டுக் குடுத்தாங்க. நானும் மறுக்காம வாங்கிக்கிட்டு ஸ்டேஷனுக்கு ஓடுனேன்.

அங்க தேங்கா பன் வாங்குனோம். தூத்துக்குடிக்காரங்க கிட்ட தேங்காபன்னுன்னாப் போதும். அவ்வளவு பிரபலம். பன்னுதான். வட்டமா மாவ உருட்டி அதுக்கு நடுவுல தேங்காயும் ஜீனியும் கலந்து வெச்சு மடிச்சு பன்னாச் சுட்டு எடுத்தா....ஆகா.....ஆகா...ம்ம்ம்ம்ம்...
மணியாச்சி, கோயில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் வழியா மதுரைக்கு வந்து சேந்தது வண்டி. ஒரு வெள்ளைக்காரனும் காரியும் ஏறுனாங்க. எங்க பக்கத்துலயே வந்து உக்காந்தாங்க. அவங்ககிட்ட பேச்சுக் குடுத்தோம். அவங்களும் சங்கோஜம் இல்லாமப் பழகுனாங்க. அவருக்கு 24 வயசும். அந்தப் பொண்ணுக்கு 26 வயசும். ஆனா நாங்கள்ளாம் பாக்க சின்னப்பசங்களாத் தெரிஞ்சோம். நல்ல உயரம். நல்ல விரிஞ்ச கட்டுடம்பு. ரெண்டு பேருக்குந்தான்.

பேச்சு வாங்குல நாங்க என்ன பண்றோம்னு கேட்டாங்க. நான் சாஃப்ட்வேர்ல மேனேஜரா இருக்கேன். இவன் Siemensல இருக்கான். இவன் IBM. இப்பிடிக் கம்பெனி கம்பெனியாச் சொன்னா...அவன் ஓன்னுட்டான். நம்ம என்ன பண்றோம்னு கேட்டுட்டாங்களே. நம்ம திரும்பிக் கேக்க வேண்டாமா? கேட்டுட்டோம். அவங்க ஒரு பார்ல வேல பாத்தாங்களாம். இப்ப அந்த வேலைய விட்டுட்டு இந்தியாவச் சுத்திப் பாக்க வந்திருக்காங்களாம். ஊருக்குப் போய் என்ன திட்டம் வெச்சிருக்காங்கன்னு கேட்டோம். மசாலா டீதான் இப்போ லண்டன்ல பிரபலமாம். அதுக்கு ஒரு கட போடத் திட்டம் வெச்சிருக்காங்களாம். அடடா!

அப்ப நான் ஒரு பேச்சு சொன்னேன். "ஐயா, நீங்க இந்த மாதிரி வேலைல பெருசு சிறுசுன்னு பாக்காமச் செய்றீங்க. ஆனாலும் பாருங்க உங்களால உலகம் சுத்த முடியுது. அதுக்கு உங்களோட ஆர்வமும் நல்ல காரணம். நாங்க பெரிய பெரிய கம்பெனில வேலை பாக்குறோம். ஆனாலும் உலகம் சுத்திப் பாக்குறதுங்குறது கூட கம்பெனி செலவுல போனாத்தான். சம்பாதிக்கிறது, சேத்து வெக்கிறது, வீடு கட்டுறது, பிள்ளைகளுக்குக் குடுக்குறதுன்னே நாங்க செய்றோம். சம்பாதிக்கிற பணத்தை இன்னும் பயனுள்ளதாச் செல்வழிக்க எங்களுக்கு இன்னும் தெரியனும். அதுவுமில்லாம வேலைல சின்ன வேலை பெரிய வேலைன்னெல்லாம் நாங்க நெறைய பாக்குறோம். அதுவும் மாறனும். ஆனாலும் உழைப்புங்குற ஒன்னு எங்கள வாழ வைக்குது. அதுதான் எங்க சொத்து."

அவரும் நாங்க கொடுத்த உளுந்து பக்கோடாவ மென்னுக்கிட்டு (மதுரைக்கார நண்பனோட அம்மா கொண்டு வந்து ஸ்டேஷன்ல குடுத்தாங்க) தலையத் தலைய ஆட்டுனாரு. பிரியாணிதான் ரெண்டு பேரும் வாங்கிச் சாப்பிட்டாங்க. அதுவும் ஸ்டேஷன்ல வாங்கீருந்தாங்க. ரொம்ப நல்லாப் பழகுனாங்க. நாங்களும் நல்லாப் பேசீட்டுத் தூங்கீட்டோம். அடுத்தநாள் காலைல பெங்களூர் கண்டோன்மெண்ட்டுல எறங்கீட்டு டாட்டா சொன்னோம்.

முற்றும்.

பென்ஸ்
12-06-2006, 08:41 AM
ராகவா... அடுத்த பயணம் எப்போ... நம்மளையும் சேத்துகோங்க...

தாமரை
12-06-2006, 09:16 AM
ராகவா... அடுத்த பயணம் எப்போ... நம்மளையும் சேத்துகோங்க...
உங்க ட்ரெக்கிங் என்ன ஆச்சு பென்ஸூ.. எங்கயோ கூர்க் போறேன்னு சொன்னீயளே.. அப்ம்புட்டுதானா?

பென்ஸ்
12-06-2006, 09:38 AM
போயிட்டு வந்தாச்சே..... அருமையான பயணம்....

சாரல்...
மழை...
மனதுக்கு பிடித்தவர்கள்...
அருமையான இடம்....
ஆட்டம்... பாட்டம்.. கொண்டாட்டம்...

gragavan
12-06-2006, 09:39 AM
உங்க ட்ரெக்கிங் என்ன ஆச்சு பென்ஸூ.. எங்கயோ கூர்க் போறேன்னு சொன்னீயளே.. அப்ம்புட்டுதானா?அவரு எங்க போயி அம்புட்டுக்கிட்டாரோ.......

தாமரை
12-06-2006, 09:40 AM
போயிட்டு வந்தாச்சே..... அருமையான பயணம்....

சாரல்...
மழை...
மனதுக்கு பிடித்தவர்கள்...அருமையான இடம்....
ஆட்டம்... பாட்டம்.. கொண்டாட்டம்...
உண்மையை உளரிட்டீகளே.. இப்போ சரவணன் வந்து யார் அதுன்னு கேட்பாரே!!!!

போன டிரெக்கிங்கில் உங்க மேல உண்டான சந்தேகம் இப்போ உறுதியாயிடுச்சே

பென்ஸ்
12-06-2006, 09:43 AM
அது வேற ... இது வேற....
இரண்டையும் குழப்பிக்காதிங்க...

gragavan
12-06-2006, 09:45 AM
உண்மையை உளரிட்டீகளே.. இப்போ சரவணன் வந்து யார் அதுன்னு கேட்பாரே!!!!

போன டிரெக்கிங்கில் உங்க மேல உண்டான சந்தேகம் இப்போ உறுதியாயிடுச்சே தாமரை, அப்ப விஷயம் அப்படித்தான் இருக்கனும். இதுல இவரு எங்க கூட ஊர் சுத்த வர்ரேங்காரே...இதெல்லாம் நல்லாவா இருக்கு :D :D :D :D :D

தாமரை
12-06-2006, 10:43 AM
அது வேற ... இது வேற....
இரண்டையும் குழப்பிக்காதிங்க...
அதாவது ... அப்ப மனதுக்கு பிடித்தவர்கள் வேற.. இப்ப மனதுக்கு பிடித்தவர்கள் வேற.. அப்படித்தானே...:rolleyes: :rolleyes: :rolleyes:

நீங்க கம்பெனி மாறிட்டதாச் சொன்னதும் இதைத்தானோ!... நாங்கதான் அப்பாவிகளாக தப்பாப் புரிந்துகொண்டோமோ???:confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused:

gragavan
12-06-2006, 12:27 PM
அதாவது ... அப்ப மனதுக்கு பிடித்தவர்கள் வேற.. இப்ப மனதுக்கு பிடித்தவர்கள் வேற.. அப்படித்தானே...:rolleyes: :rolleyes: :rolleyes:

நீங்க கம்பெனி மாறிட்டதாச் சொன்னதும் இதைத்தானோ!... நாங்கதான் அப்பாவிகளாக தப்பாப் புரிந்துகொண்டோமோ???:confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused:ஓ இதுதான் கம்பெனி மாறுன ரகசியமா? எனக்கு இப்பத்தான புரியுது.

