PDA

View Full Version : நிரல்வரைவு தொழில்நுட்பம் (Programming Technology) - 3



lavanya
22-02-2004, 08:57 PM
நிரல்வரைவு தொழில்நுட்பம் (Programming Technology) - 3

முன்னதாக கொஞ்சம்
-------------------------------------------------
சாப்ட்வேர்களை பற்றி விளக்கினோம்..புரோக்ராம் என்பது பற்றி சின்னதாய் மற்றுமொரு
விளக்கம் சொல்லிவிட்டு நேரிடையாக விஷயத்திற்கு போய் இருக்கிறேன்...ஏதேனும்
மாறுதல் - எதிர்ப்பாடு இருப்பின் தெரிவியுங்கள்.... எதிர்புறத்தில் கவனிப்பாளர்கள் எந்த
அளவிற்கு கம்ப்யூட்டர் பற்றி தெரிந்திருக்கிறார்கள் என்று தெரியாது விவரிப்பது கொஞ்சம்
கஷ்டமாக இருக்கிறது...அடிப்படை பற்றி சொல்லிக்கொண்டே போகலாமா..அல்லது
இப்படி கொண்டு போய் அங்கிருந்து நேரிடையாக புரோக்ராம் எழுத சொல்லி தரலாமா
என பரீட்சித்து பார்க்கும் சோதனை ஓட்டமே இந்த மூன்றாம் பதிவு.
---------------------------------------------------



<span style='color:#2d00ff'>எழுத்துக்கள் எல்லாம் சேர்ந்து வார்த்தையை தருகின்றன...வார்த்தைகள் எல்லாம் சேர்ந்து
ஒரு வரி ஆகின்றன...வரிகள் எல்லாம் சேர்ந்தால் அது பத்தி(para)..பத்திகள் எல்லாம் சேர்ந்தால் அது தொகுப்பு இது பொதுவானது...இதைப்போலவே கம்ப்யூட்டரிலும் ஒரு சூட்சுமம் இருக்கிறது...

கம்ப்யூட்டருக்கு ஒரு வேலையை செய்ய சொல்லி நீங்கள் கொடுக்கும் ஒரு ஒற்றை
வார்த்தையை கட்டளை அல்லது ஆணை (command) என்கிறோம். இப்போது மௌஸ் காலம்
நீங்கள் டெஸ்க்டாப்பில் உள்ள விண்டோஸ் ஸ்டார்ட் அப் பட்டனை கிளிக் செய்வது கூட
ஒரு கட்டளைதான் இல்லையா...? இது போல் ஒவ்வொன்றாக அடுத்து அடுத்து கம்ப்யூட்டருக்கு நீங்கள் கட்டளையிட்டுக்கொண்டிருப்பதை என்ன சொல்வோம்..ஏதோ
கம்மாண்ட்ஸ்லாம் கொடுத்துக்கிட்டிருக்காப்ல என்போம்... இதையே நீங்கள் தொகுப்பாய்
ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் எழுதி அதை மொத்தமாக இயக்கினால் அதுதான்
புரோக்ராம்.

இப்போது இதை இன்னும் தெளிவாய் சொல்வது என்றால் 'கட்டளைகளின் தொகுப்பு ஒரு
புரோக்ராம்' எனலாம் . ஆங்கிலத்தில் எளிமையாக The set of commands or Group of
Instruction என்பார்கள்.

நடைமுறை வாழ்க்கையோடு இந்த புரோக்ராம் என்பதனை ஒரு எடுத்துகாட்டோடு
பார்ப்போம்.

ஒரு வீட்டுக்கார எஜமானர் தன் பணியாளரை அழைக்கிறார்.

"தம்பி போஸ்ட் ஆபீஸ் போய் எனக்கு எதாவது லெட்டர் வந்திருக்கான்னு பார்த்துட்டு
வாங்க"

"சரிங்கைய்யா" ( போய் வந்து கடிதம் ஏதும் வரவில்லை என்கிறார்)

" இந்தாங்க செக் பேங்க்ல போய் 500 ரூபா பணம் எடுத்துகிட்டு வாங்க"

போய் பணம் எடுத்து வந்து தருகிறார்.

"தெருமுக்குல டெய்லர்கிட்டே சட்டை தைக்க கொடுத்திருந்தேன்..தச்சா வாங்கிட்டு
வந்திடுங்க..."

