PDA

View Full Version : கூகுல் தேடுதல்.....



baranee
17-01-2004, 03:40 AM
கூகுல் தேடுதல்......

சில சமயங்களில் நீங்கள் தேடுவதை கூகுல் அம்மன் (நன்றி அண்ணன் இளசுவிற்கு) வரமாய் தரமாட்டாள், அம்மனுக்கு தக்க தட்சணை அளித்தால் சந்தோசத்துடன் வாரி வழங்குவாள்...

எனக்கு தெரிந்த சில தட்சணை முறைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி....

கூடுமானவரை வார்த்தைகளாய் தேடாமல் வாக்கியமாய் மேற்கோள் காட்டி (quote) தேடுங்கள். உதாரணத்திற்கு tamil history மற்றும் "tamil history" என்று தேடிப்பாருங்கள்... இரண்டாவது தேடுதலில் பெரும்பாலான பக்கங்கள் வடிகட்ட பட்டிருக்கும். வாக்கியம் அமைக்க முடியாவிடின் நிறைய வார்த்தைகளை சேர்த்து கொள்ளுங்கள்.

சில சமயம் தேடுதலுக்கு சில வார்த்தைகளை தவிர்ப்பதன் மூலம் நமக்கு தேவையற்ற இனைய பக்கங்களை தவிர்க்கலாம். பெரும்பாலான திரைபட தட்டுக்கள் அல்லது புத்தக பெயர்களை தேடினால் முதலில் வருவது அமேசன் இனைய தளமாய்தான் இருக்கும் , இது போன்ற நீங்கள் விரும்பாத எதாவது வந்தால் அதை தவிர்க்க கழித்தல் குறியினையும் அந்த தேவையற்ற இனைய தளத்தின் வார்த்தையையும் உபயோகியுங்கள். உதாரணம் matrix dvd மற்றும் matrix dvd -amazon).

ஒரு குறிப்பிட்ட இனைய தளத்தில் மட்டும் தேட - கிரிக்கெட் செய்தியை பற்றி ஹிந்துவின் இனைய தளத்தில் மட்டும் தேட india cricket site:hinduonnet.com என்று உபயோகியுங்கள்.


கல்வி சம்மந்தப் பட்ட தளங்களிலோ அல்லது இந்தியா சம்மந்தப் பட்ட தளங்களிலோ மட்டும் தேட site:.edu , site:.in என்று உங்கள் தேடுதல் வார்த்தைக்கு பின்னால் சேர்த்து கொள்ளுங்கள். இதன் மூலம் கூகுலின் தேடுதல் .edu, .in என முடியும் தளங்களில் மட்டும் தேடும்.

குறிப்பிட்ட வகையான கோப்புகளையும் தேடலாம். excel, word மற்றும் pdf போன்ற வகை ஆவணங்களை மட்டும் தேட, ஆவணத்தின் பெயர் அல்லது முக்கிய வார்த்தையை தட்டி filetypedf என்பதை அதற்கு பின் சேர்த்து கொள்ளுங்கள். (ponniyin celvan filetypedf) என்று தேடுதலை நன்றாக வரைமுறை படுத்தினால் தேடுவது சுலபம், தேடப் படுவதும் எளிதில் கிடைத்து விடும்.

மிக முக்கியமான பல்கழைக் கழகங்களின் இனையத்தில் தேட வேண்டுமானால் கூகுலின் இந்த பக்கத்திற்கு சென்று தேடுஙள்......
http://www.google.com/options/universities.html

இன்னும் சில தேடுதல் முறைகளும் உள்ளன அவற்றை உபயோகிப்பவர்கள் பகிர்ந்து கொள்ளாமே!!!??

அன்புடன்
பரணீ

முத்து
13-01-2005, 02:43 PM
கூகிளின் பதில்கள் பகுதி மிக அருமையான ஒன்று . ஏகப்பட்ட விஷ்யங்களைத் தெரிந்துகொண்டு அறிவை வளர்த்துக்கொள்ளலாம். நீங்கள் சரியாகப் பதில் சொல்லி பணம்கூடச் சம்பாதிக்கலாம் அங்கு. பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது போல அங்கு அடிக்கடி உலவி வந்தாலே, நிறைய நல்ல விஷயங்கள் ஒட்டிக் கொள்ளும்.

http://answers.google.com/answers/

விகடன்
28-07-2007, 07:23 AM
உண்மைதான் பரணி. தேடுபொறிகளில் இடத்தெரியாமல் இட்டு தேடி தேவையற்றது 1000 இத்தினுள் ஆங்காங்காக 4 − 5 தளங்கள் சரியாக வந்துசேரும். இனிமேல் தாங்கள் சொல்லிய முறையில் முயற்சித்து பயனடையலாம் என்று நினைக்கிறேன். தகவலுக்கு நன்றி.

ஓவியன்
28-07-2007, 09:23 AM
அடடா!

இந்த திரியையும் தேடி(கூகிள் இல்லாமலேயே....) மேலே கொண்டு வந்த விராடனுக்கு நன்றிகள்!.

அக்னி
12-03-2008, 06:35 PM
இன்றும் பயன்படக்கூடிய அரிய தகவல் திரி.
பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்துள்ள பரணி, முத்து அவர்களுக்கு நன்றிகள்.

reader
09-04-2008, 06:50 AM
எல்லோரும் எளிதில் தேடும் வகையில் தொகுத்து வழங்கிய பரணிக்கு வாழ்த்துக்கள்

ஜெயாஸ்தா
09-04-2008, 07:42 AM
உண்மையிலே பயனுள்ள தகவல்தான். கூக்ளி அம்மனிடம் எப்படி வரம் பெறுவது என்று சொல்லித்தந்த நண்பருக்கும், அதை தூசுதட்டி பரணிலிருந்து எடுத்தந்த விராடனுக்கு நன்றி..!

meera
09-04-2008, 08:35 AM
நன்றி சகோதரா, தேடி தேடி கலைத்து போனவர்களுக்கு நல்ல பயனுள்ள தகவல் இது.

மனோஜ்
09-04-2008, 11:02 AM
தேடல் குறிப்பபுகள் அறுமை நன்றி

தேடல் தொடங்கட்டும்...........

SathyaThirunavukkarasu
09-04-2008, 11:21 AM
மிக்க நன்றி நண்பரே தேடுதல் கூட இனி எளிதுதான்

ஷீ-நிசி
09-04-2008, 02:50 PM
பயனுள்ள தகவல் அன்பரே

நாகரா
10-04-2008, 04:24 AM
பயனுள்ள நல்ல பகிர்வுக்கு நன்றி பரணி.

நூர்
03-07-2008, 06:18 PM
ரொம்ப நன்ரிகொ

நூர்
03-07-2008, 06:26 PM
வணக்கம்கோ

sakthim
08-10-2008, 11:54 AM
மிகவும் பயனுள்ள தகவல்கள்,தினமும் பயன் படுத்தும் கூகுல் பற்றி அறிந்து கொண்டது மிகவும் உபயோகமாக இருக்கும்.

பகிர்ந்து கொண்ட பரணீக்கு நன்றிகள்.

சூரியன்
08-10-2008, 01:16 PM
நல்ல தகவல்.

geminisenthil
08-12-2008, 04:19 AM
பயனுள்ள குறிப்பு - நன்றிகள் பல!!