PDA

View Full Version : mp3 பாடல்கள் உருவாக்கப்படும் விதம்



lavanya
15-04-2003, 11:36 AM
என்னை படைக்க சொன்ன நண்பருக்கு சமர்ப்பணம்



mp3 பாடல்கள் உருவாக்கப்படும் விதம்


ஆடியோ தகவல்களை அதுதான் பாடல்களை சுருக்குவதற்கு உதவும் தொழில் நுட்பம் என்ன தெரியுமா? நம் காது கேட்பதில் உள்ள குறைபாடுதான்..பயந்து விடாதீர்கள் இது கோளாறு இல்லை. ஆனால் இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி உருவான தொழில் நுட்பம்தான் MP3

மனித காதுகளின் கேட்கும் சக்தி ஒலியின் தன்மை 2 முதல் 4 ஹெர்ட்ஸ் உள்ளவரை நன்றாக செயல்படுகிறது..ஆனால் இது 2க்கு குறைவாக உள்ளபோது காது அந்த ஒலியை கேட்பதில்லை..சுற்றுப்புறத்தில் அதைவிட அதிகமான ஒலியைக் கேட்க காதுகள் தயாராகி விடுகின்றன. இவ்வாறான காது கேட்கும் சக்தியை ஒலியியல் நிபுணர்கள் perceptual coding என்கின்றனர். இதற்கு எதிரானது wave form encoding. அதில் ஒலியின் அளவும் கேட்கும் அளவும் ஒன்றாக இருக்கும்.அதாவது மனிதனில் உள்ள கோடிங் சிஸ்டத்தில் எந்த ஒலியை கிரகிக்க முடிகிறதோ அதுதான் அனுப்பப்பட்ட தகவலாகவும் கொள்ளப்படுகிறது. கேட்க முடியாத ஒலி இல்லாத தகவலாக (empty data) கருதப்படுகிறது. இந்த கேட்க முடியாத ஒலியை MP3 நீக்கி விடுகிறது.


முதலில் இந்த தொழில்நுட்பம் என்கோடர் ஒலிய அலைவரிசையாகப் பிரித்து வைத்துக் கொள்கிறது. frequency band அலைவரிசையின் எண்ணிக்கை லேயர் I, II, III க்கு ஏற்றபடி மாற்றுகிறது.இதன் விளைவாக ஒரு frequency band 28 Hertz என்ற அளாவில் அமைக்கப்படுகிறது.அதன்பின் MP3 என்கோடர் எந்த ஒலி அலைகளை எல்லாம் மனிதன் கேட்கமுடியாது என்பதைக் கண்டறிந்து அதனையெல்லாம் அனுப்பாமல் வடி கட்டி விடுகிறது.

அடுத்து செயல்படுவதுதான் ஹப்மேன் தொழில்நுட்பம்... இது ஒலி அலைகளில் திரும்ப திரும்ப வரும் அலைகளை அடையாளம் காண்கிறது.( உதாரணமாக வசீகரா என் நெஞ்சினிக்க... என்ற வரிகள் ஆரம்பத்தில் 2 முறை பின்பு முதல் சரணம் முடிந்ததும் ஒரு முறை பின்பு இரண்டாம் சரணம் முடிந்ததும் ஒருமுறை பாடல் முடிகையில் ஒருமுறை என 5 இடங்களில் வரும். ஆனால் இதைக் கண்டறிந்து ஒரு முறை மட்டுமே இந்த வரிகள் பதியப்படும்) இந்த செயல்முறையில் ஒலிஅலைகள் அடையாளம் காணப்பட்டு ,சுருக்கப்பட்டு பின்பு மறைக்கப்பட்டு இறுதியில் பிரேம்களாக மாற்றப்படுகின்றன.ஒவ்வொரு பிரேமிலும் குறிப்பிட்ட அளவில் digital வடிவத்தில் ஒலி அலைகள் தங்குகின்றன. இவையே ஒரு பாடலை MP3க்கு மாற்ற பாடல் ரெடியாகி விடுகிறது.

