PDA

View Full Version : நானும் எம்.ஜி.ஆரும்



தாமரை
16-03-2006, 09:51 AM
எம்.ஜி.ஆரைப் பற்றிய எவ்வ்ளவோ நல்ல நினைவுகள் இனிமையான் நினைவுகள் இருந்தாலும் என் நெஞ்சில் வடுவாய் பதிந்து விட்ட காயம் இது.

1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் (23 ஆ 24 ஆ தெரிய வில்லை மாலை 6 மணி இருக்கும்..

செமஸ்டர் லீவில் வந்த நான் சேலம் வீட்டு வாசலில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கொண்டு என்னுடைய மூத்த அக்காவின் கணவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.

எங்கள் கல்லூரி டிசம்பர் 28 ஆம் தேதி திறக்க இருந்தது. இன்னும் இரண்டு நாட்கள்தான்.. ஞாயிறு ஹாஸ்டலுக்கு போகவேண்டும்..

இன்னும் இரண்டு நாட்கள்தான் உன் கொண்டாட்டமெல்லாம் என்று கிண்டல் செய்து கொண்டு இருந்த அவரிடம்

"அதை பற்றிக் கவலைப் படாதீங்க.. நாளைக்கு காலையில் பாருங்க எம்.ஜி.ஆர் செத்துட்டதா நியூஸ் வரும் ஒரு வாரம் லீவு விடுவாங்க.. அப்புறம் அடுத்த வருஷம் தான் காலேஜ்" என்று வீம்பு பேசிவிட்டு ஒரு சினிமா சென்று வந்தோம்.

அடுத்த நாள், காலை 6 மணி. அவசர அவசரமாய் என் அக்கா கணவர் எழுப்பி டேய் எம்.ஜி.ஆர் செத்துட்டாருடா.. எந்த நேரத்தில டா வாயை வச்சே என்று கத்த... கனவா நிஜமா எனப் புரியாமல்.. 1 நிமிடம் விழித்தேன்.

வாய் விட்டு சொன்ன வார்த்தையும் போனது.. மெய் விட்டு போன உயிரும் போனது.
இனியாவது இது போல் விளையாட வேண்டாம் என் முடிவெடுத்தேன்..
நான் என்ன சொன்னேன்.. ஏன் சொன்னேன் ஒரு விளையாட்டுக்குத்தானே! என்ன சோதனை இது! இன்னும் புரிந்து கொள்ள முடியாத புதிர் இது..

pradeepkt
16-03-2006, 10:14 AM
ஐயா,
உங்களுக்கும் ராகவன் மாதிரியே கருநாக்கா...
நாங்க என்ன தப்பு பண்ணிருந்தாலும் மன்னிச்சி விட்டுருங்க சாமி...

பென்ஸ்
16-03-2006, 03:51 PM
நானும் செல்வனும் நல்ல பிரண்டுவ.... அவரு என்னை பத்தி எல்லாம் நல்ல மட்டும் தான் நினைப்பார்...

பிரதிப் மாதிரியே... சாமி, நான் எதாவது தப்பு.....

aren
17-03-2006, 02:19 AM
செல்வன் அவர்களே,

நீங்க ரொம்பவும் நல்லவங்க. நான் ஏதாவது தப்பா பேசியிருந்தால் என்னை தயவுசெய்து மன்னித்துவிடுங்கள்.

நான் இனிமேல் உங்கள் கட்சி. நீங்கள் எது சொன்னாலும் நானும் அதே அதே தான் இனிமேல்.

......................

ஹலோ!! இதுக்குப்பேர்தான் காக்காய் உட்கார பனம்பழம் விழுந்தகதை. இதுக்கு போய் இத்தனை வருடங்கள் உங்கள் மனதில் வைத்திருந்திருக்கிறீர்கள்.

gragavan
17-03-2006, 03:09 AM
ஐயா,
உங்களுக்கும் ராகவன் மாதிரியே கருநாக்கா...
நாங்க என்ன தப்பு பண்ணிருந்தாலும் மன்னிச்சி விட்டுருங்க சாமி...ஏய்யா...........நான் யாரையாவது திட்டுறேனா? ஒருத்தரையும் தப்பாக்கூடச் சொல்றதில்லையே.....நல்லாரு நல்லாருன்னு சொல்லிக்கிட்டு போய்க்கிட்டேயிருக்கேன். ஆனாலும் பாருங்க...சமயங்கள்ள மனசுல பட்டு....அது நெசத்துலயும் நடந்துருது. ஆனாலும் நல்லதையே நினைக்கிற அளவுக்குப் பக்குவந்தான் இல்ல.

தாமரை.....சமயங்களில் இந்த மாதிரி நடந்து விடுவது உண்டு. வருந்த வேண்டும். அனைத்தும் முருகன் செயல்.

gragavan
17-03-2006, 03:25 AM
அது சரி....எம்.ஜி.ஆரைப் பத்தி நல்ல நினைவுகள் இருக்குன்னீகளே....அப்படியெல்லாம் வேற இருக்குதா...அதுகளையுஞ் சொல்லுங்களேன்.

pradeepkt
17-03-2006, 04:22 AM
அவருக்கு நல்ல நினைவு வந்துட்டாலும் :D

தாமரை
17-03-2006, 06:05 AM
ஹலோ!! இதுக்குப்பேர்தான் காக்காய் உட்கார பனம்பழம் விழுந்தகதை. இதுக்கு போய் இத்தனை வருடங்கள் உங்கள் மனதில் வைத்திருந்திருக்கிறீர்கள்.
இதை அறிந்தவுடன் அரற்றியது என் இதயம்...

இதயமே! இதயமே! இதயமே!
உதயத்தைக் கண்டும் நீ
உறங்கியது ஏனய்யா?
உதயத்தைக் கண்டும் நீ
உறங்கியது ஏனய்யா?


கதறித் துடிக்கின்றோம் கண் விழிக்கவில்லை - நாங்கள்
பதறி அழுகின்றோம் விழி துடைக்கவில்லை
உதறி விட்டாயோ நீ உலகத்தை - மனம்
சிதறி விட்டோம் நாங்கள் சின்னையா...


இதயமே! இதயமே! இதயமே!

தாமரை
17-03-2006, 07:38 AM
அது சரி....எம்.ஜி.ஆரைப் பத்தி நல்ல நினைவுகள் இருக்குன்னீகளே....அப்படியெல்லாம் வேற இருக்குதா...அதுகளையுஞ் சொல்லுங்களேன்.
உங்கள் துன்பங்களுக்கு எம்.ஜி.ஆரும் ஒரு காரணம்... எப்படி என்கிறீர்களா?


1985 ஆம் ஆண்டு... என்னுடைய +2 இறுதித் தேர்வு.. எங்கள் பள்ளியில் யாருக்கும் நல்ல மார்க் வரும் என்று நம்பிக்கை இல்லை.. ஏனென்றால்...

நான் படித்த குகை மேல்நிலைப் பள்ளியில் +2 வகுப்பில் நாங்கள் இரண்டாவது பேட்ச். நாங்கள் தேர்வு எழுத வேண்டியது சி.எஸ்.ஐ மேல்நிலைப்பள்ளி. ஆங்கிலப் தேர்வின் போதும் இயற்பியல் தேர்வின் போதும் மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் வந்த பறக்கும் படை 20 பேர்களுக்கு மேல் பிட் அடித்ததாக பிடித்தனர்.

தியரி பேப்பர் எதிழுமே 150 க்கு மேல் வரவில்லை. 147/200 தமிழில். 142 உயிரியல், 126 இயற்பியல், 134 வேதியியல் 108 ஆங்கிலம் 196 கணிதம் என் மார்க் வந்து வெறுத்துப் போயிருந்த காலம். (பள்ளித் தேர்வுகளின் போது எதிலும் 180 குறைந்து போய் பார்த்ததில்லை.)

பொறியியல் நுழைவுத் தேர்வு எழுத அதில் 31.3/50 என்ற மதிப்பெண் கிடைக்க நான் சேலம் அரசு கலைக் கல்லூரியில் கணிதப் பிரிவில் சேர்ந்து விட்டேன்... 3 மாதம் கடந்து விட்டது.

தங்கத் தலைவர் எம்.ஜி.ஆர் 6 புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்க மூகாம்பிகை கல்லூரிக்கு அனுமதிக் கடிதம் வந்தது..

என் பாட்டி பெயரில் இருந்த நிலம் விற்று வந்த பணம் வைத்து என்னை சேர்த்து விட்டார் என் தந்தை.

நான் அந்த நர்சரிப் பள்ளியில் சேர்ந்தேன் இஞ்ஜினியரிங் படிக்க.
(திருச்சி, ராமலிங்க நகர்)

sarcharan
17-03-2006, 10:15 AM
செல்வன் அவர்களே,

உங்களுக்குள் இப்படி ஒரு அந்நியன் இருப்பான்னு எங்களுக்கு தெரியாமல் போச்சு...

ண்ணா செல்வணுங்ணா
நீங்க நல்லவருங்ணா
வல்லவருங்ணா
டைமண்டுங்ணா
கோல்டுங்ணா


"அதை பற்றிக் கவலைப் படாதீங்க.. நாளைக்கு காலையில் பாருங்க எம்.ஜி.ஆர் செத்துட்டதா நியூஸ் வரும் ஒரு வாரம் லீவு விடுவாங்க.. அப்புறம் அடுத்த வருஷம் தான் காலேஜ்" என்று வீம்பு பேசிவிட்டு ஒரு சினிமா சென்று வந்தோம்.

அடுத்த நாள், காலை 6 மணி. அவசர அவசரமாய் என் அக்கா கணவர் எழுப்பி டேய் எம்.ஜி.ஆர் செத்துட்டாருடா.. எந்த நேரத்தில டா வாயை வச்சே என்று கத்த... கனவா நிஜமா எனப் புரியாமல்.. 1 நிமிடம் விழித்தேன்.

வாய் விட்டு சொன்ன வார்த்தையும் போனது.. மெய் விட்டு போன உயிரும் போனது.
இனியாவது இது போல் விளையாட வேண்டாம் என் முடிவெடுத்தேன்..
நான் என்ன சொன்னேன்.. ஏன் சொன்னேன் ஒரு விளையாட்டுக்குத்தானே! என்ன சோதனை இது! இன்னும் புரிந்து கொள்ள முடியாத புதிர் இது..

இளந்தமிழ்ச்செல்வன்
18-03-2006, 04:28 AM
ஐயா செல்வன், நீங்கள் முக்காலும் உணர்ந்த ஞானி. நடக்கப்போவது முன்பே தெரிந்து கூறிவிட்டீர். அப்படியே ஒரு கொட்டாய் போட்டு உண்டியல் வைத்தால் அமோகமா தொழில் செய்யலாமே.

உண்மையில் உங்கள் உள்ளுணர்வு (inTUTION) வார்த்தைகளாக வெளிப்பட்டதை உணரவில்லை. நன்றாக கவனிக்கவும் இதுபோல் இன்னும் நிறைய விசயங்கள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா என்று. ஆம் எனில் கொட்டாய்க்கும் உண்டியலுக்கும் ஏற்பாடு செய்யுங்கள். பொருளாளராக வர நான் தயார்.

ராசராசன்
18-03-2006, 04:58 AM
செல்வன் அவர்களே,

ண்ணா செல்வணுங்ணா
நீங்க நல்லவருங்ணா
வல்லவருங்ணா
டைமண்டுங்ணா
கோல்டுங்ணா


கலக்குறே சந்துரூ....! :D :D :D

sarcharan
20-03-2006, 12:42 PM
இது கொஞ்சம் ஒத்துக்கொள்ளபடமுடியாததுதான். ஏன்னா நாங்க படிச்சப்ப தான் அது நர்சரி பள்ளி. நீங்க படிச்சப்ப அது ஒரு நடுநிலைப்பள்ளி


நான் அந்த நர்சரிப் பள்ளியில் சேர்ந்தேன் இஞ்ஜினியரிங் படிக்க.
(திருச்சி, ராமலிங்க நகர்)

அறிஞர்
20-06-2007, 02:34 AM
ஒரு வருடம் கழித்து தான் படித்தேன்... திருச்சி நர்சரி பள்ளியில் இஞ்சினியர் படித்து பெரிய ஆளாகி விட்டீர்கள்....
−−−−−−−−−
ஆரென் பாணியில் நாமும் தாமரையிடம் சரண்டர் ஆக வேண்டியது தான்.

