PDA

View Full Version : விண்டோஸ் டிப்ஸ்



இராசகுமாரன்
21-03-2006, 08:21 AM
நண்பர்களே..

இந்த தலைப்பை "கம்யூட்டர் டிப்ஸ்" அல்லது "கணணி யுக்திகள்" என்று கூறலாமா என்று யோசித்தேன், ஆனால் அதிகம் பேர் உபயோகிக்கும் OS (மூலப் பொருள்) விண்டோஸ் என்பதால் விண்டோஸ் டிப்ஸ் என்று தலைப்பை கொடுத்து விட்டேன்.

இங்கே பல கணணி வல்லுனர்கள் உள்ளனர், அதே நேரத்தில் கணணியை எப்படி நன்றாக, உபயோகமாக, வேகமாக உபயோகிக்க வேண்டும் என்று தெரியாதவர்களும் இருக்கிறார்கள். இங்குள்ள வல்லுனர்கள் தங்களுக்கு தெரிந்த யுக்திகள், 'ஷார்ட்கட்'கள், டிப்ஸ்களை, அள்ளி வழங்கட்டுமே..

எனக்கு தெரிந்த ஒரு சிலவற்றை முதலில் கூறிவிடுகிறேன்.

1) பல விண்டோக்கள் திறந்து வைத்து வேலை செய்து கொண்டிருப்பேன். அத்தனை விண்டோக்களையும் தனித் தனியாக மூடுவது கடனமாகிவிடும். அதற்கு அடிக்கடி ஷார்ட்கட் உபயோகிப்பேன்.

ராசராசன்
21-03-2006, 04:58 PM
நன்றி திரு.இராசகுமார்.

விண்டோஸ் பற்றிய பல தகவல்கள் என்னிடம் இருப்பினும் அதனை எப்படி நம் தமிழிலில் உரிய சொற்றொடருடன் பதிப்பது என்பதில் சிறிய தடங்கல் ஏற்படுகிறது.
களவுறவுகள் ஏதேனும் கணனி சம்பந்தமான தமிழ் அகராதியை சுட்டிக்காட்டினால் இங்கே பேருதவியாக இருக்கும். நம் சுந்தரத்தமிழில் அதை களப்பதிவு செய்ய இயலும்.

rajasi13
02-04-2006, 04:26 AM
பொதுவாக வழக்கில் இருக்கும் சொற்களை பயன் படுத்தினால் எல்லாரும் எளிதாக புரிந்து கொள்ளலாம். தமிழ் படுத்துகிறேன் என்று சொல்லி அந்த தமிழ் வார்த்தை புரிய ஒரு அகராதி தேடும் நிலை வராமல் இருக்கத்தான் இதை சொன்னேன்.

சுபன்
02-04-2006, 04:39 AM
ராஜாஸி சொல்வது சரி. அனைவருக்கும் விளங்கும் வகையில் இருக்க வேண்டியதே முக்கியம்

pradeepkt
02-04-2006, 01:53 PM
முதலில் கொஞ்சம் முன்னே பின்னேதான் இருக்கும். அப்புறம் கொஞ்ச நாளில் சரியாகி விடும். எனவே முடிந்த அளவு தமிழ்ச் சொற்கள் பயன் படுத்துவதுதான் நன்று

senthilkumarsb
04-04-2006, 11:10 AM
இது வரவேற்க வேண்டிய விசயம்

மஸாகி
16-04-2006, 04:36 AM
நன்றி திரு.இராசகுமார்.

விண்டோஸ் பற்றிய பல தகவல்கள் என்னிடம் இருப்பினும் அதனை எப்படி நம் தமிழிலில் உரிய சொற்றொடருடன் பதிப்பது என்பதில் சிறிய தடங்கல் ஏற்படுகிறது.
களவுறவுகள் ஏதேனும் கணனி சம்பந்தமான தமிழ் அகராதியை சுட்டிக்காட்டினால் இங்கே பேருதவியாக இருக்கும். நம் சுந்தரத்தமிழில் அதை களப்பதிவு செய்ய இயலும்.

அன்புள்ள நன்பருக்கு,
தமிழை - அதற்கேயுரிய தனித்துவத்துடன் - உலகெங்கும் கொண்டுசேர்க்க விரும்பும் - உங்கள் விருப்பம் நியாயமானதே. இருந்தபோதிலும், அனைத்தையும் தமிழ்படுத்தியே - பயன்படுத்துவோம் என அடம்பிடிப்பது சரியல்ல. - ஏன் இதை சொல்கின்றேன் என்றால், இப்பொழுதெல்லாம் சில தமிழ் தளங்களுக்கு போய் பார்க்கவே பயமாக இருக்கிறது. தலையை சொரிந்து கொண்டு - எவ்வளவு நேரத்துக்கு உட்கார்ந்து பொறுமையுடன் வாசிக்க முடியும்.

காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுவது வாஸ்த்தவம்தான். இருந்தபோதிலும் எதிர்கால சந்ததியைக் கருத்தில் கொண்டு - நிகழ்கால மக்களுக்கு கிடைக்க வேண்டிய அறிவை - அடைவதை தடுக்கும் சாதனமாக இந்த தமிழ் மொழிப்படுத்தலை ஆக்க வேண்டாம். அப்படி எழுத விரும்புவர்கள் - மறக்காமல் குறிப்பிட்ட சொல்லுக்கான வழமையான பெயரையும் (பிற மொழியில் இருந்தாலும்) குறிப்பிட்டால் நலம் என்பது எனது - தாழ்மையான கருத்தாகும்.

அதேநேரம் - இன்றைக்கு நாமெல்லாம், ஆங்கிலம், சிங்களம் போன்ற மொழிகளை இலகுவாக கற்றுக் கொள்ள - அம்மொழிகளில் உள்ள சொற்கள் பல ஏற்கனவே நமக்கு பரிச்சயமாக இருப்பது கூட ஒரு காரணமாகும் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

குறிப்பு : நாங்களும் தமிழ் பற்றுள்ள - தமிழர்கள்தான், ஆகவேதான் தமிழ் மன்றம் தேடி வந்து இணைந்திருக்கின்றோம்.

இருந்தபோதிலும், நண்பரின் ஆர்வத்தை குறைக்க கூடாதென்பதற்காக - எனக்கு தெரிந்த ஒரு தளத்தையும் - ஒரு தேடு பொறியையும் (அகராதி போன்ற சொற்களை கொடுத்து - தமிழிலேயே கொடுத்து தேட வசதியாக) இங்கே தருகிறேன். - வாழ்க உங்கள் பணி, வளரட்டும் தமிழ்..

http://www.tamilvu.org/library/o33/html/o3300001.htm

http://www.suratha.com/search.htm

நட்புடன் - மஸாகி
16.04.2006

மயூ
16-04-2006, 05:52 AM
http://ta.wikipedia.com
ல் தற்போது பல தரமான கணனி கட்டுரைகள் உள்ளன. ஆர்வமானவர்கள் சென்றுபார்கலாம். பங்களிக்கலாம். இது ஒரு இலாபநோக்கற்ற திறந்த கலைக்களஞ்சிய முயற்சி.

Blog (http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81) என்பதற்கான கட்டுரையை காணவும்.

prabhafriend
18-06-2006, 11:30 PM
நிறைய பேருக்கு "Internet Explorer" உள்ள "Work-Offiline" பற்றி தெரியவில்லை . இந்த வசதியை பயண்படுத்தி ஒரு Websiteஐ முழுவதுமாக பதிவிறக்கி நீங்கள் இணையத்தில் இணையாமலே படிக்கலாம் .

செய்முறை:

1. முதலில் உங்களுக்கு தேவையான வலைமனைக்கு செல்லுங்கள்
2. அதை Favouriteஆக சேருங்கள் .
3. அப்போதே "available this page offline" என்ற வசதியை தேர்வு செய்யுங்கள் .
4 பிறகு "Tools" மெனு சென்று "Synchronize" சென்று தேவையானவற்றை தேர்வு செய்தபின் "Synchronize"ஐ அழுத்தவும் .
5. பிறகு "File" சென்று "WorkOffline"ஐ தேர்வு செய்தபின் Favouritesல் போய் தேர்வு செய்யுங்க்ள் .

மஸாகி
06-08-2006, 03:51 AM
நிறைய பேருக்கு "Internet Explorer" உள்ள "Work-Offiline" பற்றி தெரியவில்லை . இந்த வசதியை பயண்படுத்தி ஒரு Websiteஐ முழுவதுமாக பதிவிறக்கி நீங்கள் இணையத்தில் இணையாமலே படிக்கலாம் .

செய்முறை:

1. முதலில் உங்களுக்கு தேவையான வலைமனைக்கு செல்லுங்கள்
2. அதை Favouriteஆக சேருங்கள் .
3. அப்போதே "available this page offline" என்ற வசதியை தேர்வு செய்யுங்கள் .
4 பிறகு "Tools" மெனு சென்று "Synchronize" சென்று தேவையானவற்றை தேர்வு செய்தபின் "Synchronize"ஐ அழுத்தவும் .
5. பிறகு "File" சென்று "WorkOffline"ஐ தேர்வு செய்தபின் Favouritesல் போய் தேர்வு செய்யுங்க்ள் .

நல்ல குறிப்பு..
உங்கள் உதவித் துளிகள் தொடரட்டும்..

நட்புக்கு - மஸாகி
06.08.2006

omnlog03
22-01-2007, 04:54 AM
மிக்க னன்ரி

kavitha
09-02-2007, 10:06 AM
அங்கீகாரம் பெற்ற கணினி கலைச்சொல் அகராதி மின்வடிவில் எங்கே கிடைக்கும்.. தெரிந்தவர்கள் கூறுங்களேன்..