PDA

View Full Version : நட்சத்திர கிரிக்கட்hai.selvam
19-03-2006, 07:13 AM
பாகிஸ்தானில் இந்திய நட்சத்திர கிரிக்கட் அணி சுற்றுப்பயணம் செய்கிறது.டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விஜய்காந்த் தமது அணி முதலில் பேட் செய்யும் என்கிறார்.இரண்டு கதாநாயகர்கள் நடிப்பது தமிழ்திரையுலகில் கிடையாது என்பதால் ஒவ்வொருவராக பேட் செய்வது என முடிவு செய்கிறார்கள்.

முதலில் நெப்போலியன் பேட் செய்ய வருகிறார்.அவரை பார்த்த அக்தர் குழம்புகிறார்.
"என்னங்க அம்பயர்,இவர் வேட்டி கட்டிட்டு வர்ரார்.பேட் எதுவும் எடுத்துட்டு வராம வெறுங்கையை வீசிட்டு வர்ரார்?" என அம்பயரிடம் கேட்டார் அக்தர்.
"அந்த தம்பி அப்படித்தான்.பவுன்சர் கிவுன்சர் இவருக்கு வீசிப்புடாதே.வில்லங்கமாயிடும்" என அம்பயர் எச்சரிக்கிறார்.

நெப்போலியன் மீசையில் கைவைத்து முறுக்கியபடி விக்கட் அருகே நிற்கிறார்.அக்தர் வேகமாக ஓடிவந்து பந்தை வீச நெப்போலியனின் கை அவரின் சட்டைக்கு பின்னே சென்று 6அடி நீள திருப்பாச்சி அரிவாளை எடுக்கிறது.ஒரே சீவு.பந்து சுக்குநூறாகிறது.

"சீவலப்பேரி பாண்டிலே.." என கர்ஜிக்கிறார் நெப்போலியன்.அனைவரும் நடுநடுங்க கம்பீரமாக வீரநடை போட்டு பெவிலியனுக்கு திரும்புகிறார் நெப்போலியன்.

அடுத்து ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே கேப்டன் விஜய்காந்த் களமிறங்குகிறார்.அக்தர் இப்போது மிகவும் பயந்து போய் அம்பயரிடம் கேட்கிறார்.

"ஏனுங்க இவரும் பேட் இல்லாம வர்ராரு.இவர் என்ன பண்ணுவாரு?'

"அதெல்லாம் இப்ப எதுக்கு?ஆனா பவுன்சர் எல்லாம் இவருக்கு போட்டா நீ அதோகதிதான்" என எச்சரிக்கிறார் அம்பயர்.

பயந்து போய் அக்தர் பந்துவீச விஜய்காந்த் அந்தரத்தில் பறந்து பந்தை காலால் உதைக்கிறார்.அம்பயர் எல்.பி.டபிள்யு கொடுக்க விஜய்காந்த் அது தவறு என்று கனல் பறக்க வசனம் பேசுகிறார்.கடைசியில் எஸ்.ஏ.சந்திரசேகரன் வந்து அது சட்டத்தில் இருக்கும் ஓட்டை என விளக்கவே தன்னை கைதுசெய்ய சொல்லி விஜய்காந்த் கையை நீட்டுகிறார்.எஸ்.ஏ.சந்திரசேகரன் கெஞ்சி கூத்தாடி அவரை பெவிலியனுக்கு கூட்டிக் கொண்டு போகிறார்.

அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ஆரவாரமாக களமிறங்குகிறார்.அக்தர் பயந்துபோய் நிற்க அவரிடம் மெதுவாக சூப்பர்ஸ்டார் முணுமுணுக்கிறார்.

"அக்தர் கண்ணா,நான் நல்லவனுக்கு நல்லவன்,கெட்டவனுக்கு கெட்டவன்.பவுன்சர் ஏதாவது போட்டா சின்ன வயசுல நீ குடிச்ச தாய்ப்பால் வெளியில வந்துடும்"

பயந்து போய் அக்தர் பந்தை உருட்டி விட சூப்பர்ஸ்டார் அதை தட்டி விட்டு ஒரு ரன் எடுக்கிறார்.பெவிலியன் திரும்புகிறார்.ஸ்கோர் போர்டை பார்த்த அக்தர் அலறுகிறார்.நூறு ரன் எடுத்ததாக ஸ்கோர் போர்டு காட்டுகிறது.ரஜினி ஒரு ரன் எடுத்தால் நூறு ரன் எடுத்ததற்கு சமம் என்கிறார் அம்பயர்.

அடுத்து கலைத் தாயின் தலைமகன் சிவாஜி கணேசன் களமிறங்குகிறார்.

அக்தர் வேகமாக பவுன்சர் வீசுகிறார்.சிவாஜியின் நெஞ்சில் அந்த பவுன்சர் பட்டு அவர் கீழே விழுகிறார்.மெதுவாக கண்ணீர் வடித்தபடி எழுகிறார்.

"ஏம்பா கண்ணா அக்தரு..உன்னே சின்ன வயசுல மார்மேலயும் தோள் மேலயும் தூக்கிபோட்டு வளர்த்தேன்.அப்போ நீ என் நெஞ்சுல எட்டி உதைப்பே.அப்போ அது விளையாட்டா இருந்தது.இப்போ நிஜமாவே நெஞ்சுல பவுன்சர் வீசிட்டீயே.."

அம்பயர் முதல் டிவி வர்ணணையாளர்கள் வரை அனைவரும் அழுகின்றனர்.அக்தரும் அழுகிறார்.கண்ணீர் வடித்தபடி சிவாஜி நிற்க தலைவிரி கோலமாக கண்ணாம்பா நுழைகிறார்.

"மனோகரா..என் செல்வனே..எதிரியை வீழ்த்தி புதுக் காவியம் படைக்க நீ புறப்பட்ட போது ஏடுகளை திருடியும் எழுத்தாணியை ஒளித்து வைத்தும் அதை தடுத்தவள் நான் தான்.
மறக்குலத்தில் பிறந்த வீரப்பெண்மனி நான் என்பது உண்மையானால்,பெண்கள் விடும் கண்ணீருக்கு சக்தி உண்டு என்பது உண்மையானால்,சோழநாட்டு மன்னரின் பத்தினி நான் என்பது உண்மையானால் அக்கிரமக்காரர்களின் சிரிப்பு அடங்கட்டும்.நியாயம் வெல்லட்டும்.
பொறுத்தது போதும் மனோகரா பொங்கி எழு"

"அம்மா.." என அலறுகிறார் சிவாஜி.

"தாயின் ஆணை கிடைத்து விட்டது.புறப்படு.."

கத்தியை எடுத்துக்கொண்டு சிவாஜி புறப்படும் முன் அக்தர்,இன்ஸமாம் அனைவரும் தலைதெறிக்க ஓடி மறைகின்றனர்.

aren
19-03-2006, 01:49 PM
அக்தர்,இன்ஸமாம் அனைவரும் தலைதெறிக்க ஓடி மறைகின்றனர்.

அவர்கள் மட்டும்ல்ல, நாங்களும்தான்.

நல்லாவே கலக்கியிருக்கிறீர்கள்.

சுபன்
19-03-2006, 02:55 PM
நன்றாக இருந்தது செல்வம் பாராட்டுக்கள்

இளந்தமிழ்ச்செல்வன்
19-03-2006, 05:17 PM
வித்தியாசமாய் எழுதியிருக்கிறீர்கள். இளவட்டங்களை மொத்தமா மறந்துட்டீங்களே?

mania
20-03-2006, 06:41 AM
நல்ல சுவாரஸ்யமான கற்பனை ...:D :D ரசித்தேன்.....
அன்புடன்
மணியா....:D

Mano.G.
20-03-2006, 10:04 AM
நான் கிரிக்கெட் ரசிகன் அல்ல
ஆனால் இந்த கமெண்டரியை
படித்து மனம் விட்டு சிரித்தேன்

நன்றி வாழ்த்துக்கள்
ஹை செல்வம்.

மனோ.ஜி

சுவேதா
20-03-2006, 12:29 PM
:D:D மிகவும் அருமையான கற்பனை மற்றும் அருமையான விளையாட்டு வசனங்கள் மிகவும் நன்றாக இருந்தது பாராட்டுக்கள் செல்வம் அண்ணா!!!

sarcharan
20-03-2006, 01:04 PM
நல்ல சுவாரஸ்யமான கற்பனை ... படித்து மனம் விட்டு சிரித்தேன்...ரசித்தேன்....
:D :D :D :D
நன்றி வாழ்த்துக்கள்

pradeepkt
20-03-2006, 01:39 PM
அருமையான கற்பனை...
பெரியவர் பொங்கி எழுவதையும் சூப்பர் டூப்பர் ஸ்டாரு வசனம் பேசுவதையும் கேப்டன் அக்தரைக் கேனையன் ஆக்குவதையும் எத்தனை தடவை படிச்சாலும் அலுக்காதய்யா..

தீபன்
20-03-2006, 04:32 PM
அப்பிடியே கமலையும் ரீமில சேத்து அவர் நல்லவரா கெட்டவரா என அக்தரை குளம்ப வைத்திருக்கலாம்...

sarcharan
21-03-2006, 07:45 AM
கமல்: அபிராமி அந்த பந்த அடிக்காத..... அவுட்டாயிடுவ...
விஜயகாந்த்:
நான் கட் பனியன் போட்டா கவுந்தடிச்சி படுக்க போறேன்னு அர்த்தம்..

நான் வெள்ளை வேட்டி, சட்டை போட்டா பிரச்சாரத்துல வேட்டு வைக்க போறேன்னு அர்த்தம்..

நான் கால்ல பேடு கட்டினா காலால உதைச்சி கிரிக்கெட்டு(!!!) வெளையாட போறேன்னு அர்த்தம்..

அஜீத்:
ஹே அக்தர்... நான் ஆஸ்பட்டுட்டேன் நான் தான் ஓப்பனரா வெளாடுவென். (பத்திரிக்கையாளர் கும்பலை விட்டு பிட்சை நோக்கி ஓடுகிறார்)

pradeepkt
21-03-2006, 10:25 AM
விஜய்: அண்ணா, ஏனுங்ணா என்னைய விட்டுட்டீங்ணா...

sarcharan
21-03-2006, 10:52 AM
சொன்னது விஜய்யா இல்ல விஜய்யின் பேரில் பிரதீப்பா...?

விஜய்: அண்ணா, ஏனுங்ணா என்னைய விட்டுட்டீங்ணா...

pradeepkt
22-03-2006, 05:07 AM
ஏதோ அவரு கேக்குறாரு... விட்டுட்டியேன்னு..
ஏம்ப்பா என்னை வம்புக்கிழுக்கிற?

இந்த வாரம் குங்குமத்தில் ஆதி படம் ஓடாததுக்குக் காரணம் எஸ் எம் எஸ்தான்னு கண்டு புடிச்சிருக்காங்க...

sarcharan
22-03-2006, 05:24 AM
இது என்ன கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையா இருக்கு... என்ன அது..?

அந்த தற்கொலை, விஷம், ஆதி பட டிக்கெட் அந்த எஸ் எம் எஸ் ஸா?


இந்த வாரம் குங்குமத்தில் ஆதி படம் ஓடாததுக்குக் காரணம் எஸ் எம் எஸ்தான்னு கண்டு புடிச்சிருக்காங்க...

தாமரை
22-03-2006, 05:25 AM
இது என்ன கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையா இருக்கு... என்ன அது..?

அந்த தற்கொலை, விஷம், ஆதி பட டிக்கெட் அந்த எஸ் எம் எஸ் ஸா?
இல்லைப்பா.. எஸ் எம் எஸ் லயே பார்த்டுடற மாதிரி படமெடுத்துட்டாங்களாம்...

gragavan
22-03-2006, 06:05 AM
அட இன்னைக்குதான் இதப் படிச்சேன்...பிரமாதமா இருக்குப்பா........சூப்பரோ சூப்பரு.....

சட்டத்தில் ஓட்டைன்னு சந்திரசேகர் சொல்றது காமெடியின் உச்சகட்டம்னா....நடிகர் திலகம் அழுகுறது உணர்ச்சியின் உச்ச கட்டம். கண்ணாம்பாவின் வசனமோ வீரத்தின் உச்ச கட்டம். படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிச்சவங்களுக்கெல்லாம் உடம்பெல்லாம் பிளாஸ்திரிக் கட்டம்.

அறிஞர்
29-03-2006, 11:31 PM
அழகான கற்பனை.. தொடருங்கள் உங்கள் சேட்டைகளை

மயூ
30-03-2006, 06:11 AM
அட இன்னைக்குதான் இதப் படிச்சேன்...பிரமாதமா இருக்குப்பா........சூப்பரோ சூப்பரு.....

சட்டத்தில் ஓட்டைன்னு சந்திரசேகர் சொல்றது காமெடியின் உச்சகட்டம்னா....நடிகர் திலகம் அழுகுறது உணர்ச்சியின் உச்ச கட்டம். கண்ணாம்பாவின் வசனமோ வீரத்தின் உச்ச கட்டம். படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிச்சவங்களுக்கெல்லாம் உடம்பெல்லாம் பிளாஸ்திரிக் கட்டம்.
என்ன ராகவன் கூட ஐஸ் வைக்கிறதா தெரியுது??????

ராசராசன்
30-03-2006, 05:38 PM
அட ஒரிஜினல் இந்திய கிரிக்கெட் வீரர்களின் புதிய அரிதாரத்தையும் இங்கே காண்க...! :D :D


http://www.masalaforall.com/imgs/fp/dcf/fpdcfX5H6T362687.JPG

hai.selvam
05-04-2006, 04:37 PM
( பங்கேற்பாளர்கள் : தல கங்குலி, கங்குலியின் அடிப்பொடிகள், கிரேக் சேப்பல். இந்திய தேர்வுக்குழு உறுப்பினர்கள், திருவாளர் பொதுஜனம்..)

கங்குலியின் அ.பொ: தல தல டெஸ்ட் மேட்சிலும் நீங்க கேப்டன் இல்லனு அந்த சேப்பல் சொல்லவச்சுட்டார்.

கங்குலி : எனக்கு ரிவிட்டு அடிக்கிறதே சேப்பலுக்கு வேலையா போச்சு. இன்னிக்கு போர்டு மீட்டிங்குல இந்த கங்குலியா ...சேப்பலானு முடிவு செய்யறேன்டா........எடுடா அந்த பேட்ட, மாட்டுடா அந்த ஹெல்மட்ட...

(கங்குலியும் அவர் குழுவும் கோபமாய் செல்வதை பார்த்து...)

திருவாளர் பொதுஜனம் : அய்யோ கங்குலி பேட்ட எடுத்துட்டு கெளம்பிட்டாரே... இன்னிக்கு எத்தன சிக்ஸ் அடிக்க போறாரோ.. தெரியலேயே ....

(தேர்வுக்குழுவுக்கான அறைக்கு சென்றவுடன் கங்குலி பேட்டை குறுக்காய் வைக்கிறார்)

கங்குலி : இந்த பேட்ட தாண்டி நீங்களும் வரக்கூடாது நானும் வரமாட்டேன். பேச்சு பேச்சா இருக்கனும். எனக்கு டெஸ்ட் மேட்சிலே கல்தா கொடுத்தவன் எவண்டா??

சேப்பல்: என்ன கொஞ்சம் சத்தமா....இங்க வந்து சொல்லேன்...

கங்குலி : நான் அங்க வரமாட்டேன். என் அ.பொ விடம் சொல்லிவிடறேன்.

கங்குலியின் அ.பொ: சரி தல......., எவண்டா எங்க தலைய ஒரம் கட்டினது???

கங்குலி : ஏய் கிரெக். நீ மட்டும் ஒரு நல்ல கிரிக்கெட்டரா இருந்தா எனக்கு நல்ல பவுன்சர் போடு பார்க்கலாம்.