உப தகவல்கள் :

1. ஒரு சினிமா பாடலை (ஆடியோ) கணிப்பொறியில் பதிய 48 MB முதல் 58 MB வரை இடம் தேவை. ஆனால் அதே பாடல் MP3 வடிவில் 4 MB அல்லது 5 MB மட்டுமே எடுத்துக் கொள்ளும். இந்த வகையில் ஒரு சீடியில் சாதாரணமாக 14 அல்லது 15 பாடல் மட்டுமே பதிவாகும். ஆனால் MP3 யாக மாற்றப்பட்டால் குறைந்த பட்சம் 150 பாடல்கள் பதிவாகும்

2. இந்த தொழில்நுட்பம் MPEG ( Motion Picture Expert Group ) என்ற குழுவால் 1994 -ல் கண்டுபிடிக்கப்பட்டது

3. பாடல்களை mp3 வடிவில் மாற்ற ரிப்பர் அல்லது என்கோடர் மென்பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். இதில் அதிகம் பயன்படுத்தப்படுவது 1. music match 2. real juke box

3. இந்த தொழில்நுட்பத்தால் ஆண்டுக்கு உலகம் முழுக்க ஆடியோ விற்பனை 170 கோடி நஷ்டம் என்று ஒரு சர்வே கூறுகிறது

இளசு
13-07-2003, 10:50 PM
லாவண்யா அவர்களே,

போனவார ஜூவியில் ஏன் எதற்கு எப்படி பகுதியில் இதைப்பற்றிய கேள்விக்கு சுஜாதா அவர்கள் பதில் அளிக்க முயன்று, இதை விளக்க ஒரு பெரிய கட்டுரையே எழுதவேண்டும் என்று எழுதி உள்ளார்.

அப்படிப்பட்ட தொழில்நுட்ப சங்கதியை இவ்வளவு எளிதாக, சுவையாக சொன்ன உங்களின் இந்தப் பதிவு உடனே நினைவுக்கு வந்தது...

சுஜாதா அவர்களுக்கு அனுப்பலாமா இதை?

என் பாராட்டுகள் மீண்டும்...தீட்சண்யாவுக்கு

vckannan
31-07-2006, 09:23 AM
நன்று! நன்று!

எளிமையாக சொன்னலும் சிறப்பாக விளக்கினிர்கள் - வாழ்த்துக்கள்

svenkatesan
18-08-2006, 09:10 AM
அவுங்க அப்படி குறைத்தால் இங்கு ஒரு சிடியில் 80~90 பாடல்கள் மட்டும் போட்டு அதிலும் சம்பாதிக்கிறார்கள்.

இனியவன்
18-08-2006, 05:32 PM
நல்ல தகவலை எளிமையாய்த் தந்த லாவண்யாவுக்கு நன்றி.

mukhil
19-08-2006, 02:34 AM
பயனுள்ள படைப்பு.லாவண்யா அவர்களுக்கும், படைக்க சொன்ன நண்பருக்கும் பாராட்டுகள்

இளசு
19-08-2006, 10:25 PM
இதுபோன்ற இனிய, எளிய கட்டுரைகளைத் தரவாவது
தோழி லாவண்யா அடிக்கடி மன்றம் வர வேண்டும்..

batcha
26-09-2006, 07:39 PM
payanulla padaippu

அறிஞர்
26-09-2006, 10:25 PM
payanulla padaippu அன்பரே தமிழில் எழுதுங்கள்.. தங்களை பற்றியும் கூறுங்களேன்....

அந்நியன்
28-12-2006, 08:58 AM
அருமையான விளக்கம். தெளிவாகவும் புரியும்படியும் சொன்ன உங்களுக்கு பாராட்டுகள்.

arul5318
20-03-2007, 03:51 PM
அருமையான விளக்கங்கள் நன்றி நண்பரே

நூர்
08-07-2008, 11:48 AM
:sprachlos020: