PDA

View Full Version : ஒற்று மென்பொருள் / அதனை நீக்கும் முறை



baranee
03-03-2004, 05:45 PM
ஒற்று மென்பொருள் என்றால் என்ன / அதனை நீக்கும் முறை

ஒற்று அறியும் மென்பொருள்கள் உங்களை அறியாமலேயே உங்கள் கணினியில் நிறுவப் பட்டிருக்கலாம். சில மென்பொருட்களை இணைய தளத்திலிருந்து இறக்கும் போதோ அல்லது குறுந்தகட்டில் இருந்து நிறுவும் போதோ அதுவும் சேர்ந்து நிறுவிக்கொள்ளும். இவ்வாறு நிறுவப்பட்டிருக்கும் மென்பொருள் நீங்கள் இணையத்தில் அல்லது உங்கள் கணினியில் மேற்கொள்ளும் பெரும்பான்மையான செயல்களை கண்கானித்து குறும்பர்களுக்கோ அல்லது
அந்த மென்பொருள் நிறுவனத்திற்கோ தகவல்களை உங்களை அறியாமலேயே அனுப்பிவிடும்.

உங்களது உபயோகிப்பாளர் பெயர், கடவுச்சொல் மற்றும் கடன் அட்டை உபயோகித்தீர்களானால் அதன் விவரம் போன்றவற்றை உங்களை அறியாமலே அனுப்பிவிடும். இணையத்தில் உலவும் போது மேல் வரல் (Pop up) முறையில் பல்வேறு விளம்பரங்களை காண்பிக்கும்.

உங்கள் கணினி திடீரென மிகவும் மெதுவாக இயங்கினால் ஒற்று அறியும் மென்பொருள் நிறுவப்பட்டிருக்கலாம். இவ்வகை மென்பொருள் பொதுவாக விண்டோஸ் பணிசெயல் முறைமையை கொண்டு இயங்குகின்றன. குறிப்பாக மைக்ரோசாப்டின் இணைய உலாவியில் உள்ள "ActiveX" பாதுகாப்பு குறைபாடுகளை பயன்படுத்தி எளிதில் கணினியில் நிறுவிக்கொள்கிறது.

சில இணையப் பக்கங்களில் "ActiveX" செய்நிரலிற்காண இணைப்பு கொடுக்கப் பட்டிருக்கும், அம்மாதிரியான தளங்களுக்கு சென்றால் "இந்த மென்பொருளை நிறுவ விரும்புகிரீர்களா என்று கேட்கும் ? ஆம் என்று சொன்னால் மென்பொருள் நிறுவி அது எம்மாதிரியான செயல்களுக்காக நிறுவப்பட்டதோ அதை செவ்வனே செய்யும். உங்கள் இணைய உலாவியின் "Activex" அமைவடிவம் சரியான முறையில் இல்லையேன்றால் கேள்வி கேட்காமலே
நிறுவி விடும்.

இதன் தாக்கத்தை மைக்ரோசாப்டின் இணைய உலாவியில் குறைக்க Tools->Internet Options->Security இங்கு சென்று Internet Zone-ஐ தேர்வு செய்து "High" - ஆக வைத்துக்கொள்ளுங்கள். ஆனாலும் இது ஒரு முழுமையான பாதுகாப்பு முறையல்ல.... இதன் மூலம் ஒற்று அறியும் மென்பொருட்கள் தானாகவே உங்கள் கணினியில்
நிறுவிக்கொள்வதில் இருந்து ஓரளவு தடுக்க இயலும்.

உங்கள் கணனியில் நச்சுநிரல் எதிர்ப்பு செய்நிரல் (Anti Virus) நிறுவியிருந்தாலும் பெரும்பாலானவை ஒற்று மென்பொருளை தடுக்கவோ நீக்கவோ வடிவமைக்க பட்டிருக்காது.

ஒற்று மென் பொருளை நீக்குவதற்காகவே எழுதப்பட்ட மென்பொருளை பயன்படுத்தி எளிதில் நீக்கலாம்.

இங்கு தட்டி "Ad-aware" எனும் மென் பொருளை பெற்றுக் கொள்ளுங்கள்...

http://ftp.pcworld.com/pub/new/privacy___s...curity/aaw6.exe (http://ftp.pcworld.com/pub/new/privacy___security/aaw6.exe)

இது ஒரு இலவச ஒற்று அறிந்து நீக்கும் மென் பொருள். புதிது புதிதாக வரும் ஒற்று மென் பொருள்களை கண்டறிந்து நீக்க இந்த மென் பொருளின் இணைய தளத்தில் இருந்து இலவசமாக மேம்படுத்திக் கொள்ளலாம் (Update).

இதைப்பற்றி ஏற்கனவே இங்கு பதிக்கப்பட்டிருந்தாலும்

http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=3401

தனியாக அளித்தால் மேலும் பலர் பயனடைவர் எனக் கருதி இங்கு கொடுத்துள்ளேன்.

arul5318
20-03-2007, 04:14 PM
நன்றி சகோதரா இப்போது இப்படியான விடயங்கள் எனக்கு தெரியும் தயவு செய்து எழுதுபவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

RRaja
07-04-2007, 06:18 AM
thanks baranee

பரஞ்சோதி
07-04-2007, 06:20 AM
புதிய மென்பொருள் பற்றிய விபரங்கள் தெரிந்தால் சொல்லுங்களேன்.

ஓவியன்
07-04-2007, 06:58 AM
இந்த திரியினைத் தொடக்கின நண்பர் இப்போது மன்றத்திற்கு வருவதில்லையா?

நீண்ட காலத்திற்கு முன்னர் தொடக்கிய திரி, அத்துடன் தொடக்கிய நண்பரயும் காண முடிவதில்லை (இப்போது அவர் மன்றத்திலிருப்பின் மூத்த ஒரு உறுப்பினராக இருந்திருப்பார்)

எது எப்படி இருப்பினும், இந்த பயனுள்ள திரியினை மன்றத்திலே இந்த விடயம் தொடர்பாக ஆர்வமுள்ள பலர் உள்ளனர். அவர்கள் இந்த திரியினை மேலும் தொடர்வார்களென நம்புகின்றேன்.

விகடன்
28-07-2007, 07:19 AM
வரவேற்கப்படவேண்டிய விடயம் பரணி. பல வேளைகளில் நீங்கள் சொன்னதுபோல பொப்−அப் மெஷேஷ் வந்து இருக்கும். ஏன் எதற்கு என்று தெரியாமலேயே தற்காலிகமாக அனுமதித்த*துண்டு. இனிமேல் அப்படி ஒரு விடயத்தை எதிர்கொள்ளுமிடத்தில் நம் மன்ற உறவுகள் ஜாக்கிரதையாக இருப்பர்.

நூர்
03-07-2008, 05:46 PM
thank majeed