( சேப்பல் உடனே 200 கி.மீ வேகத்தில் பவுன்சர் வீச கங்குலின் பேட் துண்டாகி ரெண்டாகிறது )

கங்குலி : ஒத்துக்கிறேன். நீ ஒரு நல்ல கிரிக்கெட்டரனு ஒத்துக்கிறேன். நெக்ஸ்ட் மீட் பண்றேன்.

( சாப்பலும், தேர்வுக்குழு உறுப்பினர்களும் கங்குலியை சுற்றிவளைக்கிறார்கள் )

கங்குலி : உங்களாலாம் பார்த்த எனக்கு பாவமா இருக்கு. நான் இதுவரைக்கும் எந்த மேட்சிலும் டக் அடிச்சதில்லை

தேர்வுக்குழு உறுப்பினர்கள்: போன சீரியஸ்லதானே எல்லா மேட்சிலும் டக் அடிச்சே

கங்குலி : அது போன சீரியஸ். நான் சொல்றது இந்த சீரியஸ்ல. நான் இப்ப நெட் பிராக்டிஸ் போறேன், ஆனா டீமுக்கு திரும்பி ...

சேப்பல்: திரும்பி ...

கங்குலி : வர மாட்டெனு சொல்ல வந்தேன்.

சேப்பல்: இதப்பாரு ..இனிமேல் நடக்கப்போற எந்த மேட்சிலும் உன்ன சேத்துக்க போறதில்ல

கங்குலி : வேணாம்.

சேப்பல்: பங்காளதேஷ் டீம்னா கூட உனக்கு இடம் கிடையாது

கங்குலி : வலிக்குது

தேர்வுக்குழு உறுப்பினர்கள்: ரஞ்சி கோப்பைனா கூட நீ 13வது ஆள்தான்.

கங்குலி : அழுதுடுவேன்

சேப்பல்: ஏன் தெருவில ஆடுற கிரிக்கெட்ல கூட நீ சூப்பர் சப்ஸ்டுட்டுக்கு எடுபிடிதான்.

கங்குலி : அழுதுடுவேன் ... அழுதுடுவேன்

( கங்குலி சோகத்துடன் தன் உடைந்த பேட்டுடன் கொல்கத்தா திரும்புகிறார்)

திருவாளர் பொதுஜனம் : அடேங்கப்பா... கங்குலியோட பேட்டே உடைஞ்சு போச்சுனா பவுலிங் போட்டவன் இன்னும் டீமுல இருப்பாங்கிறே??

கங்குலி: இன்னுமடா இந்த ஊரு நம்மள நம்பிகிட்டுயிருக்கு...

கங்குலி அ.பொ: அது அவங்க தலைவிதி தல.....

hai.selvam
05-04-2006, 04:37 PM
நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் ஒரு நூலளவுதான் வித்தியாசம்,

செஞ்சுரி அடிக்க முடியுமுனு சச்சின் நினைச்சா அது நம்பிக்கை.

அதுவே கங்குலி நினைச்சா அது மூடநம்பிக்கை.

hai.selvam
05-04-2006, 04:37 PM
ஏன் கங்குலி ரன்னே அடிக்க மாட்டேங்கிறே?

நான் அடிக்கலாம்னு பேட்டை தூக்கினேன். அப்போ எதிர் டீம்காரன் ஒருத்தன் சொன்னான்... டேய்... நாம எப்படி பந்தைப் போட்டாலும் இவன் அடிக்கவே மாட்றான். இவன் ரொம்ப நல்லவன்டா!னு சொன்னான்... அதான்!

மதி
05-04-2006, 07:11 PM
செல்வம்..
கங்கூலி மேல உங்களுக்கு அப்படி என்ன தான் கோவம்..
இப்படி போட்டு வாங்கிருக்கீங்க..???

aam537
11-09-2006, 10:07 AM
நிஜமாலும் கிரிக்கேட் இல்லை சினிமா பார்த்த ஓர் உணர்வு, மனம் விட்டு சிரித்தேன் ., நண்றி செல்வம்

கண்மணி
12-09-2006, 04:54 PM
கங்கூலியை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே!!!