PDA

View Full Version : காணாமல் போன கதை...!



தாமரை
16-03-2006, 05:01 AM
1973 டிசம்பர் மாதம்..

விடியற்காலையிலேயே புறப்பட்டது அந்த வெண்ணிற அம்பாசடர் கார். இளம்பிள்ளையிலிருந்து 40 வயது குடும்பத் தலைவர், அவரை விட சற்றே அதிகம் வயதான தலைவி, தமது 5 குழந்தைகளுடன். திட்டம், சமயபுரம், திருவானைகாவல், ஸ்ரீரங்கம் சென்று பிறகு பழனி சென்று வரத் திட்டம். வருடா வருடம் கார்த்திகை மாதம் கடைசி சோமவார விரதத்திற்கு முன் பழனி சென்றுவந்து விரதம் முடிப்பது அவர்களது குடும்பப் பழக்கம். இம்முறை மூத்தமகளுக்கு சமயபுரத்தில் முடிகாணிக்கை வேண்டுதல் இருந்ததால் இந்த மாறுதல் திட்டம்.

5 வயதிலும் 7 வயதிலும் இரு சிறுவர்கள், 12 வயதிலும் 14 வயதிலும் இரு மகள்கள் மற்றும் 18 வயதி மூத்த மகன் என்று கிளம்பிய அவர்கள் வழியில் தலைவரின் நண்பரின் தாயையும் அழைத்துக் கொண்டு சென்றனர்.

சமயபுரம் முடிகாணிக்கை இனிதே முடிய திருவானைக்காவலில்தான் அது நடந்தது. ஜம்புகேஸ்வரரை தரிசித்து முடித்து பின்னர் அகிலாண்டேஸ்வரி அன்னையையும் தரிசித்து அன்னையின் கருவரையை வலம் வரத் தொடங்கினார்கள். இனி அந்தச் சிறுவன் வாயாலேயே கேட்போம்...

"
அங்க இருந்த சாமி படமெல்லாம் ரொம்ப நல்லா இருந்திச்சி. ஒவ்வொரு சாமியும் கயில என்ன வச்சிருக்கு, உக்கார்ந்திருக்கா நின்னுகிட்டு இருக்கா, எதை வச்சு என்ன சாமின்னு எப்படி கண்டு பிடிக்கிறது ..(காமாட்சின்னா கரும்பு,, மீனாட்சின்னா பச்சை கிளி.. இப்பிடி) அப்படின்னு பாத்துகிட்டே வந்தேன்.. திடீர்ன்னு சுத்து முத்தும் பாத்தா அம்மா, அப்பா, அண்ணன் அக்கா, பாட்டி யாரையும் காணலை.

ரொம்ப நேரமாயிடுச்சோ.. காருக்கு போயிருப்பாங்களோ.. வேக வேகமா வெளிய வந்தே... ஆஆஆ அந்தப் பூக்கடை பக்கம்தானே கார் நின்னிருந்தது.. அம்பாஸடர் கார்.. வெள்ளைக்கலர் காணோமே.. ஒருவேளை மறந்து விட்டுட்டு போயிட்டாங்களா.. அய்யோ கோவில் கதவையும் சாத்தறாங்களே,,,,

அழுதிகிட்டே அந்தத்தெருவில் மெதுவா நடந்தேன்.. அங்க ஒரு அக்கா(ஆண்டியா அப்படின்னா என்ன?) துணி துவைச்சுகிட்டு இருந்துச்சு.. அங்கயே நின்னேன். ஏன் தம்பி அழுவறேன்னு அக்கா கேட்டதும் அழுகை அழுகை யா வந்திச்சி. அப்பா அம்மா காணோம். உட்டுட்டு போயிட்டாங்க அப்படின்னு அழுதேன்,,

அந்த அக்கா அந்தக் கல்லு மேல என்ன உக்கார வச்சுட்டு ஒரு அண்ணனைக் கூப்பிட்டு கோவில்ல யாரும் கொழந்தையைக் காணோம்னு தேடறாங்களான்னு பாத்துட்டு வான்னு சொல்லிட்டு உம்பேரு என்ன கண்ணுன்னு கேட்கவும் "ஆஜூ" அப்படின்னு சொன்னேன். உங்க ஊரு என்னன்னு தெரியுமான்னு கேட்டுச்சு..ம்ம்ம் இளம்பிள்ளி அப்படின்னு சொன்னேன்.. அது எங்க இருக்கின்னு கேட்டிச்சு அந்த அக்கா. ரொம்ப தூரம்... வேம்படிதாளம் பக்கத்துல,.. ன்னேன்.

அண்ணன் போனவன் மூச்சிறைக்க ஓடி வந்தான். அவங்க கோயில்ல தான் இருக்காங்க வாங்க வாங்க என என்னைத் தூக்கிக் கொண்டு போனான்.

இந்தக் கோயில்ல என்ன கதவுல இன்னொரு குட்டிக் கதவு??/ அதுவழியா அக்காவும் அண்ணனும் என்னத் தூக்கிகிட்டு போனாங்க.. அங்க ஆனை பக்கத்தில அம்மா. அப்பா, அண்ணன், அக்கா எல்லாரும் இருந்தாங்க"

......

தலைவர் அந்தப் பெண்ணை என்ன பையன கடத்தப் பாக்கிறியான்னு திட்ட இல்லைப்பா, அவங்க தான் பத்திரமா என்னைக் கூட்டிகிட்டு வந்தாங்கன்னு சொல்லி சமாதானப் படுத்தினான்..

பல ஆண்டுகள் கழிந்தன் .. 1985 ஆம் வருடம் அக்டோபர் 23. அதே சிறுவன் வளர்ந்து அதே கோயிலுக்கு தன் தந்தையுடன் போனான். பழைய நினைவுகள் திரும்ப வர.. இங்க தானே .. இங்கதானே.. என்று நினைத்துப் பார்த்து சந்தோஷப் பட்டான்,. தனது கல்லூரி திருச்சியில் அமைந்ததை எண்ணி மகிழ்ந்தான்.. இம்முறை வேறுமாதிரி காணாமல் போகப் போவதையும் அப்புறம் அவன் வேறு ஆளாகவே மாறப்போவதையும் அறியாமல்.. தன் பெயர் தாமரை செல்வன் என்று அறிந்த அவன்....

gragavan
16-03-2006, 05:05 AM
ஆகா! சில சமயங்கள்ள சில நிகழ்ச்சிகளக் கேக்கும் போது....ஏதாவது குண்டக்க மண்டக்க தோணி வைக்கும். இப்பவும் அப்படித்தான். ஹா ஹா ஹா

அதென்ன அஜூ? இளம்பிள்ளி எங்க இருக்கு?

சுபன்
16-03-2006, 05:07 AM
உண்மை கதையா இது??? உண்மை கதையெனின் கடைசி இரு வரியும் விளங்கவில்லையே:confused:

மதி
16-03-2006, 05:26 AM
இது உண்மைக் கதையாயின் இப்பவும் சில பேர் முணுமுணுக்கறது கேக்குது...என்னன்னு உங்களுக்கே தெரியும்...

தாமரை
16-03-2006, 05:31 AM
ஆகா! சில சமயங்கள்ள சில நிகழ்ச்சிகளக் கேக்கும் போது....ஏதாவது குண்டக்க மண்டக்க தோணி வைக்கும். இப்பவும் அப்படித்தான். ஹா ஹா ஹா

அதென்ன அஜூ? இளம்பிள்ளி எங்க இருக்கு?
"ஆஜூ" என்கிற 'ராஜூ" என்கிற தாமரைச் செல்வன். சின்ன வயதில் என்னை இப்படித்தான் அழைப்பார்கள். எனக்கு என்னுடைய பெயரே 3 வது படிக்கும் போதுதான் தெரியும். நானும் என் அண்ணனும் ஒரே வகுப்பு என்பதால் வருகைபதிவில் கூட என்பெயர் அவனுக்கு அடுத்ததாய் இருந்தது. யாரும் தாமரைச் செல்வன் என்று அழைத்ததில்லை. 3 வது படிக்கும் போது இளம்பிள்ளையிலிருந்து வேப்பம்பட்டி புதூர் சென்றதால் புதுப்பள்ளியில் சேர்த்தபின் தான் என்பெயர் எனக்குத் தெரியும்..

இளம்பிள்ளை சேலத்திலிருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமம். இது கஞ்ச மலை அடிவாரத்தில் உள்ளது. இங்கு 3 கிலோ மீட்டர் தூரத்துல் ஒரு சித்தர் கோவில் உள்ளது. தோல் வியாதிகளை குணப்படுத்தும் காந்தக் கிணறும் (சித்தரால் உருவாக்கப்பட்டது.. உப்பும் மிளகும் இட்டு குளித்தால் தோல் வியாதிகள் குணமாகும். இரும்பு கிடைக்கும் இடத்தில் காந்தக் கிணறு.)

ஒரு அருவியும் உண்டு. இங்கு தங்கம் இருப்பதாகவும் அது ஏழு மாத்து தங்கம் என்பதால் ஏழு மாத்தானூர் என்றும் பெயர் உண்டு. முதுமையை வென்ற சித்தர் இளம்பிள்ளையாய் சுற்றித்திரிவதால் இளம்பிள்ளை என்று பெயர் வந்ததாகவும் கதைகள் உண்டு.

தாமரை
16-03-2006, 05:47 AM
உண்மை கதையா இது??? உண்மை கதையெனின் கடைசி இரு வரியும் விளங்கவில்லையே:confused:
இன்று இங்கு இத்தனைப் பேர் எனக்கு நாள் குறித்துக் கொண்டு காத்திருப்பதற்குக் காரணம் அந்த 4 வருட கல்லூரி வாழ்க்கைதான் என்று சொல்லுகிறேன்..

ஒரு கவிதை
என் வாழ்க்கையை
புரட்டிப் போட்டது ...

pradeepkt
16-03-2006, 05:51 AM
அடேயப்பா...
நல்லாத்தான்யா காணாமப் போயிருக்கீரு...
இதே திருவானைக்காவல்லதான் நானும் ஒரு தடவை காணாம போயி திரும்பக் கெடைச்சவுடனே அடி பின்னி எடுத்துட்டாங்க :D

தாமரை
16-03-2006, 05:55 AM
அடேயப்பா...
நல்லாத்தான்யா காணாமப் போயிருக்கீரு...
இதே திருவானைக்காவல்லதான் நானும் ஒரு தடவை காணாம போயி திரும்பக் கெடைச்சவுடனே அடி பின்னி எடுத்துட்டாங்க :D

என்னவோ சில பல விஷயங்களில் நமக்குள் ஒற்றுமை இருக்கிறா மாதிரி தெரியுது.. மன்றம் தாங்குமா??

மதி
16-03-2006, 06:02 AM
இன்று இங்கு இத்தனைப் பேர் எனக்கு நாள் குறித்துக் கொண்டு காத்திருப்பதற்குக் காரணம் அந்த 4 வருட கல்லூரி வாழ்க்கைதான் என்று சொல்லுகிறேன்..

ஒரு கவிதை
என் வாழ்க்கையை
புரட்டிப் போட்டது ...

யாருங்க அது..???

தாமரை
16-03-2006, 06:03 AM
யாருங்க அது..???
அட நிஜக் கவிதைப்பா..

அதை இங்க போட முடியாது.. சந்திப்பின் போது சொல்றேன்...
இல்லைன்னா 7 மணிக்கு ஃபோன் பண்ணுங்க...

தாமரை
16-03-2006, 06:44 AM
இது உண்மைக் கதையாயின் இப்பவும் சில பேர் முணுமுணுக்கறது கேக்குது...என்னன்னு உங்களுக்கே தெரியும்...
இந்த சம்பவத்தை காலையில் ராகவனுக்கு ஃபோன் செய்து பேசினப்ப அவர் சத்தமாகவே முணுமுணுத்தார்.. தெரியும்... தெரியும்...:D :D :D

அல்லிராணி
16-03-2006, 07:57 AM
உம்மைக் காணவில்லை
நான்கு பேராவது
பரிதவித்தார்கள்

உண்மை காணவில்லை
யாருமே பரிதவிக்கவில்லை

பரஞ்சோதி
16-03-2006, 08:21 AM
ஆகா தாமரை செல்வன், சரியான ஆளாக இருக்கீங்க.

நானும் கூட தொலைந்து போன கதைகள் பல உண்டு.

சுவாரஸ்யமாக இருக்குது, தொடருங்கள்...

பரஞ்சோதி
16-03-2006, 08:22 AM
உம்மைக் காணவில்லை
நான்கு பேராவது
பரிதவித்தார்கள்

உண்மை காணவில்லை
யாருமே பரிதவிக்கவில்லை

தாமரையின் தடாகத்தில் அல்லி பூத்திருக்குது. :D

தாமரை
16-03-2006, 08:24 AM
தாமரையின் தடாகத்தில் அல்லி பூத்திருக்குது. :D
அதுதான் பயமே! அல்லியின் மற்ற பதிவுகளைப் பாருங்கள்.

gragavan
16-03-2006, 08:26 AM
இந்த சம்பவத்தை காலையில் ராகவனுக்கு ஃபோன் செய்து பேசினப்ப அவர் சத்தமாகவே முணுமுணுத்தார்.. தெரியும்... தெரியும்...:D :D :Dநமக்குத்தான் எதையும் மறைச்சிப் பேசத் தெரியாதுல்லா....நல்லத நெனச்சாக்கூட சத்தமாத்தான் நெனப்போம்.

