PDA

View Full Version : டிரான்ஃபர்!!!

அல்லிராணி
20-03-2006, 04:04 AM
ஆயிரக் கணக்கில்
வானரங்களை
பலியிட்டு
சீதைக்கு டிரான்ஸ்ஃபர்

அசோக வனத்திலிருந்து
ஆளரவமில்லா
இன்னொரு வனத்திற்கு...

அல்லி.

தாமரை
20-03-2006, 04:37 AM
ஆயிரக் கணக்கில்
வானரங்களை
பலியிட்டு
சீதைக்கு டிரான்ஸ்ஃபர்

அசோக வனத்திலிருந்து
ஆளரவமில்லா
இன்னொரு வனத்திற்கு...

அல்லி.
தக தக தக தக
தங்க வேட்டை
டார்ச்சரில் இராமன்
பின்னாலேயே இலட்சுமணன்
தொலைந்து போனாள் சீதை..

gragavan
20-03-2006, 05:25 AM
ஆயிரக் கணக்கில்
வானரங்களை
பலியிட்டு
சீதைக்கு டிரான்ஸ்ஃபர்

அசோக வனத்திலிருந்து
ஆளரவமில்லா
இன்னொரு வனத்திற்கு...

அல்லி.நியாயமான கேள்வி. வானரங்களை மட்டுமா? இலங்கையே அழிச்சி....இராவணனையும் கொன்னு.....என்னவெல்லாமோ செஞ்சி...கடைசீல நெற மாசக் கருப்பினிய காட்டுக்கு அனுப்பியாச்சு...ம்ம்ம்ம்...கேக்க ஆளில்லாமக் கெடக்கு.

அல்லிராணி
20-03-2006, 05:43 AM
தக தக தக தக
தங்க வேட்டை
டார்ச்சரில் இராமன்
பின்னாலேயே இலட்சுமணன்
தொலைந்து போனாள் சீதை..
தங்க மானை
விரட்டி ஏமாந்த இராமனுக்கு
தங்கத்தின் மேல்
ஆசை விடவில்லை...
ஆம்
அசுவமேத யாகத்தில்
அருகில்
தங்கச் சீதை

----------------அல்லி

gragavan
20-03-2006, 08:19 AM
தங்க மானை
விரட்டி ஏமாந்த இராமனுக்கு
தங்கத்தின் மேல்
ஆசை விடவில்லை...
ஆம்
அசுவமேத யாகத்தில்
அருகில்
தங்கச் சீதை

----------------அல்லிஉண்மைதான்...உள்ளமெல்லாம் தங்கமான சீதையோ காட்டில்......மேனியெல்லாம் தங்கமான சீதையின் சிலையோ வேள்வியில்....ம்ம்ம்ம்...இராமா! உனக்கு வேண்டுவன நீ அறியாயோ! உனக்கு முன்னும் பின்னும் அயோத்தி உண்டு. அதற்கு நல்லரசரும் உண்டு. உன் தம்பி கூட உன்னை விட ஆயிரம் மடங்கு சிறப்பானவன் என்று புலவர் சொல்வர். ஆனால் சீதைக்கு? வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன் என்று வனம் புகுந்தாள் சீதை. அவளுக்கு ஆதாரம் நீதானே. அப்படியிருக்க அயோத்தியே பெரிது என்று நீ எப்படி நினைக்கலாம். நீ ஒருவந்தான் அரசாள முடியும் என்ற கருவமா? அவளை நீ நீங்கினாய். இல்லை. இல்லை. விரட்டினாய்....அவள் இன்னொருவனோடு சேர்ந்திருந்தாலும் பாராட்டியிருப்பேன் அவளை. பாதகத்தி....மண்ணுக்குள் போய் விட்டாள். உன்னைப் போன்றவர்களைத் திருமணம் செய்யும் கற்புக்கரசிகளுக்கு மண்தான் மிச்சம் என்று சொல்லாமல் சொல்லி விட்டாள்.