போய் விட்டு வந்து மாலை வர சொன்னதாக சொல்கிறார்.

இன்னும் பல அலுவல்கள்களை பணிப்பதாக சொல்வோம்...இவை ஒவ்வொன்றும் தனித்தனியே
இடப்பட்ட வேலை. இப்போது பாருங்கள்

"தம்பி போஸ்ட் ஆபீஸ்ல போய் எனக்கு ஏதும் லெட்டர் வந்துருக்கான்னு பார்த்துட்டு அப்படியே இந்தாங்க செக் பக்கத்துல பேங்கல பணம் எடுத்துக்கிட்டு வர்ர வழியிலே தெரு
முக்குல டெய்லர்கிட்டே சட்டை தைக்க கொடுத்திருந்தேன்..தச்சா வாங்கிட்டு....
இத்யாதி இத்யாதிகள்.......
இது எளிமை அல்லவா...? எல்லாத்தையும் ஒண்ணா சொல்லி தொலைக்கலாம்ல என்று
பணியாள் முகம் சுளிக்காது செய்வான் அல்லவா?

புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்...

மற்றொரு கோணத்தில் பார்ப்போம்... வரும் 25 ஆம் தேதி நீங்கள் ஒரு விஷேஷத்தில் கலந்து
கொள்ள உங்கள் நண்பனுடன் போவதாக இருக்கிறீர்கள்..எப்படி இப்போது திட்டமிடுவீர்கள்.

25 ஆம் தேதி காலைல 7 மணிக்கெல்லாம் வீட்டை விட்டு கிளம்பிடனும்
(நீங்கள் எழுதல்,புறப்பட ஆயத்தமாகுதல் முதல் கொண்டு இதில் அடங்கும்)

7:15 பஸ்ஸை பிடிச்சா 8 மணிக்கு ப்ரண்ட் வீட்டுக்கு போய்டலாம்

8:30 மணிக்கு அங்கேர்ந்து கிளம்பினா அரை மணி நேரம் ட்ராவல்...9 மணிக்கெல்லாம்
விஷேஷத்தில் இருக்கலாம்.

10 மணிக்கு லைட்டா சாப்பிட்டுட்டு பக்கத்துல ஒர் பிரண்டை பார்க்கணும்

11 மணிக்கு ஏதோ தனுஷ் படம் ரிலீஸாமே கண்டிப்பா அன்னைக்கு பார்த்துடணும்.....

....................
...................

இதுவும் திட்டமிடல்தான்...இதில் வரும் ஒவ்வொரு வரிகளும் உங்கள் புரோக்ராமை
ஒருங்கிணைப்பவற்றுள் அடங்கும்...

அப்போ உங்களுக்கு 25 ஆம் தேதி ஒரு புரோக்ராம் இருக்கு என்றால் மேலே சொன்ன
அத்தனை வேலைகளையும் நீங்கள் திட்டமிடும்படி இருக்கும் இல்லையா....

மேலிரண்டு உதாரணங்களும் அப்படியே கம்ப்யூட்டருக்கும் பொருந்தும்.
-------------------------------------------------------


மேலே சொன்ன உதாரணங்களை வைத்து எந்த ஒரு அமைப்பு சாராத,மொழி சாராத,
எந்த இலக்கணமும் இல்லாமல் உங்களால் ஒரு சின்ன புரோக்ராமை நீங்கள் செய்து பார்க்க
விரும்புகிறீர்களா...? வாருங்கள் எல்லோரும் டாஸ் மோடில் செய்து பார்ப்போம்.எல்லோரும்
விண்டோஸ் இயக்கத் தொகுப்பில் பணிபுரிபவர்கள் இல்லையா...?

முதலில் டாஸ் இடத்திற்கு (Dos Prompt ) வாருங்கள். இதை மூன்று செயல்பாடுகள் மூலம்
செய்யலாம். எல்லா விண்டோஸ் பதிப்புக்கும் ஏற்ற ஒரே ஒரு வழி மட்டும் கீழே சொல்லி
இருக்கிறேன்

start ---> run ---> இங்கு command என டைப் செய்து OK தாருங்கள். டாஸ் புராம்ப்ட்
வந்துவிடும்.

