PDA

View Full Version : தங்கத் தலைவன்

தாமரை
16-03-2006, 09:20 AM
இது என் 1000 ஆம் ஆவது பதிப்பு.. என்னை அனைவரின் நண்பனாக்கப் போவது...

1983/84 ல் நமது முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் நோய்வாய்ப்பட்ட போது எல்லா திரையரங்குகளிலும் இறைவா உன் கோயிலிலே எத்தனையோ மணி விளக்கு பாடல் ஒளிபரப்பப் பட்டுக் கொண்டிருந்த காலத்தில் நான் எழுதிய பாடலை சமர்ப்பிக்கிறேன்,,

தங்கக் கைகளால் தருமம் செய்திட்ட
தலைவன் நலம் பெறுக
எங்கள் குறைதீர்த்த ஏழைப் பங்காளன்
எல்லா நலமும் பெறுக
இது மக்களின் குறை இறைவா
இதை மாற்றிடு என் இறைவா ---(தங்கக்)

அஞ்சி நடந்திடும் வஞ்சியர்தம்
அச்சத்தைத் தீர்த்தவராம்
கஞ்சி இல்லாமல் வாழும் ஏழைகளின்
கவலையைத் தீர்த்தவராம்
அவர் உடலை நலமாக்கு
அதையே வேண்டுகிறோம் இறைவா ---(தங்கக்)

பண்பாடு காத்து பழமையைப் போற்றி
பாராண்ட சீராளனாம்
அன்போடு எம்மை அரசாண்ட எங்கள்
அண்ணாவின் வழிநடக்கும்
அய்யாவைக் காப்பாற்று எங்கள்
அழுதிடும் குரல்மாற்று... ---- (தங்கக்)

அடுத்தப் பதிவு அதிர்ச்சியானதாய் இருக்கலாம்....

pradeepkt
16-03-2006, 10:13 AM
என்னய்யா ஒரே அதிர்ச்சியப் போட்டுத் தாக்கறீங்க...

தாமரை
16-03-2006, 10:37 AM
அப்பப்ப உண்மையும் சொல்லனும் இல்லையா?

pradeepkt
16-03-2006, 02:35 PM
ஆமா ஆமா...
ஆனா நீங்க உண்மை சொல்றீங்கங்கறதே அதிர்ச்சிகளில் பெரிய அதிர்ச்சியாச்சே ஹி ஹி :D

பென்ஸ்
16-03-2006, 04:08 PM
அபாரம் செல்வன்...

இந்த முறை என் காது செவிடானாலும் பரவாயில்லை... சந்திப்பின்
போது இந்த பாட்டையும் .. ராசாத்தி பாட்டையும் பாடியே தீரவேண்டும்...

gragavan
17-03-2006, 03:47 AM
ஏங்க.....83/84ல இந்த அளவுக்குக் கவித எழுதீருக்கீங்க......அப்ப என்ன செஞ்சிக்கிட்டு இருந்தீங்க.....எம்.ஜீ.ஆர் செத்தத டீவீல பாத்த நெனவு இருக்கு. அதுக்கு மேல ஒன்னும் சரியா நெனவு வரலை. அப்ப டீவீல அமலாவும் அஞ்சலி செலுத்த வந்ததங்க...நான் அமலா அமலான்னு கத்துனது மாட்டும் நல்லா நெனவு இருக்கு. ஆனா நீங்க கவிதையே எழுதித் தள்ளீருக்கீங்க. அதுவும் எம்.ஜி.ஆரப் பத்தி.....அதிர்ச்சி கிதிர்ச்சீன்னு வேற சொல்றீங்க...நீங்க சாதா-ரணமாப் பேசுனாலே அதிர்ச்சிதான்....நீங்க எம்.ஜி.ஆர் ரசிகரா?

gragavan
17-03-2006, 03:49 AM
அபாரம் செல்வன்...

இந்த முறை என் காது செவிடானாலும் பரவாயில்லை... சந்திப்பின்
போது இந்த பாட்டையும் .. ராசாத்தி பாட்டையும் பாடியே தீரவேண்டும்...பெஞ்சு...மொத்த பெங்களூரும் செவுடாப் போகுமேய்யா....வேண்டாம்...இதெல்லாம் நமக்கு வேண்டாம்........

தாமரை
17-03-2006, 06:15 AM
ஏங்க.....83/84ல இந்த அளவுக்குக் கவித எழுதீருக்கீங்க......அப்ப என்ன செஞ்சிக்கிட்டு இருந்தீங்க.....எம்.ஜீ.ஆர் செத்தத டீவீல பாத்த நெனவு இருக்கு. அதுக்கு மேல ஒன்னும் சரியா நெனவு வரலை. அப்ப டீவீல அமலாவும் அஞ்சலி செலுத்த வந்ததங்க...நான் அமலா அமலான்னு கத்துனது மாட்டும் நல்லா நெனவு இருக்கு. ஆனா நீங்க கவிதையே எழுதித் தள்ளீருக்கீங்க. அதுவும் எம்.ஜி.ஆரப் பத்தி.....அதிர்ச்சி கிதிர்ச்சீன்னு வேற சொல்றீங்க...நீங்க சாதா-ரணமாப் பேசுனாலே அதிர்ச்சிதான்....நீங்க எம்.ஜி.ஆர் ரசிகரா?
ஒரு பக்கம் பார்த்தால் ரசிகன் தான். என்னுடன் இருந்தவர்கள் எம்.ஜி.ஆர். ரசிகர்கள். என் அக்காவின் கணவரோ அதி தீவிர ரசிகர். என் தாய் மாமாவும் அதி தீவிர ரசிகர். எம்.ஜி.ஆரின் மந்திரப் புன்னகையும், துள்ளலான நடிப்பும் எனக்குப் பிடிக்கும்.

அமலாவைப் பற்றி நீங்கப் பிதற்றினதை பி.ஏ. தமிழ் இலக்கியத்தில் பாடமாக வைத்திருக்கிறார்களாமே? உண்மையா?

அது நான் கவிஞனாக உருவாகிய காலம். கவி-நிலவு என்ற கையெழுத்து பத்திரிக்கையை நண்பர்கள் ஜி.ஏ. கண்ணன் (தற்போது தமிழ் நாடு காங்கிரஸில் மாநில அளவில் பதவி வகிக்கிறார்) மு.பிரபு (தற்போது அ.தி.மு.க. வில் உள்ளார்) கே.என்.அண்ணாதுரை(இப்போது தமிழ்நாடு பி.ஜே.பியில் மாநில அளவில் பதவி வகிக்கிறார்) உடன் ஆரம்பித்தோம்.

அது +2 படித்த காலம்.

அமரன்
18-06-2007, 07:05 PM
அனைவரின் நண்பராகிவிட்டீர்கள் என்பதை முதலிலும் முடிவிலும் அறிந்தேன்.

அக்னி
18-06-2007, 07:12 PM
நன்றி அமரன் முதலில் உங்களுக்கு...
அரிய திரிகளை மேலெழுப்பும் அரிய தேடலுக்கு...

எம்.ஜி.ஆர்....
மகத்தான மக்கள் தலைவன்...
அந்த தலைவனுக்கு, படிக்கும் காலத்தில் பாடலில், நலம் வேண்டிய தாமரை அவர்களின் கவிதையும் அரியதோர் காலப் பதிவே...

நன்றிகளும் பாராட்டுக்களும்...

ஓவியன்
18-06-2007, 07:26 PM
அனைவரின் நண்பராகிவிட்டீர்கள் என்பதை முதலிலும் முடிவிலும் அறிந்தேன்.

அட அமர்!

என்ன நம்ம செல்வன் அண்ணா இப்போது தான் அனைவரின் நண்பராக ஆகிறாரா என்று பயந்துவிட்டேன், பிறகு தான் தேதியைப் பார்த்தேன்!:icon_good:

அமரன்
19-06-2007, 05:11 PM
அடுத்தப் பதிவு அதிர்ச்சியானதாய் இருக்கலாம்....

நண்பர்களே அது என்ன என்று கண்டுபிடித்தீர்களா

அன்புரசிகன்
19-06-2007, 05:16 PM
நண்பர்களே அது என்ன என்று கண்டுபிடித்தீர்களா

எப்படி?

விகடன்
19-06-2007, 05:19 PM
அட அமர்!

என்ன நம்ம செல்வன் அண்ணா இப்போது தான் அனைவரின் நண்பராக ஆகிறாரா என்று பயந்துவிட்டேன், பிறகு தான் தேதியைப் பார்த்தேன்!:icon_good:

நான் பதிவுகளின் எண்ணிக்கையை பார்த்து குழம்பிவிடேன். பின்னர்தானே விளங்கியது.

ஈழப்போரிற்கு அங்கீகாரம் தந்த மனிதன் அல்லவா எம்.ஜி ஆர்.

இளசு
19-06-2007, 07:40 PM
என்ன தாமரை...

உடன் பழகிய மூவர் அரசியலில் முக்கிய புள்ளிகள்..

நீங்க மட்டும் அரசியலில் நுழைந்திருந்தால்....???

தமிழ்மன்றம் உங்களை இழந்திருக்குமே!!!!

தாமரை
20-06-2007, 01:47 AM
தமிழ் நாடே என்னைப் பெற்றிருக்குமே! இலங்கைச் சோதரருக்கு தோள் கிடைத்திருக்குமோ? மாறன் அம்புகள் மழுங்கிப் போயிருக்குமோ? சட்டமன்ற விவாதம் அனல் பறந்து அனைவரும் வேட்டியை பிய்த்துக் கொள்ளாமல் முதன் முறையாய் தலையை பிய்த்துக் கொண்டு ஓடியிருக்கலாமே! பத்திரிக்கைகள் சிலேடைச் சிக்கலில் சிக்கி என்ன எழுதுவது எப்படி எழுதுவது என்று திணற நான் போற்றுகிறேனா இல்லைத் தாக்குகிறேனா எனத் தெரியாமல் தேசியக் கட்சிகளும் உதிரிக் கட்சிகளும் குழம்ப என எத்தனையோ மாற்றங்கள் இருந்திருக்கலாமே!

ஒரு வேளை அனிருத் வளர்ந்த பிறகு நான் அரசியலில் ஈடுபடலாம். சொல்ல முடியாது.

தாமரை
20-06-2007, 01:50 AM
நண்பர்களே அது என்ன என்று கண்டுபிடித்தீர்களா

இதுதான்

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6270

அறிஞர்
20-06-2007, 02:35 AM
ஒரு வேளை அனிருத் வளர்ந்த பிறகு நான் அரசியலில் ஈடுபடலாம். சொல்ல முடியாது. ந*ல்ல* பாதுகாப்பான* யோச*னை...

அர*சிய*லில் ஈடுப*ட்டு... நாட்டை முன்னேற்ற* வாழ்த்துக்க*ள்...

அமரன்
24-06-2007, 06:52 PM
அட அமர்!

என்ன நம்ம செல்வன் அண்ணா இப்போது தான் அனைவரின் நண்பராக ஆகிறாரா என்று பயந்துவிட்டேன், பிறகு தான் தேதியைப் பார்த்தேன்!:icon_good:

அவர் மன்றத்தில் அனைவரின் நண்பர் ஆன போது பல்வேறு கட்சிகளில் இருப்போருடன் நட்புடன் இருப்பதைச்சொல்லி நிஜத்திலும் அனைவரின் நண்பர் என சிலேடையாக சொல்லியுள்ளாரே. செல்வரின் இந்த சொல்லாடல்.......! அவர் அரசியலுக்கு வந்தால்..... ரொம்பக் கஷ்டமாகப்போய்விடும்