PDA

View Full Version : விழியை மூடும் இமையே.........



thirukanaga
23-03-2006, 03:37 PM
விழியை மூடும் இமையே.........
பார்த்த அந்த பசுமைகளை
படித்த அந்த புதுமைகளை
துடித்தழுத அந்த கவலைகளை
தூரம் போன அந்த உறவுகளை
தொட்டுச் சென்ற அந்த சுகங்களை
தொல்லை கொடுத்த அந்த முகங்களை
பதிவு செய்து வைத்தாயோ
பார்த்துப் பார்த்து தினம் ரசிக்க

அல்லிராணி
24-03-2006, 03:31 AM
விழியை மூடும் இமையே.........
பார்த்த அந்த பசுமைகளை
படித்த அந்த புதுமைகளை
துடித்தழுத அந்த கவலைகளை
தூரம் போன அந்த உறவுகளை
தொட்டுச் சென்ற அந்த சுகங்களை
தொல்லை கொடுத்த அந்த முகங்களை
பதிவு செய்து வைத்தாயோ
பார்த்துப் பார்த்து தினம் ரசிக்க

பார்த்ததை படித்ததை
திடித்து அழுததை
தூரம் போனதை
தொட்டுச் சென்றதை
தொல்லை கொடுத்ததை
பதித்து வைக்க மனமில்லையோ

என்னிடம் கேட்கிறாயே!

இப்படிக்கு
இமை.

தாமரை
24-03-2006, 04:14 AM
பார்த்ததை படித்ததை
திடித்து அழுததை
தூரம் போனதை
தொட்டுச் சென்றதை
தொல்லை கொடுத்ததை
பதித்து வைக்க மனமில்லையோ

என்னிடம் கேட்கிறாயே!

இப்படிக்கு
இமை.

இமையின் வேலை
கண்மணியை
பாதுகாத்து
துடைத்து
(ஒவ்வொரு முறை இமைக்கும் போதும் விழிப்படலம் துடைக்கபப்டுகிறது)
புதிய காட்சிகளை
தெளிவாகக் காட்டுவது...

ஓ இமையே
நீ இமைக்கும் போது
அதனால்தான்
அவள்
இன்னும் அழகாக...

Mano.G.
24-03-2006, 07:48 AM
ஆகா அருமை
மூன்றுமே அருமை
நல்ல உவமை

வாழ்த்துக்கள்
திருகனகா, அல்லிராணி, செல்வன்


மனோ.ஜி

thirukanaga
24-03-2006, 09:44 AM
மனத்தால் நினைக்கமுடியும் பார்க்கமுடியாது
கண்ணால் பார்த்ததை மீண்டும் பார்க்க முடியாது
அதையே இமையில் பதிவு செய்துவைத்தால் கண்ணால் பார்க்கலாம்

தாமரை
24-03-2006, 09:51 AM
மனத்தால் நினைக்கமுடியும் பார்க்கமுடியாது
கண்ணால் பார்த்ததை மீண்டும் பார்க்க முடியாது
அதையே இமையில் பதிவு செய்துவைத்தால் கண்ணால் பார்க்கலாம்
மனதால் பார்க்க முடியாதா?
தவறு... அன்பினைப் பார்க்க மனத்தால்தான் முடியும்...
கண்ணால் காணாததைக் கூட மனதால் பார்க்க முடியும்..

இமையில் ஸ்டோரேஜ் செய்யும் ஆபரேடிங் சிஸ்டம்
இன்னும் வரவில்லை...

அல்லிராணி
24-03-2006, 10:33 AM
மனத்தால் நினைக்கமுடியும் பார்க்கமுடியாது
கண்ணால் பார்த்ததை மீண்டும் பார்க்க முடியாது
அதையே இமையில் பதிவு செய்துவைத்தால் கண்ணால் பார்க்கலாம்
அப்ப கண்ணைக் கசக்கினால் அழிந்துவிடாதா?

பதிவது என்பது மூளியிலும் மனதிலும் தான்.. வேண்டுமென்றால் இமையில் பச்சை குத்திக் கொள்ளலாம்.