PDA

View Full Version : கடி ஜோக்balakmu
17-03-2006, 03:51 AM
அணில் கும்" ளே " அம்மா, அப்பா யார்?
பதில்: அப்பா: ஆம் " ளே "
அம்மா: பொம் " ளே "

gragavan
17-03-2006, 03:59 AM
நம் ளே இப்பிடிப் கடிக்கலாமா?

pradeepkt
17-03-2006, 05:22 AM
தாங்க முடிய ளே..

பென்ஸ்
17-03-2006, 06:27 AM
க்டவுளே... என்னை இப்படி சோதிக்கிறியளே... விட்டுருங்களே

தாமரை
17-03-2006, 06:46 AM
அணில் கும்" ளே " அம்மா, அப்பா யார்?
பதில்: அப்பா: ஆம் " ளே "
அம்மா: பொம் " ளே "
அப்ப அணில் கும்" ளே " ஆம் " ளே " யும் இல்லை பொம் " ளே " யும் இல்லை என்கிறீரா :confused: :confused: :confused:

pradeepkt
17-03-2006, 10:40 AM
ஏங்க, அணில் ளே ஆம் ளே பொம் ளே எல்லாம் இருக்க கூடாதா...
ஆனாலும் ரொம்பத்தான் நக்கல் உங்களுக்கு...

sarcharan
17-03-2006, 10:54 AM
ளே என்ன ளே இது

நம் ளே இப்பிடிப் கடிக்கலாமா?

தீபன்
20-03-2006, 04:39 PM
அடடா.. அவரு ஒரு கடிதான் கடிச்சாரு... எல்லாருக்கும் இப்பிடி விசர் பிடிச்சுட்டுதே... தமிழ் மன்றத்தின் தூண்கள் கூட தமிழை இப்பிடி எளுத வைச்சுட்டுதே.... தடுப்பூசி போடா யாருமில்லையா...?

இளந்தமிழ்ச்செல்வன்
20-03-2006, 05:42 PM
அவர் ஊசி போட்டுக்க போயிருக்கார். இனி இந்த மாதிரி தப்பை தெரியாமலும் செய்யமாட்டாராம்

shanker
09-04-2006, 01:19 AM
நாம யானைக்கு மேல போனா சவாரி
யானை நம்ம மேல போனா ஒப்பரி

pradeepkt
10-04-2006, 06:01 AM
இதைத்தான் வாலி கொஞ்ச நாளைக்கு முன்னால எழுதினார்.

பஸ்ஸில நம்ம போனா பிரயாணி
பஸ்ஸூ நம்ம மேல போனா பிரியாணி

அறிஞர்
12-04-2006, 03:37 PM
ளே.. ளே... ளோளோன்னும் கடிக்கிறீங்களே......

chitran
14-05-2006, 01:54 PM
இன்னா செய்தாரை ஒரே தள்ளு அவர் சாகக் கொன்று விடல்

pradeepkt
14-05-2006, 04:52 PM
வாங்க சித்திரன்.
உங்களைப் பற்றி ஒரு அறிமுகத்தை அறிமுகம் பகுதியில் போடுங்களேன்

Tamilvasan
19-05-2006, 08:21 AM
யானையை எப்படி ஆட்டோவில் ஏற்றுவது ? (கஷ்ட்டபட்டு என்பது பழைய ஜோக).
"பேண்டை கழட்டி விட்டு"
எலிபேண்டில் இருந்து பேண்டை எடுத்து விட்டால் அது 'எலி" ஆகி போய்விடும். அப்புறம ஆட்டோவில் எளிதில் ஏற்றிவிடலாம்
~வாசன்

பென்ஸ்
19-05-2006, 10:17 AM
வாசா.... இது சரியில்லை....
நாங்க பிளேடு வைக்கிறது இல்லை... நேர அருவாதான்...
எப்படியப்பு இப்படி கடிக்கிறிரு....
(அருமையா இருக்கு)....

தாமரை
19-05-2006, 11:09 AM
யானையை எப்படி ஆட்டோவில் ஏற்றுவது ? (கஷ்ட்டபட்டு என்பது பழைய ஜோக).
"பேண்டை கழட்டி விட்டு"
எலிபேண்டில் இருந்து பேண்டை எடுத்து விட்டால் அது 'எலி" ஆகி போய்விடும். அப்புறம ஆட்டோவில் எளிதில் ஏற்றிவிடலாம்
~வாசன்
எலியை எளிதாக எடுத்துக் கொண்டு எழிலாக வலிய வந்து வலிக்க கடிக்கும் இவரை வழிக்கு கொண்டுவர யாருமில்லையா?

அனிருத்தின் ஜோக்குகளை காப்பியடிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்:D :D :D :D

pradeepkt
19-05-2006, 11:31 AM
எலியை எளிதாக எடுத்துக் கொண்டு எழிலாக வலிய வந்து வலிக்க கடிக்கும் இவரை வழிக்கு கொண்டுவர யாருமில்லையா?

அனிருத்தின் ஜோக்குகளை காப்பியடிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்:D :D :D :D
அதானே பாத்தேன்...
எங்கடா கடி ஜோக்கு சொல்லியும் உங்களைக் காணோமேன்னு நினைச்சேன்... உங்களுக்கும் அநிருத்துக்கும் நூறு ஆயுசு :D :D :D

சேரன்கயல்
19-05-2006, 11:43 AM
பேன்ட் கழட்டின எலி...ஹா ஹா ஹா...
நல்ல கடி...சூப்பரப்பு...

sarcharan
19-05-2006, 12:28 PM
பேன்ட் கழட்டின எலி...ஹா ஹா ஹா...
நல்ல கடி...சூப்பரப்பு...

AMERICAN POWER VS TAMIL POWER

AMERICAN POWER:
10,000 NUCLEAR WEAPON
600000 ARMY
10000 TANKS
12000 AIR FORCE
300 WAR SHIPS

TAMIL POWER: VIJAYAKANTH:confused:

vanavasiravi
19-05-2006, 02:15 PM
இதெல்லாம் சரி கடி ஜோக் அப்படீன்னு சொன்னாங்களே அது எந்த கடையில கிடைக்கும்?

ஓவியா
19-05-2006, 02:19 PM
யானையை எப்படி ஆட்டோவில் ஏற்றுவது ? (கஷ்ட்டபட்டு என்பது பழைய ஜோக).
"பேண்டை கழட்டி விட்டு"
எலிபேண்டில் இருந்து பேண்டை எடுத்து விட்டால் அது 'எலி" ஆகி போய்விடும். அப்புறம ஆட்டோவில் எளிதில் ஏற்றிவிடலாம்
~வாசன்

பேண்டைணா.என்ன?

புரியவில்லை...இது தமிழ்னாட்டின் கடியா?

Tamilvasan
23-05-2006, 09:09 PM
pant/trousers-தாங்க. உங்க உள்ளூர் காரங்க நம்ம நாட்டுல விட்டுட்டு போனது :D
~வாசன்

ஓவியா
23-05-2006, 09:21 PM
:
pant/trousers-தாங்க. உங்க உள்ளூர் காரங்க நம்ம நாட்டுல விட்டுட்டு போனது :D
~வாசன்

நன்றி
:) :) :) :) :)

Tamilvasan
23-05-2006, 09:24 PM
எலியை எளிதாக எடுத்துக் கொண்டு எழிலாக வலிய வந்து வலிக்க கடிக்கும் இவரை வழிக்கு கொண்டுவர யாருமில்லையா?

அனிருத்தின் ஜோக்குகளை காப்பியடிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்:D :D :D :D

அடிக்கடி, போர் அடிக்காத உங்க கடிப் படிச்சதால வந்த 'எலி'க்கடி
இனிமேல் நமக்கில்ல நெருக்கடி
அதனால நெருக்க கடி (ங்க):D :D :D

~வாசன்

ஓவியா
23-05-2006, 09:52 PM
அடிக்கடி, போர் அடிக்காத உங்க கடிப் படிச்சதால வந்த 'எலி'க்கடி
இனிமேல் நமக்கில்ல நெருக்கடி
அதனால நெருக்க கடி (ங்க):D :D :D

~வாசன்

அடடா என்ன புலமை

Tamilvasan
23-05-2006, 11:29 PM
கல்யாணமாகி 20 வருடம் கழித்தும்,திருமண வாழ்கையில் சந்தோஷம் அடையாத ஒரு தம்பதியினர் ,ஒரு கவ்ன்ஸ்லிங் செய்கின்ற டாக்டர்கிட்டப் போய் இருந்தாங்க. டாக்டர் அந்த அம்மாகிட்ட "உங்க கணவர்கிட்ட என்ன குறை?" ன்னு கேட்டாரு. அதுக்கு அவங்க "திருமண மேடையில் என்னை இடித்தார்...அப்புறம் என் பெற்றோர்கள் கால்ல விழலன்னு..." ஆரம்பிச்சி.. அது..இது...ன்னு அடுக்கிகிட்டே போனாங்க....1 மணி நேரம் ஆச்சு.. 2 மணி நேரம் ஆச்சு...3 மணி நேரம் ஆச்சு...டாக்டர் நொந்து போய் ,எப்படியாவது இவங்க வாய மூடனுமேன்னு நெனச்சி அவங்கள அன்பா பேசி சமாதானம் செய்தார். அந்த அம்மா உடனே பேசறத நிறுத்திட்டாங்க....இப்ப அந்த டாக்டர் கணவன பாத்து "வாரத்துல மூன்று நாள் இப்படி செய்ங்க, உங்க பிரச்சணை தீர்ந்தது" ன்னு சொன்னார்.
அதுக்கு அவர் " திங்கள் , புதன் நான் கூட்டி கொண்டு வர முடியும், ஆனா வெள்ளிதோறும் நான் நண்பர்களோட வெளிய போய்டுவேன்"ன்னாரு.

~வாசன்

அறிஞர்
23-05-2006, 11:45 PM
அதுக்கு அவர் " திங்கள் , புதன் நான் கூட்டி கொண்டு வர முடியும், ஆனா வெள்ளிதோறும் நான் நண்பர்களோட வெளிய போய்டுவேன்"ன்னாரு.

~வாசன் ஒருவர் பேச்சு அதிகம்.. மற்றவர் ஊர் சுற்றுபவர்...
இப்படி இருந்தா வாழ்க்கை எப்படி இன்பமா அமையும்

அறிஞர்
23-05-2006, 11:46 PM
அடடா என்ன புலமைஉங்க புலமையை கொஞ்சம் எடுத்துவிடுங்களேன்.

அறிஞர்
23-05-2006, 11:48 PM
AMERICAN POWER VS TAMIL POWER

AMERICAN POWER:
10,000 NUCLEAR WEAPON
600000 ARMY
10000 TANKS
12000 AIR FORCE
300 WAR SHIPS

TAMIL POWER: VIJAYAKANTH:confused: என்னது.. விஜயகாந்த் கட்சியில் பொறுப்பு ஏதும் தந்து இருக்காங்களா.... முன்பு பிரதீப் வரிசையில் இருக்கிறார்

Tamilvasan
24-05-2006, 12:32 AM
இது கொஞ்சம் நெருடலாகத்தான் இருந்தது.
மன்னிகவும். அதுக்கு அவர் " திங்கள் , புதன் நான் கூட்டி கொண்டு வர முடியும், ஆனா வெள்ளிதோறும் நான் நண்பர்களோட வெளிய போய்டுவேன்"ன்னாரு" ஆனால் இந்த வரியில் தவறு உள்ளதாக தெரியவில்லை..அல்லது எனக்கு புரிய வில்லை.

மனைவியின் தொல்லை தாங்க முடியல ,அவங்க புலம்பரத கேக்க டாக்டர் கிட்ட கூட்டி வரதா சொன்னதா நெனச்சேன.