தாமரை
16-03-2006, 08:27 AM
நமக்குத்தான் எதையும் மறைச்சிப் பேசத் தெரியாதுல்லா....நெனச்சாக்கூட சத்தமாத்தான் நெனப்போம்.
சுத்தமா நினைங்க.. அதுதான் முக்கியம்

gragavan
16-03-2006, 08:28 AM
உம்மைக் காணவில்லை
நான்கு பேராவது
பரிதவித்தார்கள்

உண்மை காணவில்லை
யாருமே பரிதவிக்கவில்லைநீங்க இங்கயும் வந்துட்டீங்களா? இனி தாமரையக் கடவுள்தான் காப்பாத்தனும். :D :D :D :D

gragavan
16-03-2006, 08:31 AM
சுத்தமா நினைங்க.. அதுதான் முக்கியம்என்ன அவசரம்? நான் மேல மாத்தீருக்கேன் பாருங்க...அதே மாதிரி நீங்களும் மாத்தீருங்க.....

தாமரை
16-03-2006, 08:53 AM
தாமரையின் தடாகத்தில் அல்லி பூத்திருக்குது. :D
தடாகம் தாமரையுடையது அல்ல.. தமிழுடையது...

பென்ஸ்
16-03-2006, 03:49 PM
உம்மைக் காணவில்லை
நான்கு பேராவது
பரிதவித்தார்கள்

உண்மை காணவில்லை
யாருமே பரிதவிக்கவில்லை

அட போங்க அல்லி, இந்த ஆளு காணாமலே போயிருந்தா நான் எப்படி சந்தோச பட்டிருப்பேன் தெரியுமா.... அட்ரஸ் சொல்லுங்க அவருகிட்டேருந்து உங்களுக்கு ரெண்டு CD வாங்கி அனுப்புறேன்... அப்ப தெரியும்...

செல்வன்.. நீர் அப்பவே இந்த கலர் கலரான காரியத்தை கண்டா அப்டியே மலச்சி போயி நின்னுடுவீரோ???

நீர் மீண்டும் தொலைந்து போக மனதார பிராத்திக்கும் ...

mukilan
16-03-2006, 04:34 PM
அதேதான் பென்ஸூ எனக்கும். அந்த அக்கா, ஆண்ட்ட்டி இப்போ என் கையிலே கிடைச்சா அவங்களை நல்லா வசை பாடிடனும். ஆஜூ இளம்பிள்ளிக்கே வந்திருக்க மாட்டார்.

தாமரை
17-03-2006, 11:28 AM
செல்வன்.. நீர் அப்பவே இந்த கலர் கலரான காரியத்தை கண்டா அப்டியே மலச்சி போயி நின்னுடுவீரோ???

நீர் மீண்டும் தொலைந்து போக மனதார பிராத்திக்கும் ...
நீங்க தொலைஞ்சு போக சான்ஸ் கிடச்சும் போகலையே.. :D :D :D

sarcharan
17-03-2006, 11:44 AM
அது சரி பென்ஸூ யாரை தூக்கிகிட்டு மலை உச்சி வரைக்கும் போனீங்க...
(ட்ரெக்கிங் என்ற பெயரால!!!!;)).....

பென்ஸ்
17-03-2006, 12:20 PM
போட்டோ தனிமடலில் அனுப்புறேன்... புரியும்...:rolleyes: :rolleyes: :D :D :D :D :D

தாமரை
17-03-2006, 12:57 PM
போட்டோ தனிமடலில் அனுப்புறேன்... புரியும்...:rolleyes: :rolleyes: :D :D :D :D :D
சின்னப் பயலை ஏமாத்திடலாம்னு பாக்கறீரா... எனக்கும் அனுப்பும் பார்ப்போம்.:cool: :cool:

sarcharan
20-03-2006, 12:35 PM
பென்ஸூ,
யாரு அந்த ராதிகா கண்ணனோட கோபிகா....:p :p

sarcharan
20-03-2006, 12:38 PM
அத அப்புறம் பாக்கலாம். நீங்க தனி மடலோடு (ட்ரெக்கிங் என்ற பெயரில்) ***** பார்க்க வெயிட்டா(ரொம்பவும்!!!) போனீங்களே அது என்ன ஆச்சு...?


போட்டோ தனிமடலில் அனுப்புறேன்... புரியும்...:rolleyes: :rolleyes: :D :D :D :D :D