PDA

View Full Version : பெரியாறு அணை



ராசராசன்
15-03-2006, 06:39 PM
பெரியாறு: கேரள சட்டசபையில் தமிழகத்துக்கு எதிரான சட்ட மசோதா தாக்கல்

முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை தமிழகம் உயர்த்துவதைத் தடுக்க வகை செய்யும் சட்ட மசோதா இன்று கேரள சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

http://www.thekkady.com/img/PG/1/periyar1.JPGhttp://www.thekkady.com/img/PG/1/periyar2.jpghttp://www.thekkady.com/img/PG/1/periyar4.jpg

தமிழக, கேரள எல்லையில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை உள்ளது. இந்த அணையின் மூலம் தேனி முதல் ராமநாதபுரம் மாவட்டம் வரையிலான தென் மாவட்டங்கள் பெரும் பலன் பெறுகின்றன. இந்த நீரை நம்பி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட விவசாயிகள் உள்ளனர்.

அணையின் உயரம் தற்போது 136 அடியாக உள்ளது. இதை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழகம் கோரி வந்தது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு, ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம் ஆகியோர் தொடர்ந்த வழக்கில், அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த அனுமதித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் இதை ஏற்க மறுத்துள்ள கேரள அரசு, உச்சநீதிமன்ற உத்தரவை 'பைபாஸ்' செய்வதற்காக அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க முடிவு செய்தது.

இதற்காக கேரள சட்டசபையின் 2 நாள் அவசரக் கூட்டம் இன்று கூடியது. இதில் இன்று பெரியாறு அணை உயரத்தைக் கூட்டுவதைத் தடுக்கும் வகையில் கேரளா பாசனத் திட்ட சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

கேரள மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் கேரள மாநில நீர்ப்பாசன, நீர்ப் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதவைத் தாக்கல் செய்தார்.

இதையடுத்து முதல்வர் உம்மன் சாண்டி பேசுகையில்,

அணை உயரத்தை அதிகரிப்பதால் பாதிக்கப்படும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்துடன் நமக்கிருக்கும் நல்லுறவை தொடர்ந்து பேணவே கேரளா விரும்புகிறது.

தமிழகத்துக்குத் தண்ணீர் தரக் கூடாது என்பதற்காக இச் சட்டத்தைக் கொண்டு வரவில்லை. மாநில நலனைக் காக்கவே கொண்டு வரப்பட்டுள்ளது.

அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் அதையொட்டியுள்ள 5 மாவட்டங்களில் வாழும் மக்கள் பாதிக்கப்படுவர். அவர்களது பாதுகாப்பே கேள்விக்குறியாகிவிடும். மேலும் 113 ஆண்டு பழைய அணையால் இதற்கு மேல் நீரைத் தேக்கி வைக்கவும் முடியாது.

ஐந்து மாவட்ட மக்களின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்படும் என்பதால் கேரள மாநில மக்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டி இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது என்றார்.

இதையடுத்து பல்வேறு கட்சியினரும் இந்த மசோதா மீது பேசினர். நாளையும் விவாதம் நடக்கவுள்ளது. அதைத் தொடர்ந்து மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்படும்.

aren
16-03-2006, 01:08 AM
அணையில் உயரத்தை அதிகபடித்தினால் அருகிலுள்ள கிராமங்களுக்கு விளைவு ஏற்படுமென்றால், அணையில் ஆழத்தை அதிக படுத்தலாமே, சேது சமுத்திரம் திட்டம் போல். இதற்கு வழியுண்டா?

gragavan
16-03-2006, 03:25 AM
இதெல்லாம் அரசியல்தான். அவரவர் மாநிலம் அவரவர்க்குப் பெரிது. நல்லது செய்வதாக நினைத்துக் கொண்டு புலிவாலைப் பிடிக்கிறார்கள். புலிவால் பிடித்த நாயர் கதையை உலகம் அறியுமே!

pradeepkt
16-03-2006, 03:33 AM
ஆகமொத்தம் இங்கேயும் பணயக் கைதிகள் இரண்டு மாநில மக்கள்தான்.

தாமரை
16-03-2006, 06:28 AM
அணையில் உயரத்தை அதிகபடித்தினால் அருகிலுள்ள கிராமங்களுக்கு விளைவு ஏற்படுமென்றால், அணையில் ஆழத்தை அதிக படுத்தலாமே, சேது சமுத்திரம் திட்டம் போல். இதற்கு வழியுண்டா?
ஏன் இன்னொரு அணை கட்டலாமே.. தகுந்த இடம் தேர்வு செய்து???

இளந்தமிழ்ச்செல்வன்
19-03-2006, 09:57 AM
எப்போதும் அண்டை மாநிலங்கள் இப்படித்தான். நம்மாட்களும் இருக்கிறார்களே????