1. Edit myfirst.bat என்று டைப் செய்து என்டர் செய்யுங்கள். உடனே ஒரு எடிட்டர்
தோன்றும்.

இங்கு Edit என்பது டாஸின் அக கட்டளை. இது விண்டோஸில் உள்ள நோட்பேட் ,
வேர்ட்பேட் மற்றும் எம் எஸ் வேர்டு போல டாஸில் பயன்படும் ஒரு தொகுப்பான்
(Editor) ஆகும்.myfirst என்பது நாம் எழுதும் புரோக்ராமை பாதுகாக்கும் பைலின் பெயர்.
புள்ளி வைத்து இடைவெளி இல்லாமல் bat என கண்டிப்பாக தரவும். bat என்பது batch
பைல் என்பதை உணர்த்துவதற்காக.இப்படி உப பெயருள்ள பைல்களில் தரப்படும்
மொத்த கட்டளைகளையும் டாஸ் வரிசையாக நிறைவேற்றும்.

2. உங்களுக்கு தெரிந்த டாஸ் கட்டளைகளை பிழையின்றி வரிசையாக தாருங்கள்
(எ.கா)

date

time

dir

dir/w

3. இதை அங்கு உள்ள பைல் மெனுவில் பாதுகாத்து வெளியேறுங்கள் (Save and Exit)

4. இப்போது மறுபடி டாஸ் புராம்ப்டில் இருப்பீர்கள். இங்கிருந்து myfirst என மட்டும்
டைப் செய்து என்டர் செய்யுங்கள். என்ன காண்கிறீர்கள்..?

முதலில் டாஸ் கட்டளையான date கட்டளை இயக்கப்பட்டு கம்ப்யூட்டரில் அன்றைய
தேதி தெரியும்...இங்கு தேதி மாற்றிக்கொள்ள வசதியாக கர்சர் காத்திருக்கும்..நீங்கள்
மறுபடி என்டர் செய்தால் time என்ற கட்டளை இயக்கப்பட்டு அப்போதைய்ய நேரம்
தெரியும்.இங்கு நேரம் மாற்றிக்கொள்ள வசதியாக கர்சர் காத்திருக்கும்..நீங்கள்
மறுபடி என்டர் செய்தால் உங்கள் டைரக்டரியில் உள்ள பைல்களின் பெயர் விவரங்கள் எல்லாம் ஓடி பின் dir/w என்ற கட்டளை செயல்படுத்தப்படுவதால் அதே பைல்களின்
பெயர்கள் அகலவாக்கில் (Widthwise) திரையில் தெரியும்.

இது சும்மா உதாரணத்திற்கு தந்ததே..டாஸின் கட்டளைகள் அனைத்தும் உங்களுக்கு
தெரிந்திருந்தால் சின்ன சின்னதாய் ஜிகினா பணிகளுக்கு மட்டும் பயன்படுத்திக்
கொள்ளலாம்... 4 ம் 5 ம் கூட்டினா என்ன வரும் என்பதெல்லாம் இதில் செய்ய முடியாது...
டாஸில் நீங்கள் தனித்தனியாக கொடுத்துபார்க்கும் கட்டளைகளை ஒன்றாக சேர்த்து
இயக்கிப் பார்க்கிறோம்.அவ்வளவே... பைல்கள் காப்பி செய்தல்,பராமரித்தல் போன்ற
ஒரு சில உப பணிகளுக்காக இந்த batch பைல்களை பயன்படுத்துவார்கள். ஆனால்
ஒன்றுக்கும் உதவாத தொத்தல் பணியாளர் பொழுதுபோக்குக்கு பேசிக்கொண்டிருக்க
பயன்படுவான் இல்லையா...? அது போல் கம்ப்யூட்டரில் சில மராமத்து வேலைகளுக்கு
இந்த பேட்ச் பைல்கள் பயன்படுத்தி செய்து கொள்ளலாம்.

1. உங்கள் கம்ப்யூட்டரில் வெவ்வேறு டைரக்டரிகளில் அதனுள் இருக்கும் வெவ்வேறு சப்
டைரக்டரிகளில் உள்ள jpg பைல்களை ஒரே டைரக்டரிக்குள் கொண்டுவர வேண்டும்
எப்படி செய்வீர்கள்...?

2. உங்களது கம்ப்யூட்டரில் உள்ள வேண்டாத .tmp, .bak, போன்ற பைல்களை அடிக்கடி
நீக்க வேண்டும்...? எப்படி செய்வீர்கள்...?