பென்ஸ்
12-06-2006, 12:47 PM
விட்டா இன்னொரு டாவின்சி கோட் படமே எடுத்துடுவிங்க போல இருக்கு.... யப்பு... என்னோட டீம் மேட் எல்லோரும் ரொம்ப நல்லவங்க... அதனால என் மனசுக்கு அவங்க எல்லோரையும் நல்லா புடிக்கும்...
ராகவா.. நான் கம்பெனி மாறுன சோகத்தை விளாவாரியா போரத்தில் வைத்து காப்பி குடிக்க குடிக்க சொன்னேனேபா.. மறந்திட்டிங்களா...

தாமரை
12-06-2006, 12:54 PM
விட்டா இன்னொரு டாவின்சி கோட் படமே எடுத்துடுவிங்க போல இருக்கு.... யப்பு... என்னோட டீம் மேட் எல்லோரும் ரொம்ப நல்லவங்க... அதனால என் மனசுக்கு அவங்க எல்லோரையும் நல்லா புடிக்கும்...
ராகவா.. நான் கம்பெனி மாறுன சோகத்தை விளாவாரியா போரத்தில் வைத்து காப்பி குடிக்க குடிக்க சொன்னேனேபா.. மறந்திட்டிங்களா...
அப்புறம் ராகவன் போனபின்பு நடந்த கதை எனக்கும் சரவணனுக்கும்தானே தெரியும்... :D :D :D :D

தாமரை
12-06-2006, 12:55 PM
விட்டா இன்னொரு டாவின்சி கோட் படமே எடுத்துடுவிங்க போல இருக்கு.... யப்பு... என்னோட டீம் மேட் எல்லோரும் ரொம்ப நல்லவங்க... அதனால என் மனசுக்கு அவங்க எல்லோரையும் நல்லா புடிக்கும்...
ராகவா.. நான் கம்பெனி மாறுன சோகத்தை விளாவாரியா போரத்தில் வைத்து காப்பி குடிக்க குடிக்க சொன்னேனேபா.. மறந்திட்டிங்களா...
அப்ப அவங்க உங்க புதிய டீம் மேட்ஸ்.. உங்க மனசுக்கு ரொம்பப் புடிச்சவங்க... ரொம்ப நல்லவங்க... ரொம்ப இண்டரெஸ்டிங்கா இருக்கே!!! அப்புறம்...:rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

தாமரை
12-06-2006, 01:27 PM
விட்டா இன்னொரு டாவின்சி கோட் படமே எடுத்துடுவிங்க போல இருக்கு.... யப்பு... என்னோட டீம் மேட் எல்லோரும் ரொம்ப நல்லவங்க... அதனால என் மனசுக்கு அவங்க எல்லோரையும் நல்லா புடிக்கும்...
ராகவா.. நான் கம்பெனி மாறுன சோகத்தை விளாவாரியா போரத்தில் வைத்து காப்பி குடிக்க குடிக்க சொன்னேனேபா.. மறந்திட்டிங்களா...
நீங்க காட்டுற சீனுக்கு 18 ரீல்ல நாலு படம் எடுக்கலாமே!!!!:rolleyes: :rolleyes: :rolleyes:

pradeepkt
13-06-2006, 05:46 AM
ஓ அப்படியா, அது என்னய்யா கதை, இந்த வாரம் நான் வரும்போது மறக்காம சொல்லிறணும் ஆமா!
ராகவா,
ஒரு வழியா உங்க பயணம் இனிதே முடிஞ்சுதா? என்னமோய்யா ஊரு சுத்தணும்னாலும் அதுக்கெல்லாம் குடுத்து வச்சுருக்கணும் போல. நானும் எத்தனையோ தடவை இங்ஙன இருக்குற பெங்களூருக்குப் போகத் திட்டம் போட்டு அது ஊத்திக்கிருச்சு... ஒரு தடவையாச்சும் உங்க கும்பலோடும் இது வரைக்கும் கேள்விப்படாத ஊருகளுக்குப் போவணும்னு ஆசை வந்துருச்சு...

மதி
13-06-2006, 05:56 AM
எப்படியோ..பென்ஸும் கடைசில உண்மைய ஒத்துக்கிட்டாரு...மேற்கொண்டு விவரத்த இந்த வார இறுதியில கேட்போம்.

பிரதீப், இந்த வாரம் வர்றீங்க தானே..?
யப்பா..இந்த வாரயிறுதியில எல்லோரும் ஊரில தானே இருக்கீங்க..??

mukilan
13-06-2006, 06:22 AM
எப்படியோ..பென்ஸும் கடைசில உண்மைய ஒத்துக்கிட்டாரு...மேற்கொண்டு விவரத்த இந்த வார இறுதியில கேட்போம்.

பிரதீப், இந்த வாரம் வர்றீங்க தானே..?
யப்பா..இந்த வாரயிறுதியில எல்லோரும் ஊரில தானே இருக்கீங்க..??

எனக்கு பெங்களூருப் பாராயணம் கேட்கணுமே! யாராவது எழுதுவீகளா??

தாமரை
13-06-2006, 08:27 AM
பென்ஸூ! பிரதீப்புக்கு ஒரு காபி...!!!!

பென்ஸ்
13-06-2006, 08:37 AM
சரவணன் , மதிக்கும் சேர்த்து சொல்லுறென்...
இல்லைனா வருத்த படுவாங்க...

மதி
13-06-2006, 08:42 AM
சரவணன் , மதிக்கும் சேர்த்து சொல்லுறென்...
இல்லைனா வருத்த படுவாங்க...
இன்னாதிது காபி கத?

தாமரை
13-06-2006, 08:45 AM
இன்னாதிது காபி கத?
பொறுத்திருந்து தெரிஞ்சுக்குங்க அத...

மதி
13-06-2006, 09:21 AM
பொறுத்திருந்து தெரிஞ்சுக்குங்க அத...
இதுக்குமா..?

RRaja
13-06-2006, 11:01 AM
ஐயா, நீங்க இந்த மாதிரி வேலைல பெருசு சிறுசுன்னு பாக்காமச் செய்றீங்க. ஆனாலும் பாருங்க உங்களால உலகம் சுத்த முடியுது. அதுக்கு உங்களோட ஆர்வமும் நல்ல காரணம். நாங்க பெரிய பெரிய கம்பெனில வேலை பாக்குறோம். ஆனாலும் உலகம் சுத்திப் பாக்குறதுங்குறது கூட கம்பெனி செலவுல போனாத்தான். சம்பாதிக்கிறது, சேத்து வெக்கிறது, வீடு கட்டுறது, பிள்ளைகளுக்குக் குடுக்குறதுன்னே நாங்க செய்றோம். சம்பாதிக்கிற பணத்தை இன்னும் பயனுள்ளதாச் செல்வழிக்க எங்களுக்கு இன்னும் தெரியனும். அதுவுமில்லாம வேலைல சின்ன வேலை பெரிய வேலைன்னெல்லாம் நாங்க நெறைய பாக்குறோம். அதுவும் மாறனும்.
சரியாச்சொன்னீங்க ராகவன்.
பயணக்கட்டுரை அருமையாக இருந்தது

pradeepkt
14-06-2006, 06:45 AM
ம்ம்ம்.. கண்டிப்பா வரேன்.
வெள்ளி அல்லது சனிக்கிழமை மாலை சந்திக்கலாம். சொல்லுங்க மக்கா!

மதி
14-06-2006, 07:17 AM
ம்ம்ம்.. கண்டிப்பா வரேன்.
வெள்ளி அல்லது சனிக்கிழமை மாலை சந்திக்கலாம். சொல்லுங்க மக்கா!
எப்போன்னாலும் நான் ரெடி

அல்லிராணி
15-06-2006, 10:30 AM
உங்கள் சந்திப்பு இனிமையாக அமைய வாழ்த்துக்கள்.

மதி
15-06-2006, 12:11 PM
உங்கள் சந்திப்பு இனிமையாக அமைய வாழ்த்துக்கள்.
அல்லியே..
வாழ்த்துக்கு நன்றி...!!!!!

முடிஞ்சா நீங்களும் சந்திப்புக்கு வரலாம் தானே?

pradeepkt
19-06-2006, 09:34 AM
அருமையான சந்திப்பு!
மதி அதைப் பற்றிச் சீக்கிரம் எழுதுவார்.