இதற்கு முன்னால் வரியை சரி செய்து விட்டேன்.

நன்றி
~வாசன்

அறிஞர்
24-05-2006, 01:17 AM
இதற்கு முன்னால் வரியை சரி செய்து விட்டேன்.

நன்றி
~வாசன்நன்றி வாசன்....

Tamilvasan
25-05-2006, 05:28 AM
ஒரு மோசமான மலைப்பாதை , பாதைய ஒட்டி ஒரு ஆழமான பள்ளத்தாக்கு, அந்த ரோட்டுல, ஒரு லாரியை கஷ்டப்பட்டு ஓட்டுனர் நிறுத்திட்டு , டீ குடிக்கப் போனார். அப்ப அந்த பக்கம் போன ஒரு மலை யானை, லாரியை பின்னால தள்ளி விட்டுது. இப்ப என்னா ஆகும் ??????

" 'பின்' வளைந்து போயிடும்"

~வாசன்

தாமரை
25-05-2006, 06:28 AM

யானை பின்னால் ஏன் தள்ளியது?
இங்கு நிறுத்துவது தவறு என்று குத்திக் காட்டத்தான்!!!

Tamilvasan
26-05-2006, 11:40 PM
கலக்குங்க. கலக்குங்க :)

ஒரு ஒத்துமை

யானை பின்னால தள்ளி காட்டினாலும் (கடி) - இரத்தம்
யானை பின்னால குத்தி காட்டினாலும் - இரத்தம்

~வாசன்

அறிஞர்
27-05-2006, 01:12 AM
கலக்குங்க. கலக்குங்க :)

ஒரு ஒத்துமை

யானை பின்னால தள்ளி காட்டினாலும் (கடி) - இரத்தம்
யானை பின்னால குத்தி காட்டினாலும் - இரத்தம்

~வாசன்எங்களை கடிச்சு கொதறி.. இரத்தம் வரவைத்துவிடுவீர் போல...

தாமரை
05-06-2006, 11:42 AM
அனிருத் : அப்பா எங்க போயிருந்தீங்க
செல்வன் : நாமக்கல்
அனிருத் : அப்ப அவங்க எல்லாம்???
செல்வன் : ???????

pradeepkt
05-06-2006, 12:59 PM
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
என்னாஆஆஆஆஆஆஆஆஆல தாஆஆஆஆஆஆஆஆங்க முடியலையேஏஏஏஏஏஏஏஏஏ

ஓவியா
05-06-2006, 03:25 PM
கலக்குங்க. கலக்குங்க :)

ஒரு ஒத்துமை

யானை பின்னால தள்ளி காட்டினாலும் (கடி) - இரத்தம்
யானை பின்னால குத்தி காட்டினாலும் - இரத்தம்

~வாசன்

:) தாங்க முடியலையே

தாமரை
06-06-2006, 06:56 AM
அனிருத் : அப்பா எங்க போயிருந்தீங்க
செல்வன் : நாமக்கல்
அனிருத் : அப்ப அவங்க எல்லாம்???
செல்வன் : ???????
புரியாத பென்ஸூக்கு!!!

நாம + கல் = நாமக்கல்.

நாம் கல் என்றால் (நீங்கள் + நாங்கள் = நாம்) மற்றவர்களெல்லாம் மண்ணா என்ற கேள்வி தொக்கி நிற்பதை கவனிக்கவும். (அனிருத் சொல்லும் போது நானும் உங்களைப் போலத்தான்.... விழித்தேன்.. அப்புறம் அவனே விளக்கினான்... ஆஸ்பிடல் ஜோக்கை போல..)

அறிஞர்
06-06-2006, 02:53 PM

வீட்டில் விழித்து... இங்கு வந்து எங்களை விழிக்க வைக்கிறீர்கள்..
எங்க பென்ஸை ஆளக்காணோம்

றெனிநிமல்
13-06-2006, 09:01 PM
சிரிக்க வைத்த அனைவரும் நன்றிகள்.