PDA

View Full Version : காதலியுங்கள்ЕЕЕЕ



родрпАрокройрпН
16-03-2006, 02:24 PM
காதலியுங்கள்ЕЕЕЕ

காதலியுங்கள் இளைஞர்களே,
காதலியுங்கள்

தேசத்தைக் காதலியுங்கள்!
தோண்டிய இடமெங்கும்
செம்மணி தோன்றாதிருக்கவேனும்
தேசத்தைக் காதலியுங்கள்Е!

வீரத்தைக் காதலியுங்கள்!
ஈரங்கொண்ட மண்
சோரம் போகாதிருக்கவேனும்
வீரத்தைக் காதலியுங்கள்Е!

சுதந்திரத்தைக் காதலியுங்கள்!
ஊரடங்கு வேளையில்
உயிர் பிரியாதிருக்கவேனும்
சுதந்திரத்தைக் காதலியுங்கள்Е!

உரிமையைக் காதலியுங்கள்!
நாளில் சிலமணி நேரமேனும்
நல்லதமிழில் தொலைக்காட்சி பார்க்க
உரிமையைக் காதலியுங்கள்Е!

மரங்களைக் காதலியுங்கள்!
இன்னுமோர் இடப்பெயர்வில்
இருக்க இடம் தரவேனும்
மரங்கள் காதலியுங்கள்Е!

கானகத்தைக் காதலியுங்கள்!
காடையர்கள் எம் கருவறுக்கும் வேளை
கரந் தடிகளாய் உருமாறவேனும்
கானகத்தைக் காதலியுங்கள்Е!

துன்பத்தைக் காதலியுங்கள்!
துயரமே சூழ்ந்த வாழ்வில்
இன்பத்தைக் காண்பதற்காகவேனும்
துன்பத்தை காதலியுங்கள்..!

காதலியுங்கள் இளைஞர்களே காதலியுங்கள்!
ஆனால்,
கன்னியரை மட்டும் இப்போது
காதலியாதீர்கள்Е.!
நாடு பற்றி எரிகையில்
பிடில் வாசிப்பதற்கு
நீங்களுமென்ன-
УநீரோФக்களா..?

роЕро▓рпНро▓ро┐ро░ро╛рогро┐
16-03-2006, 02:41 PM
காதலியுங்கள்ЕЕЕЕ


காதலியுங்கள் இளைஞர்களே காதலியுங்கள்!
ஆனால்,
கன்னியரை மட்டும் இப்போது
காதலியாதீர்கள்Е.!
நாடு பற்றி எரிகையில்
பிடில் வாசிப்பதற்கு
நீங்களுமென்ன-
УநீரோФக்களா..?
கன்னியரையும் காதலியுங்கள்
தேசத்தைக் காதலிக்கும்
வீரத்தைக் காதலிக்கும்
சுதந்திரத்தைக் காதலிக்கும்
உரிமையைக் காதலிக்கும்
மரங்களைக் காதலிக்கும்
கானகங்களைக் காதலிக்கும்
மனிதம் மடிந்து விடாமலிருக்க
பண்பாட்டு சின்னங்கள்
பளீரென மின்ன
நல்ல மானுடங்கள்
மண்ணில் பிறப்பெடுக்க வேண்டும்..

அதுவும் உங்கள்
கடமைதான்..

рокрпЖройрпНро╕рпН
16-03-2006, 02:49 PM
காதலின் வேகம்... தீபன்
விவேகமாக... அல்லி

வாழ்த்துகள் இருவருக்கும்...

роЕро▓рпНро▓ро┐ро░ро╛рогро┐
16-03-2006, 02:52 PM
காதலின் வேகம்... தீபன்
விவேகமாக... அல்லி

வாழ்த்துகள் இருவருக்கும்...
கொஞ்சம்
நில்லுங்கள் தள்ளி...:D :D

роЕрооро░ройрпН
12-06-2007, 07:01 PM
மொத்தத்தில் அனைவரும் தமிழைக்காதலிக்கின்றீர்கள் எனப் புரிகின்றது.

роЗройро┐ропро╡ро│рпН
12-06-2007, 07:05 PM
அருமையான கவிதைகள் அன்பரே பாராட்டுக்கள்

aren
12-06-2007, 07:11 PM
தீபன் - கவிதை வரிகள் அருமை.

பின்னூட்டமிட்ட அல்லிராணியின் வரிகளும் அருமை.

தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

родрпАрокро╛
09-07-2008, 07:43 AM
роХройрпНройро┐ропро░рпИроХрпН роХро╛родро▓ро┐родрпНродродрпБ рокрпЛродрпБ роОройрпНро▒рпБ роЗроирпНрод
роорогрпНрогрпИроХрпН роХро╛родро▓ро┐роХрпНроХроЪрпН роЪрпКро▓рпНро▓рпБроХро┐ро▒рпАро░рпНроХро│ро╛?

рокро▓рпЗ рокро▓рпЗ!