அமரன்
24-06-2007, 07:00 PM
ஆகா இப்படியும் ஒன்று இருக்கிறதா...தாமரைஅண்ணாவிடம்..... அப்படியே நம்மை நல்லா வருவே என்று வாழ்த்துறது....

கலைவேந்தன்
24-06-2007, 07:18 PM
என்னையும் வாழ்த்துங்ணா! நானாச்சும் நல்லாருந்துட்டுப் போறேன்!

இதயம்
25-06-2007, 05:18 AM
இதை அறிந்தவுடன் அரற்றியது என் இதயம்...

இதயமே! இதயமே! இதயமே!
இதயமே! இதயமே! இதயமே!

கூப்பிட்டீங்களா..??!!

நீங்கள் இந்த நிகழ்வை சொல்லியிருப்பதின் பின்னணியில் மிரட்டல் எதுவும் இல்லையே..?!! (யாரும் என்னை பகைச்சுக்காதீங்க.. அப்புறம் அருள்வாக்கு(!) சொல்லிடுவேன்கிற மாதிரி..!!). என்னைக்கேட்டால் காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை தான். நான் சொல்றேன்.. நாளை கலைஞர் சாக மாட்டாருன்னு..!! அப்படி சாகாம இருந்தா யாராவது அதை என்னுடைய தீர்க்க தரிசனம்னும் சொல்வீங்களா..? அப்படி தான் இதுவும். ஆனால், நீங்கள் சொன்னதில் நடப்பதற்கான வாய்ப்பு மிகக்குறைவான சதவீதத்தில் இருந்ததால் தான் உங்களை அது ஒரு தீர்க்கதரிசியாக்கியிருக்கிறது..!!!

அரசன்
25-06-2007, 05:48 AM
இது போன்றே என் நண்பர் வட்டாரத்தில் நடந்த விசயம் இன்றும் நினைவுக்கு வருகிறது.

என் நண்பரும், அவர் நண்பர்களும் எம்.எல்.ஏ ஹாஸ்டலில் வேலைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். எனது நண்பரின் நண்பர்கள் மெரினா கடற்கரைக்கு இரவு 7 மணி இருக்கும் உலாவ சென்றிருந்தார்கள். அப்போது அங்கு நடந்த இரு கொடுமையான சம்பவம் அவர்கள் மனதை மிகவும் பாதித்து விட்டது. அதாவது, ஒரு 12 வயது பையனும், 11ன்றே வயதும் கொண்ட ஒரு சிறுமியும் தகாத உறவில் (திருமணம் ஆனபிறகு நிகழ வேண்டிய உறவு)ஈடுப்பட்டிருந்த ஏற்கதகாத சம்பவம் அது. அந்த பையனையும், சிறுமியையும் கண்டித்து அனுப்பிய அவர் மனம் கொதித்துக் கொண்டேயிருந்தது போலும். இது போன்ற சம்பவங்களை கடல்தாய் பொறுத்துக் கொள்ள மாட்டாள். என்னிக்காவது ஒரு நாள் பொங்கி வந்து அழிக்கப் போறான்னு சொல்லிட்டு போய்விட்டார்கள். மறுநாள் விடியற்காளையில் சுனாமி (டிசம்பர் 26) வந்து பலரை அழித்து விட்டது. என் நண்பருடைய வட்டாரம் அவரைத் திட்டி தீர்த்துவிட்டார்கள். என்ன செயவது இது போன்ற விசயங்கள் சில சமயங்களில் பழித்து விடுகிறது.

lolluvathiyar
25-06-2007, 06:03 AM
தாமரை நெஞ்சை உருக்கி விட்டது உங்கள் சம்பவம். நான் பள்ளியில் படித்தப்ப எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் நோய் வாய் பட்டு படுத்திருந்தார். அப்ப ஒரு நாள் பள்ளிகூடம் 12 மனிக்கே லீவு அறிவிச்சுட்டாங்க. நான் எம்.ஜி.ஆர் தான் இறந்துட்டார்னு நினைச்சேன். ஆனா இந்திராகாந்திய சுட்டுட்டாங்கனு சொன்னப்ப சின்ன வயசிலியும் லீவு குசிய விட எனக்கு முதல் முரையா என் வீட்டு உறவினர் ஒருவர் இற*ந்தது போல ஒரு வருத்தம். எம். ஜீ. ஆர் இறந்தப்ப நான் கல்லூரியில் படிகிறேன்.

ஷீ-நிசி
25-06-2007, 09:10 AM
மிகவும் ஆச்சரியபடத்தக்க நிகழ்வுகள்..

எனக்கும் விளையாட்டுத்தனமாய் ஒன்று நடந்தது.. இந்தியா இங்கிலாந்து மோதிய போட்டி ஒன்று இந்தியாவில் நடந்தது. இங்கிலாந்து வெற்றி பெறப்போகிறது. எனக்கு மனதில் திடீரென ஒன்று தோன்றியது. ஏன் கிரிக்கெட்டில் கால்பந்து வீரர்கள் போல தங்கள் பனியனை கழட்டி உற்சாகத்தை தெரிவிப்பதில்லை கிரிக்கெட் வீரர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரத்திலேயே இங்கிலாந்து வெற்றி பெற்றது.. அந்த சந்தோஷத்தில் பிளிண்டாஃப் தன் பனியனை கழற்றி சுழற்றினார். என்னால் நம்பவே முடியவில்லை.. ஏனென்றால் கிரிக்கெட்டில் அந்த நிகழ்வு முற்றிலும் புதியது. அது நான் நினைத்த சில கணத்திலேயே நடந்ததை எண்ணி நான் சற்றே பிரமித்துவிட்டேன்.

அமரன்
25-06-2007, 09:11 AM
நீங்களுமா நிஷி...நீங்கள் என் நெருங்கிய நண்பர்....:food-smiley-011: :food-smiley-011: :food-smiley-011:

விகடன்
12-08-2007, 06:41 AM
ஐயா தாமரை.
நான் இத்தோடு ஓடியே விடுகிறேனே. ஏதாச்சும் எழுதிவைக்கப் போக அது தப்பாக உங்கள் மனதிற்கு தென்பட்டால்....
ஏற்கனவே கனவுகளாக மட்டும் இருக்கும் வாழ்க்கை கானல்னீராகிவிடாதா.???