3. நீங்கள் உபயோகப்படுத்தும் ஒரு சில பைல்களை மற்றவர் பார்க்கவோ அப்படி
பார்த்தால் உபயோகப்படுத்தவோ செய்யாமல் செய்வது எப்படி..?

மேற்கண்ட பணிகளை எல்லாம் பேட்ச் பைல்கள் மூலம் ஒருதடவை எழுதி எத்தனை
முறை வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம்.பொதுவாக புரோக்ராம் என்பதே ஒரு தடவை எழுதி பல தடவை பயன்படுத்தி கொள்ளதானே?


(தொடரும்)

தெரிந்து வைத்து கொள்ளுங்கள் (இது அவசியம்)

1. .com , .exe, .bat ஆகிய துணைப்பெயர்கள் கொண்ட பைல்கள் எந்தவித துணையும்
இன்றி தனித்தியங்க கூடிய வல்லமை பெற்றவை...இவற்றுள் முதலிடம் .com என்ற
பைலுக்குதான்...

2. ஒரு கணிப்பொறியில் myfirst.com , myfirst.exe, myfirst.bat என மூன்று பைல்கள்
இருப்பதாக வைத்து கொள்வோம்...நீங்கள் வெறுமனே myfirst என தந்தால் கம்ப்யூட்டர்
முதலில் myfirst.com என்ற பைலையே இயக்கும். இரண்டாமிடம் .exe என்ற துணைப்
பெயர் உள்ள பைலுக்கு...இவை இரண்டாம் இல்லாத பட்சத்தில்தான் myfirst.bat என்ற
பைலை இயக்கும்.

3. கொள்ளளவையும் நினைவகத்தையும் பொறுத்தவரை .com என்ற பைல்கள் மிக குறைவா
கவே எடுத்துக்கொள்கின்றன...எனவேதான் இயக்கத்தொகுப்பில் உள்ள கட்டளை
தொகுப்புகள் அடங்கிய பைல்கள் command.com என்ற பைலில் பொதியப்பட்டுள்ளன.

4. எந்திர,தொகுப்பு மொழிகளில் உருவாக்கப்படும் பைல்கள் இந்த com பைல்கள். உயர்
நிலை மொழிகளில் உருவாக்கப்படும் கடைசி கட்ட பைல்கள் .exe. இவை
இரண்டையும் இவை உருவான கருவறை இன்றி எங்கும் இயக்க முடியும். இந்த .bat
பைல்கள் எம்.எஸ்.டாஸில் மட்டுமே உருவாக்க முடியும்.அதில் மட்டுமே செயல்படும்.

5. உங்கள் விண்டோஸ் பதிப்பில் உள்ள command.com என்ற பைலின் அளவை குறித்து
வைத்துக்கொள்ளுங்கள். எப்போதாவது உங்கள் கம்ப்யூட்டரின் பூட் செக்டாரில் வைரஸ்
இருப்பதாகவோ அல்லது வழக்கத்தை விட மிக மெதுவாகவோ உங்கள் கம்ப்யூட்டர்
இயங்குவதாகவோ தெரிந்தால் உடனே command.com ன் அளவை பாருங்கள்..அதில்
ஏதும் மாற்றம் இருந்தால் உங்க்ள் கம்ப்யூட்டரில் வைரஸ் இருக்கிறது.

மேற்கண்ட ஐந்து குறிப்புகள் பற்றியும் விரிவாய் தெரிய பலகாத தூரம் பயணிக்க வேண்டும்...
இதுவும் புரோக்ராம் கற்றலின் ஒரு முகம்...அதுதான் லைட்டாக சொல்லி வைத்தேன்.</span>
சந்தேகங்கள் - ஆலோசனைகள் - கேள்விகள் வரவேற்கப்படுகின்றன.

முத்து
22-02-2004, 10:18 PM
Ţ񧼡 command.com Ģ Ǩ Ȣ
즸. â 켡â Ê
š Ţ šš
žš â command.com Ǩ ..
â Ê 츢.


¡ ...
⢠ɢ
Ţ 򦾡á
ɨ ھ ...
Ȣ á ġ¡ ...

ஜோஸ்
01-03-2004, 01:38 PM
ġ¡ ,

Ȣ ....

BATCH file- Ǹ ž DOS Ǹ â ź š? Ǹ ɢ¡ Ţ¡ .

anna
08-05-2009, 12:29 PM
அருமையான முயற்சி வாழ்த்துக்கள்