PDA

View Full Version : நிரல்வரைவு தொழில் நுட்பம் (Programming Technology) - 5



lavanya
22-03-2004, 09:36 AM
நிரல்வரைவு தொழில் நுட்பம் (Programming Technology) - 5

பொதுவாக எந்த ஒரு மென்பொருள் பயன்பாட்டிலும் புரோக்ராம் எழுத துவங்கும்
போது அடிப்படையாக சில விஷயங்கள் இருக்கின்றன...அந்த அடிப்படை விஷயங்கள்
எல்லா புரோக்ராமிங் மொழிக்கும் பொதுவாக இருக்கும்..இதை வைத்தே கம்ப்யூட்டர்
புரோக்ராமிங் கற்று கொள்பவர்கள் எளிதாக தம்மை புதிய புரோக்ராமிங் மொழிக்கு
தம்மை மேம்படுத்திக்கொள்கிறார்கள். இந்த பொதுவான அமைப்புகளை பற்றி பின்னர்
விரிவாக படிக்க உள்ளோம்.

இந்த தொடர் பண்புகள் கடத்துதல் என்பது ஒரே வகையான பயன்பாட்டு மென்பொருள்களின்
தரப்படுத்தப்பட்ட வரிசைகளில் ஒன்றாகவே இருக்கும்...இப்போது தமிழ் பேசுபவர்கள் கேரளா சென்றால் சரிபாதி அவர்களால் அங்குள்ளவர்கள் பேசுவதை புரிந்து கொள்ள முடியும். ஆந்திரா சென்றால் ஒரு பங்கு புரிந்து கொள்ள முடியும்...ஏனெனில் மலையாளம்,
தெலுங்கு இவை இரண்டில் ஓரளவு தமிழ் மொழியின் பங்கு இருக்கிறது இல்லையா..? இது
போல் தான் புரோக்ராம் எழுதுவதின் முதல் தத்துவம் இருக்கிறது...அதாவது பாக்ஸ்புரோவில்
புரோக்ராம் எழுதுபவர்கள் ஓரளவு சி மொழியில் முயற்சிக்க முடியும்.....

இரண்டாவது தத்துவம் பாருங்கள்..ஹிந்தி தெரிந்தால் அதிக பலம்..ஏனெனில் அதில்
சமஸ்கிருதத்தின் பங்கு இருக்கிறது..உருதுவின் பங்கு இருக்கிறது....உச்சரிப்பு மற்றும் சில
வார்த்தைகள் மட்டும் மாறுமே தவிர மீதி பெரும்பான்மையில் ஒன்றாகவே இருக்கும்...இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களுக்கு சென்றால் கூட உதவும். இது உயர்நிலை மொழிகளுக்கு பொருந்தும்...பாஸ்கல் என்ற பழமையான உயர்நிலை மொழியில் புரோக்ராம் எழுத தெரிந்தவர்கள் எளிமையாக சி மொழிக்கு மாற இயலும்...சி மொழி எழுதுபவர்கள் எளிமையாக சி++ க்கு மாற இயலும் சி++ எழுதுபவர்கள் எளிமையாக ஜாவா மொழிக்கு மாற இயலும்...புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

தெரிந்ததை சொல்லி தெரியாததை புரிய வைத்தல் (Known To Unknow) என்பது
ஆசிரியப்பயிற்சியின் ஒரு முக்கிய அம்சம்...இது நம் புரோக்ராமுக்கு சால பொருந்தும்...எனவே இந்த புரோக்ராம் எழுத கற்று கொடுக்கும் முயற்சி இங்கு இரண்டு பகுதிகளாக
பிரித்து பயன்பாட்டு மென்பொருள்களில் எவ்விதம் இந்த புரோக்ராம் அமைப்பு அதே உயர்
நிலைமொழியில் எவ்விதம் இந்த புரோக்ராம் எழுதப்படுகிறது என்பதையும் விவரமாக பார்க்க
இருக்கிறோம்.

எந்த ஒரு பயன்பாட்டு மென்பொருளிலும் நாம் புரோக்ராம் எழுத முற்படும்போது அந்த
மென்பொருள் அல்லது உயர்நிலைமொழியை பொறுத்தவரை சில கோப்புகளை பற்றி
அவசியம் அறிந்து கொள்ளுதல் வேண்டும்....