விராடா . ஓடித் தப்படா. (விராடனின் மனச்சாட்சியின் குரல் எழுத்துவடிவில்)

அதிரடி அரசன்
13-08-2007, 05:26 PM
எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர்

இன்றும் எம்.ஜி.ஆர் படங்களை ரசித்தும் பார்க்கும் பலகோடி உள்ளங்களில் நானும் ஒருவன்.

அவரை போல் ஒரு நல்ல மனிதரை நல்ல நடிகரை நான் இதுவரை பார்த்ததே இல்லை.


அதிரடி அரசன் :aktion033:

அதிரடி அரசன்
13-08-2007, 05:54 PM
எம்.ஜி.ஆர். மூலமாக திரை உலகில் நுழைந்த இயக்குனர் மகேந்திரன்:

பொன்னியின் செல்வனுக்கு திரைக்கதை எழுதினார்

திரைக்கதை - வசன கர்த்தாவாகவும், பின்னர் டைரக்டராகவும் உயர்ந்து, "முள்ளும் மலரும்'', "உதிரிப்பூக்கள்'' முதலான அற்புத படங்களை உருவாக்கிய மகேந்திரன், எம்.ஜி.ஆர். மூலமாக திரை உலகில் நுழைந்தவர்.

இயக்குனர் மகேந்திரனின் சொந்த ஊர் இளையான்குடி. தந்தை ஜோசப் செல்லையா ஆசிரியராக பணிபுரிந்தவர். தாயார் மனோன்மணி, கம்பவுண்டராக பணிபுரிந்தவர்.

இளையான்குடியில் பள்ளிப்படிப்பை முடித்த மகேந்திரன், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் "இண்டர்மீடியட்'' படித்தார். அதன் பிறகு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் "பி.ஏ'' பொருளாதாரம் படித்தார்.



அப்பொழுது கையெழுத்து பத்திரிகை ஒன்றை மகேந்திரன் நடத்தினார். தீபாவளிதோறும் அது வெளிவந்தது. கல்லூரி நாடகங்களிலும் அவர் பங்கு கொள்வார்.

எம்.ஜி.ஆர். முன்னால் பேசினார்

1958-ம் ஆண்டு கல்லூரி ஆண்டு விழா நடந்தது. அந்த விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். விழாவில் எம்.ஜி.ஆர். முன்னிலையில் மகேந்திரன் பேசினார்.

"நம் கல்லூரியில் பலர் காதலிக்கிறார்கள். பின்னர் ஊராரிடம் அவமானப்படுகிறார்கள். ஆனால் இவர் (எம்.ஜி.ஆரை காட்டி) சினிமாவில் காதலியோடு பாடுகிறார். ஊரே ரசிக்கிறது'' என்றார், மகேந்திரன்.

இதை ரசித்து கேட்ட எம்.ஜி.ஆர், "நல்ல பேச்சு, நல்ல கருத்து, நகைச்சுவை உணர்ச்சியுடன் கூடிய விளக்கம். சிறந்த விமர்சகராக இருக்க தகுந்தவர், வாழ்க'' என்று எழுதி கையெழுத்திட்டு மகேந்திரனிடம் கொடுத்தார்.


கல்லூரிப் படிப்பை முடித்த மகேந்திரன் தஞ்சையில் இருந்த அத்தை நேசமணி வீட்டுக்கு சென்றார். அப்போது, சட்டக் கல்லூரியில் படிக்க செல்லும்படியும், தான் பண உதவி செய்வதாகவும் மகேந்திரனிடம் அத்தை கூறினார். அதன் பேரில், மகேந்திரன் சென்னைக்குப் புறப்பட்டார். திருவல்லிக்கேணியில் உறவினர் வீட்டில் தங்கிக் கொண்டு, சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்தார்.

ஏழு மாதங்கள் முடிந்த நிலையில், "மேற்கொண்டு பண உதவி செய்ய முடியாது'' என்று அத்தை கூறியதால், படிப்பை அப்படியே விட்டுவிட்டு இளையான்குடிக்கு புறப்பட தயாரானார், மகேந்திரன்.

அப்போது எதிர்பாராத விதமாக காரைக்குடி கண்ணப்ப வள்ளியப்பனை மகேந்திரன் சந்திக்க நேர்ந்தது. தனது "இனமுழக்கம்'' பத்திரிகையில் உதவி ஆசிரியர் வேலை தருவதாகவும், சினிமா விமர்சனம் எழுதுமாறும் மகேந்திரனிடம் கண்ணப்ப வள்ளியப்பன் கூறினார். அதற்கு மகேந்திரன் சம்மதித்தார்.

இந்த நிலையில் "இன்பக்கனவு'' நாடகத்தில் நடித்தபோது கால் எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆர், பூரண குணம் அடைந்து மீண்டும் நடிக்கப் போவது பற்றி அறிவிக்க, பத்திரிகையாளர்கள் கூட்டத்தை கூட்டினார்.

அந்தக் கூட்டத்துக்கு மகேந்திரன் சென்று இருந்தார். அவரைப்பார்த்த எம்.ஜி.ஆர், "நீங்கள் அழகப்பா கல்லூரி மாணவர்தானேப'' என்று கேட்டார். மகேந்திரன், "ஆமாம்'' என்றார்.

"நாளை என்னை வீட்டில் வந்து பாருங்கள். உங்களுக்கு நல்ல வேலை தருகிறேன்'' என்றார், எம்.ஜி.ஆர்.

பொன்னியின் செல்வன்

மறுநாள் காலை மகேந்திரன், ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் இருந்த எம்.ஜி.ஆர். வீட்டுக்கு சென்றார்.

மகேந்திரனுக்கு தன் வீட்டு மாடியில் தனி இடம் ஒதுக்கிக் கொடுத்தார், எம்.ஜி.ஆர். கல்கியின் "பொன்னியின் செல்வன்'' நாவலை எடுத்து வந்து, மகேந்திரனிடம் கொடுத்தார்.

"நான் இதைப் படமாக எடுக்கப்போகிறேன். நீங்கள் திரைக்கதை எழுதவேண்டும்'' என்று கூறினார்.

அந்த நாவலுக்கான திரைக்கதையை, 3 மாதத்தில் மகேந்திரன் எழுதி முடித்தார். "திருடாதே'' படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரிடம் திரைக்கதையை கொண்டு போய்க் கொடுத்தார்.

"இவ்வளவு சீக்கிரமா முடிச்சிட்டீங்களாப'' என்று வியப்புடன் கேட்டார், எம்.ஜி.ஆர். பிறகு, "ஊரில் இருந்து ஒழுங்காக பணம் வருகிறதாப'' என்று கேட்டார்.

மகேந்திரன் தன் நிலைமையைக் கூறினார். உடனே எம்.ஜி.ஆர். நூறு ரூபாய் கொடுத்தார்.

நாடகம்

பொன்னியின் செல்வனை படமாக்கும் திட்டத்தை எம்.ஜி.ஆர். தள்ளிப்போட்டார். தன் நாடக மன்றத்துக்காக ஒரு நாடகத்தை எழுதித் தரும்படி மகேந்திரனிடம் கூறினார்.

"அனாதைகள்'' என்ற நாடகத்தை மகேந்திரன் எழுதித் தந்தார்.


நாடக ஒத்திகை எல்லாம் முடிந்து திருச்சியில் அரங்கேற்ற முடிவு செய்தார், எம்.ஜி.ஆர். ஆனால், புயல்-மழை காரணமாக அப்போது நாடகம் அரங்கேறவில்லை.

பின்னர் சென்னை வந்ததும், அந்த நாடகத்தை "வாழ்வே வா'' என்ற பெயரில் படமாக்க முடிவு செய்யப்பட்டது. இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சாவித்திரி. மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதன்பின், படத்தின் பைனான்சியர் இறந்ததால், படம் பாதியில் நின்றுவிட்டது.

உதவி இயக்குனர்

இந்த நிலையில் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த "காஞ்சித் தலைவன்'' படத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வந்தார். இந்த படத்தின் இயக்குனர் காசிலிங்கத்திடம் உதவி இயக்குனராக மகேந்திரனை எம்.ஜி.ஆர். சேர்த்துவிட்டார்.

இதுபற்றி மகேந்திரன் கூறுகையில், "என்னுடைய சினிமா பிரவேசத்துக்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம.ë என் கலைப்பணிக்கு அவர் வித்திட்டார்; உரமிட்டார்; நீர் வார்த்து வளரவிட்டார் என்பதை நான் என்றுமே மறக்கமாட்டேன்'' என்றார்.



நன்றி: மாலை மலர்

அதிரடி அரசன்
13-08-2007, 06:13 PM
தமிழோவியம் (கட்டுரை : ஒரு அதிசயத்திற்கு வயது 90 Thanks babudi )

பசிப் பட்டினியோடு தனது தாயின் புடவைத் தலைப்பை பிடித்துக் கொண்டு இலங்கை யிலிருந்து தமிழகத்துக்கு வந்து சேர்ந்த போது அந்த குழந்தைக்கு எப்படி தெரிந்திருக்க முடியும், இதே தமிழகத்தில் பல லட்சம் குழந்தைகள் தன்னால் பசியாறப் போகிறதென்று !

வசதியான குடும்பம். தந்தை, ஸ்கூல் ஹெட்மாஸ்டர் -கம்- கவுரவ மாஜிஸ்டிரேட் உத்யோகம். ஆனால் இவன் பிறந்த வேளை, தந்தை மரணமடைந்தார். குடும்பமும் வறுமையின் பிடிக்குப் போனது. அதனால் ராசியில்லாத பிள்ளையென்று உற்றார் ஊராரின் தூற்றல். பாவம், அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை ; அதே பிள்ளையின் முகராசி பற்றியும், தொட்டதெல்லாம் பொன்னாகும் கைராசி பற்றியும்.

சின்ன வேடமாவது கிடைக்காதா என காய்ந்த வயிற்றோடு சினிமா ஸ்டூடியோ வாசல்களில் கையேந்தி நின்றவனை அடிக்காத குறையாக விரட்டியவர்கள் உண்டாம். முகவெட்டு
சரியில்லை என கேலிப் பேசி நிராகரித்தார்களாம். அவர்களுக்கு அப்போதெங்கே தெரிந்திருக்க போகிறது, பின்னாளில் இவன் தமிழ் சினிமா உலகை மட்டுமின்றி தமிழகத்தையே ஆளப் போகிறவன் என்றும்; இந்த முகம் தான் உலகத் தமிழர்களின் பூரணச் சந்திரனாக ஆகப் போகிறதென்றும் !

கெஞ்சிக் கூத்தாடி பெற்ற கதாநாயகன் வாய்ப்பு கை நழுவி போன போதெல்லாம் கதறியழுதிருக்கிறான் ; தான் தமிழகத்தின் , தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிரந்திர நாயகனாகப்
போகிறோமென தெரியாமலேயே !

குடும்பச் சுமையை 7 வயதிலேயே ஏற்றிக் கொண்டவன். அதற்காக 3ம் வகுப்போடு படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு நாலணா சம்பளத்துக்கு நாடகக் கம்பெனியில் சேர்ந்தான். அடி உதைபட்டான். ஒரு முறை ஒரு அஞ்சு பைசா விவகாரத்துக்காக நாடக கம்பெனியார் இந்த அப்பாவி பையனை அடித்து துவைத்து விட்டார்களாம். அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்க வில்லை, பின்னாளில் ' கொடுத்து கொடுத்து சிவந்த கரம் ' என்றும் ' மக்கள் திலகம் ' எனவும் மக்களால் போற்றப்படக் கூடியவனை அடித்துக் கொண்டிருக்கிறோமென !

வளர்ந்த பிறகு, சுட்டுக் கொல்லவும் பார்த்தார்கள். ஆனால் 70 வயது வரை வாழ்ந்து ராஜ மரியாதையுடன் மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடிதான் இறுதி ஊர்வலமாக போக வேண்டுமென்றிருக்கும் போது எந்த துப்பாக்கி தான் என்ன செய்து விட முடியும் ???

M.G.R. - இது மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரனின் ஆங்கிலப் பெயர் சுருக்கெழுத்து. ஆனால் இந்த அந்நிய எழுத்தையே தமிழ் பெயர்ச் சொல்லாகிய மூன்றெழுத்து மந்திரச் சொல் அது!

எம்.ஜி.ஆர்., ஒரு சுயம்பு. அரை வயிற்றுக் கஞ்சிக்காக நாடு விட்டு நாடு பஞ்சம் பிழைக்க வந்தவர். இனம், மொழி, ஜாதி என்று எந்த ஒரு பின்புல ஆதரவும் கிடையாது. படிப்பும் இல்லை. ஆனாலும் நிமிர்ந்தார். தானாகவே நடந்து.. விழுந்து.. எழுந்து...

இமய எழுச்சி தானென்றாலும், இந்த எழுச்சியை எட்ட அவர் சந்தித்த தோல்விகள், அவமானங்கள், பட்ட அடிகள் தான் ஏராளம். ஆனாலும் சோராத மனோதிடம், தெளிவான இலக்கு, அதை நோக்கி காய்களை நகர்த்திய சாமர்த்தியம், கடின உழைப்பு... இவை மட்டுமின்றி தனக்கு இயல்பாக அமைந்த பலவீனங்களையும் பலங்களாக மாற்றிக் கொண்ட சாதுரியம் ஆகியவையே அவரை கரையேற வைத்தது.

டீன்-ஏஜ் பருவத்தில் பையன்களுக்கு தொண்டை உடைந்து ( இதை ' மகரக்கட்டு ' என்பார்கள்) பிறகு சரியாகும். ஆனால் எம்.ஜி.ஆருக்கு இது முழுமையாக சீராகவில்லை. நாடகமானாலும் சினிமாவானாலும் பாட்டே பிரதானமாக அப்போதிருந்த நிலையில் , இது பெரிய பலவீனம் தான். பாடுமளவுக்கு தனக்கு குரல் வளமில்லை என்று உணர்ந்து கொண்டார் எம்.ஜி.ஆர். இந்த பலவீனத்துக்காக அவர் சோர்ந்து விடவில்லை. மாற்றாக, வாள் வீச்சு, சிலம்பம், குஸ்தி என்று வீர விளையாட்டுக் கலைகளை கற்றுக் கொண்டார். உடலை அதற்கேற்ப கட்டுமஸ்தாக வைத்துக் கொண்டார். இது சினிமாவில் அவருக்கு பெரிதும் கைகொடுத்தது. ஆரம்பத்தில் சினிமாவில் ஒதுக்கப்பட்டாலும் பின்னாளில் அவரை கவனிக்க வைத்தது. தமிழ் சினிமாவின் முழுமையான முதல் ' ஆக்ஷன் கிங்' ஆக உருவெடுக்க உதவியது. கடைசி வரை அதாவது அவரது 60வது வயதிலும் சாகச நாயகனாக ரசிகர்களை ஏற்றுக் கொள்ள செய்தது.

அடுத்து , அவரது முக அமைப்பு. முதல் படமான ' சதிலீலாவதி 'யில் (1936ல் வெளியானது) நடிக்கும் போது எம்.ஜி.ஆருக்கு வயது 19 தான். முதன்முதலாக கதாநாயகனாக 'ராஜகுமாரி' (1947) படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 30. இளவயது தான். ஆனாலும், உன்னிப்பாகப் பார்த்தால் நீள் சதுர வடிவிலான அவரது முகத்தில் அந்த வயதை மீறிய முதிர்ச்சி மெலிதாகப் படர்ந்திருப்பதை அவரது மிக ஆரம்ப கால படங்களில் காணலாம். இதற்கு, அனுபவித்த வறுமை காரணமா அல்லது பிறப்பிலேயே அப்படியா என்று தெரியவில்லை.
ஆனால் அதே முகம், அதற்கு பிறகு முதிர்ந்ததாக காணப்படவில்லை. ஆரம்பத்தில் வயதிடம் தோற்ற அந்த முகம் பின்னாளில் வயதையே தோற்கடித்தது தான் ஆச்சரியம். அதாவது தனது 45, 50 வயதிலும் எம்.ஜி.ஆரின் முகம், 30, 35 வயதைத் தான் காட்டியது. அதற்கேற்ப அவர் பராமரித்து வந்த தொந்தி தள்ளாத 'சிக்' உடற்கட்டும், துள்ளல் நடிப்பும், இளமையை வெளிப்படுத்தும் 'பாடி லேங்குவேஜ்'ம் உறுதுணையாக இருந்தன. (உதாரணத்துக்கு: 'தாழம்பூ, அன்பேவா, சந்திரோதயம், நம்நாடு ...' என்று படங்கள் பட்டியலை அடுக்கிக் கொண்டேப் போகலாம்)

அதே போல், அவரது முகம் நுணுக்கமான, நெகிழ்வான உணர்வுகளை பளீரென பிரதிபலிக்காத தன்மை கொண்ட 'Metallic' என்றும் 'தூண்' என்றும் விமர்சித்து பலர் ஆரம்ப காலத்தில் சினிமாவில் சான்ஸ் தராமல் நிராகரித்தார்களாம். இந்த பலவீனத்தையும் புரிந்துக் கொண்ட எம்.ஜிஆர்., அதற்கேற்ப மாறுபட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் உணர்ச்சிப்பிழம்பான கதையம்சங்களை தவிர்த்தார். தனக்கு தோதான கதாபாத்திரங்களையேத் தேர்ந்தெடுத்தார். தனக்கு பலமாக இருக்கும் சண்டைக்கலையை முழுமையாக பிரயோகித்தார். படத்தின்
திரைக்கதை, வசனம், பாடல் காட்சிகள், பட டைட்டில் போன்றவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தினார். ' எம்.ஜி.ஆர். பார்முலா ' என தனி பாணியையே உருவாக்கினார். மாபெரும் வெற்றியும் கண்டார்.

தமிழ் சினிமாவில் ' மெலோடிராமா ' நிறைந்திருந்த காலகட்டத்தில் - அதுவும் அந்த நடிப்பில் திலகமாக போட்டி நடிகர் விளங்கிய நிலையில் இவ்வாறு வெற்றி பெறுவது சுலபமான விஷயமல்ல. ' நடிக்கவே தெரியாத நடிகன்', ' கெழட்டு நடிகன் ', ' அட்டைக் கத்தி வீரன்'.... இப்படியான கிண்டல்கள் கேலிகளுக்கு மத்தியில் சாதிக்க முடிந்ததற்கு காரணம், மைனஸ் பாயிண்ட்டுகளை ப்ளஸ் பாயிண்ட்டுகளாக மாற்ற எம்.ஜி.ஆர் காட்டிய உழைப்பும், நம்பிக்கையும், மனோ உறுதியும் தான்.

அரசியலிலும் அவர் சுலபமாக நீந்தி விடவில்லை. அரசியலில் தான் எதிர்த்து நிற்க வேண்டிய நபரின் கெட்டிக்காரத்தனத்தையும் சாணக்கியத்தனத்தையும் நன்கு அறிந்துமே துணிந்து களம் இறங்கினார் எம்ஜிஆர். மக்களின் நாடித் துடிப்பை மட்டுமின்றி தனது பலவீனத்தை அறிந்திருந்த அளவுக்கு எதிரியின் பலவீனத்தையும் நன்கு புரிந்து வைத்திருக்கும் புத்திசாலித்தனத்தால் அரசியலிலும் ஜெயித்தார் எம்ஜிஆர். உலகிலேயே, ஒரு சினிமா நடிகர் தனியாக ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து ஜெயித்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவும் ஆகி சாதித்த முதலாமவர் என்ற பெருமையை பெற்றார்.

'அரசியல் விதூஷகன்' என்று கேலி பேசியவர்களும், 'அரிதாரம் பூசிவனெல்லாம் அரசாள முடியுமா? ' என்று கிண்டலாக கேட்டவர்களையும் கூட பின்னாளில் அவரை 'புரட்சித்தலைவர்' என்று புகழ வைத்தது அவரது வெற்றி.

அவருக்கு பிள்ளைச் செல்வம் இல்லாத குறையும் கூட அவருக்கும் அவர் மீதான 'இமேஜ்'க்கும் ஒரு வகையில் இயற்கையாகவே சாதகமாக அமைந்தது எனலாம். முதலமைச்சராக இருந்த போது அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எதிர்தரப்பால் அடுக்கப்பட்ட போது, "அவருக்கென்ன. பிள்ளையா குட்டியா? பிறகெதுக்கு. ஊழல் செய்து சொத்து சேர்க்க வேண்டிய அவசியமே அவருக்கில்லை. ஏழைகளுக்கு அள்ளிக் அள்ளி கொடுக்கிறவராச்சே. சும்மா சொல்றாங்க" என்று மக்கள் மன்றத்தில் புகார்கள் எடுபடாமல் போகச் செய்தது.

1967ல் சக நடிகர் ஒருவரால் எம்.ஜி.ஆர். நேருக்கு நேர் துப்பாக்கியால் சுடப்பட்டார். 1984ல் உடல் நலம் குன்றி சாவின் விளிம்பை தொட்டு வந்தார். இந்த இரண்டு நிகழ்வுகளிலுமே உயிருடன் மீண்டு , ஒரு மனிதன் ஒரே பிறவியில் மூன்று முறை பிறவி கண்ட அதிசயமாக பாமரர்கள் மத்தியில் தானொரு அபூர்வப் பிறவியாக பிரமிக்க வைத்தார் எம்.ஜி.ஆர். சாவையே தோற்கடித்த சாகச வீரனாகவும், ' தர்மம் தலைகாக்கும் ' என்கிற உபதேசத்தின் உதாரண புருஷனாகவும் அவர் சாமானிய மக்கள் மத்தியில் உலா வர, அந்த 1967, 1984 அசம்பாவிதங்களும் கூட அவருக்கு சாதகமாக அமைந்த அதிசயத்தை என்னவென்று சொல்வது !

அதே 1967ல் துப்பாக்கி குண்டு காயத்துடன் சென்னை ஆஸ்பத்திரியிலும் இருந்த போதும், 1984ல் சிறுநீரக கோளாறு அறுவை சிகிச்சைக்காக அமெரிக்க ஆஸ்பத்திரியிலும் படுத்திருந்த நிலையிலும் பிரச்சாரத்துக்கு தொகுதிக்கே போகாமல் சட்டசபைத் தேர்தலில் நின்று ஜெயித்து அரசியல் எதிரிகளை அதிர வைத்த செல்வாக்கு!

அதுமட்டுமா, மேற்குறிப்பிட்ட அவ்விரு சம்பவங்களிலும் எம்.ஜி.ஆரின் பேச்சுத் திறன் பாதிக்கப்பட்ட போதும் அவரை அவராகவே அப்படியே ஏற்று அள்ளி அரவணைத்துக் கொண்ட மக்களின் அபிமானம் !!

இப்படி ஆச்சரியம் அல்லது அதிசய நிகழ்வுகளை உள்ளடக்கிய எம்.ஜி.ஆரின் வாழ்க்கைக் காலம் மொத்தம் 70 ஆண்டுகள். அதில் சுமார் 40 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் (1936- 1977) அவர் நடித்தது மொத்தமே 136 படங்கள் தான். இதன் ஊடே 1953ம் ஆண்டு எம்.ஜி.ஆர். திமுகவில் சேர்ந்தது தொடங்கி அரசியலில் முழுவீச்சில் ஈடுபட்டது (1987ல் தமிழக முதலமைச்சராக மரணமடையும் வரை) 34 ஆண்டுகள் தான்.
ஆரம்பத்தில் அவர் ஆட்சியை பிடித்த போது 'சினிமா கவர்ச்சி' என்றார்கள். இந்த மாயை சீக்கிரமே விலகி விடுமென்றார்கள். ஆனால், இன்றளவுக்கும் கணக்குப் பார்த்தால் எம்.ஜி.ஆர். சினிமாவை விட்டு விலகி சரியாக 30 ஆண்டுகள் ஆகிறது. அவ்வளவேன், அவர் மண்ணை விட்டு மறைந்தே சுமார் 20 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் இன்றளவும் அவர் முகமும் பெயரும் தான் தமிழக அரசியலில் அசைக்க முடியாத ஓட்டு வங்கி. அவரது காலத்தில் அவருக்கு அரசியல் எதிரிகளாக இருந்தவர்களானாலும் சரி... நேற்றைக்கு புதியதாக கட்சி ஆரம்பித்தவர்களானாலும் சரி.. எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லி தான் ஓட்டுகள் வாங்க முடியுமே தவிர திட்டி வாங்கிட முடியாது என்பது தான் நிகழ்கால நிதர்சனம் !


