PDA

View Full Version : கணினியின் வரலாறும் வகைகளும்



நிதன்
20-07-2004, 07:19 PM
குறிப்பு: இந்த தகவல் பலர் அறிந்திருக்கக்கூடும்.அறிந்திராதவர்களுக்காக இந்தத் தகவலை இங்கு தருகிறேன். எனக்கு தெரிந்தவற்றை சுருக்கமாக தந்துள்ளேன். இதில் ஏதும் தவறு இருந்தால் மன்னிக்கவும்....

கணினியின் வரலாறும் வகைகளும்

மனித முன்னேற்றத்துக்கு மனிதனின் கண்டுபிடிப்புகளே மூலகாரணமாக அமைகிறது. மனிதன் எப்பொழுது ஆழமாக சிந்திக்கிறானோ அப்பொழுது ஏதாவது ஒரு ஆக்கபூர்வமான செயல்களில் இறங்கிவிடுவான். மனிதனின் விஞ்ஞான முன்னேற்றத்தின் அதி உன்னதமான கண்டுபிடிப்பாக கணினி திகழ்கிறது. மனிதன் தான் செய்யும் வேலையை மிகவும் விரைவாகவும் சுலபமாகவும் செய்து முடிக்க வேண்டும் என்ற விருப்பம் உடையவனாக இருக்கிறான். இந்த அடிப்படையில் சிந்தித்ததன் விளைவே கணினியின் கண்டுபிடிப்பாகும். வேலைகளை தான் செயயாமல் இயந்திரங்களை உருவாக்கி அதன் முலம் நேரத்தை சுருக்கி செயற்பாடுகளை சுலபமாக்க ஒரு கருவி தேவைப்பட்டது அதுவே கணினி வடிவாக உருவெடுத்தது. இந்தக்கருவி முதலில் கணினி என்ற பெயரில் கணிதத்துறையில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

1623ம் ஆண்டு Tubinger prifessor wilhelm schikard என்பவரால் ஒரு கணித இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இயந்திரம் கணிதத்தில், கூட்டல் கழித்தல் பிரித்தல் பெருக்கல் ஆகியவற்றினைச் செய்தது.

1642ம் ஆண்டு கணித விஞ்ஞானியான [b]Blaise Pascal என்பவரால் ஒருவகையான கணித இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இவருடைய பெயரில்தான் Pascal program என்னும் கணினி Program அமைந்துள்ளது.

1834-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கணினியின் தந்தை என அழைக்கப்படும் [b]சார்லஸ் பாபேஜ் என்பவர் கணக்குப் பார்க்ககூடிய ஒரு இயந்திரத்தை வடிவமமைப்புச்
செய்தார். இதனை இவரால் முழுமையாக்க முடியவில்லை - இருப்பினும் இதுவும் இன்றைய கணினியின் தோற்றத்திற்கும் வடிவமமைப்புக்கும் காரணமாக அமைந்துள்ளது. இவரையே கணினியின் தந்தையாக கருதுகின்றனர்.

1941ம் ஆண்டில் [b]Konrad Zuse என்பவரால் ஒரு கணிப்பொறி கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றினைத் தொடர்ந்து கணினியானது தொழில்நுட்ப வளர்ச்சியடைந்து, இன்று முன்னணியில் திகழ்கின்றது.


கணினியின் வகைகள்
கணினி இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்பு, அதனை உற்பத்தி செய்வதிலும் சந்தைப்படுத்துவதிலும் உற்பத்தி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு விஞ்ஞான தொழில் நுட்பங்களை விரிவடையச் செய்தன. ஆரம்ப காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கணினி மிகவும் விலை கூடியதாகவே இருந்தது. சாதாரண மக்கள் இதனை வாங்கக் கூடிய நிலையில் இல்லை. நிறுவனங்களே இதனை வாங்கி உபயோகித்தன.

1. Mainframe (இவற்றை தொழில் ஸ்தாபனங்கள் உபயோகிக்கின்றன)
2. Homecomputer என்ற தரத்தில் Atari, Amiga, Commodore போன்றனவும்
3. Apple, Macintosh, IBM என்பனவும்
4. Intel Pentium,Celeron, AMD என்பனவும் இன்று உற்பத்தி செய்யப்படுகின்றன.

(இவைகள் உற்பத்தி செய்யும் ஸ்தாபனங்களின் பெயர்களைக் கொண்டு அழைக்கப்படுகின்றன.)

aravindhraju
03-09-2010, 02:49 PM
பயனுள்ள வரலாற்றுக் கதை