தாமரை
20-03-2006, 09:16 AM
உண்மைதான்...உள்ளமெல்லாம் தங்கமான சீதையோ காட்டில்......மேனியெல்லாம் தங்கமான சீதையின் சிலையோ வேள்வியில்....ம்ம்ம்ம்...இராமா! உனக்கு வேண்டுவன நீ அறியாயோ! உனக்கு முன்னும் பின்னும் அயோத்தி உண்டு. அதற்கு நல்லரசரும் உண்டு. உன் தம்பி கூட உன்னை விட ஆயிரம் மடங்கு சிறப்பானவன் என்று புலவர் சொல்வர். ஆனால் சீதைக்கு? வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன் என்று வனம் புகுந்தாள் சீதை. அவளுக்கு ஆதாரம் நீதானே. அப்படியிருக்க அயோத்தியே பெரிது என்று நீ எப்படி நினைக்கலாம். நீ ஒருவந்தான் அரசாள முடியும் என்ற கருவமா? அவளை நீ நீங்கினாய். இல்லை. இல்லை. விரட்டினாய்....அவள் இன்னொருவனோடு சேர்ந்திருந்தாலும் பாராட்டியிருப்பேன் அவளை. பாதகத்தி....மண்ணுக்குள் போய் விட்டாள். உன்னைப் போன்றவர்களைத் திருமணம் செய்யும் கற்புக்கரசிகளுக்கு மண்தான் மிச்சம் என்று சொல்லாமல் சொல்லி விட்டாள்.
சரி சரி சரி.. நீங்க திருமணத்துக்கு தயார்தான்... ரெகமெண்ட் பண்ணனும்னா சொல்லுங்க...

அல்லிராணி
20-03-2006, 09:30 AM
உண்மைதான்...உள்ளமெல்லாம் தங்கமான சீதையோ காட்டில்......மேனியெல்லாம் தங்கமான சீதையின் சிலையோ வேள்வியில்....ம்ம்ம்ம்...இராமா! உனக்கு வேண்டுவன நீ அறியாயோ! உனக்கு முன்னும் பின்னும் அயோத்தி உண்டு. அதற்கு நல்லரசரும் உண்டு. உன் தம்பி கூட உன்னை விட ஆயிரம் மடங்கு சிறப்பானவன் என்று புலவர் சொல்வர். ஆனால் சீதைக்கு? வாழ்ந்தால் உன்னோடு வாழ்ந்திருப்பேன் என்று வனம் புகுந்தாள் சீதை. அவளுக்கு ஆதாரம் நீதானே. அப்படியிருக்க அயோத்தியே பெரிது என்று நீ எப்படி நினைக்கலாம். நீ ஒருவந்தான் அரசாள முடியும் என்ற கருவமா? அவளை நீ நீங்கினாய். இல்லை. இல்லை. விரட்டினாய்....அவள் இன்னொருவனோடு சேர்ந்திருந்தாலும் பாராட்டியிருப்பேன் அவளை. பாதகத்தி....மண்ணுக்குள் போய் விட்டாள். உன்னைப் போன்றவர்களைத் திருமணம் செய்யும் கற்புக்கரசிகளுக்கு மண்தான் மிச்சம் என்று சொல்லாமல் சொல்லி விட்டாள்.

வில்லொடித்து
மணம் புரிந்தான்
அப்போதே
புரிந்து கொண்டிருக்க வேண்டும்
தன் சொல்லொடித்து
வனம் அனுப்புவானென.

இளந்தமிழ்ச்செல்வன்
20-03-2006, 04:47 PM
இராமாயணம் படிக்காத குறை கொஞ்சம் தீர்ந்தது.

ப்ரியன்
21-03-2006, 01:50 PM
ஆயிரக் கணக்கில்
வானரங்களை
பலியிட்டு
சீதைக்கு டிரான்ஸ்ஃபர்

அசோக வனத்திலிருந்து
ஆளரவமில்லா
இன்னொரு வனத்திற்கு...

அல்லி.

கலக்கல் அல்லிராணி..நல்ல கவிதை வாழ்த்துக்கள்

ஆதவா
14-05-2007, 09:13 PM
அல்லிராணியின் கலக்கல் கவிதை... எம்மா//// இன்னும் எத்தனை எழுதி வெச்சுருக்கீங்க அக்கா.. தேடிப்பிடிக்கிறேன் பொறுங்க... சூப்பர் கவிதையப்பு....

அமரன்
12-06-2007, 06:51 PM
அல்லிராணி, செல்வர் கவிதைகளில் பலர வார்த்தைகளில் மின்னுகின்றார் ராகவர்.
சொல்லாட்டுக் கவிதை படிக்க படிக்கவேண்டும் இவர்கள் கவிகளைப்போலும்.
அல்(வறுமை) இராணியின் சொல்லில் இல்லை வறுமை.

அக்னி
07-07-2007, 05:28 PM
அல்லிராணியின் கவிதைகளும், செல்வரின் கவிதைகளும்,
உள்ளத்தில், உவகை தரும் பொக்கஷங்கள்...
அழகு, ஆழம் நிறைந்து, ஆனந்தம் தருகின்றன...

ஓவியன்
24-11-2007, 02:29 AM
அல்லிராணி
தாமரைச்செல்வர்
இராகவர்

மூவரும் ஒரு இராமாயண ஆராட்சியே நடாத்தி உள்ளனரே...
அறிந்த விடயங்கள் தான்
ஆனால்
இவர் மூவரும் பார்த்த கோணம் வேறு....

பாராட்டுக்கள் மூவருக்கும்....

தாமரை
24-11-2007, 02:37 AM
ஒரு கதையைப் படிக்கும் போது கதாசிரியர் என்ன சொல்கிறார் என்பதைப் பார்த்தல் என்பது கற்பனை கதைகளுக்கு மட்டுமே பொருந்து. வரலாற்று, புராண, இதிகாச இலக்கியங்களை படிக்கும் பொழுது கற்பனையில் சிறிது வாழ்ந்தும் பார்த்தாக வேண்டியிருக்கிறது.. அறிவியல் கட்டுரைகளைப் படிக்கும் போதும் இந்த அலசல் முக்கியமானது.. இல்லையென்றால் மோட்டார் கண்டுபிடித்ததைக் கண்டு டைனமோ எலெக்ட்ரிக் ஜெனரேட்டரைக் கண்டுபிடிக்க இயலாது அல்லவா!

ஓவியன்
24-11-2007, 02:55 AM
உண்மைதான் வாழ்வியல் இலக்கியங்களுடனிணைந்த வரலாறு, புராண இதிகாசங்களை படித்து ஆராய்ந்து தெளிந்தாலே அதிலுள்ள பயன் தரு கருத்துக்களை தெளிவாக உள்வாங்க முடியும்....

இங்கே இராகவன் அண்ணா கூறிய கருத்து எத்துணை உண்மையானது, இராமன் நாட்டினை விட்டு விட்டு இராமனை மட்டும் நம்பியிருக்கும் சீதையுடன் சென்றிருக்கலாமே....?
அவர் தம்பி இலக்குமணன் நாட்டை ஆண்டிருக்க மாட்டானா...??

நியாயமான கேள்வி...!!!
ஆனால் விடை தான் இல்லை.....

தாமரை
24-11-2007, 03:16 AM

இந்த விவாதத்தில் ஆதவனுக்கும் எனக்குமான கேள்வி பதில்களை மட்டும் படியுங்கள்..

படிப்பது என்பது எழுத்துக்களை வார்த்தைகளாக்கி, வார்த்தைகளை வாக்கியமாக்கி பொருள்கொள்ளல் மட்டுமல்ல என தெள்ளெனப் புரியும்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7679

அல்லிராணி
17-07-2011, 02:24 AM
உண்மைதான் வாழ்வியல் இலக்கியங்களுடனிணைந்த வரலாறு, புராண இதிகாசங்களை படித்து ஆராய்ந்து தெளிந்தாலே அதிலுள்ள பயன் தரு கருத்துக்களை தெளிவாக உள்வாங்க முடியும்....

இங்கே இராகவன் அண்ணா கூறிய கருத்து எத்துணை உண்மையானது, இராமன் நாட்டினை விட்டு விட்டு இராமனை மட்டும் நம்பியிருக்கும் சீதையுடன் சென்றிருக்கலாமே....?
அவர் தம்பி இலக்குமணன் நாட்டை ஆண்டிருக்க மாட்டானா...??

நியாயமான கேள்வி...!!!
ஆனால் விடை தான் இல்லை.....

விடையிறுக்க
விடைக்கு
விடையிருக்கோ?

விடைகளே
நீங்களே உங்களைக்
கேள்வி கெளுங்கள்

இராமன் விட்டுச் சென்றால்

அயோத்திக்கு
அவன் செருப்பே கதி!

அவளுக்கு
அவன் செருக்கே கதி!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
14-08-2011, 12:14 PM
அல்லி ராணியா? இல்ல அசத்தல் ராணியா?

கலக்கிட்டீங்க.