பிஞ்சு பருவத்தில், வறுமையையும் வேதனையையும் மாத்திரமே சுமந்துக் கொண்டு பிறந்த
நாட்டிலிருந்து பஞ்சம் பிழைக்க இன்னொரு நாட்டுக்கு தஞ்சம் புகுந்து ; மூச்சு முட்ட முட்டப் போராடி; அடைக்கலம் கொடுத்த நாடே உயரிய விருதையும் அளித்து கவுரவப்படுத்தும்படி உயர்ந்து வாழ்ந்து - மண்ணை விட்டும் மறைந்தும் ஏழைகளின் குடிசைகளில் இன்றளவும் சாமிப் படமாக தொங்கியிருக்கும் அந்த சாமானிய , தனி மனிதன் தனது வாழ்க்கைப் பயணத்தில், அடுத்த தலைமுறைக்கென பதிவு செய்து விட்டு சென்றுள்ள செய்தி இது தான்:-

" தோல்விகளாலும் பலவீனங்களாலும் சோர்ந்து விடக் கூடாது. அவற்றை விடா முயற்சியாலும், மனோதிடத்தாலும் பலங்களாக்கி கொள்ள வேண்டும் "

அதிரடி அரசன்
13-08-2007, 06:14 PM
இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம்.... எம்.ஜி.ஆர் இலங்கையிலிருந்து வந்தவரா?


இதற்கு பதில் சொல்லுங்கள் இன்னும் பல சுவையான தகவல்கலோடு வருகிறேன்.

அதிரடி அரசன் :sport-smiley-014:

தளபதி
14-08-2007, 04:21 AM
நிறைய தலைவர்கள் மனதில் நினைப்பதும், சொல்வதும் நடந்ததை பகிர்ந்து கொள்ளும்போது, நினைப்பதையும் சொல்வதையும் நல்லதாகாவே இருக்கவேண்டும் என்று வலியுறுத்துவதாக உணர முடிகிறது.

நன்றி தாமரை..!! மிக சிறிய குற்ற உணர்ச்சி இருப்பினும் அதை விட்டு விலகுங்கள். ஏனெனில் உங்கள் பக்கம் எந்த் குற்றமும் இல்லை.

namsec
14-08-2007, 02:17 PM
என்னுள்ளமும் எம்.ஜி. ஆர் மீது பற்று கொள்ள காரணம் நான் அப்பொழுது 9ம் வகுப்பு படித்து கொண்டுள்ளேன். ஆனால் எனக்கு எம்.ஜி.ஆர் பிடிக்காது தி.மு.க வின் மீதுதான் பற்று அப்படியிருக்கும் பட்சத்தில் எனது மூத்த சகோதரர் காவல்துறையில் சேர்ந்த்து பயிற்ச்சி மேற்கொண்டு உள்ளார் அவர் பயிர்ச்சி மேற்கொள்ளும் இடம் எங்கள் இல்லத்திலிருந்த்து 5 கிலோமீட்டர் தொலைவுதான் அதனால் நித்தம் என் சகோதரருக்கு வீட்டிலிருந்த்து ஏதவது விதவிதமாக சமைத்து கொடுப்பர் அதை நான் பள்ளி செல்லுவதர்க்கு முன் மிதிவண்டியில் சென்று கொடுத்துவருவேன்.

அப்படி செல்லும் பொழுது செயின்ட் தாமஸ் மவுண்ட் சந்திப்பு அருகில் காவல் துறையினர் எம்.ஜி.ஆர் வருகையினால் போக்குவரத்தை நிருத்திவைப்பர் அப்படி நாங்கள் நிர்க்கௌம் இடத்தை எம்.ஜி.ஆர் கடக்கையில் வாகனம் மெதுவாக செல்லும். சில சமயங்களில் நிறுத்தியும் விடுவார் காருக்கு வெளிபுறத்தில் கையை நீட்டி நலம் விசாரிப்பது போல் கை அசைப்பார்

அன்றிலிருந்த்து அவர்மீது பற்று கொண்டேன்.

சிவா.ஜி
14-08-2007, 02:29 PM
இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம்.... எம்.ஜி.ஆர் இலங்கையிலிருந்து வந்தவரா?


இதற்கு பதில் சொல்லுங்கள் இன்னும் பல சுவையான தகவல்கலோடு வருகிறேன்.

அதிரடி அரசன் :sport-smiley-014:

ஆமாம் அரசரே அவரின் தந்தை இறந்த பிறகு அவரும் தாயார் சத்யாவும்,அண்ணன் சக்ரபாணியும் இலங்கையை விட்டு தமிழகத்துக்கு கும்பகோணத்துக்கு வந்தார்கள்.அங்குள்ள யாணையடி பள்ளியில்தான் மூன்றாம் வகுப்புவரை படித்தாராம்.படித்து தெரிந்துகொண்டது.

அக்னி
14-08-2007, 02:37 PM
எம்.ஜி.ஆர்.
உலகில் வாழும் அனைத்துத் தமிழரினதும் மனதில்,
நீங்கா இடம்பிடித்தவர் என்பது மட்டும்
மறுக்கவும், மறைக்கவும் முடியாத உண்மை...

செல்வரின் திடுக் அனுபவத்தில் பற்றிய திரி...
அதிரடியின் பதிவுகளில் பற்றி எரிகின்றது...

எம்.ஜி.ஆர்.
சகாப்தம் இத்திரியில் தொடர்ந்தும் பிரகாசிக்கட்டும்...

அதிரடி அரசன்
14-08-2007, 04:41 PM
ஆமாம் அரசரே அவரின் தந்தை இறந்த பிறகு அவரும் தாயார் சத்யாவும்,அண்ணன் சக்ரபாணியும் இலங்கையை விட்டு தமிழகத்துக்கு கும்பகோணத்துக்கு வந்தார்கள்.அங்குள்ள யாணையடி பள்ளியில்தான் மூன்றாம் வகுப்புவரை படித்தாராம்.படித்து தெரிந்துகொண்டது.

ரொம்ப நன்றி சிவா.

மீண்டும் வருகிறேன் சுவையான தகவல்கலோடு.

அதிரடி