முதலில் ஒரு புரோக்ராம் எழுதப்படுவது என்பது ஒரு ஆங்கில உரைநடையில் சில
அமைப்புகளுடன் எழுதப்படுகிறது..இந்த கோப்புக்கு மூலவரைவு (Source Code) என்று பெயர். அதற்கு பிறகு அந்த புரோக்ராம் இயந்திரத்துக்கு மாற்றப்படும்பொழுது சில
இடைநிலை கோப்புகள் உருவாகும்...இவை இரண்டு வகைப்படும்...ஒன்று பொருள் சார்ந்த
கோப்புகள் ( Object Files) 2. தற்காலிக கோப்புகள் ( Temporaurly Files). கடைசியாக
விடையோ அல்லது விடையை தரும் ஒரு அமைப்போ கிடைக்கிறது...இது நேரடி பதிலாகவும் இருக்கலாம்.அல்லது அதை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும்
ஒரு ஆயத்தநிலை செயல்பாடு அமைப்பாகவும் இருக்கலாம்

ஒரு புரோக்ராம் எழுதி இயக்கப்படும் போது உருவாகும் சில பைல்கள் பற்றி கொஞ்சம்
இங்கு பார்ப்போம். கிட்டத்தட்ட எல்லாவற்றிலிருந்தும் உதாரணங்கள் தருகிறேன்...


பொது வடிவம்

Sorce File ---------- Process File -------------------- compiled file

(மூல வரைவு) (தற்காலிக கோப்பு) (ஆயத்தம் செய்யப்பட்ட கோப்பு)


1. Foxpro ---> myfirsr. prg (இடைநிலை கோப்பு இல்லை) myfirst.fxp


2. C, c++ ----> myfirst.c myfirst.obj myfirst.exe


3. VB -----> myfirst.frm myfirst.frx myfirst.exe


4. java -----> myfirst.java myfirst.class myfirst.class


5. Clipper -----> myfirst.prg myfirst.obj myfirst.exe



மேலே உள்ள நான்கு காலங்களில் முதல் காலம் எந்த மென்பொருளில் எழுதப்படும்
புரோக்ராம் என்பதை குறிக்கிறது.இரண்டாவது காலம் மூலவரைவு கோப்பை குறிக்கிறது..
இங்கு myfirst என்ற பெயருக்கு அருகில் புள்ளி வைத்து வரும் எழுத்துக்கள் அது என்ன
கோப்பு என்பதை கம்ப்யூட்டருக்கு தெரியப்படுத்துகின்றன. இந்த எழுத்துக்கள் அதிக
பட்சம் 5 எழுத்துக்கள் வரை இருக்கும் ( எக்ஸ்டென்ஸ்ன் எழுத்துக்கள் எல்லாம் மூன்று
எழுத்துக்கள் வரைதான் இருக்க வேண்டும் என்ற தலையெழுத்தை ஜாவா பைல்கள்
வந்து உடைத்தெறிந்து விட்டன)

மூன்றாவது காலம் ஒரு புரோக்ராம் கம்பைல் செய்யப்படும்போது உருவாகும் பைல்களை
பற்றி சொல்கிறது..இங்கு ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் இதை உயர்நிலை
மொழிகளில் மட்டுமே நிறைய முக்கியத்துவம் பெறும்..நான்காவது காலம் அந்த பைல் வெற்றிகரமாக இயக்கப்பட்டபின்பு உருவாகும் பைல் ஆகும்...இந்த பைல் மட்டும் வெற்றி
கரமாக உருவாக்கப்பட்டு விட்டது என்றால் மற்ற எந்த பைல்களும் பின்பு தேவைப்படாது.

புரியவில்லையா...?

இப்போது C மொழியில் ஒரு கூட்டு வட்டி கணக்கிடும் புரோக்ராம் எழுதுவதாக கொள்வோம்.
இந்த நோக்கத்துக்காக புரோக்ராம் எழுதி சேமிக்கும் கோப்பின் பெயர் myfirst.c என
கொள்வோம்..இதை தவறின்றி கம்பைல் செய்யும்போது முறையே myfirst.obj மற்றும் myfirst.exe என்ற பைல்கள் உருவாகும்...இந்த myfirst.exe என்ற பைல் உருவான பின்
myfirst.c , myfirst.obj என்ற கோப்புகள் அழிக்கப்பட்டால் கூட நாம் myfirst.exe என்ற
கோப்பை கொண்டு அதன் பயன்களை பெற முடியும். அதே போல் இந்த ஒரு புரோக்ராமை
நகல் எடுத்து போய் மற்ற கம்ப்யூட்டர்களிலும் காப்பி செய்து அப்படியே பயன்படுத்த இயலும்
அந்த கம்ப்யூட்டர்களில் எல்லாம் C சாப்ட்வேர் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இதைதான் போன பதிவில் கேள்வியாக கேட்டிருந்தேன்...நண்பர் ஜோஸ் சரியாக
பதில் அளித்திருந்தார். ஆனால் இதே நிகழ்வை பாக்ஸ்புரோ பைல் செயல்பாடுகளில்
செய்யமுடியாது...இதே முறையில் கடைசியாக உருவாகும் myfirst.fxp என்ற பைலை
மற்ற கம்ப்யூட்டர்களில் செயல்படுத்தி பார்க்க வேண்டும் எனில் அந்த கம்ப்யூட்டர்களில்
myfirst.prg இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை...ஆனால் பாக்ஸ்புரோ சாப்ட்வேர்
அவசியம் இருந்தாக வேண்டும்.

இதிலிருந்து உங்களுக்கு .exe என்ற துணைப்பெயருடன் உள்ள பைல்கள் தனித்து செயல்படும் வல்லமை வாய்ந்தவை என்பதை நன்கு தெரிந்திருப்பீர்கள்...இந்த பைல்கள்
செயல்பட இது உருவான கருவரையோ துணைப்பொருளோ தேவையில்லை...இதன்
பொருட்டே வைரஸ் புரோக்ராம்கள் எளிதாக நம் கம்ப்யூட்டரில் பரவ இயங்க இந்தவகை
கோப்புகள் காரணமாகி விடுகின்றன.

எந்த ஒரு பயன்பாட்டு மென்பொருளிலும் புரோக்ராம் எழுத கீழ்க்கண்ட அமைவுகள்
அவசியம்.

1. தொகுப்பாளர் திரை / சொற்செயலி ( Editor/ Wordprocessor)

இது நாம் புரோக்ராம் எழுதுவதற்கான ஒரு வசதிக்காக தேவை...பொதுவாகவே புரோக்ராம்
எழுதும் வசதிகளில் இந்தவகை தொகுப்பான்கள் இணைக்கப்பட்டிருந்தாலும் அதில் தான்
எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை...கம்பைலருடன் இணைக்கப்பட்ட
தொகுப்பான்களில் எழுதுவது சால சிறந்தது...எனினும் மற்ற புரோக்ராம் சாப்ட்வேர்களில்
அந்த கட்டாயம் இல்லை..ஆனால் நீங்கள் எழுதும் புரோக்ராம் பைலுக்கு பெயரிடையில்
கவனம் அவசியம்...பொதுவாக டாஸின் எடிட்டர் என்ற வசதியில் ஜாவா புரோக்ராம் எழுத
பயன்படுத்துகிறார்கள். விண்டோசின் நோட்பேட்,வேர்ட்பேட் என்ற வசதிகளை கூட
பயன்படுத்தி கொள்ளலாம்...ஆனால் துணைப்பெயர் (extension) தர மறந்துவிடக்கூடாது...
துணைப்பெயர் இல்லாத மூல வரைவுகள் இனிசியல் தெரியாத குழந்தை போல் ஆகிவிடும்

சி மற்றும் சி++ களின் எடிட்டர்களில் எல்லா வசதியும் இணைக்கப்படுள்ளதால் நீங்கள்
பெயரிடாவிட்டாலும் கூட துணைப்பெயர் தானே எடுத்துகொண்டு untitled.c என்று தானே
உருவாக்கி கொள்ளும்.ஜாவா புரோக்ராம் எழுத மேற்சொன்ன ஏதாவதொரு தொகுப்பான்
அவசியம் தேவை ( சி - யைப் போலவே கம்பைலரை உள்ளிணைத்துக்கொண்டு எடிட்டர்
வசதியுடன் வெளிவந்த காவா என்னும் ஜாவா எடிட்டர் அவ்வளவாய் புகழ்பெறவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது)

2. அந்த புரோக்ராம் இயங்குவதற்கான வரிமாற்றி/முழுமொழிமாற்றி
(Interpretor/Compilor)

3. அந்த புரோக்ராமை செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள்
(System Resource)

இது தவிர எந்த ஒரு புரோக்ராம் எழுதவும் சில பொது கட்டுப்பாட்டு அமைப்புகள்
இருக்கின்றன ( Common Structure) இவை கீழ்க்கண்ட இந்த தலைப்புகளில் அடங்கும்.

1. மாறிகள் ( Variables)

2. மாறிலிகள் ( Constants)

3. இயக்கிகள் ( Operators)

4. நிபந்தனை இயக்கிகள் ( Conditional Operators)

5. தொடர்பு இயக்கிகள் ( Relational Operators )

6. கட்டுப்பாட்டு வரித்தொடர்கள் ( Control Statements)

7. ஏரண அல்லது தர்க்க இயக்கிகள் ( Logical Operators)

8. தனக்கென பயன்படுத்தும் வார்த்தைகள் ( Reserve Words)

9. ஒத்துழைப்பு வார்த்தைகள் ( Key Words)

10. நூலக செயல்படுத்தி கட்டளைகள் மற்றும் தலைமை கோப்பு பதிவுகள்
( Libraray Function commands and Header files)


மேற்கண்ட பத்து விஷயங்களையும் பற்றி விரிவாக தெரிந்து கொள்பவர்கள்
எந்த புரோக்ராமிங் லாங்குவேஜிலும் பிரகாசமாய் பரிணமிக்க முடியும்.



(வளரும்)

kavitha
06-04-2004, 10:53 AM
ġ. Ҿ .
ټ.. ȡ . ɢ . . š

ஜோஸ்
28-05-2004, 05:29 AM
š ,

򦾡 Ţ𼾡 Ƣ ġ¡ ɢ ¢...

பரஞ்சோதி
28-05-2004, 12:07 PM
š ,

򦾡 Ţ𼾡 Ƣ ġ¡ ɢ ¢...

! ý, Ũ Ţɡ ç âŢħ.

ġ¡ Χ, ..

prathap
08-04-2006, 12:28 PM
மிகவும் பயனுள்ள கட்டுரை. தொடர்ச்சி எங்கே உள்ளது.

ப்ரதாப்

மஸாகி
22-04-2006, 05:50 AM
இந்த உலகத்தைப் பொறுத்தவரை நீங்கள் யாரோ ஒருவர்தான்...
ஆனால் யாரோ ஒருவருக்கு நீங்கள்தான் உலகமே....

இந்தக் கட்டுரை - மூலம்
உலகத்திலுள்ள நிறையப் பேருக்கு
நீங்கள்
யாரோ - ஒருவரல்ல
என்றாகிவிட்டீர்கள்..

உங்கள் - தேடல்கள் தொடர்ந்து
எங்கள் - அறிவும் அதிகரிக்க
என்றும் தமிழ் மன்றத்துடன்
இணைந்திருக்க வாழ்த்துக்கள்..

------------------------------------------
வாழ்க்கையென்பது - கொஞ்சம் ரிஸ்க்.. கொஞ்சம் ரிலாக்ஸ்.. அவ்வளவுதான்..

வாழ்த்துக்களுடன்
மஸாகி
21.04.2006

prashanthan
03-08-2007, 07:09 AM
நன்றிகள் .....நன்றிகள் .....:nature-smiley-008:

ஓவியன்
03-08-2007, 07:28 AM
நன்றிகள் .....நன்றிகள் .....:nature-smiley-008:

வாங்கோ பிரசாந்தன்!

மன்றத்தில் புதியவர் பகுதியில் உங்களைப் பற்றி அறிமுகம் தந்து எங்களுடன் தொடர்ந்து இணைந்திருக்கலாமே..........! :icon_good: